பதிவுலகில் நான் எப்படிப் பட்டவன்?...

|

வசிஷ்டர் வாயால் பிரம்மரிஷி கேள்விப்பட்ட நான் உணர்ந்தேன், என் ஆசான் தொடர்இடுகை எழுதச்சொன்னபோது. எனக்கு உதாரண நபராகவும், சரியான வழியில் செலுத்தி, என் மேல் அலாதியான பிரியம் கொண்டவருமான என் ஆசானுக்கு நன்றி சொல்லி இதோ... கேள்விகளுக்கு பதில்.


1) வலைப்பதிவில் தோன்றும் உங்கள் பெயர்?

   பிரபாகர். 

2) அந்தப்பெயர் தான் உங்கள் உண்மையான பெயரா? இல்லை எனில் பதிவில் தோன்றும் பெயரை வைக்க காரணம் என்ன?

  ஆம். என்ன அடுத்து வரும் கேள்விக்கு பதில் சொல்ல முடியாது போலிருக்கே, சரி வலைப்பூவின் பெயர் காரணம் சொல்லிவிடவேண்டியதுதான்... ஒரு இறுக்கமான சூழலில் எனக்குள்ளே ஒரு தன்னம்பிக்கையை ஏற்படுத்திக்கொள்ள ‘வாழ்க்கை வாழ்வதற்கே’ என ஒரு உத்வேகத்தில் வைத்த பெயர்.

3) நீங்கள் தமிழ் வலைப்பதிவு உலகில் காலடி எடுத்துவைத்ததைப் பற்றி.

  எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ள. சிறு வயதில் நிறைய படித்தது, நிறைய அனுபவங்கள் தேடிக்கொண்டது, தேடி வந்தது என நிறைய அசைபோட விஷயங்கள் இருந்தது, ஏதாவது எழுதவேண்டும் எனும் எண்ணம் உள்ளுக்குள் புகைந்துகொண்டே இருந்தது, பின்னூட்டங்களின் மூலமாய் லக்கி ‘பிரபா உங்கள் தமிழ் நன்றாக இருக்கிறது, வலைப்பூ ஆரம்பிக்கலாமே என என்னை உசுப்பேற்றியது, கதிர், நாகா, அய்யா, சகோதரி, சேம் பிளட் சங்கர், தினேஷ் என இன்னும் ஏனைய அன்பு உள்ளங்கள் என்னை ஊக்குவித்தது என சொல்லிக்கொண்டே போகலாம்.

4) உங்கள் வலைப்பதிவை பிரபலமடையச் செய்ய என்ன என்னென்னவெல்லாம் செய்தீர்கள்?


    கதிர், நாகா சொன்னபின் திரட்டிகளில் இணைத்தது, ஆரம்ப நாட்களில் நிறைய படித்து பின்னூட்டமிட்டது, அனுபவங்கள் சார்ந்தே இன்றும் எழுதி வருவது, அய்யாவின் அறிவுரைகளை பின்பற்ற முயற்சிப்பது என நிறைய சொல்லலாம். பிரபலமடைந்ததா எனத் தெரியாது, என்னோடு இருக்கும் வலையுலக நண்பர்கள் எனக்கு துயர் வந்த போதெல்லாம் நாங்கள் இருக்கிறோம் என ஆறுதலாய் இருக்கும்போது 'ப்ராப்ளம்' (பிரபலத்துக்கு பிராப்ளத்தை ஒரு வழியா இணைச்சாச்சு)  என்னை அணுகி முழுதும் ஆட்கொள்ளாமல் இருக்க உதவிற்று.

5) வலைப்பதிவின் மூலம் உங்கள் சொந்த விஷயத்தை பகிர்ந்துகொண்டதுண்டா? ஆம் என்றால் ஏன்?அதன் விளைவு என்ன? இல்லை என்றால் ஏன்?
    
   எழுதியிருப்பதில் பெரும்பாலானவை என் சொந்த விஷயங்கள் சார்ந்தது தான். எனது வாழ்வில் நிகழ்ந்த, மற்றவர்களிடம் பகிர்ந்துகொள்ள ஏதுவான விஷயங்களை பல்பு வாங்கியிருந்தாலும் துணிந்து சொல்லி ‘ஸ்னேக் பிரபா’ என அய்யாவால் அழைக்கப்படுகிறேன். எனது அனுபவங்களை கொண்டு எழுதியவற்றை வைத்தே என்னை கிண்டல், கலாய்க்கும் போது மனதிற்கு நிறைவாய் இருக்கிறது("குப்புற விழுந்தேன், மீசையில் மண் ஒட்டவில்லை" நினைவிற்கு வந்தால் நான் பொறுப்பல்ல!)

6) நீங்கள் பொழுதுபோக்குக்காக பதிவுகளை எழுதுகிறீர்களா அல்லது பதிவுகளின் மூலம் சம்பாதிப்பதற்காகவா?

  கண்டிப்பாக சம்பாதிக்கவும், பொழுது போக்கிற்காகவும்தான். ஆம், நல்ல இதயங்களை சம்பாதித்து நல்ல பொழுதாகப் போக்க.

7) நீங்கள் மொத்தம் எத்தனை வலைப்பதிவுகளுக்கு சொந்தக்காரர்? அதில் எத்தனை தமிழ் வலைப்பதிவுகள் உள்ளன?

  மூன்று. "வாழ்க்கை வாழ்வதற்கே" முழுக்க அனுபவப் பகிர்வுக்காக; "எண்ணத்தை எழுதுகிறேன்" நடப்பு நிகழ்வுகளை சொல்வதற்காக; "வில்லங்கம் வீராசாமி" அரசியல் பற்றி எழுதலாமென ஆரம்பித்து மட்டும் வைத்திருக்கிறேன்.

8) மற்ற பதிவர்கள் மீது எப்போதாவது உங்களுக்கு கோபம் அல்லது பொறாமை ஏற்பட்டது உண்டா? ஆம் என்றால் யார் அந்த பதிவர்? ஏன்?

  கோபம் உண்டு, விளம்பரத்திற்காக தெரியாத விஷயங்களை எழுதும்போது... பெயர் வேண்டாமே! பொறாமை நிறைய பேரின் மேல் உண்டு. எந்த விஷயத்தையும் மிக நேர்த்தியாய் எழுதும் என் அய்யாமேல், தமிழோடு விளையாடுமென் சகோதரியின் மேல், மௌனத்தை கசியவிடும் கதிரின் மேல், கிரிக்கெட் மேல் அதீத ஆர்வம் கொண்ட தினேஷின் மேல், எழுதுவதை தற்சமயம் நிறுத்தியிருக்கும் சேட்டையின் மேல் என நிறைய பேரை சொல்லிக்கொண்டே போகலாம்.

9) உங்கள் பதிவை பற்றி முதன் முதலில் உங்களை தொடர்புகொண்டு பாராட்டிய மனிதர் யார்? அவரைப் பற்றி, அந்த பாராட்டைப் பற்றி..

  ராசுக்குட்டி எனும் பெயரில் பின்னூட்டமிடும் என் அன்பு நண்பர் நாகராஜ். ’அனுபவங்களை அழகாய் சொல்கிறீர்கள், தொடருங்கள்’. அடுத்து என் மாமா, என்னை வளர்த்து மெருகேற்றியவர், எனது எழுத்துக்களின் முதல் ரசிகர்.

10) கடைசியாக----விருப்பம் இருந்தால் உங்களைப் பற்றி பதிவுலகத்துக்கு தெரிய வேண்டிய அனைத்தையும் பற்றி கூறுங்கள்...

  அனுபவங்களைப் பகிர்ந்து உண்மையான நட்பினை, தோழமையினை பெறவே ஆசை. பாராட்டுக்களை விட உங்களின் கொட்டுக்களே எனக்கு அதிக ஊக்கத்தையும் என்னை மேம்படுத்திக்கொள்ளவும் உதவும் என்பதால் எதிர்ப்பார்ப்பது உண்மையான விமர்சனங்களையே. என்னைப்பற்றி தெரிந்துகொள்வது மிகவும் எளிது. எனது இடுகைகளே எனது அனுபவங்கள், மற்றும் என்னைச் சார்ந்ததுதானே?

47 : பேர் படிச்சிட்டு சொல்றாங்க...:

vasu balaji said...

இப்ப என்ன சாமியாராக்கியாச்சா? ஏன் இந்தக் கொலவெறி:)). சாமியார விட சிஷ்யனுக்குதான் டேமேஜ் ஜாஸ்திடி. கவனம்:)). நல்லாருக்கு பிரவு. ஆமாம். யாரையும் கோத்து விடல? வாட் அ செல்ஃபிஷ் ஃபெல்லோ:)))))

ஈரோடு கதிர் said...

அதுக்குள்ளேயா!!!!

பிரபாகர் said...

//வானம்பாடிகள் said...
இப்ப என்ன சாமியாராக்கியாச்சா? ஏன் இந்தக் கொலவெறி:)). சாமியார விட சிஷ்யனுக்குதான் டேமேஜ் ஜாஸ்திடி. கவனம்:)). நல்லாருக்கு பிரவு. ஆமாம். யாரையும் கோத்து விடல? வாட் அ செல்ஃபிஷ் ஃபெல்லோ:)))))
//
அதுதான் குருவுக்கு செலுத்தற மரியாதை... அந்த சந்தோஷம் என்னோட தங்கியே இருக்கனும்னு தான்(சொன்னா எழுத மாட்டேங்கறாங்கங்கற உண்மைய சொல்லாம எப்படியெல்லாம் மழுப்பவேண்டியிருக்கு)...

நன்றிங்கய்யா!

Paleo God said...

பிரபா....

லைட்னிங் ஸ்பீடு!!

:))

பிரபாகர் said...

// ஈரோடு கதிர் said...
அதுக்குள்ளேயா!!!!
//
அய்யா கூப்பிட்ட ஐந்தாவது நிமிடத்தில் இடுகை ரெடி. கொஞ்சம் பொறுத்துப்போட்டேன். நன்றி கதிர்..

பிரபாகர்...

பிரபாகர் said...

//【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...
பிரபா....

லைட்னிங் ஸ்பீடு!!

:))
//

வாங்க சேம் பிளட்... எல்லாம் உங்களைப் போன்ற நண்பர்களால் தான்...

பிரபாகர்...

ஸ்ரீ.கிருஷ்ணா said...

வாழ்த்துக்கள் சார் .. என்னோட
ப்ளாக் கூட தமிழிஷ் ban பண்ணிடாங்க இருந்த கொஞ்ச ஆர்வமும் போய்டுச்சி எழுதுறது இல்ல .. உங்க கிட்ட சொல்லி கஷ்டபடுத விரும்பல ...
தொடர்ந்து எழுதுங்கள் ..
கண்டிப்பா படிக்கிறேன் ..

பிரபாகர் said...

//ஸ்ரீ.கிருஷ்ணா said...
வாழ்த்துக்கள் சார் .. என்னோட
ப்ளாக் கூட தமிழிஷ் ban பண்ணிடாங்க இருந்த கொஞ்ச ஆர்வமும் போய்டுச்சி எழுதுறது இல்ல .. உங்க கிட்ட சொல்லி கஷ்டபடுத விரும்பல ...
தொடர்ந்து எழுதுங்கள் ..
கண்டிப்பா படிக்கிறேன் ..
//
என்ன ஆச்சு? கொஞ்ச நாள் வலையில இல்லாததால் எதுவும் தெரியல ஜெய்... வருந்தாதீங்க, இது பற்றி பேசுவோம்.

பிரபாகர்...

ஸ்ரீ.கிருஷ்ணா said...

முடிஞ்சா ஒரு டீம் ல இருந்து எல்ழுதுங்கள் அப்போதான் யாரும்
உங்களை எதிர்க்க மாட்டார்கள்
தமிழிசும் அவர்களுக்கு அடிமையனதுதான் வருத்தம் ..

ஸ்ரீ.கிருஷ்ணா said...

என் மீது தவறு இருந்தால் சுட்டி கட்டி இருக்கலாம் எந்த பதிலும் இல்லை .. ஒவ்வொருமுறையும் என்னால் உங்களை கஷ்டபடுத்த வேண்டாம் என்று தான் விட்டுவிட்டேன் ... சார்..
உங்கள் உண்மையான அன்பு போதும் .. பதிவுலகம் கொடுத்த மதிப்பிலா பரிசு ..

ஸ்ரீ.கிருஷ்ணா said...

என் மீது தவறு இருந்தால் சுட்டி கட்டி இருக்கலாம் எந்த பதிலும் இல்லை .. ஒவ்வொருமுறையும் என்னால் உங்களை கஷ்டபடுத்த வேண்டாம் என்று தான் விட்டுவிட்டேன் ... சார்..
உங்கள் உண்மையான அன்பு போதும் .. பதிவுலகம் கொடுத்த மதிப்பிலா பரிசு ..

Jey said...

வாழ்த்துக்கள்:)

பிரபாகர் said...

//ஸ்ரீ.கிருஷ்ணா said...
என் மீது தவறு இருந்தால் சுட்டி கட்டி இருக்கலாம் எந்த பதிலும் இல்லை .. ஒவ்வொருமுறையும் என்னால் உங்களை கஷ்டபடுத்த வேண்டாம் என்று தான் விட்டுவிட்டேன் ... சார்..
உங்கள் உண்மையான அன்பு போதும் .. பதிவுலகம் கொடுத்த மதிப்பிலா பரிசு ..
//
வருந்தாதீர்கள் ஜெய்... பேசுவோம்.

பிரபாகர்...

பிரபாகர் said...

//y said...
வாழ்த்துக்கள்:)
//
நன்றிங்க!

பிரபாகர்...

எல் கே said...

good one :))

Anonymous said...

முதிர்ந்த பதில்கள். கடைசிக்கேள்விக்கு பதில் வேற மாதிரி ஆகிடுச்சே :)

பிரபாகர் said...

//LK said...
good one :))
//
நன்றிங்க LK...

பிரபாகர்...

பிரபாகர் said...

//சின்ன அம்மிணி said...
முதிர்ந்த பதில்கள். கடைசிக்கேள்விக்கு பதில் வேற மாதிரி ஆகிடுச்சே :)
//

ஆமாங்க, மாத்திடறேன். சுட்டலுக்கு நன்றிங்க...

பிரபாகர்...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

who is prabhakar?

பிரபாகர் said...

//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
who is prabhakar?
//
ஒரு சாதாரண, உங்களின் பெயருக்கு அப்புறம் இருக்கிற.... ஹி...ஹி...

பிரபாகர்...

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

//பிரபாகர் said...
// ஈரோடு கதிர் said...
அதுக்குள்ளேயா!!!!
//
அய்யா கூப்பிட்ட ஐந்தாவது நிமிடத்தில் இடுகை ரெடி. கொஞ்சம் பொறுத்துப்போட்டேன். நன்றி கதிர்..

பிரபாகர்...

//

:)

நாகா said...

ஃபுல் ஃபார்ம்ல இருக்கீங்க போல..:)

பிரபாகர் said...

//ச.செந்தில்வேலன் said...
//பிரபாகர் said...
// ஈரோடு கதிர் said...
அதுக்குள்ளேயா!!!!
//
அய்யா கூப்பிட்ட ஐந்தாவது நிமிடத்தில் இடுகை ரெடி. கொஞ்சம் பொறுத்துப்போட்டேன். நன்றி கதிர்..

பிரபாகர்...

//

:)
//
நன்றி செந்தில்...

பிரபாகர்...

//
நாகா said...
ஃபுல் ஃபார்ம்ல இருக்கீங்க போல..:)
//
நன்றி நாகா...

பிரபாகர்...

CS. Mohan Kumar said...

Very nice. This series is good.

T.V.ராதாகிருஷ்ணன் said...

பாராட்டுகள் பிரபாகர்

Unknown said...

நல்ல பதில்கள்

பா.ராஜாராம் said...

அருமையான பகிர்வுகள் ப்ரபா!

ரோஸ்விக் said...

// பாராட்டுக்களை விட உங்களின் கொட்டுக்களே எனக்கு அதிக ஊக்கத்தையும் என்னை மேம்படுத்திக்கொள்ளவும் உதவும்//

கதிர், வானம்பாடிகள், தினேஷ், பலாபட்டறை அனைவரும் மேடைக்கு வரவும். இனிமேல் கொட்டி கொட்டி விளையாடலாம்... :-)

ரோஸ்விக் said...

வில்லங்கம் வீராச்சாமி மேட்டர் தெரியாமப் போயிடுச்சே! :-)

க.பாலாசி said...

உங்களைப்பற்றி இன்னும் சொல்கிறது இந்த பதில்கள்... நல்ல பகிர்வு...

தேவன் மாயம் said...

சிங்கை வந்தபோது சந்திக்க முடியவில்லை! நேர்மையான பதில்கள்!

Unknown said...

என்னய்யா பதில் எழுதி இருக்கீங்க? முதல் கேள்விக்கு ஒரே வார்த்தையில பதில். கேள்வியோட நீலத்துக்காவது பதில் இருக்க வேணாமா?
#கொட்டு 1

பிரபாகர் said...

//
மோகன் குமார் said...
Very nice. This series is good.
//
நன்றிங்க மோகன் குமார்...

//
T.V.ராதாகிருஷ்ணன் said...
பாராட்டுகள் பிரபாகர்
//
நன்றிங்கயா!... இன்னும் எழுத உத்வேகப்படுத்துது.

பிரபாகர் said...

//
முகிலன் said...
நல்ல பதில்கள்
//
நன்றி தினேஷ்...


//
பா.ராஜாராம் said...
அருமையான பகிர்வுகள் ப்ரபா!
//
ரொம்ப நன்றிங்க பா.ரா.

பிரபாகர் said...

//
ரோஸ்விக் said...
// பாராட்டுக்களை விட உங்களின் கொட்டுக்களே எனக்கு அதிக ஊக்கத்தையும் என்னை மேம்படுத்திக்கொள்ளவும் உதவும்//

கதிர், வானம்பாடிகள், தினேஷ், பலாபட்டறை அனைவரும் மேடைக்கு வரவும். இனிமேல் கொட்டி கொட்டி விளையாடலாம்... :-)
//

தாங்கது தம்பி...

//
ரோஸ்விக் said...
வில்லங்கம் வீராச்சாமி மேட்டர் தெரியாமப் போயிடுச்சே! :-)
//
மறைச்சில்ல வெச்சிருக்கோம்...

பிரபாகர் said...

//
க.பாலாசி said...
உங்களைப்பற்றி இன்னும் சொல்கிறது இந்த பதில்கள்... நல்ல பகிர்வு...
//
நன்றி இளவல்...

//
தேவன் மாயம் said...
சிங்கை வந்தபோது சந்திக்க முடியவில்லை! நேர்மையான பதில்கள்!
//
நான் ஊருக்கு சென்றுவிட்டதால் சந்திக்க இயலவில்லை. கண்டிப்பாய் அடுத்தமுறை ஊரில் சந்திப்போம். ரொம்ப நன்றிங்க.

Unknown said...

//1) வலைப்பதிவில் தோன்றும் உங்கள் பெயர்?

பிரபாகர். //

அப்ப ஸ்நேக் பிரபா?

பிரபாகர் said...

//முகிலன் said...
என்னய்யா பதில் எழுதி இருக்கீங்க? முதல் கேள்விக்கு ஒரே வார்த்தையில பதில். கேள்வியோட நீலத்துக்காவது பதில் இருக்க வேணாமா?
#கொட்டு 1
//

ஆ... வலிக்குது...

என் பையன் பெயரை கேட்டிருந்தா விளக்கமா ஒரு பத்தியா எழுதலாம். (பாஸ்போர்ட் படி, பிரபாகர் அபினவ் பிரபு விஷாக்...)

பிரபாகர் said...

//முகிலன் said...
//1) வலைப்பதிவில் தோன்றும் உங்கள் பெயர்?

பிரபாகர். //

அப்ப ஸ்நேக் பிரபா?
//

பட்டப்பேரு தினேஷ்...

பிரபாகர்...

க ரா said...

நல்ல பகிர்தல்னா

VELU.G said...

நல்ல பகிர்வு நன்றி நண்பரே

ஈரோடு கதிர் said...

நல்ல பகிர்வு பிரபா


சில உள்க்க்க்குத்த்த்துக்களை ரசித்தேன்

ஈரோடு கதிர் said...

|| ரோஸ்விக் said...
கதிர், வானம்பாடிகள், தினேஷ், பலாபட்டறை அனைவரும் மேடைக்கு வரவும். இனிமேல் கொட்டி கொட்டி விளையாடலாம்... :-)||

போன இடுகையிலேயே ஸ்டார்ட் ஆயிடுச்சுங்க ரோஸ்விக்

Prathap Kumar S. said...

//கண்டிப்பாக சம்பாதிக்கவும், பொழுது போக்கிற்காகவும்தான். ஆம், நல்ல இதயங்களை சம்பாதித்து நல்ல பொழுதாகப் போக்க.//

சூப்பராச்சொன்னீஙகண்ணே.... நல்ல பகிர்ந்துகிட்டீங்க....

Mahi_Granny said...

me too. prabha i lvu it

புலவன் புலிகேசி said...

நல்ல சுய விளக்கங்கள்....

Athiban said...

பதிவு அருமை. இந்தப் பதிவு கீழ்கண்ட வலைப்பக்கத்தில் இணைக்கப்பட்டுள்ளது.
மேலும் இதுபோன்ற பதிவுகளை படிக்க..

http://senthilathiban.blogspot.com/2010/07/blog-post_31.html

 

©2009 ”வாழ்க்கை வாழ்வதற்கே” | Template Blue by TNB