சுளுக்கு - 2 ஆம் பகுதி

|


சைக்கிள்ல என்னை ரெண்டு பேர் கைத் தாங்கலா தூக்கி வெச்சி
('என்ன மாம்ஸ் சப்பிடற, இந்த கணம் கணக்குற?') மெதுவா வீட்டுல கொண்டு வந்து விட்டானுங்க.கணுக்கால் கிட்ட பன்னு மாதிரி உப்ப ஆரம்பிச்சிடுச்சி. சுத்தமா கால ஊனவே முடியல. தாஙலா ரெண்டு பேரை புடிச்சிட்டு ஒத்த கால்ல நோண்டிட்டே உள்ள போனேன்.


'பரதேசி நாயிங்க, சும்மா இருந்த என் பேரனை கூட்டிட்டு போயி கால முறிச்சு கொண்டாந்துட்டானுங்க' அம்மாவொட பாட்டி அது பங்குக்கு மொத ஆளா ஆரம்பிச்சது.


'இது தேவையா, உனக்கு அறிவே கிடையாது பிரபு', இது என் சித்தி.


'எத்தனை சொன்னாலும் திருந்த மாட்டே' ஆயா.


'செய்யற வேலை விட்டுட்டு செனை ஆட்டுக்கு... கரன்ட் பில்ல கட்டிட்டு வாடான்னா, கால்ல கட்டிகிட்டு வந்திருக்கான்' தாத்தா.


அதுக்குள்ள பாட்டி போயி, தாசன்ங்ற ஆளை கூட்டிட்டு வந்துச்சி. பாடம் போடறவறாம். வரும்போதே லேசா உந்தி உந்தி வந்தாப்ல.


'ஆயி, ஒரு சீவாங்குச்சி எடுத்துட்டு வாங்க, அப்படியே திரு நீறு'


'எப்படி கண்ணு ஆச்சுன்னு வீங்குன இடத்த புடிச்சி நல்ல அழுத்தி பாக்க, வலியில துடிச்சிட்டேன், கண்ணுல்ல மாலை மாலையா தண்ணி.


'படிச்சவன் இப்படிய அழுவறது?' தாத்தா.


'எனக்குத்தானே வலியெல்லாம்' மனசுக்குள்.


குச்சியால உடம்பெல்லாம் நீவி விட்டாரு, கடைசியா ஒரு பிடி திருநீற வாயில திணிச்சாரு. நெத்திய கொஞ்சம் வெச்சுட்டு, 'கலையில கப்புனு சரியாயிடும்'னு சொன்னாரு.


'ஆமா ஏன் காலை லேசா நொண்டி வந்தாப்ல தெரிஞ்சது,என்னாச்சுன்னு' கேட்டேன்.


'கால் பெசகிடுச்சி, அதான்'னாரு.


'உங்களுக்கேவா' ன்னு கேட்டதுக்கு,


ஆளானப்பட்ட சிவனையே சனி பிடிச்சிருக்காரு, அதுவும் இல்லாம என் வைத்தியம் எனக்கு பலிக்காதுல்ல' ன்னு ஏதோ சொன்னாரு...'


கால் நல்லாவே வீங்கிடுச்சி. பாட்டி புளியந்தழை, ஊணாந்தழையை வேகவெச்சு கட்டிவிட்டுச்சி.


விடிய விடிய தூக்கம் வராம காலையே பாத்துட்டு இருந்தேன்.


காலையில வீக்கம் அவ்வளவா இல்ல, அனா கால ஊன முடியல. வீட்டிலேயே இருந்தேன். வழியில்லாம பாட புத்தகத்தை படிச்சேன்.


'ஒழுங்கா படிக்கனும்னா இந்த மாதிரி ஏதாச்சும் ஆகனும் போல இருக்கு' தத்தா.


சாயந்திரமா வள்ளி அக்காவ ஆயா அழச்சுட்டு வந்தாங்க, சுளுக்கு எடுக்கறதுல ஸ்பெசலிஸ்டாம்.


விளக்கெண்ணையை தொட்டு, கால்ல தடவி மெதுவா அழுத்தி, 'இங்க வலிக்குதா, இங்க வலிக்குதா'ன்னு கேட்டுச்சி.


ஒரு இடத்துல தொடும்போதே உயிர் போற மாதிரி இருந்தது. கத்தவும் அந்த இடத்தயே வசமா புடிச்சுடுச்சி.


அழுத்துன அழுத்துல கதறி, நிறைய கூட்டம் கூடி போச்சு. கடைசியாய் சுத்தி நின்ன அத்தனை பேரையும் நினைச்சா இப்ப கூட வெட்கமா இருக்கு.


'புளியங்கொட்டை பத்து போடுங்க ரெண்டு நாள்ல சரியாயிடும்'னு சொல்லிட்டு போச்சு.


அதையும் செஞ்சோம், எந்த முன்னேற்றமும் இல்ல.


காலைல நொண்டி நொண்டி நடந்து வெளியே வந்தேன். பக்கத்துல டீ கடையில பேப்பர் படிக்கலாம்னு போனேன்.


என்ன கண்ணு நொண்டறே? சுளுக்கான்னு சந்திரன் அண்ணன் கேட்டரு.


ஆகா அடுத்த வைத்தியம் ஆரம்பிச்சுடுச்சின்னு நினைச்சிட்டு ஆமான்னேன்.


'இது தான் மேட்டரா, உடனே சரி பண்றேன், வண்டியில உட்காரு'ன்னு இழுத்து உட்கார வெச்சி சல்லுனு கிளம்பிட்டாரு.


வண்டியை அவர் வளைச்சு வளைச்சு ஓட்டும்போதுதான் அவர் நல்லா போதையில இருக்கார்னு தெரிஞ்சது.


திகிலோடு உயிரை பிடிச்சுட்டு போனேன்.


(வைத்தியம் தொடரும்)
2 : பேர் படிச்சிட்டு சொல்றாங்க...:

வாழவந்தான் said...

//
'படிச்சவன் இப்படிய அழுவறது?'
//
என்ன கொடும சார் இது? ;-O

பிரபாகர் said...

நன்றி வாழவந்தான்...

கிராமத்துல அப்போ எதுக்கு எடுத்தாலும், படிச்சவன் இப்படி பண்ணலாமான்னு கேப்பாங்க. இப்போ அப்படியே மாறிடுச்சி...

பிரபாகர்...

 

©2009 ”வாழ்க்கை வாழ்வதற்கே” | Template Blue by TNB