ஊருக்கு போயிருந்தப்போ வீட்டு வேலை தொன்னூறு சதம் முடிஞ்சிருக்க மாடியில உக்கார்ந்து பேசிட்டிருந்தோம் .
பசங்க நாலு பேரு வந்தாங்க, வீட்டு வேலையெல்லாம் அவனுங்கதான் கான்ட்ராக்ட் எடுத்து செய்யறானுங்கன்னு தம்பி சொன்னான். எல்லாரையும் முன்னாடியே பாத்திருக்கேன், சின்ன சின்ன பசங்களா.
அதுல ஒருத்தன் எனக்கு ரொம்ப பரிட்சயம். பொங்கல் சமயத்துல பொம்பள வேஷம் போட்டுக்கிட்டு வாயில பெருசா அலகு குத்திகிட்டு ஆட்டம் போட்டுக்கிட்டு வந்தவன். பாலமுருகன் பேரு, பாலான்னு கூப்பிடுவோம்.
வாயில அலகு குத்தினதுக்கு அடையாளமா ரெண்டு பக்கமும் தழும்பு இருந்துச்சி. 'எப்பண்ணா வந்தீங்க சௌக்கியமா' ன்னு விசாரிச்சிட்டு அந்த பக்கமா வேலை செய்ய போயிட்டானுங்க.
'வாயில எப்படிடா அவ்வளோ பெரிய வேலை குத்திகிட்டு ஆட்டம் போட்டுக்கிட்டு வர்றாங்க, அதுவம் இவன் ரொம்ப சின்ன பையன்' னு இழுத்தேன்.
'யாரு பாலாவா, போன வாரம்தான் ரெண்டாவது கல்யாணம் பண்ணினான்' னு குண்டை தூக்கிபோட்டான்.
'வாயில எப்படிடா அவ்வளோ பெரிய வேலை குத்திகிட்டு ஆட்டம் போட்டுக்கிட்டு வர்றாங்க, அதுவம் இவன் ரொம்ப சின்ன பையன்' னு இழுத்தேன்.
'யாரு பாலாவா, போன வாரம்தான் ரெண்டாவது கல்யாணம் பண்ணினான்' னு குண்டை தூக்கிபோட்டான்.
'கல்யாணம் ஆயிடுச்சா?, ரெண்டா? மொதல் தாரம் ஏதாவது?' ன்னு நம்மள மாதிரி சோகம் ஏதாச்சும் இருக்குமான்னு கேக்க,
'இல்லையில்ல, அது ஒரு பெரிய கதை, பாலா இங்க வா, வர்றான்...இதோ அவங்கிட்டயே கேளு' ன்னு தம்பி சொன்னான்.
'எப்படிப்பா சாத்தியம், ஒன்னுக்கே அவனவன் சிங்கியடிக்கிறான்...'ன்னு பாலமுருகன பாத்து கேட்க,
'ப்ரைன் பிரதர் ப்ரைன்' னு புதுசு கண்ணா புதுசு மாதிரி சொன்னான்.
சொல்லிட்டு நான் ஆர்வமா கேக்கறத பாத்துட்டு கதை மாதிரி சொல்ல ஆரம்பிச்சான்.
'இப்போ ரெண்டாவதா கல்யாணம் பண்ணியிருக்கேன் இல்ல, அந்த புள்ளையத்தான் மொதல்ல காதலிச்சேன். ரெண்டு பேரு வீட்டுக்கும் தெரியும். ஒருநாள் ஃபுல் போதையில, அதான் அலகு குத்திகிட்டு ஆடுனேனே பொங்கலப்போ? அதுக்கு ஒரு வாரம் கழிச்சி ரெண்டு பெரும் தனியா பேசிகிட்டு இருக்கும்போது தகராறு வந்துடுச்சி.
பயங்கர சண்டை, என்ன மரியாத இல்லாம பேசினா. இந்த மாதிரில்லாம் பேசாத, டென்சன் ஆயிடுவேன், வேற கல்யாணம் பண்ணிக்குவேன்னு சொன்னேன். எவள வேணும்னாலும் பண்ணிக்கோ, என்ன விட்டுடுன்னு சொன்னா.
போடி சர்தான்னு நேர வீட்டுக்கு வந்து எங்க அப்பன் கிட்ட அவளோட சித்தப்பன் மகள கல்யாணம் பண்ணி வைன்னு சொன்னேன். அவங்க ரெண்டு குடும்பத்திலேயும் பகையா இருந்தது எனக்கு வசதியா போச்சு, ராத்திரியோட ராத்திரியா ஏற்பாடு பண்ணி காலையிலேயே கல்யாணம் முடிஞ்சிடுச்சி.
அடுத்த நாளே என்னோட மொத லவ்வர், உங்கிட்ட தமாசுக்கு சண்டை போட்டதுக்கு இப்படி பண்ணிபுட்டியேன்னு அழுதா. 'பொறுத்திரு எனக்காக காத்திரு' ன்னு சொல்லிட்டு வந்துட்டேன்.
அதுக்கப்புறம் அந்த புள்ளைய நிறைய பேரு நாம விலகிட்டோம்ங்ற தைரியத்துல ரூட்டு உட்டானுங்க. கொஞ்சம் கூட மசியல, செடியா இருந்துச்சி.
பல இடத்துல இருந்து மாப்பிளைங்க வந்தாங்க. நம்ம பிளான்ல எல்லாம் செதறிடுச்சி. ஆனாலும் தங்கவேல் மவன் எதிரியா வந்தான். அவன் தியாகம் பண்ணி கல்யாணம் பண்ணிக்கிறேன்னு டயலாக் அடிச்சி கல்யாணம் வரைக்கும் வந்துச்சி.
ஆள வெச்சு மேரட்டியும் பாத்தேன், கேக்கல. மாமன் மவன் கங்காதரன் மப்புல கேக்கப்போயி கத்தியில குத்தி பெரிய கேசாயிடிச்சு. ('மொன்னை கத்தியும் மொத்த பனியனும்' னு ஒரு தனி பதிவா எழுதறேன்... சுவராஸ்யமான மேட்டர் அது).
அப்புறம் அவளோட கல்யாணத்துக்கு ரெண்டு நாள் முன்னால என் பொண்டாட்டிய கூப்பிட்டேன். அவ என் கூட சேந்து வாழ்ந்தாதான் உயிரோட இருப்பேன், இல்லன்ன மருந்து குடிச்சிட்டு சாவறேன்னு சொன்னதோட இல்லாம கொஞ்சம் சாம்பிளுக்கு குடிச்சும் காமிச்சேன்.
கதறிக்கிட்டு ஒத்துகிட்டா. உடனே பொண்ண வர சொல்லி பைக்குல கூட்டிட்டு போயி சதீஷோட ஃபிரண்ட் வீட்டுல விட்டுட்டு நேரா வந்துட்டேன். இந்த விஷயம் எனக்கும் சதீஷுக்கு மட்டும்தான் தெரியும்.
எல்லாரும் பொண்ண தேடறாங்க. சந்தேகம் எல்லாம் என் மேல தான். ஆனா ஆளு இங்க இருக்கிறதா பாத்துட்டு குழம்பிட்டாங்க. யாருக்கும் எதுவும் புரியல.
குவாட் போட்டு தேடியும் கிடைக்கல. என்னையும் ஆளுங்கள விட்டு நோட்டம் பாத்துகிட்டிருந்தங்க. சாப்பிடுவேன், தூங்குவேன், அவங்க வீட்டு வழியா அப்பப்போ போயிட்டு வருவேன்.
கடைசியா அவங்களே சரண்டர் ஆயி கல்யாணம் பண்ணி வெச்சாங்க' ன்னு ஒரு வழியா முடிச்சான்.
சரி தம்பி சந்தோஷமா இருக்குறாங்களா? ஒத்துமையா இருக்குறீங்களா? ன்னு கேக்க, 'ஒரு நிமிஷம், தே ஒன்டங்கையா, போய் அக்கா ரெண்டு பேத்தையும் நா வரச் சொன்னேன்னு சொல்லி இங்க கூட்டிட்டு வா' ன்னு சொன்னான்.
பத்து நிமிஷத்துல ரெண்டு பெரும் சிரிச்சிகிட்டே வந்தாங்க. 'நல்லாருக்கீங்களாண்ணா' ன்னு கோரசா கேட்டாங்க. சிரிச்சிகிட்டு தலையாட்டிட்டு, 'என்னம்மா ஒத்துமையா இருக்கீங்களா' ன்னு கேட்டேன்.
'சம்பாதிச்சிகிட்டு வர்றாரு, ஆக்கி போட்டு சந்தோசமா வெச்சிக்கிறோம்' னு ஒரு பொண்ணும், 'வீதம் போட்டுக்கிட்டு சந்தோஷமா இருக்கோம்' னு இன்னொரு பொண்ணும் சொன்னாங்க.
முன்னோட்டம்.
அடுத்த பதிவு "எதிர்ப்பில்லா காதல்... - வென்ற காதல்.." விவரித்தல் இல்லாமல் வசனத்திலேயே ஒரு சிறுகதை எழுதும் கன்னி முயற்சி. கருத்துக்களால் என்னை மேம்படுத்துங்க்களேன்!...
அடுத்த பதிவு "எதிர்ப்பில்லா காதல்... - வென்ற காதல்.." விவரித்தல் இல்லாமல் வசனத்திலேயே ஒரு சிறுகதை எழுதும் கன்னி முயற்சி. கருத்துக்களால் என்னை மேம்படுத்துங்க்களேன்!...
'ஆமா ரகு, எனக்கும் அதான் ஆச்சர்யமா இருக்கு. போன்ல அதிக நேரம் பேசறத கவனிச்சிருப்பாரு போல இருக்கு, நேத்து என் ரூம்ல செக் பண்ணி கண்டு பிடிச்சிட்டாரு. காலைல என்ன நேருக்கு நேரா ரகு-ங்ற பையனை காதலிக்கிறியான்னாரு. நடுங்கிகிட்டே ஆமான்னேன். உடனே சாயந்திரம் வீட்டுக்கு அழைச்சிட்டு வான்னாரு'
'ச்சே, சப்புனு போயிடுச்சே, என்னன்னமோ நடக்கும்னு கற்பனை பண்ணி வெச்சுருந்தேன், இப்போ எல்லாம் வேஸ்ட் ஆயிடுச்சி....'
இந்த பதிவு உங்களுக்கு பிடிச்சிருந்தா என்னை மேம்படுத்த உங்க கருத்துத்தையும், உற்சாகப்படுத்த ஓட்டையும் போடுங்களேன்!
47 : பேர் படிச்சிட்டு சொல்றாங்க...:
நல்ல அணுபவம்தான்..!
//ராஜு ♠ said...
நல்ல அணுபவம்தான்..!//
தம்பி...
நல்ல கமெண்ட்டுதான்...
ஆமாம்.....தமிழ்க் கலாச்சாரப்படி இதுவுஞ்சரிதான்(-:
//துளசி கோபால் said...
ஆமாம்.....தமிழ்க் கலாச்சாரப்படி இதுவுஞ்சரிதான்(-://
நன்றி மேடம்...
இதுல ஏதும் உள்குத்தல் இல்லையே?
மொன்னை கத்தியும் மொத்த பனியனும்'
சீக்கிரம் எழுது தம்பி...அப்புறம் இதையும் ரசிச்சு படிச்சேன்..வாழ்த்துக்கள்
//தண்டோரா ...... said...
மொன்னை கத்தியும் மொத்த பனியனும்'
சீக்கிரம் எழுது தம்பி...அப்புறம் இதையும் //
நன்றி அண்ணே!
சீக்கிரம் எழுதறேன்... அதுல இந்த கதை சம்மந்தமான ஒரு ட்விஸ்ட் இருக்கு...
சொந்தக் கதையாட்ட இருக்கே? இஃகிஃகி!
// பழமைபேசி said...
சொந்தக் கதையாட்ட இருக்கே? இஃகிஃகி!//
சொந்த ஊர்ல நடந்த கதை சொந்த கதைன்னா இது சொந்த கதைதான்...
கிராமங்களில் இதெல்லாம் சகஜம்... முப்பத்தஞ்சி வயசு ஆளுக்கு பத்தாவது படிக்கிற பசங்க இருக்கிறாங்கன்னா பாத்துக்கோங்களேன்...
பழைமைபேசி, உங்களின் முதல் வருகைக்கும் பின்னுட்டத்துக்கும் மனமார்ந்த நன்றி...
:-)))))) சீக்கிரம் மொன்ன கத்திய பத்தி எழுதுங்க :-))))
:)
யாத்ரீகன் said...
:-)))))) சீக்கிரம் மொன்ன கத்திய பத்தி எழுதுங்க :-))))
முன்னோட்டம் போட்டுவிட்டதால் அடுத்ததற்கு அடுத்ததாய் எழுதுகிறேன்... நன்றி உங்களின் வருகைக்கும், கருத்துக்கும்.
//சூரியன் said...
:)//
வாங்க சூரியன்...
/சீக்கிரம் எழுதறேன்... அதுல இந்த கதை சம்மந்தமான ஒரு ட்விஸ்ட் இருக்கு.//
அட.. பில்டப் ஏத்திட்டே இருக்கீங்க போலருக்கு..:) நாந்தான் 50தாவது..
//அட.. பில்டப் ஏத்திட்டே இருக்கீங்க போலருக்கு..:) நாந்தான் 50தாவது..//
உங்க நிழல்ல இருக்கிறோமே, கொஞ்சமாவது பில்டப் காட்டனும்ல...
நன்றி அண்ணா...
போன தலைமுறைல எங்க ஊர்லயும் எல்லாருக்கும் பெருமபாலும் ரெண்டு பொண்டாட்டிதான்... அதுவும் அக்கா தங்கச்சியைத்தான் கட்டுவாங்க...
ஆனா இப்போ கல்யாணமே வேண்டாம்ன்னுல நெறைய பேர் திரியறானுங்க... :))
//போன தலைமுறைல எங்க ஊர்லயும் எல்லாருக்கும் பெருமபாலும் ரெண்டு பொண்டாட்டிதான்... அதுவும் அக்கா தங்கச்சியைத்தான் கட்டுவாங்க...
ஆனா இப்போ கல்யாணமே வேண்டாம்ன்னுல நெறைய பேர் திரியறானுங்க... :))//
நன்றி ராஜா... எல்லாம் போன தலைமுறையோட ரிசல்ட் ட பாத்துட்டுத் தான்...
//பொங்கல் சமயத்துல பொம்பள வேஷம் போட்டுக்கிட்டு//
அதுதான் ரொம்ப பரிட்சயமாக்கும்
அது எப்பிடி பிரபா... வீதம் போட்டுட்டு..
ச்ச்ச்சங்கட்டமா இருக்காது!!????
ம்ம்ம்..உங்களக் கேட்டு என்ன பிரயோசனம்
ஒரு எட்டு ஆத்தூரு போயி பாலமுருவனத்தான் கேக்கோனும்..
ஆனாலும் பய புள்ள பெரிய ஆளுதான்
//ஒரு எட்டு ஆத்தூரு போயி பாலமுருவனத்தான் கேக்கோனும்..
ஆனாலும் பய புள்ள பெரிய ஆளுதான்//
காலையில இந்த பிளாக் பத்தி சொன்னப்ப என் தம்பி 'அது அப்போ, இப்ப என்ன நடக்குது தெரியுமா' ன்னு சொன்னான். அதுதான் மொன்னக்கத்தியில வரப்போகுது...
நன்றி கதிர்...
நல்லாச் சொல்றீங்க பிரபாகர்.
//
காமராஜ் said...
நல்லாச் சொல்றீங்க பிரபாகர்.//
நன்றி காமராஜ், முதல் வருகைக்கும் அன்பான கருத்துக்கும்.
கதை சொன்ன விதம் அருமை... !
என்னோட கதையும் அப்படிதான் ஆகிடும்போல இருக்கு பாசு...
உங்க கதை நல்லா சுவாரசியமா இருந்துச்சு!
//கலகலப்ரியா said...
கதை சொன்ன விதம் அருமை... !//
ரொம்ப நன்றிங்க. உங்க முதல் வருகை சந்தோஷத்தை கொடுக்குது. பாராட்டுக்கு நன்றி.
//October 5, 2009 7:13 PM
கலையரசன் said...
என்னோட கதையும் அப்படிதான் ஆகிடும்போல இருக்கு பாசு...
உங்க கதை நல்லா சுவாரசியமா இருந்துச்சு!//
வாங்க கலையரசன். பின்னூட்டத்துலேயே கலக்குறீங்க... நன்றி...
உங்க நண்பர் சூப்பர் ஆளு.. ம்ஹும்..
//Cable Sankar said...
உங்க நண்பர் சூப்பர் ஆளு.. ம்ஹும்..
October 5, 2009 8:00 PM//
அண்ணா அடுத்த பதிவுல அவரோட நிலைமையை பாத்தா ஏண்டா இப்படி சொன்னோம்னு நினைப்பீங்க.... நன்றி அண்ணா...
Nice story and writing...
I like this story much.
//நையாண்டி நைனா said...
Nice story and writing...
I like this story much.//
தேங்க்ஸ் நைனா.... நன்றி, நன்றி, நன்றி....
கதையின் நாயகன் பாலமுருகனுக்கு வெறும் முருகன்-னு மட்டும் பெயர் இருந்திருக்கலாம் :). என்னமோ... நல்லா இருந்தாங்கன்னா சரிங்க பிரபாகர்... ஆனால் உங்க முன்னோட்டத்தையும், பின்னூட்டத்தில் நீங்க சொன்ன பதிலையும் பார்த்தால் அப்படி ஒன்னும் இப்போ நல்லா இருக்கற மாதிரி தெரியலையே... உங்களுடைய அடுத்த பதிவு தான் பதில் சொல்லணும்...
சரியான தலைப்பு குடுத்திருக்கீங்க (கிராமத்து (அ)நியாயங்கள்).... அதுக்காக பாராட்டுகள்...
//ஆனால் உங்க முன்னோட்டத்தையும், பின்னூட்டத்தில் நீங்க சொன்ன பதிலையும் பார்த்தால் அப்படி ஒன்னும் இப்போ நல்லா இருக்கற மாதிரி தெரியலையே... உங்களுடைய அடுத்த பதிவு தான் பதில் சொல்லணும்..//
கண்டிப்பா.... யூகிக்கிறது கொஞ்சம் சரி... காமெடிய இருக்கும்... பாருங்களேன்....
சொல்லியிருக்கும் நடை அருமைங்க!
//தேவன் மாயம் said...
சொல்லியிருக்கும் நடை அருமைங்க!
//
உங்களின் ஊக்குவிப்புதான் என்னை நன்றாக எழுத வைக்கிறது... நன்றிங்க...
அன்பு பிரபா.....
இனிப்பாய், இயல்பாய், சொல்லியிருக்கிறீர்கள்.....
படிக்கும் ஆர்வம் கூடுகிறது.
வாழ்த்துக்கள்
//அன்பு பிரபா.....
இனிப்பாய், இயல்பாய், சொல்லியிருக்கிறீர்கள்.....
படிக்கும் ஆர்வம் கூடுகிறது.
வாழ்த்துக்கள்//
மிக்க நன்றி உங்களுக்கு. நிறைய சந்தோஷமாய் உணர்கிறேன்...
நடை அருமை. பாராட்டுகள் பிரபாகர்.
//வானம்பாடிகள் said...
நடை அருமை. பாராட்டுகள் பிரபாகர்.
October 6, 2009 12:10 AM //
உங்களிடமிருந்து பாராட்டுக்களை பெற்றதற்கு பெரும் மகிழ்ச்சியடைகிறேன்... மிக்க நன்றி...
நல்ல இடுகை பிரபாகர். பாலமுருகன் போல பல ஆட்களை இன்றும் பார்க்க முடிகிறது தான் :)
//ச.செந்தில்வேலன்(09021262991581433028) said...
நல்ல இடுகை பிரபாகர். பாலமுருகன் போல பல ஆட்களை இன்றும் பார்க்க முடிகிறது தான் :)//
நன்றி செந்தில். கிராமங்களை வைத்து எத்தனை இடுகைகளை வேண்டுமானாலும் இடலாம். அவ்வளவு விஷயங்கள் பொதிந்திருக்கின்றன...
நல்ல கதை. தைரியமான பையன் தான். அவனவன் ஒருத்திக்கே... சரி விடுங்க. உங்க சொந்த ஊர் என்ன?
//மகேஷ் said...
நல்ல கதை. தைரியமான பையன் தான். அவனவன் ஒருத்திக்கே... சரி விடுங்க. உங்க சொந்த ஊர் என்ன//
நன்றி மகேஷ்.... தெடாவூர் கிராமம் ஆத்தூர், கெங்கவல்லி தாலுக்கா...
குஜால் பார்ட்டியா இருப்பாருபோல. ரஜினி வீரா படம் போல இருக்கு. உங்க பாலா ஹீரோதான்!
நன்றி ஷங்கி, வரவிக்கும் கருத்துக்கும்...
பிரபாகர்.
ஏதோ திரைப்படம் பார்ப்பது போல் இருந்தது. அருமை நண்பரே.......
//புலவன் புலிகேசி said...
ஏதோ திரைப்படம் பார்ப்பது போல் இருந்தது. அருமை நண்பரே.......
October 6, 2009 2:57 PM //
நன்றி புலிகேசி... வருகைக்கும் கருத்துக்கும்....
பிரபா,எங்கேயோ போய்டீங்க..
நகைச்சுவை உங்களுக்கு சரளமா வருது.
சூப்பர். சூப்பர். சூப்பர்....
//butterfly Surya said...
பிரபா,எங்கேயோ போய்டீங்க..
நகைச்சுவை உங்களுக்கு சரளமா வருது.
சூப்பர். சூப்பர். சூப்பர்....
//
நன்றி சூர்யா... பாராட்டுக்கேற்றபடி தொடர்ந்து எழுத முயற்சிக்கிறேன்...
Post a Comment