எதிர்ப்பில்லா காதல்... - வென்ற காதல்...

|

'நிஜமாவா சொல்றே சுஜி? என்னமோ உங்க அப்பா ரொம்ப கண்டிப்பானவரு, காதல்னா புடிக்காது,காதல் சம்மந்தமா சீன் எதாச்சும் டி.வி. சேனல்ல வந்தாலும் உடனே மாத்திடுவாரு, அப்படி இப்படின்னு சொல்லுவே'


'ஆமா ரகு, எனக்கும் அதான் ஆச்சர்யமா இருக்கு. போன்ல அதிக நேரம் பேசறத கவனிச்சிருப்பாரு போல இருக்கு, நேத்து என் ரூம்ல செக் பண்ணி கண்டு பிடிச்சிட்டாரு. காலைல என்ன நேருக்கு நேரா ரகு-ங்ற பையனை காதலிக்கிறியான்னாரு. நடுங்கிகிட்டே ஆமான்னேன். உடனே சாயந்திரம் வீட்டுக்கு அழைச்சிட்டு வான்னாரு'

'ச்சே, சப்புனு போயிடுச்சே, என்னன்னமோ நடக்கும்னு கற்பனை பண்ணி வெச்சுருந்தேன், இப்போ எல்லாம் வேஸ்ட் ஆயிடுச்சி....'

'ரொம்ப அலட்டிக்காத, நினச்சது இப்போதான் நடக்க ஆரம்பிச்சிருக்கு, ரொம்ப பயமா இருக்கு, கடவுளை எல்லாம் வேண்டிட்டு இருக்கேன்'

'சேச்சே, எனக்கும் ரொம்ப உதறலா இருக்கு,பாப்போம், எல்லாம் அவன் விட்ட வழி'

'சரிப்பா, ஷார்ப்பா 7.00 க்கு வந்துடு, அப்பா ரொம்ப பன்ச்சுவல்'

'வாங்க தம்பி, உட்காருங்க, எனக்கு காப்பி, உங்களுக்கு... ராஜி, காப்பியாம், சரி உங்களை பத்தி சொல்லுங்க'

'அப்பா கிடையாது, அம்மா மட்டும்தான். சேலம் பக்கத்துல சொந்த ஊரு. இன்ஜினீரிங் முடிச்சுட்டு சொந்தமா கன்ச்ட்ரக்சன் கம்பனி வெச்சிருக்கேன், 50 பேர் என்கிட்ட வேலை பாக்கறாங்க, நுங்கம்பாக்கத்துல ஆஃபிஸ்.

சுஜியோட காலேஜ்-க்கு பில்டிங் வேலையா போயிருந்தப்போ எதேச்சையாய் ரெண்டு மூணு தடவை பாத்தோம், ரொம்ப பிடிச்சிருந்தது.பேசும்போதுதான் ஒரே ஜாதின்னு தெரிஞ்சது'

'அப்பன்னா ஜாதியை பாத்துத்தான் காதலிக்க ஆரம்பிச்சிங்களா?'

'அப்படி இல்லைங்க சார், பிரச்சனைகள் கம்மியா வரும்னு சந்தோஷப்பட்டுட்டோம். ஆனா உங்களை பத்திதான் சுஜி தினமும் பயந்துட்டு இருக்கும்'

'பயப்படற பொண்ணுதான் இவ்வளோ வேலை செஞ்சிருக்கா?, தம்பி எனக்கும் என் வைஃப்க்கு மட்டும் தெரிஞ்ச விஷயத்தை இப்போ சொல்லப்போறேன். என்னோட மேரேஜ்-ஏ லவ் மேரேஜ் தான். என்னம்மா உனக்கு அதிர்ச்சியா இருக்க? நான் போஸ்ட் மாஸ்டரா சேலம் பக்கத்துல 25 வருஷத்துக்கு முன்னால வேலை பாத்துட்டு இருந்தேன்'.

'அந்த ஊர்ல காதல்னாலே அவ்வளவு கட்டுப்பாடு, யாரும் காதலிக்கவே கூடாது, மீறினா பஞ்சாயத்து அது இதுன்னு சொல்லி அந்த ஜோடியை பிரிச்சி, பொண்ணுக்கு உடனே அன்னிக்கே வேற கல்யாணம் செஞ்சி வெச்சி சம்மத்தப்பட்ட பையனை ஊரை விட்டே துரத்தி விட்டுடுவாங்க'.

'எனக்கும் காதல் வந்தது, ஊர் தலைவர் பொண்ணு மேல. விஷயம் தெரிஞ்சு ஒரே களேபரமாயிடுச்சி. நினைச்சா இப்பகூட பகீர்னு இருக்கு. உள்ளூர்காரன் பண்ணினாலும் பரவாயில்லை, வெளியூர் ஆளு.

வெவகாரம் இன்னும் மோசமா ஆச்சு. அப்போதான் சுஜி அம்மாவோட பெஸ்ட் ஃபிரண்டு சொர்ணம் என்ன வந்து பாத்துச்சி. ரெண்டு பேரையும் ஊரை விட்டே ஓடி போயுடுங்கன்னு சொல்லி, அதான் ஒரே சரியான வழின்னு சொல்லுச்சி'.

'வேல, சொந்த பந்தம் எல்லாத்தையும் உதறிட்டு நேரா பம்பாய் போயிட்டோம், இப்போ மும்பைங்கறாங்க'.

'10 வருஷம் ரொம்ப கஷ்டப்பட்டோம். அப்புறம் சென்னை வந்து பிசினஸ் ஆரம்பிச்சு...இப்போ ஒரு வழியா செட்டில் ஆயாச்சு. ஆனா அதுக்கப்புறம் அங்க என்ன நடந்ததுன்னே தெரியாது'

'நான் சொல்லுறேன்,  மகள் ஓடிப்போன அதிர்ச்சியில தலைவர் தற்கொலை பண்ணிட்டார். அந்த ஊர்ல காதலுக்கு இருந்த கட்டுப்பாடு தூள் தூளாயிடுச்சி. இதெல்லாம் எப்படி தெரியும்னு பாக்கறீங்களா? எங்க அம்மாதான் சொர்ணம், உங்களை பத்தி நிறைய சொல்லியிருக்காங்க'

'சொர்ணம் பையனா நீ? கடவுளே, ராஜி ஏன் அப்பா வை  நினைச்சு அழறியா? என்ன பண்றது, கடவுளோட கிருபையை பாத்தியா? நினைச்சாலே பிரமிப்பா இருக்கு. எதோ இழந்த மாதிரியே இருந்துச்சி, இப்போ தான் கொஞ்சம் நிறைவா இருக்கு. சுஜி, ரொம்ப தேங்க்ஸ்மா. உன்னாலதான் எங்களோட இழப்பையெல்லாம் ஈடு செய்ய வாய்ப்பு கிடச்சிருக்கு'


'சார் அம்மா இந்த விஷயத்தை கேட்டா ரொம்ப சந்தோஷப்படுவாங்க'

'இன்னும் என்ன, சார் சார்னு', 'மாமான்னு சொல்லுங்க'

'சரிங்க மாமா'

முன்னோட்டம்.  

அடுத்த பதிவு 'மொன்னக்கத்தியும் மொத்த பனியனும்'. 

கங்காதரன போலீஸ் ஸ்டேஷன் ல வெச்சி பின்னி எடுத்துட்டாங்க. 


'என்னது ஐ விட்னசா, யாரு' ன்னு என் தம்பி கேக்க, 'சரவணன்' னு சொல்லவும் என் தம்பி சரி மேட்டர ஈஸியா முடிச்சிடலாம்னு நெனச்சிகிட்டான்.  

இந்த பதிவு உங்களுக்கு பிடிச்சிருந்தா என்னை மேம்படுத்த உங்க கருத்துத்தையும், உற்சாகப்படுத்த ஓட்டையும் போடுங்களேன்!


34 : பேர் படிச்சிட்டு சொல்றாங்க...:

laavanya1987 said...

good... keep going

பிரபாகர் said...

//laavanya1987 said...
good... keep going//

Thanks Laavanyaa... for your first visti and comments...

vasu balaji said...

கவனம் பிரபாகர். ஊர்த்தலைவர் பொண்ணு தங்கச்சியாயிடுச்சி பாருங்க. மத்தபடி நல்ல திருப்பம்.

க.பாலாசி said...

கதை சூப்பர் தலைவா.....முடிவு நல்லாருக்கு...அந்த ட்விஸ்ட் யூகிக்க முடியாதது. நல்ல கதையோட்டம்....மிக அருமை....

Raju said...

அண்ணே, கதைல தப்பு இருக்க மாதிரி இருக்கே..!சுஜியோட அம்மா யாரு..? ஊர்த் தலவரோட மகளா இல்ல தங்கச்சியா..?
:-)

பிரபாகர் said...

ராஜு, அய்யா,

புரிஞ்சிடுச்சி... பெரிய தப்புதான். மாத்திடறேன்...

பிரபாகர் said...

ராஜு, அய்யா,

ரொம்ப நன்றி. தெரியாமல் மாற்றி எழுதிட்டேன்... ரொம்பவும் வருத்தப்படறேன். பதிவில மாத்திட்டேன்.

பிரபாகர் said...

//க.பாலாஜி said...
கதை சூப்பர் தலைவா.....முடிவு நல்லாருக்கு...அந்த ட்விஸ்ட் யூகிக்க முடியாதது. நல்ல கதையோட்டம்....மிக அருமை....//

நன்றி பாலாஜி...

பெரிய தப்பு பண்ணி அய்யாவும், தம்பியும் சொல்ல படிச்சி மாத்திட்டேன்...

ஆரூரன் விசுவநாதன் said...

நல்ல கதை....தொடருங்கள்

பிரபாகர் said...

//ஆரூரன் விசுவநாதன் said...
நல்ல கதை....தொடருங்கள்
//

உங்களின் அன்பிற்கும் ஆதரவிற்கும் நன்றி...

vasu balaji said...

முதன் முதலில் சுட்டிய என்னைப் புறக்கணித்து அய்யா மற்றும் தம்பியை சுட்டியதை வன்மையாகக் கண்டிப்பதோடு தாங்கள் வெண்ணை ஆதரவாளராக மாறியிருப்பீர்களோ என சந்தேகப் படுகிறேன்.

ஜெட்லி... said...

உங்கள் சொந்த அனுபவமா பிரபாகர்???

பிரபாகர் said...

//முதன் முதலில் சுட்டிய என்னைப் புறக்கணித்து அய்யா மற்றும் தம்பியை சுட்டியதை வன்மையாகக் கண்டிப்பதோடு தாங்கள் வெண்ணை ஆதரவாளராக மாறியிருப்பீர்களோ என சந்தேகப் படுகிறேன்.//

அய்யா என குறிப்பிட்டது உங்களைத்தான். வெண்ணையை உடம்புக்கு சேர்த்தால் கொழுப்பு... என்றுமே நான் உங்களோடுதான்.

உங்களுக்கு புரியவில்லை விளக்குங்கள் என பின்னூட்டம் போட்டுவிட்டு ராஜுவினுடையதியும் பார்த்தேன். பொதுவில் இருவரையும் சேர்த்துவிட்டேன்...

பிரபாகர் said...

//ஜெட்லி said...
உங்கள் சொந்த அனுபவமா பிரபாகர்???//

சொந்த அனுபவம் இல்லாத ஒரே கதை இது... நன்றி ஜெட்லி....

ஸ்ரீ.கிருஷ்ணா said...

sir what about u r marriage? Love or arranged?

நர்சிம் said...

புனைவா நிஜமா என்ற சந்தேகத்தை எழுப்பியதே வெற்றி பிரபாகர்.தொடருங்கள்..கலக்குங்கள்

பிரபாகர் said...

//ஸ்ரீ.கிருஷ்ணா said...
sir what about u r marriage? Love or arranged?//

purely arranged.... This is just a story with only dialogues.... Thanks krishna....

பிரபாகர் said...

//நர்சிம் said...
புனைவா நிஜமா என்ற சந்தேகத்தை எழுப்பியதே வெற்றி பிரபாகர்.தொடருங்கள்..கலக்குங்கள்

October 6, 2009 4:34 PM//

நன்றி நரசிம். உங்களின் வரவும் பாராட்டும் பெரும் மகிழ்ச்சியை கொடுக்கிறது...

ஈரோடு கதிர் said...

//வானம்பாடிகள் said...
தாங்கள் வெண்ணை ஆதரவாளராக மாறியிருப்பீர்களோ என சந்தேகப் படுகிறேன்.//

சந்தேகமே படாதீங்க... எங்க மன்றத்தின் சிங்கை தலைவரே பிரபா தானுங்க

பிரபாகர் said...

////வானம்பாடிகள் said...
தாங்கள் வெண்ணை ஆதரவாளராக மாறியிருப்பீர்களோ என சந்தேகப் படுகிறேன்.//

சந்தேகமே படாதீங்க... எங்க மன்றத்தின் சிங்கை தலைவரே பிரபா தானுங்க//

அய்யா இதுதான் பிரித்தாளும் சூழ்ச்சி... ஜாக்கிரதையா இருக்கணும்...

பதவி கொடுத்து பிரிக்க நினைக்கிறாங்க...

ஈரோடு கதிர் said...

சுறுசுறுப்பான கதை பிரபாகர்..

டிவிஸ்ட் அருமை...

ஆனால் 25 வருசம் ராஜிக்கு எந்த தகவலும் தெரியாது மட்டும் சிறிய ஆச்சரியம்

பிரபாகர் said...

//சுறுசுறுப்பான கதை பிரபாகர்..

டிவிஸ்ட் அருமை...

ஆனால் 25 வருசம் ராஜிக்கு எந்த தகவலும் தெரியாது மட்டும் சிறிய ஆச்சரியம்//

உண்மையில் இது நான் பட்டுக்கோட்டை பிரபாகரின் 'தா' எனும் நாவலை படித்தவுடன் வசனங்களை மட்டும் வைத்து எப்போதோ எழுதிய கதை. கதை சூழலும் பழையதை இருக்கும் பாருங்கள்...

Menaga Sathia said...

கதையும் முடிவும் நல்லாயிருக்கு!!

விக்னேஷ்வரி said...

நல்லா இருக்கு.

பிரபாகர் said...

//
Mrs.Menagasathia said...
கதையும் முடிவும் நல்லாயிருக்கு!!

October 6, 2009 7:22 PM//

உங்களின் முதல் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றிங்க..

பிரபாகர் said...

//
விக்னேஷ்வரி said...
நல்லா இருக்கு.//

விக்னேஷ்வரி, உங்களின் முதல் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றிங்க.

ப்ரியமுடன் வசந்த் said...

first படிக்கிறேன் முதல்வாட்டியே இம்ப்ரெஸ் பண்ணிட்டீங்க...பிரபாகர்

நாகா said...

பட்டய கெளப்புங்க ப்ரபா..

பிரபாகர் said...

//பிரியமுடன்...வசந்த் said...
first படிக்கிறேன் முதல்வாட்டியே இம்ப்ரெஸ் பண்ணிட்டீங்க...பிரபாகர்
//

நன்றி வசந்த்... என்னை படித்ததற்கும், உங்களின் வாழ்த்திற்கும்...

பிரபாகர் said...

// நாகா said...
பட்டய கெளப்புங்க ப்ரபா..//

உங்க கையாள இல்ல குட்டு பட்டிருக்கோம்.... நன்றி நாகா.

துபாய் ராஜா said...

சின்னக்கதைன்னாலும் சிறப்பான கதை பிரபாகர்....

அடிச்சி தூள் கெளப்பறீங்க...

தொடர்ந்து கலக்குங்க..தொடர்கிறோம் நாங்களும்...

வாழ்த்துக்கள்..

பிரபாகர் said...

//துபாய் ராஜா said...
சின்னக்கதைன்னாலும் சிறப்பான கதை பிரபாகர்....

அடிச்சி தூள் கெளப்பறீங்க...

தொடர்ந்து கலக்குங்க..தொடர்கிறோம் நாங்களும்...

வாழ்த்துக்கள்..
October 7, 2009 2://

நன்றி ராஜா... ஏதோ மோகம்னு தொடரெல்லாம் எழுத்து கலக்குறீங்க...

அன்புக்கு நன்றி...

நாகராஜன் said...

தூள் கிளப்பிட்டீங்க பிரபாகர்...

ஆனால், உண்மைய சொல்லனும்னா, ஏறக்குறைய இதே மாதிரி ஒரு கதையை வெகு சமீபத்தில் படித்த நியாபகம்... ஆனா எங்கேன்னு தான் மறந்துட்டேன்... அதுனால கதை முடிவு மற்றும் மொத்த கதையும் முன்னமே தெரிஞ்ச மாதிரி இருக்கு... பாராட்டுகள்... தொடருங்கள் உங்களது வெற்றி நடையை இந்த பாதையிலும்.

பிரபாகர் said...

//ராசுக்குட்டி said...
தூள் கிளப்பிட்டீங்க பிரபாகர்...

ஆனால், உண்மைய சொல்லனும்னா, ஏறக்குறைய இதே மாதிரி ஒரு கதையை வெகு சமீபத்தில் படித்த நியாபகம்... ஆனா எங்கேன்னு தான் மறந்துட்டேன்... அதுனால கதை முடிவு மற்றும் மொத்த கதையும் முன்னமே தெரிஞ்ச மாதிரி இருக்கு... பாராட்டுகள்... தொடருங்கள் உங்களது வெற்றி நடையை இந்த பாதையிலும்.//

அதுவும் என்னோடதுதாங்க..... என்னுடய இரண்டாவது இருகை.... நீங்கள் முன்னரே என்னுடய பதிவு எல்லாம் படித்துவிட்டதால் தான்....

 

©2009 ”வாழ்க்கை வாழ்வதற்கே” | Template Blue by TNB