ஆசானும் டபுள் எஞ்ஜினும்...

|

பொள்ளாச்சியில் பரபரப்பு

‘ஸ்னேக் சிவக்குமார்’

உடுமலையில் வனச்சரகராக சிவகுமார் இருந்தபோது, மண்ணுளி பாம்பை வைத்து பலரை சிக்க வைத்து நடவடிக்கை எடுக்காதது போல் நாடகமாடி பணம் கறப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளார். இதன் மூலம் இவர் லட்சக்கணக்கில் சம்பாதித்துள்ளது வனத்துறையினர் அறிந்த விஷயமாம். இவருக்கு ‘ஸ்னேக் சிவக்குமார்’ என்கிற அடைமொழியும் உண்டாம். இவரது மோசடியில் பாதிக்கப்பட்ட பலர் எழுத்துப்பூர்வமாக புகார் கொடுக்காததால் தப்பி வந்துள்ளார். இம்முறை சிக்கியுள்ளார்.

கொஞ்சம் பத்திரிக்கைச் செய்திகளை மேய்ந்தபோது இந்த விஷயம் கண்ணில் பட நகைப்பாய் இருந்தது, இரு விஷயங்களால். ஒன்று என் அன்பு ஆசானால் எனக்கு வழங்கப்பட்ட பட்டப்பெயர் ஸ்நேக் பிரபா. அதன் காரணத்திற்கான அவரின் அவரின் கலாய்க்கப்போவது யாரு - 2 இடுகையில் எழுதியிருப்பதைப் பாருங்களேன்.

பிரபா: அப்ப நான் மாமா பொண்ண ஒரு தலையா லவ் பண்ணிட்டிருந்த நேரம். சங்க காலத்துல காளைய அடக்குறது, இளவட்டக்கல்லு தூக்குறது மாதிரி மாமா பொண்ணு ஒரு பாம்ப புடிச்சி கொண்டா. அப்பதான் லவ் பண்ணுவேன்னு சொல்லிட்டாப்ல. என்னடா இப்படி சொல்லிபுட்டான்னு கலவரமாயிடிச்சி. வேல்முருகன் சொன்னாப்ல, பாம்புன்னுதான  சொன்னா. அனகொண்டான்னு சொல்லலையே. ஆத்துக்கு போய் தண்ணி பாம்ப புடிச்சிடலாம்னு சொன்னாப்ல.

சரின்னு நான், வேல்முருகன்,ராஜு, எல்லாம் ஆத்துக்கு போனோம். அங்க ஒரு பொண்ணு லவ் ஃபெய்லூய்ர்ல தண்ணில முழுகிடிச்சி. நான் காப்பாத்துங்கன்னு கத்தி, அக்கம்பக்கதுல எல்லாருமா சேர்ந்து கரைல போட்டாங்க. நான் சினிமால பார்த்தத கவனம் வெச்சி, வயத்த அமுக்கி தண்ணிய வெளிய எடுங்கன்னேன். 

இதாண்டா சாக்குன்னு வயசு பசங்க அத்தன பேரும் பாஞ்சி அமுக்குனதுல அதுக்கு மூச்சு நின்னு போச்சு. வாயோட வாய் வெச்சி ஊதுனா மூச்சு வரும்னேன். நீ செய் பிரபான்னாங்க. இல்ல! மாமா பொண்ண லவ் பண்ணாதவங்கதான் பண்ணனும்னேன். நாந்தான் நாந்தான்னு ஒருத்தனுக்கு ஒருத்தன் அடிச்சிகிட்டதுல அந்த பொண்ணு செத்து போச்சு.

ஃப்ரெண்ட்ஸ்ங்கெல்லாம் ஓட்டிடாங்க. ஊர்க்காரங்கள்ளாம் சேர்ந்து என்னாலதான்னு என்ன மரத்துல கட்டி போட்டுடாப்ல , சாவு எடுக்கற வரைக்கும். அப்புறம் ஆத்துக்குள்ள அளைஞ்சி ஒரு பாம்ப புடிச்சிட்டு மாமா பொண்ணு எனக்குதான்னு தெம்பா போனேன். எனக்கு முன்னாடி சித்தப்பா பையன் ஒரு ரப்பர் பாம்ப காட்டி மடிச்சிட்டாப்ல. அதாவது பரவாயில்ல நான் கொண்டு வந்தது மண்புழுன்னு போட்டு குடுத்துட்டாப்ல. அந்த கதைய அடுத்த எபிசோட்ல சொல்றேன்.(ஆசான் இடுகை போட்டுடுங்க, இல்லன்னா இது மாதிரி நான் உங்க இடுகையைக் காப்பியடிச்சி போட ஆரம்பிச்சிடுவேன்)

இதைவிடவா ஸ்நேக் சிவக்குமார் மேட்டர் சுவராஸ்யமாக இருக்கிறது? இரண்டாவது காரணம் இந்த ம. பாம்பு விஷயமாய் எனக்கும் என் தம்பிக்கும் இடையே நடந்த ஒரு சம்பவம்.

சரியாய் ஒரு வருடம் முன்பு ஊருக்கு சென்றிருந்தபோது திவாகர் நிறைய டென்ஷனாய் இருந்தான். துருவித் துருவி விசாரித்தும் காரணம் சொல்லவில்லை. அடிக்கடி போனில் பேசுவது, மெலிதாய் சிரிப்பது, யாருக்கோ அறிவுரை சொல்வது என அவனது போக்கு மர்மமாய் இருந்தது. கொஞ்சம் கோபித்துக்கொள்வது போல் அவனைத் திட்ட, விஷயம் வெளியே வந்தது. எங்கள் சித்தி மகன் 'டபுள் டெக்கர்' டீலில் மாட்டியிருப்பதாயும் அது சம்மந்தமாய் அவன் சொல்வதைக் கேட்காமல் இருப்பதாயும், அவனுக்கு ஏதாவது ஆகிவிடுமோ எனும் பதபதைப்பில் பேசிக்கொண்டிருப்பதாயும் சொன்னான்.

டபுள் டக்கரா என்றதற்கு இரண்டு பக்கமும் தலை உள்ள மண்ணுளிப்பாம்பு எனவும் அதன் எடைக்கேற்றவாறு ஃபோர் சி, பைவ் சின்னு சொல்லிக்கொண்டிருக்கிறான் எனவும் சொன்னான். சி என்றால் க்ரோர்..., கோடியாம். ஒரு டபுள் டெக்கர் கிடைத்ததாகவும் வெயிட் பார்த்து அதை இரண்டு சி-க்கு முடித்திருப்பதாகவும் தகவல். மேலும் அதை மொபைல் போனில் எடுக்க அதில் படமே விழவில்லை அது பற்றி பல தகவல்கள் மூர்ச்சையாக்கும்படி இருந்தன. அந்த ம.பாம்புக்கு சரியான கவனிப்பாம், முட்டை, பால் என. இடையிடையே அந்த ம.பாம்பு சரியாக ஆக்டிவ் இல்லை, அது இது என புரளி, அதை வாங்குவதற்கு கேரளாவிலிருந்து ஆட்கள் சுமோவில் எங்கு வந்து கொண்டிருக்கிறார்கள் என லைவ் ரிலே வேறு.

அடுத்தமுறை பேசும்போது என்னிடம் போனைக் கொடு எனச் சொல்ல 'அண்ணா அவனைத் திட்டக்கூடாது, நைசாக் கேளு' என்ற உத்திரவாதத்துடன் திவா கொடுத்தான். எப்படி இருக்கிறாய் என ஆரம்பித்து அண்ணன் வந்து இரண்டு நாள் ஆச்சு ஒரு போனும் இல்ல எனக் கேட்டதுக்கு பிசியாய் இருப்பதாய் சொல்லி அவனாகவே விஷயத்தைச் சொல்லி இன்னும் த்ரீ அவர்ல டெலிவெரி, ரெண்டு குரூப் வேலை பாத்துகிட்டிருக்கோம், எனக்கு டொன்டி பைவ் எல் கிடைக்கும்' என உளறிக்கொட்டினான்.

பார்த்து ஜாக்கிரதை என அறிவுறுத்தினேன். இரண்டு நாள் இழுக்கடித்து அப்புறம் ஒரு வாரம் கழித்துத்தான் ஏமாற்றப்பட்டதாய் உணர்ந்தான். இப்போது அவனது வேலையினைப்பார்த்துக்கொண்டு அமைதியாய் இருக்கிறான்.

இந்தமுறை தம்பியின் காரியமெல்லாம் முடித்து சிங்கை வருமுன் வீட்டிற்கு வந்த அவனிடம் என்னடா ஆச்சு டபுள் டெக்கர் எனக்கேட்க, ‘ஏன்னா அதப்பத்திக் கேக்கற, அதெல்லாம் விட்டாச்சு. ஆனா இப்போ வெள்ளிமலை தகடு இருக்கு... எனக்கு அதில இண்ட்ரஸ்ட் இல்ல’ என ஆரம்பிக்க மூர்ச்சையானேன்.

6 : பேர் படிச்சிட்டு சொல்றாங்க...:

T.V.ராதாகிருஷ்ணன் said...

present praba

sathishsangkavi.blogspot.com said...

//காளைய அடக்குறது, இளவட்டக்கல்லு தூக்குறது மாதிரி மாமா பொண்ணு ஒரு பாம்ப புடிச்சி கொண்டா. அப்பதான் லவ் பண்ணுவேன்னு சொல்லிட்டாப்ல//

எல்லா பொண்ணுகளும் இப்படி சொல்லிட்டா நாட்டுல லவ்வே இருக்காது பாங்காளி...

//இப்போ வெள்ளிமலை தகடு இருக்கு...//


அப்ப அடுத்த பதிவு தயார்ன்னு சொல்லுங்க...

ஈரோடு கதிர் said...

ஏம் பிரபா இப்படி!!???

Paleo God said...

நல்ல நல்ல இடுகையெல்ல்லாம் ட்ராஃப்ட்லயே வெக்காதீங்க. ஹேக் பண்ணிடுவோம் ஆமா!:)

--

ஒரு சிங்கை வழி காட்டித் தொடர் எழுதுதுங்களேன் பிரபா..!

vasu balaji said...

ஈரோடு கதிர் said...

/ஏம் பிரபா இப்படி!!???/

எப்புடி? அப்புடியேத்தான்:(

ஈரோடு கதிர் said...

||மூர்ச்சையானேன்||

அடடே..
அப்புறம்...
எப்ப தெளிஞ்சு எந்திருச்சீங்க

 

©2009 ”வாழ்க்கை வாழ்வதற்கே” | Template Blue by TNB