பிட் படமும் உடற்பயிற்சி வாத்தியாரும்...

|

ப்ளஸ் ஒன் படிச்சிட்டிருந்த சமயம். பறங்கிமலை ஜோதி மாதிரி, ஆத்தூர் ராமச்சந்திரா தியேட்டர்ல மேட்டர் படம் போடுவாங்க.

அங்க படம் பாக்கறதுன்னா பெரிய பிராயத்தனம் பண்ண வேண்டியிருக்கும்.

மொதல்ல அந்த பஸ் ஸ்டாப்புல இறங்குறதை நம்ம ஊர்க்காரங்க பாக்கக்கூடாது.

ஆர்வத்துல வர்ற சொந்த பந்த கிழங்கள் பாக்கக்கூடாது.
பாத்துட்டாங்கன்னா,

'பையன் ரொம்ப பெரிய ஆளாயிட்டான் போலிருக்கு, எங்கெங்கேயோ சுத்தறா' ன்னு பூடகமா கோத்து விடுவாங்க.

அப்புறம் குறிப்பா ஃபிரண்ட்டோட அப்பாவ அந்த ஏரியாவுல, தியேட்டருக்குள்ள பாக்கக்கூடாது.

அப்புறம் நம்மள பாத்தாலே கொலை குத்தம் பண்ணினமாதிரி,

'இவங்கூட சேராத, உருப்பட மாட்டேன்னு' சொல்லுவாரு, அவரு மகன் தான் நமக்கெல்லாம் குருங்கற விஷயம் தெரியாம.

நாங்க ஒரு நாலு பேரு போயிருந்தோம். நாலைஞ்சி படத்த கலந்து ஓட்டினாங்க.

'என்னடா, கதம்பமா ஓடுதுன்னு கேட்டதுக்கு,

'டேய், கோழி குருடா இருந்தா என்னடா, குழம்பு ருசியா இருந்தா போதாதான்னான்' ஒரு ஃபிரண்டு.

இடைவேளை வரையிலும் ஒன்னுமே இல்ல. பிரேக்ல பாத்தா கீழ செகண்ட் கிளாஸ்ல நம்ம உடற்பயிற்சி ஆசிரியர் உட்கார்ந்திருந்தார்.

நம்ம ஆளுங்கள்ல ஒருத்தன் கவனிச்சு சொன்னதும், சட்டென பென்ச்சையெல்லாம் தாண்டி குதிச்சி (கிளாஸ் விட்டு கிளாஸ் மாறும்போது) அவருக்கு முன்னாடி போய் நின்னேன்.

'சார் குட் ஆஃப்டர் நூன்'னு சொன்னேன். மனுஷன் அப்படியே வேர்த்து விறுவிறுத்து போயிட்டாரு. சுத்தி முத்தியும் பாத்துட்டு வணக்கம் சொல்லிட்டு தலையை குனிஞ்சிகிட்டாரு.

திரும்ப பசஙகிட்ட வந்து திரும்பி பாத்தா அவர காணோம்.

'ஆனாலும் உனக்கு ரொம்ப திமிருடா... அவரு நீ வணக்கம் சொன்ன உடனே எழுந்து போயிட்டாரு' ன்னானுங்க.

அதுக்கப்புறம் அவரு ஸ்கூல்ல எங்க பாத்தாலும் தலையை குனிஞ்சிக்குவாரு.

கொஞ்ச நாள் கழிச்சு ப்ளஸ் டூ பசங்களுக்கும் எங்க கிளாஸ் பசஙகளுக்கும் ஹாக்கி மட்டை விஷயமா தகறாறு.

ஓடிவந்து சொன்னானுங்க.

அவசரமா பி.இ.டி சார் ரூமுக்கு ஓடினேன்.

நிலம ரொம்ப மோசமா இருந்தது. அவரு ப்ளஸ் டூ பசங்களுக்கு ஆதரவாய் பேசிட்டிருந்தாரு. எங்க பசங்க நொந்து போய் வாதாடிட்டு இருந்தானுங்க...

நேரா அவருகிட்ட போய், 'சார், என்ன நடக்குது இங்க' ன்னேன்.

என்ன பாத்ததும் டக்குனு அப்படியே கதைய மாத்தி, ப்ளஸ் டூ பசங்கள பாத்து,

'தம்பிங்களா, அவங்க சின்ன பசங்க, பெரியவங்க நீங்கதான் அட்ஜஸ்ட் பண்ணிக்கிட்டு போகனும், உங்களுக்கு பப்ளிக், ஒழுங்கா பரிட்சைக்கு போய் படிங்க' ன்னுட்டு எங்களை பாத்து,

'நீங்க பேட்டை எடுத்துட்டு போய் விளையாடுங்க' ன்னாரு.

அதுக்கப்புறம் ஒன்றரை வருஷம் அந்த சம்பவத்தால பசங்க மத்தியில ஹீரோவா இருந்தேன்.

அவரும் அதுக்கப்புறம் சினேகமாயிட்டு ஸ்போர்ட்ஸ் சம்மந்தமா எல்லா உதவியையும் செஞ்சாரு.

சப்ஸ்டிடூட்டாவாவது போட்டு எல்லா சர்டிஃபிகேட்டும் கொடுத்தாரு.

10 : பேர் படிச்சிட்டு சொல்றாங்க...:

சங்கர் தியாகராஜன் said...

நீதி: ஸ்போர்ட்ஸ் சர்டிஃபிகேட் வேணுமுன்னா... பிட் படத்துக்கு போகணும்.

krish said...

hee hee very hilarious

பிரபாகர் said...

நன்றி கிருஷ்ணன்...

பிரபாகர்...

கும்மாச்சி said...

அண்ணே ஆனாலும் வுங்களுக்கு கொஞ்சம் குசும்பு கூடத்தான்.

கலையரசன் said...

தைரியம் ஜாஸ்திதான்..
நாங்க ஓடி ஒளிஞ்சுக்குவோம்!!

பிரபாகர் said...

//அண்ணே ஆனாலும் வுங்களுக்கு கொஞ்சம் குசும்பு கூடத்தான்.//


// தைரியம் ஜாஸ்திதான்..
நாங்க ஓடி ஒளிஞ்சுக்குவோம்!//

வரவிற்கு நன்றி கும்மாச்சி, கலையரசன் ...

கிளாஸ் டீச்சர் இல்ல, அதான்....

பிரபாகர்...

Krishna said...

யாருங்க அது வேடியப்பனா..? இருந்தாலும் வேல்முருகன் தியேட்டர் க்கு விட்டதுதான் ராமச்சந்திரா. என்ன சொல்றீங்க..

இருந்தாலும் உங்களுக்கு ரொம்ப தைரியம் தாங்க

பிரபாகர் said...

//யாருங்க அது வேடியப்பனா..? இருந்தாலும் வேல்முருகன் தியேட்டர் க்கு விட்டதுதான் ராமச்சந்திரா. என்ன சொல்றீங்க..
//
வேல்முருகன் தியேட்டர் இப்போ,நம்ம கதை 88-ல...

Krishna said...

அப்பவே அலம்பல ஆரம்பிச்சாச்சா

பிரபாகர் said...

//அப்பவே அலம்பல ஆரம்பிச்சாச்சா//

அப்போ தாங்க வயசு, +1 படிச்சிட்டிருந்தேன்.

பிரபாகர்.

 

©2009 ”வாழ்க்கை வாழ்வதற்கே” | Template Blue by TNB