புதுமை செய்வோம்...

|


அரசியலில் நடக்கின்ற
அவலங்கள் பார்த்து
புரட்சியொன்று வெடித்து
புரட்டர்கள் போயொழிய

மறுமலர்ச்சி வந்திங்கு
மக்களெல்லாம் மகிழுமாறு
திருப்பமது நிகழ்ந்து
தொலைந்திடுமா துயரங்கள்

விரும்பும் மனம் நனவாக
வழியேதும் உளதாவென
பெரியோரை கேட்டிட்டேன்
பதில் கேட்டு சோர்ந்திட்டேன்

மாற்றமது வருதற்கு
மக்களால் தான் முடியும்
அரசியலார் அது முடக்க
ஆக்கமாய் செய்தலினால்

குறும்பாட்டு கூட்டம்போல்
கட்சி வழி பின்பற்றி
குறை தெரிந்தும் பின்பற்றி
கூட்டமாய் சென்றிட்டு

மறை வழியை மறந்து
மத வழியை பின்பற்றி
சார்ந்திருக்கும் சாதிகட்சி
சகதியினில் இறங்கி

திரையறிவு மறைத்து
தொலை நோக்கு மறந்து
மறை கழன்ற மதியுடன்
மதி நிறைந்த சான்றோரும்

அரசியலார் தடம் பற்றி
அவல வழி செல்லுதலால்
மாறுதலின் வாய்ப்பதனை
மங்கச் செய்தலினால்

வீரமிகு இளைஞரெல்லாம்
உறுதிமொழி ஆர்த்து
அரசியலை சாராமல்
அரசியலார் நாடாமல்

சீரழிக்கும் சினிமாவின்
கதை மாந்தர் மன்றம்தனை
வேரறுத்து ஒழித்து
உறுதியினை சேர்த்து

மாற்றமது நம்முள்
மனதிலிதை நிறுத்தி
வீறு கோண்டு செல்வோம்
வெற்றியினை சேர்ப்போம்

சோர்வு நேரும் தருணம்
சான்றோர் உரை படித்து
சுறுசுறுப்பை அடைவோம்
சீரிய பாரதத்தை படைப்போம்.

பிரபாகர்.

2 : பேர் படிச்சிட்டு சொல்றாங்க...:

வாழவந்தான் said...

இனி ஒரு விதிசெய்வோம்!!

Prabhagar said...

நன்றி வாழவந்தான்...

இதெல்லாம் நான் நெடு நாட்களுக்கு முன் ஆர்வத்தில் எழுதியது. படிப்பதற்கு சுமாராய் இருக்கவும் பதிவேற்றிவிட்டேன்...

பிரபாகர்...

 

©2009 ”வாழ்க்கை வாழ்வதற்கே” | Template Blue by TNB