சுதந்திரதின வாழ்த்துக்கள்...(கவிதை(?))

|


அனைவருக்கும் எனது இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்.
சுதந்திரத்தை பற்றிய எனது இருவேறு கோணங்கள் இந்த பதிவில். கண்டிப்பாய் உங்களின் கருத்துக்கள் என்னை மேம்படுத்த உதவும், குறைகளை சுட்டி என்னை குட்டுங்கள்(கொஞ்சம் மெதுவாய்)...

கற்கும் கல்வி விலையாகி
கடைவிரித்து கிடத்தலினால்
பெற்ற பிள்ளை படிப்பெண்ணி
பரிதவிக்கும் ஒரு சாரர்

கார்பனோடு கழிவு சேர்ந்து
காற்று கூட நஞ்சாக
சுற்றுபுற சீர்கேட்டால்
சுகமிழந்த ஒரு சாரர்

விற்கும் விலை விண்ணைத்தொட
வாங்கும் திறன் குறைந்ததனால்
அற்பமான வாழ்வு சார்ந்து
அவதியுறும் ஒரு சாரர்

அரசியல் சந்தனத்தில்
அமிழ்ந்துள்ள சாக்கடையால்
துர்நாற்ற சகதியினில்
துயர்படும் ஒரு சாரர்

தொலைக்காட்சி பெட்டிமுன்பு
சுதந்திரமாய் சிறைபடுத்தி
விலையில்லா நேரமதை
வீணாக்கும் ஒரு சாரர்

நல்ல பல வழியிருந்தும்
நல்லோரின் நட்பின்றி
அல்லல்பட்டு இன்னலுடன்
அவதிப்படும் ஒரு சாரர்.

பெற்றபிள்ளை விற்குமாறு
பஞ்சத்தில் ஒரு சாரர்
கற்பனைக்கும் எட்டாத
களிப்புடனே ஒரு சாரர்

அரசியலில் அவலம் செய்யும்
அழுக்கான ஒரு சாரர்
பிறர் நலனை நினையாத
பொறுப்பற்ற ஒரு சாரர்

***************************************************

பாடுபட்டு பெற்றிட்ட
பொன்னான சுதந்திரத்தில்
சாடுதலை விட்டுவிட்டு
சிறப்பதனை நோக்குங்கால்

ஈடில்லா நிறைய பல
இன்பம் தரும் விஷயங்கள்
கோடியுண்டு கண்டிட்டு
கவலையதை தள்ளிவைப்போம்

நல்ல பல கருத்துகளை
நவின்று சென்ற பெரியோரை
உள்ளத்தில் நினைந்திட்டு
உற்சாகம் உள்ளிருத்தி

வல்லரசாய் மாறுதற்கு
வழியென்ன யோசித்து
தொல்லைகளை துடைத்தெறிந்து
தெள்ளிய பாரதத்தை

உருவாக்க உறுதுணையாய்
இயன்றவற்றை செய்திட்டு
சார்ந்தோர்க்கு உதவிசெய்து
சீருடனே வாழ்ந்திடுவோம்

ஊர்க்கதையை பேசுதலை
உடனடியாய் விட்டுவிட்டு
பாரதத்தை சீர்திருத்தி
பண்புடனே வாழ்ந்திடுவோம்...

சத்தியத்தின் வழிநடந்து
சளைக்காமல் போராடி
சாதனைகள் புரிந்திட்டு
சரித்திரத்தில் இடம்பெறுவோம்

19 : பேர் படிச்சிட்டு சொல்றாங்க...:

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

நல்லா வந்திருக்கு.

”ஈழமக்களின் சுதந்திர வேட்கையைத் தணித்து, முனை மழுங்கச் செய்த என் தாய்த் திரு நாடே, உன் சுதந்திரத்தை எப்படிப் பெற்றாய்”

அப்படின்னு ஒரு வரி சேத்துக்குங்க.

பிரபாகர் said...

நண்பா,

உங்களின் வலி புரிகிறது நினைக்கையில் எனது மனம் பதைக்கிறது. சில சுயநலப் பேய்களின் தவறுகளுக்கு நாடென்ன செய்யும்?

தாய் மண்ணிற்கு வணக்கம்.

நாகராஜன் said...

நல்லா இருக்குங்க பிரபாகர்...

நாகராஜன் said...

அனைவருக்கும் இனிய சுதந்திர தின வாழ்த்துகள்.

பிரபாகர் said...

நன்றி ராசுக்குட்டி...

உங்களின் அன்பிற்கு என்றும் கடமைப்பட்டிருக்கிறேன்...

ஈரோடு கதிர் said...

கவிதைக்கு வந்த தோழனே
வணக்கம்

//ஊர்க்கதையை பேசுதலை
உடனடியாய் விட்டுவிட்டு
பாரதத்தை சீர்திருத்தி
பண்புடனே வாழ்ந்திடுவோம்...//

இது ஒன்னு போதும் உருப்பட...

வாழ்த்துகள் பிரபா

பிரபாகர் said...

தோழருக்கு சுதந்திர தின வாழ்த்துக்கள். எல்லாம் புலியை பார்த்த பூனை...அதிகாலை, சுதந்திரதினத்தில் ஊரிலில்லையே எனும் ஏக்கம்... வெளிப்பட திடீர் பதிவு.

நன்றி கதிர்...

Raju said...

நல்லாருக்குண்ணே...!

பிரபாகர் said...

வாங்க தம்பி... தம்பியுடையான் படைக்கு அஞ்சான்(படையில்லாமல் தம்பியிருந்தால் - சும்மா!). சுதந்திரதின வாழ்த்துக்கள்...

பீர் | Peer said...

பிரபாகர்,

நல்ல பார்வை, சுதந்திரத்தை சுதந்திமாய் பார்த்துள்ளது...

அருமை.

பிரபாகர் said...

நன்றி பீர்...

நம்மை போன்று தாய் திருநாட்டை பிரிந்திருப்போரெல்லாம் இது போன்று பகிர்ந்து ஆறுதல் தேடிக்கொள்ள வேண்டியது தான்...

யுவகிருஷ்ணா said...

60 லட்சம் சேரிகள். 28 ஆயிரம் சாதிகள். வாழ்க பாரதம்!

பிரபாகர் said...

//60 லட்சம் சேரிகள். 28 ஆயிரம் சாதிகள். வாழ்க பாரதம்!//

சாதிகள் இல்லையடி பாப்பா சொன்ன பாரதி நாட்டில், சாதியை பார்த்துத்தான் வேட்பாளர்கள்... மாறுவதற்கு எத்தனை தலைமுறையோ?

வருகைக்கு நன்றி கிருஷ்ணா...

sambasivamoorthy said...

//சத்தியத்தின் வழிநடந்து
சளைக்காமல் போராடி
சாதனைகள் புரிந்திட்டு
சரித்திரத்தில் இடம்பெறுவோம்//

இது சாத்தியமாகுமா ? தெரியவில்லை But most of the dreaming about it like you n me :D

Cheers

பிரபாகர் said...

மூர்த்தி,

கனவு கண்போம். அதை நனவாக்க போராடுவோம் வாழும்வரை, முடிவு என்னவாயினும்....

க.பாலாசி said...

தங்களின் இருவேறு கோணங்களிலும் சிந்திக்கதக்க வரிகள்.

நல்லதொரு சிந்தனைப் பகிர்வு. நன்றி அன்பரே.
(நான்கு நாட்கள் விடுப்பில் இருந்தபடியால் தங்களின் பதிவினை படிக்க கொஞ்சம் தாமதமாகிவிட்டது.)

பிரபாகர் said...

நன்றி பாலாஜி...

உங்களின் அன்பிற்கு என்றும் நான் கடமைப்பட்டுள்ளேன்...

பிரபாகர்.

ஆ.ஞானசேகரன் said...

நல்லாயிருக்கு நண்பரே

பிரபாகர் said...

//ஆ.ஞானசேகரன் said...
நல்லாயிருக்கு நண்பரே//

நன்றி நண்பரே!

தாமதமாய் கவனிக்கிறேன். வருகைக்கும், பின்னூட்டத்துக்கும் நன்றி...

 

©2009 ”வாழ்க்கை வாழ்வதற்கே” | Template Blue by TNB