எங்கும் ஊழல் எதிலும் ஊழல்... பத்திரிக்கைகளைத் திறந்தால் ஸ்பெக்ட்ரம், கார்கில் வீடு ஒதுக்குதல், குடும்பத்துக்கு நிலம் ஒதுக்குதல் என பக்கத்துப் பக்கம் நாறிக்கிடக்க அதையெல்லாம் பார்த்த ராகவன் கொதித்துப்போயிருந்தார்.
டிவியிலும் அது சம்மந்தமான செய்திகளே வர, நொந்து போய் காப்பி கொடுக்கவந்த மனைவியின் மீதும், பாடத்தில் ஏதோ சந்தேகம் கேட்கவந்த மகனின் மீதும் தேவையில்லாமல் எரிந்து விழுந்தார்.
நேராய் குளியலறைக்கு சென்றவர் சில்லென தண்ணீரில் சூடு குறைய குளித்து கொஞ்சம் மனம் லேசாகி வந்தார். வரவேற்பறையில் காத்திருந்த அந்த நபரை புன்னகைத்து கொஞ்சம் காத்திருக்கச் சொல்லி பூஜை அறைக்குள் நுழைந்து மனமுருக பூஜித்து மனம் லேசாகி வந்தார்.
‘மன்னிச்சிக்குங்க, ஆபிஸ் விட்டு வந்ததும் குளிச்சி பூஜை செய்யலைன்னா வேலையே ஓடாது’ என்றவர் ‘காபி கொடுத்தாங்களா?’ எனக் கேட்க
‘ஆச்சுங்க, வந்த உடனே அம்மா கொடுத்தாங்க, இந்தாங்க நீங்க கேட்டது இருக்கு’ என ஒரு கவரைக் கொடுக்க,
‘என்னய்யா, எல்லாம் சரியா இருக்குல்ல? இனி கவலைப்படாத, செவ்வாக்கிழமைக்குள்ள பர்பெஃக்டா முடிச்சிக்கொடுத்திடறேன், ஆபிஸ்ல வெச்சி வாங்கறது நம்ம ரெண்டு பேருக்குமே நல்லதில்ல அதான் வீட்டுக்கு வரச் சொன்னேன்’ எனச் சொல்லி ‘பாக்கியம் இத பத்திரமா பீ்ரோவில வை’ என்றார்.
Nov26,2010
ஊழல் - சிறுகதை...
வகை : சிறுகதை... | author: பிரபாகர்
Nov23,2010
கசியும் மௌனம் - பிறந்தநாள் வாழ்த்து...
வகை : வாழ்த்து... | author: பிரபாகர்(கசியும் மவுனம் வலைப்பூவின் மூன்றாமாண்டு பிறந்தநாள் வாழ்த்து)
கசியும் மவுனத்தில்
கருத்தாய் கவிதைகள்
கண்ணுற்ற நண்பர்
கண்டிடச் சொல்ல
கண்டேன், வியந்தேன்...
ஈரோடு கதிரென
எழுச்சியாய் இடுகைகள்
இணைந்தேன் மகிழ்ந்தேன்
அன்றலர்ந்த நட்பு
ஆலமர விழுதாய்...
கண் தானம்பற்றி
கருத்தாய் எழுதி
மண் பெருமையை
மனிததோடு நினைந்து
மரம் நடுதலை
மகிழ்ந்து பகிர்ந்தீர்
உம்மால், உமது நட்பால்
மனம் நிறைந்து
இன்னும் பல
இனிதாய் எழுத
இறையை வேண்டுகிறேன்...
பிரபாகர்..
Nov22,2010
மன்மதன் அம்பு ஆடியோ ரிலீஸ்... செய்திக்கோர்ப்பு...
வகை : அனுபவம்... | author: பிரபாகர்மன்மதன் அம்பு ஆடியோ ரிலீஸுக்கு சென்றிருந்தேன்... இது போன்ற நிகழ்ச்சிகளை தொலைக்காட்சியின் வாயிலாய்தான் பார்த்திருக்கிறேன், இதுதான் நேரடியாகப்பார்க்கும் ஆடியோ வெளியிடும் முதல் நிகழ்ச்சி.
மனதைக் கவர்ந்த விஷயங்கள் :
கமல்ஹாசன் இன்னும் இளைமையாய் இருப்பது
கமலைப் பற்றி மனதில் இருந்த பிம்பம் அப்படியே இருக்கவும், இன்னும் சில விஷயங்களில் எண்ணியதை விட இன்னும் பிரமிப்பு கூடும்வண்ணம் கமலின் பங்களிப்பு இருந்தது.
கமல் பாடிய நீல வானம்... நீயும் நானும் அற்புதமாய் இருந்தது. அவரே பாடக் கேட்க. நேரில் கேட்க.. டிவைன்.
தேவிஸ்ரீ பிரதாத்தின் துள்ளல்...
ரசிகர்கள் எட்டுபேரை (இருபாலரும் பாதிபாதியாய்) அழைத்து இசையை வெளியிட்ட விதம்..
கமலும் திரிஷா இருவரும் கவிதைப் பாட்டினைப் படிக்க ஆஹா!... கோபி சொன்னதுபோல் தமிழோடு திரிஷா இன்னும் அழகு கூடி மிளிர்ந்தார்.
கே.எஸ் ரவிக்குமாரின் பேச்சு, பங்காற்றியவர்களை நினைவுகூர்ந்த விதம்.
ஜோடி நம்பர் ஒன் குழுவினரின் நடனங்கள்...
மனதை நெருடிய விஷயங்கள் :
டிவியில் எடிட் செய்யப்பட்டு வழங்கப்படும் நிகழ்ச்சிகளைப்பார்த்து அற்புதம் என நினைத்து, தொகுத்த தீதி மற்றும் கோபியின் சொதப்பல்கள்.(ஒளிபரப்பின்போது இருக்காது)
சூப்பர் சிங்கர்களை கமர்சியலாக்கி, அவர்களைப் படுத்துவது.
கமலே வெட்கப்படும் அளவிற்கு தொகுப்பாளர்கள் அவரைப் புகழ்ந்து தள்ளியது (கமல் இதைக் குறிப்பிட்டு சொன்னார்)
உதயநிதியை வானளவிற்கு புகழ்ந்து தள்ளியது
விழாவினை ஏழு மணி என சொல்லி ஏழு இருபதுக்கு தாமதமாய் ஆரம்பித்தது.
கொசுறு :
எங்களுக்கு முன்னால் ஏதோ ஒரு பேனரை வைத்துக்கொண்டு அவ்வப்போது மறைத்து கேமிரா இந்த பக்கம் வருமா என ஆர்வக்கோளாறாய் இளைஞர்கள்.
அறுபதைக் கடந்த ஒருவர் அருகில் அடித்த கமெண்ட்டுகள், ரசித்து அவர் செய்த முகபாவங்கள்
திரிஷா ஆன்ட்டி என ஒருவர் கத்த குபீர் சிரிப்பலை...
டிஸ்கி :
இதுதான் வாழ்வில் பார்க்கும் முதலும் கடைசியுமான ஆடியோ ரிலீஸ்...
Nov5,2010
விகடம் 1.1.2
வகை : விகடம்... | author: பிரபாகர்அனைவருக்கும் என் இனிய தீபாவளி வாழ்த்துக்கள். தொலைக்காட்சியின் முன் இல்லாமல் குடும்பத்தோடு சந்தோஷமாய் கோவில், நண்பர்களை வரவழைத்து, நண்பர்களின் வீடுகளுக்கு சென்று உண்மையாய் தீபாவளியை கொண்டாடுபவர்களுக்கு என் சிரம் தாழ்ந்த சிறப்பு வாழ்த்துக்கள், வணக்கங்கள். (சிரத்தையாய் நெட்டில் இருப்போருக்கும்தான்...)
‘தம்பி, உங்களுக்கு அக்சப்ட் பண்ணத்தெரியுமா? எனக் கேட்க, ‘ஓ தெரியுமே, அம்மா சொல்லிக்கொடுத்தாங்க’ எனச் சொன்னார்.
’அம்மா பாத்ரூமில் இருக்கிறாங்க, நான் கம்ப்யூட்டர்ல விளையாடிட்டிருக்கேன்’ என சொல்லிவிட்டு, ‘அப்பா தனியாவா இருக்கீங்க?’ எனக்கேட்டார்.
‘ஆமாம்பா...’ என்றவுடம், ‘உங்களுக்கு பயமா இல்லையா’ எனக் கேட்டார்.
‘இல்லை சாமி’ எனச் சொன்னேன்.
‘இல்லப்பா, எனக்கு பயமா இருக்கு அதான் கேட்டேன்’ எனச் சொன்னார்.