சென்னை...மூன்று நட்புக்கள்...

|

தம்பியின் இழப்பின் பின் வீட்டில் இருக்கவே முடியாத இறுக்கமான சூழல். இருந்த விடுமுறைகளையெல்லாம் ஏற்கனவே எடுத்திருந்த சூழ்நிலையில் சென்னையிருந்து வேலை பார்க்க அனுமதி கேட்க, உடன் கிடைத்தது.

மூன்று வாரம் வேலை பார்த்துக்கொண்டிருந்தேன். அத் தருணத்தில் பதிவுலகை விட்டு விலகியிருந்தாலும் பதிவுலகை சார்ந்தோரிடன் கொஞ்சம் தொடர்போடுதான் இருந்தேன். அய்யா அவர்களை தினமும் பார்க்கவேண்டும் என எண்ணம் தோன்றும், ஆனால் சூழ்நிலை என்னை கட்டிப்போட இயலாது போனது. 

அமெரிக்கா செல்ல தாமதமான காரணத்தால் தினேஷ், என் ஆசான், சேம்பிளட் என என் மேல், என் நலனின் மேல் அதீத அக்கரை கொண்ட மூன்று நல் இதயங்களை சந்தித்து எனது சோகத்தின் தாக்கத்தை குறைத்துக்கொண்டேன். 

பார்க்கவேண்டியவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். ஏற்கனவே பார்த்திருக்கும் மணிஜீ, கேபிள் அண்ணா, பட்டர்பிளை சூர்யா, லக்கி, பார்க்கத்துடிக்கும் ராதாகிருஷ்ணன் அய்யா, நர்சிம், சகா, முரளி, வாசு, புலிகேசி, ஜெய், அப்துல்லா அண்ணா, ஆதி, எறும்பு ராஜகோபால், உண்மைத்தமிழன் அண்ணன், அதிஷா, .... இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம். கண்டிப்பாய் அடுத்த முறை நல்லதோர் மனநிலையில் சந்திக்க ஆர்வமாயிருக்கிறேன, சந்திப்போம்.

களவானி படத்தை தினேஷ் மற்றும் அவரது நண்பர்களுடன் பார்த்தது மிக வித்தியாசமான அனுபவமாயிருந்தது. உண்மையில் என் மனநிலை மாறுவதற்கு அவருடன் இருந்த அந்த கொஞ்ச நேரமும் பெரிதும் உதவியாயிருந்தது.

அய்யாவின் அறிவுரைகள், அவர் அலுவலத்தில் நடந்த நெடும் சந்திப்பு, பின் ஷங்கரும் சேர்ந்து கொள்ள பேசிய விஷயங்கள் என நிறைய மனதிற்கு இதமான விஷயங்கள் நடந்தன.

சேம் பிளட்டோடு அதிக நேரம் பேச இயலவில்லையே எனும் ஆதங்கம் இன்னும் இருக்கிறது. அடுத்த முறை நிவர்த்தி செய்துவிடுவோம்.

சந்திப்பின்போது அவர்களை எனது ஐ போனில் எடுத்த படங்கள் கீழே. கிளிக் செய்து பார்க்காதீர்கள், உள்ளவாறே பாருங்கள். 

என் ஆசான்...

என் ஆசானோடு நான்...

தினேஷோடு நான்...

தினேஷும் நிடினும்...

அய்யாவும் ஷங்கரும்...

ஷங்கர்...

நானும் தினேஷும் மாயாஜாலில்...

ஆசானும் பலா ஷங்கரும்...

ஆசானும் நானும்

28 : பேர் படிச்சிட்டு சொல்றாங்க...:

vasu balaji said...

நன்றி பிரபா:)

செ.சரவணக்குமார் said...

மன அழுத்தம் குறைந்து சகஜ நிலைக்கு திரும்பியது மகிழ்ச்சியளிக்கிறது பிரபா.

நண்பர்களின் புகைப்படப் பகிர்வுக்கு மிக்க நன்றி.

நம்ம பாலா சார் செம யூத்தாவுல்ல இருக்காரு.. ஊருக்குப் போகும்போது அவசியம் பாலா சாரைப் பார்க்கவேண்டும் என நினைத்துள்ளேன்.

ஸ்ரீ.கிருஷ்ணா said...

அடுத்தமுறை கண்டிப்பாக சந்திக்கணும் சார். photos எல்லாம் சூப்பர் சார் ..
இதில் பலரை இபோதுதான் பார்த்தேன் .....

நிலாமதி said...

உங்களை வலைபக்கத்தில் காணபதில் மகிழ்ச்சி.....காலம் வலியை ஆற்றும் மருந்து. மீண்டு வருக.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

vaankanne ippo enga chennai or singai

கலகலப்ரியா said...

சூப்பரு அண்ணா...

பாலா சார் எல்லாரையும் உசரமாக்கிட்டாங்க பாருங்க... :o)

ஜில்தண்ணி said...

வாங்க பிரபா அண்ணே
சகஜ நிலைக்கு வந்தது சந்தோசம் :)

தாடியுடன் பலா பட்டறை ஷங்கர் அண்ணனை பார்தது வித்யாசமா இருந்தது :)

Prathap Kumar S. said...

பிரபாண்ணே உங்கள் மனக்கஷ்டம் குறைந்தது ஆறுதல் அளிக்கிறது.

படங்கள் சூப்பர்.... சரவணன சொன்னமாதிரி பாலா சார் செம யுத்தா இருக்கறாரு...நீங்கபக்கத்துல நிக்கும்போது சார்தான் யுத்தான தெரியறாரு..:))

vasu balaji said...

ஆனா ஷங்கர் தாடியோட வந்ததில உள்குத்து இருக்கும் போலதான் தெரியுது பிரபா. உங்க ரெண்டு பேருக்கும் மண்டையில இருக்கிறத விட எனக்கு தவடையில அதிகம்னு சொல்றா மாதிரி:))

Paleo God said...

நன்றி பிரபாகர். :))

//வானம்பாடிகள் said...
ஆனா ஷங்கர் தாடியோட வந்ததில உள்குத்து இருக்கும் போலதான் தெரியுது பிரபா. உங்க ரெண்டு பேருக்கும் மண்டையில இருக்கிறத விட எனக்கு தவடையில அதிகம்னு சொல்றா மாதிரி:))//

அவ்வ்வ்.. :))

சார் நிச்சயமா நீங்கதான் யூத்து :))

Unknown said...

நன்றி பிரபா. இந்த படங்களில் தொப்பை தெரியாமல் வெளியிட்டதற்கு. :)

க.பாலாசி said...

//கிளிக் செய்து பார்க்காதீர்கள், உள்ளவாறே பாருங்கள். //

இப்டி சொன்னதுக்காகவே எல்லாத்தையும் கிளிக் பண்ணி பாத்தேன்... படங்கள் நல்லாயிருக்கு... சுகமான அனுபவத்தினை பகிர்ந்தமைக்கு நன்றி அண்ணா...

vasan said...

பாம‌ர‌ன் சார், சீப்பு க‌ண்ணாடின்னு
ஏக்க‌மாப் போட்ட‌ ப‌திவுக‌ளை ப‌டிச்சிட்டு,
இப்போ, உங்க‌ ப‌ட‌ங்க‌ள்ல‌ பாத்தா,
இருக்கிற‌து, கொஞ்ச‌ம் அதிக‌மோ?
'எல்லாம் க‌ட‌ந்துபோம்'

எறும்பு said...

Nice photos...

எறும்பு said...

SHANKAR has a photogenic face.

:))

T.V.ராதாகிருஷ்ணன் said...

சொல்லியிருந்தா நான் வந்து பார்த்திருப்பேனே பிரபா...போங்க பிரபா..

பா.ராஜாராம் said...

ஆறுதலான பதிவு ப்ரபா.

புகைப் பட பகிர்விற்கு மிகுந்த நன்றி!

ஈரோடு கதிர் said...

நல்ல பகிர்வு பிரபா

Venkat M said...

Nice to hear this Prabha... BTW, somewhere i met our Bala sir... not sure where.

Venkat M

butterfly Surya said...

நன்றி பிரபா. அடுத்த முறை கண்டிப்பாய் சந்திக்க வேண்டும்.

குழந்தைகள் ந்லமா?

ரோஸ்விக் said...

எனக்கு மட்டும் எல்லாம் ரெண்டு ரெண்டாத் தெரியுதா?? :-)
சங்கர் அண்ணாச்சியையும், தினேஷையும் முதல்முறையா தெளிவா பார்த்ததில் மகிழ்ச்சி.
உங்க எல்லாரையும் பார்த்து வச்சுகிட்டேன்.... இருங்கடி வண்டில எதுத்தாப்புல வரும்போது செங்கலை வச்சு அடிக்கிறேன்.. :-))) (செயின், மோதிரமேல்லாம் வரும்போது போட்டுக்கிட்டு வாங்க)

பிரபாகர் said...

//
வானம்பாடிகள் said...
நன்றி பிரபா:)
//
நன்றிங்கய்யா...
//
செ.சரவணக்குமார் said...
மன அழுத்தம் குறைந்து சகஜ நிலைக்கு திரும்பியது மகிழ்ச்சியளிக்கிறது பிரபா.

நண்பர்களின் புகைப்படப் பகிர்வுக்கு மிக்க நன்றி.

நம்ம பாலா சார் செம யூத்தாவுல்ல இருக்காரு.. ஊருக்குப் போகும்போது அவசியம் பாலா சாரைப் பார்க்கவேண்டும் என நினைத்துள்ளேன்.
//
கண்டிப்பாய் பாருங்கள்... ஒரு உன்னத மனிதரை சந்தித்த திருப்தி கிடைக்கும்...

//
ஸ்ரீ.கிருஷ்ணா said...
அடுத்தமுறை கண்டிப்பாக சந்திக்கணும் சார். photos எல்லாம் சூப்பர் சார் ..
இதில் பலரை இபோதுதான் பார்த்தேன் .....
//
நன்றி ஜெய், அடுத்தமுறை கண்டிப்பாய் பார்க்கவேண்டும்...

பிரபாகர் said...

//
நிலாமதி said...
உங்களை வலைபக்கத்தில் காணபதில் மகிழ்ச்சி.....காலம் வலியை ஆற்றும் மருந்து. மீண்டு வருக.
//
எப்போதும் ஆறுதலாய் இருக்கும் என் அன்பு சகோதரிக்கு என் நெஞ்சார்ந்த நன்றி...

//
- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
vaankanne ippo enga chennai or singkai
//
சிங்கை தம்பி...

//
கலகலப்ரியா said...
சூப்பரு அண்ணா...

பாலா சார் எல்லாரையும் உசரமாக்கிட்டாங்க பாருங்க... :o)
//
உருவத்தில மட்டும்...

பிரபாகர் said...

//
ஜில்தண்ணி - யோகேஷ் said...
வாங்க பிரபா அண்ணே
சகஜ நிலைக்கு வந்தது சந்தோசம் :)

தாடியுடன் பலா பட்டறை ஷங்கர் அண்ணனை பார்தது வித்யாசமா இருந்தது :)
//
wanRi yOkEsh...

//
நாஞ்சில் பிரதாப் said...
பிரபாண்ணே உங்கள் மனக்கஷ்டம் குறைந்தது ஆறுதல் அளிக்கிறது.

படங்கள் சூப்பர்.... சரவணன சொன்னமாதிரி பாலா சார் செம யுத்தா இருக்கறாரு...நீங்கபக்கத்துல நிக்கும்போது சார்தான் யுத்தான தெரியறாரு..:))
//
சோகத்தில இருக்கிறோம்ல! அய்யா யூத்துதான்...

//
வானம்பாடிகள் said...
ஆனா ஷங்கர் தாடியோட வந்ததில உள்குத்து இருக்கும் போலதான் தெரியுது பிரபா. உங்க ரெண்டு பேருக்கும் மண்டையில இருக்கிறத விட எனக்கு தவடையில அதிகம்னு சொல்றா மாதிரி:))
//
ஆஹா...

பிரபாகர் said...

//
♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...
நன்றி பிரபாகர். :))

//வானம்பாடிகள் said...
ஆனா ஷங்கர் தாடியோட வந்ததில உள்குத்து இருக்கும் போலதான் தெரியுது பிரபா. உங்க ரெண்டு பேருக்கும் மண்டையில இருக்கிறத விட எனக்கு தவடையில அதிகம்னு சொல்றா மாதிரி:))//

அவ்வ்வ்.. :))

சார் நிச்சயமா நீங்கதான் யூத்து :))
//
இதுக்கப்புறமும் ஒத்துக்கலைன்னா?

//
முகிலன் said...
நன்றி பிரபா. இந்த படங்களில் தொப்பை தெரியாமல் வெளியிட்டதற்கு. :)
//
உங்களின் அன்பு தெரிகிறதே டினோ...!

//
க.பாலாசி said...
//கிளிக் செய்து பார்க்காதீர்கள், உள்ளவாறே பாருங்கள். //

இப்டி சொன்னதுக்காகவே எல்லாத்தையும் கிளிக் பண்ணி பாத்தேன்... படங்கள் நல்லாயிருக்கு... சுகமான அனுபவத்தினை பகிர்ந்தமைக்கு நன்றி அண்ணா...
//
நன்றி பாலாசி...

பிரபாகர் said...

//
vasan said...
பாம‌ர‌ன் சார், சீப்பு க‌ண்ணாடின்னு
ஏக்க‌மாப் போட்ட‌ ப‌திவுக‌ளை ப‌டிச்சிட்டு,
இப்போ, உங்க‌ ப‌ட‌ங்க‌ள்ல‌ பாத்தா,
இருக்கிற‌து, கொஞ்ச‌ம் அதிக‌மோ?
'எல்லாம் க‌ட‌ந்துபோம்'
//
ஆமாங்க வாசன்...

//
எறும்பு said...
Nice photos...

எறும்பு said...
SHANKAR has a photogenic face.

:))
//
ஆஹா, ஜலதோஷம் பிடிக்கப்போகுது ஷங்கருக்கு...

பிரபாகர் said...

//
T.V.ராதாகிருஷ்ணன் said...
சொல்லியிருந்தா நான் வந்து பார்த்திருப்பேனே பிரபா...போங்க பிரபா..
//
அய்யா, பார்க்கும் மனநிலையில் இல்லை. அடுத்தமுறை நேரில் சந்திக்கிறேன் அய்யா...

//
பா.ராஜாராம் said...
ஆறுதலான பதிவு ப்ரபா.

புகைப் பட பகிர்விற்கு மிகுந்த நன்றி!
//
ரொம்ப நன்றிங்க...

//
ஈரோடு கதிர் said...
நல்ல பகிர்வு பிரபா
//
நன்றி கதிர்...

பிரபாகர் said...

//
Venkat M said...
Nice to hear this Prabha... BTW, somewhere i met our Bala sir... not sure where.

Venkat M
//
அப்படியா? நன்றிங்க...

//
butterfly Surya said...
நன்றி பிரபா. அடுத்த முறை கண்டிப்பாய் சந்திக்க வேண்டும்.

குழந்தைகள் ந்லமா?
//
நலமே, கண்டிப்பாய்...

//
ரோஸ்விக் said...
எனக்கு மட்டும் எல்லாம் ரெண்டு ரெண்டாத் தெரியுதா?? :-)
சங்கர் அண்ணாச்சியையும், தினேஷையும் முதல்முறையா தெளிவா பார்த்ததில் மகிழ்ச்சி.
உங்க எல்லாரையும் பார்த்து வச்சுகிட்டேன்.... இருங்கடி வண்டில எதுத்தாப்புல வரும்போது செங்கலை வச்சு அடிக்கிறேன்.. :-))) (செயின், மோதிரமேல்லாம் வரும்போது போட்டுக்கிட்டு வாங்க)
//
ம்... ஜாக்கிரதைங்க....

©2009 ”வாழ்க்கை வாழ்வதற்கே” | Template Blue by TNB