கனவாகவே..நனவாகவே...

|

கதிர் எழுதின கனவாகவே... 

ஆசான் எழுதின நனவாகவே...

நான் எழுதின கனவாகவே....நனவாகவே ....கீழே..

காட்ட வித்து கஷ்டப்பட்டு, கடன்வாங்கி கடனேன்னு
காஞ்சி தேஞ்சி காசனுப்ப
கட்டிங், சினிமா, பஸ்ஸுல பொண்ணு
காரியமா இருக்க, கழண்டுகிச்சி எல்லாம்.

படிச்சாலும் பாழும் மண்டையில ஏறல
பாஸ் பண்ணவும் முடியல... 
மொத வருஷம் முழுதா மூனு அரியர்.
பாஸ்பண்ணினவன் டிரீட் வெக்க
புண்பட்ட மனசை புகையோட தண்ணி.

அடுத்த வருஷம் ஆரம்பத்துலயே படிப்போம்
அழகா முடிவு செஞ்சி
ஆஞ்சனேயர் கோவில் அர்ச்சனை
ஆரம்ப நாளே அழகான பொண்ணு.
அடுத்தவருஷம் படிச்சிக்கலாம்னு அத ஓட்ட,
அஞ்சி சேந்து எட்டு.

கடைசி வருஷம் கருத்தா இருப்போம்
கச்சிதமா படிக்க, கடவுளுக்கே பொறுக்காம
காசு அனுப்பின அப்பன் காடு போய் சேர
காலேஜும் காலி, என் கால் ஏஜும் காலி.
சுத்தாதீங்கடா பயலுவலா, சொகமா இருக்க படிங்க...
சொல்லுறேன் எல்லாத்துக்கும், கனவு நனவாக...

10 : பேர் படிச்சிட்டு சொல்றாங்க...:

vasu balaji said...

ஆஞ்சநேயர் கோவில்ல சைட்டு
கொரங்கு புத்தி கொரங்கு புத்தி

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

நீங்க அரியர் கிளியர் பண்ணிடீங்களா இல்லியா boss

ஆரூரன் விசுவநாதன் said...

//காலேஜும் காலி, என் கால் ஏஜும் காலி.///

அட ஆமா......

ஈரோடு கதிர் said...

கொஞ்சம் கேப் விடுங்கண்ணே

அங்கிட்டு முடிச்சுட்டு வர்றேன்

T.V.ராதாகிருஷ்ணன் said...

:))

க ரா said...

பின்றீங்க.

ரோஸ்விக் said...

இது எதுவும் உங்க சொந்த கதை இல்லையே!!!??? :-)))

www.thalaivan.com said...

வணக்கம்
நண்பர்களே

உங்கள் திறமைகளை உலகுக்கு அறியச் செய்யும் ஒரு அரிய தளமாக எம் தலைவன் தளம் உங்களுக்கு அமையும்.

உங்கள் தளத்தில் நீங்கள் பிரசுரிக்கும் சிறந்த ஆக்கங்களை எமது தளத்தில் இடுகை செய்வதன் மூலம் உங்கள் ஆக்கங்களை அதிகமான பார்வையாளர்கள் பார்ப்பதற்கு வாய்ப்பளிப்பதுடன் உங்கள் தளத்திற்கு அதிக வருகையாளர்களையும் பெற்றுத் தரும்.
நன்றி
தலைவன் குழுமம்

www.thalaivan.com


You can add the vote button on you blog:

http://thalaivan.com/page.php?page=blogger

THANKS

Regards,
Thalaivan Team FRANCE
thalaivaninfo@gmail.com

பிரபாகர் said...

//
வானம்பாடிகள் சைட்...
ஆஞ்சநேயர் கோவில்ல சைட்டு
கொரங்கு புத்தி கொரங்கு புத்தி
//
இந்த மாதிரியெல்லாம் கவுத்துவிட உங்களால மட்டுமே முடியும் அய்யா!

//
ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சைட்...
நீங்க அரியர் கிளியர் பண்ணிடீங்களா இல்லியா பொச்ச்
//
நம்ம சொந்த கதை இல்லை தம்பி...

//
ஆரூரன் விசுவநாதன் சைட்...
//காலேஜும் காலி, என் கால் ஏஜும் காலி.///

அட ஆமா......
//
நன்றி ஆரூரன்...

பிரபாகர் said...

//
ஈரோடு கதிர் சைட்...
கொஞ்சம் கேப் விடுங்கண்ணே

அங்கிட்டு முடிச்சுட்டு வர்றேன்
//

வாங்க வாங்க...

//
T.V.ராதாகிருஷ்ணன் சைட்...
:))
//
நன்றிங்கய்யா...

//
இராமசாமி கண்ணண் சைட்...
பின்றீங்க.
//
நன்றிங்க...

//
ரோஸ்விக் சைட்...
இது எதுவும் உங்க சொந்த கதை இல்லையே!!!??? :-)))
//
முழுக்க முழுக்க கற்பனையே...

 

©2009 ”வாழ்க்கை வாழ்வதற்கே” | Template Blue by TNB