இந்த இடுகையில் சமுதாய மாற்றங்களைப் பற்றிய விஷயங்களைப் பார்க்கலாம்.
கூரை வீடுகள் நிறைய குறைந்து கான்கிரீட், மெத்தை வீடுகளாய் மாறியிருக்கின்றன.
சராசரி வருமான விகிதம் பெருமளவில் உயர்ந்திருக்கிறது.
சந்து பொந்துகளெல்லாம் சிமெண்ட்டால் மேவப்பட்டு தண்ணீர் தேங்காமல் இருக்கிறது.
இரு சக்கர வாகனம், குறைந்தபட்சம் ஒரு செல்போனாவது இல்லாத இளைஞர்கள் இல்லை.
சேமிக்கும் பழக்கம் அதிகமாயிருக்கிறது, வங்கி கணக்கு எண்ணிக்கை உயர்ந்திருப்பதும் பெருகியிருக்கும் கூட்டமும் இதைப் பறைச்சாற்றுகிறது.
எல்லோரிடமும் சகிப்புத்தன்மை அதிகமாயிருக்கிறது. உதாரணமாய் பேருந்துக் கட்டணம் தனியார் பேருந்துகளில் ஏற்றியிருக்கும் போதும் கேட்காதிருத்தல், கடைகளில் விற்கப்படும் பொருள்களின் விலை அதிகமென்றாலும் கேள்விக்கேட்காமல் வாங்கிச்செல்வது.
படிக்காதவர்களிடத்தே சன் டிவியில் சொல்லப்படும் எல்லா செய்திகளும் சென்றடைகின்றன. செய்தித்தாள் படிப்பவர்கள் ஸ்பெக்ட்ரம், சாதிக் என பேசுகிறார்கள், பெரம்பலூர் பக்கமல்லவா... அதனால்தான் அதிகமாய்.
நான் படித்த பள்ளியியின் கட்டிடங்கள் முழுதும் இடிக்கப்பட்டு தரைமட்டமாய் இருக்கிறது. கற்களை பெயர்த்துக்கொண்து இருக்கிறார்கள். புதிய கட்டிடம் மூன்று அடுக்குகளோடு திறப்பு விழாவுக்கு காத்திருக்கிறது. எண்பத்தாறில் உயர்நிலைப்பள்ளியாய் மாறியபோது பத்தாவது முதல் செட்டில் படித்தேன். வரும் வருடம் மேல்நிலைப்பள்ளியாய் மாறிவிடுமாம், அதற்காக பணம் கட்டிவிட்டதாக தகவல் கிடைத்தபோது மகிழ்வாயிருக்கிறது.
ஆரம்ப சுகாதார நிலையம் முதலிலேயே இருந்தாலும் நிரந்தர மருத்துவரோடு புதிய கட்டிடத்தில் நல்ல பராமரிப்போடு கடந்த இரு மாதங்களாய் இயங்கி வருகிறது. முன்னதாக சுற்றுப்புற கிராமங்களில் உள்ள ஐம்பது கர்ப்பிணிப் பெண்களுக்கு வளைகாப்பு செய்து அசத்தியிருக்கிறார்கள். முதலில் பிறந்த பெண் குழந்தைக்கு அறுநூறு ரூபாய் பணம், பரிசுப்பொருள்கள் என கொடுத்து எல்லோரும் சென்று பார்த்திருக்கிறார்கள், எம்.எல்.ஏ உட்பட...
மிக அழகாய் மாரியம்மன் கோவிலைக் கட்டிமுடித்திருக்கிறார்கள். சமயபுரம் மாரியம்மன் சாயலில் செய்ய முயற்சித்திருக்கிறார்கள்.
முன்பெல்லாம் புதன் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வெட்டப்படும் ஆடுகளின் எண்ணிக்கை மூன்று மற்றும் ஆறு. இன்று பத்து மற்றும் முப்பது. கோழி இறைச்சியினை பக்கத்து ஊரில்தான் வாங்கி வருவோம், இன்று இங்கேயே நான்கு கடைகள்.
எல்லா புதுப்படத்தின் டிவிடிக்களும் பகிரங்கமாக கிடைக்கின்றன. அத்தோடில்லாமல் எந்த படமென்றாலும் கிடைக்கிறது. மிகச்சரியான கவனித்தலால் கண்டுகொள்வதில்லை.
இருபத்து நான்கு மணி நேரமும் சரக்கு கிடைக்கிறது, பத்து ரூபாய் அதிகம் வெளியில்.
ஐ போனிலிருந்து இடுகையிடுவதால் புகைப்படங்களை சேர்ப்பதற்கும், நிறைய எழுதுவதற்கும் சிரமமாயிருக்கிறது.
ப்ளக்ஸ் போர்ட் கலாச்சாரம் எப்படியெல்லாம் ஆட்டி வைக்கிறது என்பதை அடுத்த தொகுப்பில் பார்க்கலாம்...
மிச்சர்கடை
4 weeks ago
7 : பேர் படிச்சிட்டு சொல்றாங்க...:
தெடாவூர் நல்ல தொகுப்பு..
அனைத்து வசதிகளும் அடங்கிய கிராமமாக உள்ளது...
நல்ல தொகுப்பு.
சகிப்புத்தன்மை என்பதை விடவும்.. விரக்தி என்றால் சரியாக இருக்குமோ? இருப்பவர்கள் சகித்துக்கொள்வார்கள்.. இல்லாதவர்கள்..
ம்ம்... ஐ-ஃபோன்ல கலக்கறீங்களா.. சூப்பர். தொடருங்கள்..
தம்பி, தமிழகத்திலேயே செட்டில் ஆகிட்டிங்களா ?
இவ்வளவும் சொல்லீட்டீங்க. அந்த நெட் வர்க் செம ஸ்பீடு அதச் சொல்லலையே:))
இந்தியா முன்னேறுகிறது
கிராமங்களில் பொருளாதார வளர்ச்சி ஏற்பட்டிருக்கிறது. ஆடம்பரங்கள் இப்போது அத்தியாவசியங்களின் பட்டியலில் சேர்ந்து விட்டன. ஆனால், கிராமத்தின் ஆன்மாவுக்குத் தான் நிறைய சேதாரம் ஏற்பட்டிருப்பதாய் பெரும்பாலானோர் குறைப்பட்டுக் கொள்கிறார்கள். அந்த ஆதங்கத்தின் மெல்லிய தொனியை இங்கும் கண்டேன் நண்பரே!
||ஐ போனிலிருந்து இடுகையிடுவதால்||
ஊரும், ஊர்க்காரங்களும் நல்லா வளர்ந்துட்டாங்க!
Post a Comment