நினைச்சதும்...நடந்ததும்.

|

விரை ஒன்னு போட்டா சுரை ஒன்னா முளைக்கும்னு பழமொழி சொல்லுவாங்க. சில பேரை சின்ன வயசுல அவங்க பழக்க வழக்கத்த வெச்சே பின்னால என்னாவா வருவாங்கன்னு சொல்ல முடியும். அதுக்காக எல்லாம் அப்படியே நடக்கும்னு சொல்ல முடியாது, தப்பவும் செய்யும், மொளைக்காம போயிடுமில்ல அந்த மாதிரி.

என்னோட பால்ய நண்பன், என்னோட படிச்ச வேலு ரொம்ப நல்லா படிப்பான். கிளாஸ் ஃபர்ஸ்ட் அவன் தான். கணக்குப்பாடத்துல நூறுக்கு கம்மியா எடுத்ததே இல்ல. எழுத்து முத்து முத்தா அழகா இருக்கும். ஏன் இதை சொல்றேன்னு கடைசியில சொல்லுறேன்.

ஒரு நாள் ஆறாவது படிக்கிறப்போ சைன்ஸ் அய்யா எல்லாத்தயும் என்னவா எதிர்காலத்துல வரனும்னு ஆசைப்படறீங்கன்னு ஒவ்வொருத்தரா கேட்டுட்டு வந்தாரு.

’கண் கண்ணாடி போட்டுக்கனும்னு’ பாப்பாத்தி சொல்ல, ‘எழவ, அது கண்ணு தெரியாம போட்டுக்கிறது. இதுதான் உன் லட்சியமா? பாடத்துலதான் ஒழுங்கா பதில் சொல்ல மாட்டே, இதிலேயுமா?’

‘படிச்சி, அக்கா மாதிரி டவுன்ல இருக்கிற மாப்பிளைய கல்யாணம் பண்ணிக்கனும் சார்....’ கனகா. ‘உருப்பட்ட மாதிரிதான், உக்காரு’.

டாக்டர், வக்கீல், டிரைவர், விமானம் ஓட்டனும்-னு ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு மாதிரி சொன்னாங்க. ‘இந்த வருஷம் மொதல்ல பாஸ் பண்ணனும் சார்’ சுப்ரமணி. ’ஆஹா, இதுதான்யா நிசம்’

அடுத்த எழுந்த வெங்கடேசன் அதே பதில சொல்ல, ’கழுத, இங்கயும் காப்பியடிச்சித்தான் சொல்லனுமா? சொந்தமா யோசிக்கவே மாட்டியா?’

முத்துசாமி ’சார் நான் பிரதம மந்திரியாகனும்’ சொன்னவுடன் எல்லாரும் கொல்லுனு சிரிச்சோம். ‘நடக்கற மாதிரி கனவு காணுப்பா!, இருந்தாலும் இவ்வளவு தைரியமா சொல்றியே, அதுக்கே உன்னை பாராட்டனும்’

என்னோட முறை வந்ததும், ‘நிறைய படிக்கனும், நிறையா கதை எழுதனும் சார்’னு சொன்னேன். ‘சரி, மொதல்ல படிச்சி நல்ல மார்க் எடுக்க முயற்சி பண்ணு, அதெல்லாம் தானா நடக்கும்’

நம்ம வேலு எழுந்தரிச்சான். ‘டைரக்டர் ஆகனும், சினிமாவுல சேரனும்’. ‘ஆஹா, உங்க அப்பா எஞ்சினீயர், டாக்டர்னு நினைச்சிக்கிட்டிருக்காரு, சினிமாவா? வெரி குட்’

இதோட எஃபக்ட் ராத்திரி அவனோட அப்பா விளாசின விளாசல்ல தெரிஞ்சது. ஆனாலும் அவன் அசந்ததா இல்ல. சினிமா மேல ஒருமோகம் இருந்துகிட்ட இருந்துச்சி. அவனோட சினிமா சம்மந்தமான விஷயங்கள இன்னொரு இடுகையில பார்க்கலாம்.

இப்போ யோசிச்சிப் பார்த்தா சொன்னதில பெரும்பாலும் நடந்திருக்கு. நடக்காதத விட்டுட்டு நடந்தத மட்டும் பார்த்தா, பாப்பாத்தி கண்ணாடி போட்டிருக்கு, கனகா லோக்கல்ல கல்யாணம் பண்ணினாலும் இப்போ டவுன்ல இருக்கு. சுப்பிரமணி தப்பித்தவறி பாஸ் ஆயிட்டாரு(அப்பவே பெரிய ஆளு மாதிரி மீசையோட இருப்பாரு. ஒவ்வொரு க்ளாஸ்லயும் கோட்டு அடிச்சி வந்ததால), பிரதம மந்திரின்னு சொன்ன முத்துசாமி இப்போ வார்டு மெம்பர், நான் ஏதோ எழுதிட்டிருக்கேன், வேலு சினிமாவில இருக்கான்.

மொதல்ல வேலுவப் பத்தி சொன்னதுக்கு பதில். சென்னையில இருந்தப்போ அவன் வீட்டுல தான் தங்கியிருந்தேன். அவன் பையன் ஹரீஷ் கையெழுத்து வேலுவைப்போலவே அழகா இருந்துச்சி. என்னவா வரனும்னு ஆசைன்னு கேட்டதுக்கு, அப்பா மாதிரி இல்லாம பெரிய கம்ப்யூட்டர் எஞ்சினியரா வரனும்னு சொன்னான்!

நீதி : சின்ன வயசில நினைக்கிறது நடந்தாலும் நடந்துடும்... ரொம்ப உயர்வாவே நினைக்கச் சொல்லுவோமே, நம்ம வாரிசுங்கள!

28 : பேர் படிச்சிட்டு சொல்றாங்க...:

அன்புடன் நான் said...

நான் தான் முதல்ல...

வணக்கம். நலமா?

settaikkaran said...

என்னியும் இந்த மாதிரி வவுப்புலே எளுப்பி வாத்தியாரு கேள்வி கேட்டாரு! திருநேலியிலே ஒருவாட்டி போன சந்தோசத்துலே நான் சொன்னேம்:

"ஐயா, எனக்கு ஆட்டோ ஓட்டணும்!"

இப்போ ஈ ஓட்டிக்கிட்டு இருக்கேமில்லா....?

அன்புடன் நான் said...

நான் ஆசிரியராக ஆசைப்பட்டேன்.....

இப்ப “தேடலைச் சுவாசி” என்கிற என்னோட கவிதை தொகுப்புக்குதான் ஆசிரியராக முடிஞ்சது....

உங்க பகிர்வு.... நகைச்சுவையாகவும் இருக்கு..... இயல்பானதாவும் இருக்கு.

vasu balaji said...

/‘டைரக்டர் ஆகனும், சினிமாவுல சேரனும்’/

சினிமால சேர்ந்தப்புறம் தானே டைரடக்கர் ஆகமுடியும்.ங்கொய்யால டிவியச் சொன்னான்னு சொன்னா பிச்சுபுடுவேன் பிச்சு.

/‘நடக்கற மாதிரி கனவு காணுப்பா!,/

ஏன். பிரதமமந்திரி நடக்க கூடாதா?

/சரி சரி மொதல்ல பாடத்த படிச்சி/

ம்கூம். படிச்ச மாதிரி தெரியல. எவ்வளவு எழுத்துப் பிழை. முட்டி மேலயே போடணும்.

/(அப்பவே பெரிய ஆளு மாதிரி இருப்பாரு கனத்த மீசையோட.//

மாட்டிகிட்டியே பரட்ட:)) ஆறாவது படிக்கிறப்ப என்னதான் கோட்டடிச்சாலும் கனத்த மீசை எப்புடி ராசா:))

Chitra said...

நீதி : சின்ன வயசில நினைக்கிறது நடந்தாலும் நடந்துடும்... ரொம்ப உயர்வாவே நினைக்கச் சொல்லுவோமே, நம்ம வாரிசுங்கள!


.....எதார்த்தமாக சின்ன வயது சம்பவத்தை சொல்லி, பின் ஒரு நல்ல கருத்தையும் சொல்லி இருப்பது நல்லா இருக்குதுங்க.

ஹேமா said...

உண்மைதான் பிரபா.
நினைப்புத்தான் வாழ்க்கையாகும்.
என் அனுபவமும் கூட !

கலகலப்ரியா said...

||அவன் பையன் ஹரீஷ் கையெழுத்து வேலுவைப்போலவே அழகா இருந்துச்சி.||

வேலுவப் போலவா... வேலுவோட கையெழுத்து போலவா...

ம்ம்... மனம் போல் வாழ்வு..

முத்துலெட்சுமி/muthuletchumi said...

என் ப்ரண்ட் பையன் ரிக்ஷா ஓட்டனும்ன்னான்

இராகவன் நைஜிரியா said...

ம்... நினைப்புதான் பொழப்ப கெடுக்குதுன்னு சொல்லுவாங்க... இங்க மாத்தி பொழப்ப கொடுத்து இருக்குது..

செ.சரவணக்குமார் said...

எப்படிப் பிரபா வகுப்பறையில இருந்த எல்லார் கனவையும் ஞாபகத்துல வச்சிருக்கீங்க.. உண்மையிலேயே ஆச்சர்யம்.

இந்த இடுகை நகைச்சுவையாகவும் சிந்திக்க வைப்பதாகவும் இருந்தது.

நல்ல சரளமான நடை.

வாழ்த்துகள் நண்பா.

Anonymous said...

சின்ன வயசில நான் பெரிய பாடகியா வரணும்னு ஆசைப்பட்டேன். நடக்கலையே :)

Unknown said...

//சின்ன அம்மிணி said...
சின்ன வயசில நான் பெரிய பாடகியா வரணும்னு ஆசைப்பட்டேன். நடக்கலையே :).//

நல்ல வேளை தமிழ் கூறும் நல்லுலகம் தப்பிச்சது.

Unknown said...

///(அப்பவே பெரிய ஆளு மாதிரி இருப்பாரு கனத்த மீசையோட.//

மாட்டிகிட்டியே பரட்ட:)) ஆறாவது படிக்கிறப்ப என்னதான் கோட்டடிச்சாலும் கனத்த மீசை எப்புடி ராசா:))//

இவர் இருக்கிற வரைக்கும் நீங்க சொல்குற்றம் பொருட்குற்றம் எல்லாம் விட முடியாது பிரபா..

Unknown said...

//கலகலப்ரியா said...
||அவன் பையன் ஹரீஷ் கையெழுத்து வேலுவைப்போலவே அழகா இருந்துச்சி.||

வேலுவப் போலவா... வேலுவோட கையெழுத்து போலவா...
//

இந்தாளப்பாருய்யா.. கண்ணுல விளக்கெண்ணை ஊத்திக்கிட்டு தேடுவீங்களோ?

இருங்க நானும் தேடிட்டு எதாவது எழுதுறேன்.

Unknown said...

// அப்பா மாதிரி இல்லாம பெரிய கம்ப்யூட்டர் எஞ்சினியரா வரனும்னு சொன்னான்!//

அப்பா மாதிரி இல்லாமன்னு அந்தப் பையன் சொன்னானா இல்ல உங்க இடைச்சொருகலா?

Unknown said...

//சேட்டைக்காரன் said...
என்னியும் இந்த மாதிரி வவுப்புலே எளுப்பி வாத்தியாரு கேள்வி கேட்டாரு! திருநேலியிலே ஒருவாட்டி போன சந்தோசத்துலே நான் சொன்னேம்:

"ஐயா, எனக்கு ஆட்டோ ஓட்டணும்!"

இப்போ ஈ ஓட்டிக்கிட்டு இருக்கேமில்லா....?//

லிட்டருக்கு எவ்வளவு குடுக்கும்? (மாருதி விளம்பரம் மாதிரி படிக்கவும்)

Unknown said...

// ‘நடக்கற மாதிரி கனவு காணுப்பா!,//

நடக்கற மாதிரி கனவு கண்டா பிரதம மந்திரி ஆயிடலாம்னா, ஓடுற மாதிரி கனவு கண்டா அமெரிக்க ஜனாதிபதி ஆயிடலாமா?

இதை கிரிஸ்டோஃபர் நோலன் கிட்டக் கேட்டு கன்ஃபர்ம் பண்ணிக்கிட்டீங்களா?

T.V.ராதாகிருஷ்ணன் said...

நல்ல இடுகை

எறும்பு said...

//லிட்டருக்கு எவ்வளவு குடுக்கும்? (மாருதி விளம்பரம் மாதிரி படிக்கவும்)//

எப்படி எல்லாம் அவங்க பதிவுக்கு விளம்பரம் குடுகிறாங்க!!

எறும்பு said...

வானம்பாடிகள் Ayyaa,,

குற்றம் கண்டு பிடித்தே பெயர் வாங்குபவர்கள் பற்றி உங்க கருத்து என்ன ?

ரோஸ்விக் said...

அப்படியெல்லாம் ஒண்ணுமில்லை .....
சின்ன புள்ளையில யாராவது அப்பாவாகனும்னு சொன்னாங்களா...??? ஆனா எத்தனை பேரு ஆயிருக்காங்க... :-)))
இது எந்த கணக்குல சேரும்.
நான் எஞ்சினியர் ஆவேன், கலெக்டர் ஆவேன், டாக்டர் ஆவேன்னு சொன்ன கணக்கையெல்லாம் எடுத்தா... எங்க போயி நிக்கும்?
:-))))))

ரோஸ்விக் said...

//என்னோட முறை வந்ததும், ‘நிறைய படிக்கனும், நிறையா கதை எழுதனும் சார்’னு சொன்னேன். ‘சரி, மொதல்ல படிச்சி நல்ல மார்க் எடுக்க முயற்சி பண்ணு, அதெல்லாம் தானா நடக்கும்’
//

கதை கதையா எழுதுனாத்தான் மார்க் நல்லா வரும்னு நீங்க சொல்லலையா அவருகிட்ட?
:-)

கலகலப்ரியா said...

||முகிலன் to me
show details 3:55 AM (9 hours ago)
முகிலன் has left a new comment on the post "நினைச்சதும்...நடந்ததும்.":

//கலகலப்ரியா said...
||அவன் பையன் ஹரீஷ் கையெழுத்து வேலுவைப்போலவே அழகா இருந்துச்சி.||

வேலுவப் போலவா... வேலுவோட கையெழுத்து போலவா...
//

இந்தாளப்பாருய்யா.. கண்ணுல விளக்கெண்ணை ஊத்திக்கிட்டு தேடுவீங்களோ?

இருங்க நானும் தேடிட்டு எதாவது எழுதுறேன். ||

நாம எல்லாம் சர்வ ஜாக்கிரதையாப் படிப்போம்ல... அப்புறம் படிக்காம பின்னூட்டம் போட்டேன்னு யாரும் சொல்லிடப்டாது பாருங்க... ஹிஹி...

சத்ரியன் said...

எண்ணம் (சில) போல் வாழ்வு பிரபா.

ஆ.ஞானசேகரன் said...

வணக்கம் நண்பா..... இயல்பான இடுகை

ஈரோடு கதிர் said...

||கதை எழுதனும் சார்’||

எழுத மட்டுமா...நிறைய சொல்லவும் கூட

ஈரோடு கதிர் said...

||நீதி : ||


ஏய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்

இதச் சொல்லவா இம்புட்டு பில்டப்பு

இத முத வரியிலேயே சொல்லியிருந்தா

நான் மீத பஸ்ர்ட்டுனு போட்டுட்டு அப்பீட் ஆயிருப்பனே

Unknown said...

உள்ளேன் ஐயா...

 

©2009 ”வாழ்க்கை வாழ்வதற்கே” | Template Blue by TNB