முதலிலேயே இரு விஷயங்களை சொல்லிக்கொள்ள ஆசைப்படுகிறேன். இது சத்தியமாய் கதிரின் இடுகைக்கு எதிர் இடுகை கிடையாது. அடுத்து நமக்கு சுத்தமாய் அந்த பழக்கம் கிடையாது (வேலிக்கு ஓனான் சாட்சி என்பதுபோல் இது கதிருக்கும் தெரியும்).
ஆனாலும் பாதிக்கப்படுற ஒரு இனத்துக்காக குரல் கொடுக்காமல் இருந்துட்டால் இந்த உலகம் நம்மை பழித்து ஒதுக்கிவிடுமோ என அஞ்சி இதோ என் பங்குக்கு ஒரு இடுகை.
வீட்டில் என்றுமே சம்பாதிக்கும் நபருக்குத்தான் அதீத மரியாதை என்பது எல்லோருக்கும் தெள்ளெனத் தெரியும். அவர்களுக்கென வெந்நீர் வைத்து தருவதிலிருந்து, யாருக்கும் இல்லாமல் கெட்டிச் சட்டினியுடன் இட்டிலி தோசை, மாலை வேளைகளில் தின்பதற்கு நொறுக்குத்தீனி, இரவு படுக்கப்போவதற்கு முன் பால்... என சொல்லிக்கொண்டே போகலாம்.
வீட்டில் இருக்கும் கவனிப்பு நாட்டில் ஏன் இல்லை. இது ஓர வஞ்சனை அல்லவா? தமிழக அரசு இத்தனை இலவசங்களை அள்ளித் தெளித்து மக்களை இவ்வளவு சொகுசாய் வைத்திருக்க மூல காரணம் என்ன என்பது எல்லோருக்கும் தெரியும். நெற்றி வேர்வை சிந்தி உழைக்கும் இவர்கள் தரும் பணத்தில்தான் எல்லாமே நடக்கிறது என்றால் மிகையில்லை.
அப்படிப்பட்ட வருமானத்தைப் பெருக்கக் கூடிய, வாரி வழங்கும் வள்ளல்கள் இருக்கும் அந்த நேர்மையான கூட்டத்திற்கு, மன்னிக்கவும் குழுமத்துக்கு நாமெல்லாம் மனப்பூர்வமான ஆதரவினை அளிக்க வேண்டும். அதை விடுத்து அவர்களை கண்டிப்பதுபோல் நினைப்பதே சரியில்லை எனும் கருத்தை வலியுறுத்தி.... அய்யய்யோ அடிக்க வராதீங்க... சும்மா ஏதாச்சும் எழுதனுமேன்னு....
டிஸ்கி: இது எங்கள் ஊரிலெல்லாம் இது மாதிரி போஸ்டர் ஒட்டறதில்லையே என்ற பொறாமையில் எழுதியது அல்ல... என சொல்லலாம் என்று சொல்ல நினைக்கும் போது அரிச்சந்திரன் குறுக்கீடு செய்வதால் ஆம்...
மிச்சர்கடை
4 weeks ago
15 : பேர் படிச்சிட்டு சொல்றாங்க...:
இப்பிடி தலைப்புலயே ஸ்பெல்லிங் மிஸ்டேக் வுட்டா நாடு சத்தியமா உருப்படாது.. ;))))
இண்ட்லி/தமிழிஷ்ல சப்மிட் பண்ணுங்க தலை. ஓட்டுப் போடணுமில்ல.
நாடு ’உருப்படுமா’ என்று இடையின ’ர’வுக்குப் பதிலாக, வல்லின ’ற’ உபயோகித்து எழுத்தில் கூட இனவேறுபாடு இருக்கக் கூடாது என்று சூசகமாகத் தெரிவித்த உங்களது ஆற்றலை மெச்சி உங்களுக்கு ஏன் ’சிங்கைத்தமிழ் சிங்கம்,’ என்ற பட்டம் அளிக்கக்கூடாது என்ற வினாவினை தமிழறிஞர்கள் முன்பு வைக்கிறேன். ஸ்டார்ட் மீஜிக்....!
எங்கள் கூடத்துக்கு ஆள் நிறைய சேர்ந்துகொண்டு இருப்பதால் 2011 குடிகாரர் கட்சிக்கே...
//சிங்கைத்தமிழ் சிங்கம்,’ என்ற பட்டம் அளிக்கக்கூடாது என்ற வினாவினை தமிழறிஞர்கள் முன்பு வைக்கிறேன். ஸ்டார்ட் மீஜிக்....//
யோவ் சேட்டை. அண்ணனுக்கு அந்தப் பட்டத்தைக் குடுத்து வருசம் ஒண்ணாவப்போவுது. நீரு லேட்டா வந்து குடுத்தா என்னான்னு கேட்டுக்கிட்டு இருக்கீரு? வேற எதாவது நல்ல பட்டமா யோசியும்.
///வீட்டில் இருக்கும் கவனிப்பு நாட்டில் ஏன் இல்லை.///
இல்லைதான் ஏன் இல்லை...சுயநலம்
நல்ல பதிவு.......வாழ்த்துகள்
நன்றி பிரபாகர் சார்:)
உங்க நேர்மைய நான் பாராட்டியே ஆகனும்.
//இப்பிடி தலைப்புலயே ஸ்பெல்லிங் மிஸ்டேக் வுட்டா நாடு சத்தியமா உருப்படாது.. ;))))//
அதே...அதே... நெடில் று அல்ல குறில் ரு...போடுங்கணோவ்....
மச மசன்னு பேசிட்டிருக்காம..சீக்கிரம் நாட்டாமையை கூப்பிடுங்கப்பா... இன்னிக்கு தீர்ப்பு சொல்லியே ஆகனும்..
ஏன் பிரபாரகர்?
இன்னும் கொஞ்சம் சட்டையை சுழட்டி இருக்கலாமே?
நல்ல பதிவு ;))
நாட்டையே காப்பத்துறவங்களுக்கு பாதுகாப்பு இல்லையா!?
பிரபா....சிரிச்சாலும் யோசிக்கவும் இருக்கு விஷயம்.
||வேலிக்கு ஓனான் சாட்சி என்பதுபோல் இது கதிருக்கும் தெரியும்||
அண்ணே.. நீங்க குடிப்பீங்களா? குடிக்க மாட்டீங்களா
______________________
(மவனே... இந்த அத்தா(சா)ட்சி போதுமா)
/////////சிங்கைத்தமிழ் சிங்கம்,’ என்ற பட்டம் அளிக்கக்கூடாது என்ற வினாவினை தமிழறிஞர்கள் முன்பு வைக்கிறேன். ஸ்டார்ட் மீஜிக்....//
////////
என்ன இதற்கு வெறும் ஸ்டார்ட் மீஜிக் என்று சொன்னால் போதுமா !?அடிக்கிற அடியில் தாரை ,தப்பட்டைகள் கிழிந்து தொங்கவேன்டாமா !
Post a Comment