மன்மதன் அம்பு ஆடியோ ரிலீஸ்... செய்திக்கோர்ப்பு...

|

மன்மதன் அம்பு ஆடியோ ரிலீஸுக்கு சென்றிருந்தேன்... இது போன்ற நிகழ்ச்சிகளை தொலைக்காட்சியின் வாயிலாய்தான் பார்த்திருக்கிறேன், இதுதான் நேரடியாகப்பார்க்கும் ஆடியோ வெளியிடும் முதல் நிகழ்ச்சி.

மனதைக் கவர்ந்த விஷயங்கள் :

கமல்ஹாசன் இன்னும் இளைமையாய் இருப்பது

கமலைப் பற்றி மனதில் இருந்த பிம்பம் அப்படியே இருக்கவும், இன்னும் சில விஷயங்களில் எண்ணியதை விட இன்னும் பிரமிப்பு கூடும்வண்ணம் கமலின் பங்களிப்பு இருந்தது.

கமல் பாடிய நீல வானம்... நீயும் நானும் அற்புதமாய் இருந்தது. அவரே பாடக் கேட்க. நேரில் கேட்க.. டிவைன்.

தேவிஸ்ரீ பிரதாத்தின் துள்ளல்...

ரசிகர்கள் எட்டுபேரை (இருபாலரும் பாதிபாதியாய்) அழைத்து இசையை வெளியிட்ட விதம்..

கமலும் திரிஷா இருவரும் கவிதைப் பாட்டினைப் படிக்க ஆஹா!... கோபி சொன்னதுபோல் தமிழோடு திரிஷா இன்னும் அழகு கூடி மிளிர்ந்தார்.

கே.எஸ் ரவிக்குமாரின் பேச்சு, பங்காற்றியவர்களை நினைவுகூர்ந்த விதம்.

ஜோடி நம்பர் ஒன் குழுவினரின் நடனங்கள்...

மனதை நெருடிய விஷயங்கள் :

டிவியில் எடிட் செய்யப்பட்டு வழங்கப்படும் நிகழ்ச்சிகளைப்பார்த்து அற்புதம் என நினைத்து, தொகுத்த தீதி மற்றும் கோபியின் சொதப்பல்கள்.(ஒளிபரப்பின்போது இருக்காது)

சூப்பர் சிங்கர்களை கமர்சியலாக்கி, அவர்களைப் படுத்துவது.

கமலே வெட்கப்படும் அளவிற்கு தொகுப்பாளர்கள் அவரைப் புகழ்ந்து தள்ளியது (கமல் இதைக் குறிப்பிட்டு சொன்னார்)

உதயநிதியை வானளவிற்கு புகழ்ந்து தள்ளியது

விழாவினை ஏழு மணி என சொல்லி ஏழு இருபதுக்கு தாமதமாய் ஆரம்பித்தது.

கொசுறு :

எங்களுக்கு முன்னால் ஏதோ ஒரு பேனரை வைத்துக்கொண்டு அவ்வப்போது மறைத்து கேமிரா இந்த பக்கம் வருமா என ஆர்வக்கோளாறாய் இளைஞர்கள்.

அறுபதைக் கடந்த ஒருவர் அருகில் அடித்த கமெண்ட்டுகள், ரசித்து அவர் செய்த முகபாவங்கள்

திரிஷா ஆன்ட்டி என ஒருவர் கத்த குபீர் சிரிப்பலை...


டிஸ்கி : 

இதுதான் வாழ்வில் பார்க்கும் முதலும் கடைசியுமான ஆடியோ ரிலீஸ்...

10 : பேர் படிச்சிட்டு சொல்றாங்க...:

கலகலப்ரியா said...

அண்ணா.. டிஸ்கி ரொம்பப் புடிச்சிருக்கு.. :o)

vasu balaji said...

/கலகலப்ரியா said...

அண்ணா.. டிஸ்கி ரொம்பப் புடிச்சிருக்கு.. :o)
/

நாமளும் போடுவமில்ல..ரிப்பீட்டேய்.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

ennai kooppidave illai...

ஈரோடு கதிர் said...

அது ஏன் கடைசியாய்!!!???

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

பிறவிப்பயன்?.. ஹி..ஹி :-)

T.V.ராதாகிருஷ்ணன் said...

:)))

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

டிஸ்கி :

இதுதான் வாழ்வில் பார்க்கும் முதலும் கடைசியுமான ஆடியோ ரிலீஸ்...
//

பார்த்த..?.. இல்லை பார்க்கும்...?

க.பாலாசி said...

ஏன் அடுத்த கமல் ஆடியோ ரிலீஸ் வந்தா போகமாட்டீங்களா? ரைட்...

கோலா பூரி. said...

நீங்கல்லாம், யாரைப்பத்தி, எதைப்பத்தி பேசுரrீங்கப்பா, ஒன்னுமே புரியலை உலகத்துலே.

செ.சரவணக்குமார் said...

நலம்தானே பிரபா.. பேசி நீண்ட நாட்களாகிவிட்டன.

 

©2009 ”வாழ்க்கை வாழ்வதற்கே” | Template Blue by TNB