ஏறி உட்கார்ந்தபின் ஏனடா இந்த பேருந்தில் உட்காந்தோம் என எண்ணியதுண்டா? எண்ணியிருந்தால் அதற்குக் காரணமாய் நெரிசல், பராமரிப்பில்லாமல் எப்போது நம்முடைய இருக்கை கழன்று கீழே விழுமோ எனும் பயம், காலுக்கு கீழ் தெரியும் ஓட்டை வழியே பார்த்து வருதலில் வரும் பகீர் பயம், சிடுசிடுப்பான கண்டக்டர், மேலே உரசும் பயணி, கொஞ்சம் இடம் கொடுத்தால் நிற்கிற சாக்கில் நம் மீது உக்கார்ந்து வரும் சக பயணி, காற்று ஒலிப்பானால் காதை செவிடாக்கும் ஓட்டுநர் என பல விஷயஙகள் இருக்கலாம். எனக்கு கிடைத்த அனுபவம் ஒரு பேருந்தின் ஓட்டுனராலும் அவருக்கு உறுதுணையாய் வந்த நடத்துனராலும்.
நாமக்கல்லுக்கு வேலையாய்ச் சென்றுவிட்டு, வழக்கமாய் வரும் ராசிபுரம் வழியாய் வராமல் மாறுதலாய் துறையூர் வழியாக போகலாமென, கிளம்பத்தயாராக இருந்த ஒரு அரசுப்பேருந்தில் ஏறி உட்கார்ந்தேன். நிறைய சீட்டுகள் காலியாக, பாட்டுச் சத்தம் எனும் தொல்லையில்லாமல் இருந்தது. இந்த வண்டி கிளம்பியதும் ஏறுவதற்கு தயாராய் அடுத்ததாய் கிளம்பும் பேருந்தின் கீழ் நிறைய பேர் நின்று கொண்டிருந்தார்கள்.
ஓட்டுனர், முறுக்கிவிடப்பட்ட வெள்ளை மீசையுடன் ஐம்பது வயதொத்த ஒரு பெரியவர்(?), ஒவ்வொரு பத்து வினாடிக்கும் மீசையை முறுக்கிகொண்டிருந்தார். நடத்துனரும் அவருக்கு இளைத்தவரோ இளையவரோ இல்லை, ஆஹா நல்ல ஜோடிதான் என எண்ணும்படி இருந்தது. எங்கள் பேருந்து வெளியே கிளம்பிய அடுத்த நொடியில் எல்லோரும் பக்கத்து பஸ்ஸில் எல்லோரும் பரபரப்பாய் ஏற, தவறாய் மாறி ஏறிவிட்டோமோ என எண்ணி, மனதைத் தேற்றிக்கொண்டேன்.
வாக்மேனில் பாட்டுக்கேட்க ஆரம்பித்தேன். பக்கத்தில் ஒரு பெரியவர் வந்து அமர்ந்தார். காதில் இருந்த இயர் போனை பார்த்து என்னை ஒரு மாதிரியாய் உற்றுப்பார்த்துக் கொண்டிருக்க குறுகுறுப்பாய் இருந்தது. பாடலைக் கேட்டவண்ணம் கண்களை முடிக்கொள்ள, அந்த பெரியவர் அவருக்கு பக்கத்தில் அமர்ந்திருந்தவரிடம் பேச ஆரம்பித்தார்.
சப்தமாய் பேசியதால் பாடலை மீறியும் அவர் பேசுவது லேசாய் கேட்க, அதுவும் என்னைப்பற்றித்தான் இருப்பதுபோல் தெரிய ஒலியை குறைத்து வைத்தேன். 'பாவம் சின்ன வயசு இந்த பையனுக்கு இப்படியா ஆகணும்' அதற்கு மற்றவர் 'அதெல்லாம் விதின்னா, என்ன செய்ய முடியும்' என பதில் சொன்னார்.
அணைத்துவிட்டு என்ன விஷயம் என பெரியவரைக் கேட்டதற்கு, 'காது எப்பவுமே கேக்காதா' எனக்கேட்டார். இயர் போனை எடுத்துவிட்டு இல்லை கேட்குமே, என்ன விஷயம் எனக்கேட்க, ’இல்ல ஒரு பத்து தடவ கூப்பிட்டிருப்பேன், இத காதுல வேச்சிருக்கறதால கேக்கலையா? இது என்ன காது கேக்காம இருக்கிறதுக்கு மெஷினா’ என நக்கலாய் கேட்டார். பெரிய நகைச்சுவையைக்கேட்டார்போல் இன்னொரு பெரிசு வெடிச்சிரிப்பாய் சிரிக்க,
கையில் இருந்த எம்.ஜி.ஆர் பாடல்கள் இருந்த கேசட்டை மாற்றி அவரின் காதில் இயர்போனை வைக்க, கத்தி, 'அட பாட்டு பாடுது, எவ்வளவு சத்தமா கேக்குது' என மகிழ்ச்சியில் கத்தி, பக்கத்திலிருந்த இன்னொரு பெரியவரிடமும் அவரின் காதில் வைக்க, 'அடி ஆத்தி மனுஷன் என்னன்னவோ கண்டுபுடிக்கிறான், சீக்கிரம் சாவே இல்லாம பண்ணிடுவானுங்க போலிருக்கு’ என சந்தோஷித்து சொன்னார்.
பேருந்து நிலையத்தைவிட்டு வெளியே வந்த ஐந்தாவது நிமிடத்தில் பின்னால் கிளம்பிய பேருந்து எங்களை நக்கலாய் சப்தம் செய்து கடந்து போக, ஓட்டுனர் 'இப்படி அவசரமா போய் என்ன பண்ண போறாங்க' என அங்காலாய்த்தார். வழி சீட்டுக்களையெல்லாம் முன்னால் வண்டி பார்த்துக்கொள்வதால் அதிகம் யாரும் ஏறவில்லை, இறங்க மட்டுமே செய்தார்கள். வண்டி முப்பது கிலோமீட்டர் வேகத்துக்கு மேல் செல்லவில்லை. எதிரில் வரும் வண்டிக்கு இறங்கி வழி விட்டு வண்டியின் வேகம் குறைந்தாலும் கியரை மாற்றாமல், எந்த நிலையிலும் நான்காவது கியரில் அனத்தி அனத்தியாவது ஒட்டினார்.
வழியில் ஒரு டி.வி.எஸ்ஸில் ஒரு சிறுவன் ஓவர் டேக் செய்து போக கடுப்பான பக்கத்துல இருந்த பெரியவர், 'யொவ், வண்டிய கொஞ்சம் அதட்டி ஓட்டுய்யா, மாட்டு வண்டி கூட வேகமா போகும் போலிருக்கு' என சொல்ல, டிரைவர், 'வாய்யா, நீ வந்து ஓட்டு, பெருசா பேச வந்துட்ட' என பதில் சொன்னார்.
உள்ளிருந்த எல்லோருக்கும் சரியான எரிச்சல். சைக்கிளைத் தவிர எல்லா வாகனங்களுக்கும் வழிவிட்டுக்கொண்டு, மீசையை முறுக்கிக்கொண்டு ஓட்டினார். நம்ம பக்கத்து பெரிசு, ‘டிரைவர், வண்டியையும் கொஞ்சம் முறுக்கப்பா’ என சொல்ல எல்லோரும் கொல்லென வேதனையிலும் சிரித்தோம்.
பஸ்ஸிலிருந்தோர் மனம் நொந்து ஆளாளுக்கு சொல்ல ஆரம்பித்தார்கள். ஒரு நடுத்தர வயது பெண்மணி 'டிரைவர் வாழ்க்கையில் ஆக்ஸிடென்ட்டே பண்ணியிருக்கமாட்டார், அப்படி மோதியிருந்தாலும் ஆளு செத்திருக்க மாட்டார்'. ஒரு இளவட்டம், 'ரோடு ரோலர் ஓட்டியிருப்பாரோ?'. 'ஏம்மா எல்லா வண்டியும் நம்ம வண்டிய முந்திட்டு போவுது' ஒரு குழந்தை.
ஒரு வழியாய் பேருந்து துறையூரை நெருங்கியது. ஒரு நிறுத்தத்தில் நிறையபேர் இறங்கியதால் கொஞ்சம் தாமதிக்க டிரைவர் பொங்கியெழுந்து 'சீக்கிரம் இறங்குங்க, இப்படி இறங்குனா எப்படி நான் டைம் எடுக்கிறது' என கோபமாய் சொல்ல எல்லோரும் சிரித்தோம், அந்த குழந்தையும்கூட புரிந்தோ புரியாமலோ...
மிச்சர்கடை
4 weeks ago
34 : பேர் படிச்சிட்டு சொல்றாங்க...:
மீ த பர்ஸ்ட்டேய்ய்ய்ய்ய்
=)). அடன்கொன்னியா. இந்த ஓடாத பஸ்ஸுல துண்டு போடுறதுக்கு என்னமோ எல்லாம் க்யூல நின்னா மாதிரி மீத ஃபர்ஸ்டாம். :))
கொஞ்சம் அசந்தா ரெண்டு பேரும் வெட்டி பலி போட்டுவீங்களே!... நன்றி கதிர் (சீட் புடிச்சதுக்கு)... நன்றி அய்யா(சூப்பாரா கமெண்ட்-டினதுக்கு)....
பிரபாகர்...
இத காதுல வேச்சிருக்கறதால கேக்கலையா? இது என்ன காது கேக்காம இருக்கிறதுக்கு மெஷினா’
repeattu
எப்படி நான் டைம் எடுக்கிறது'
nice comedy
நானும் அனுபவித்து இருக்கேன் இவ் வேதனையை...
கோவையில் இருந்து ஈரோட்டுக்கு 4 மணி நேரம் போவாங்க.....
அந்த மீசத் தாத்தா நல்லாருக்கோணும்....
:-)
||கோவையில் இருந்து ஈரோட்டுக்கு 4 மணி நேரம் போவாங்க...||
சங்கமேசு...
நாலு மணி நேரம் போனாலும் 28 ரூவாதானப்பு
நமக்குத்தானே லாபம்..
இது புரியாம... சீங்கப்பூருக்காரரு இடுகை எழுதறாரு..
அதுக்கு ஒரு மீ த பர்ஸ்ட்டேய்ய்ய்ய் வேற (அட... நாந்தானா அது)
பிரவு இடுகை எழுதுனா தல காலே புரியறதில்ல
ஆஹா... கதிர்.... 'புல்' பார்ம்ல இருக்கீரு போலிருக்கு...
பிரபாகர்...
//அகல்விளக்கு said...
அந்த மீசத் தாத்தா நல்லாருக்கோணும்....
:-)
//
கண்டிப்பா இருப்பாரு. வாழ்க்கையில ஒரு ஈ, எறும்பக்கூட கொன்னிருக்கமாட்டாருல்ல! நன்றி ராஜா!
பிரபாகர்...
//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
எப்படி நான் டைம் எடுக்கிறது'
nice comedy
//
நல்ல ரசனை... நன்றி ரமேஷ்...
பிரபாகர்...
// Sangkavi said...
நானும் அனுபவித்து இருக்கேன் இவ் வேதனையை...
கோவையில் இருந்து ஈரோட்டுக்கு 4 மணி நேரம் போவாங்க.....
//
பத்தாயிரம் கொடுத்துட்டு நாலு மணிநேரத்துல சிங்கப்பூர் சென்னை. இருவத்தெட்டுல ஈரோடு கோவை... கதிர் லாஜிக் நல்லாத்தானே இருக்கு!
பிரபாகர்...
|| பிரபாகர் said...
ஆஹா... கதிர்.... 'புல்' பார்ம்ல இருக்கீரு போலிருக்கு... ||
ங்கொய்யா... அதென்ன புல் க்கு ரெண்டு பக்கமும் கொம்பு
இந்தக் குசும்பு ஆவதுடியோய்
அந்த சின்னக் குழந்த சொன்ன புருவ் பண்ணாட்டி இருக்கு ஆட்டம்
ஒரு பொறுமையான ட்ரைவரை கிண்டலடித்ததுக்கும் இருக்கு ஆப்பு
சில விஷயங்கள் எங்களுக்கே குழப்பமாக இருக்கும்போது தாத்தா குழம்பியது குழப்பமேயில்லை.நானே காதில வயரை மாட்டிக்கிட்டு கைத்தொலைபேசி பேசிக்கிட்டு போறவங்களைப் பார்த்து யோசிச்சிருக்கேன்...என்னடா தன்பாட்டில புலம்பிட்டு போறானேன்னு.ஆப்புறம்தான் புரிஞ்சுது புலம்பல் போனுக்குள்ளன்னு !
நானும் அனுபவித்து இருக்கேன் இவ் வேதனையை :)))
//அந்த சின்னக் குழந்த சொன்ன புருவ் பண்ணாட்டி இருக்கு ஆட்டம்
//
பள்ளிபாளையம், ஜப்பான் இன்னும் எல்லாத்தோடயும் ப்ரூவ் பண்றேன்...
பொறுமைன்னா ஓகே சாமி... அதீதப் பொறுமை. ராசிபுரம் வழியா போயிருந்தா லேட் லன்ச்சுக்கு போயிருப்பேன். டின்னருக்குல்ல போனேன்...
(நல்ல வேலை, தப்பிச்சி போற லவ் ஜோடி ஏதும் வண்டியில இல்ல...)
பிரபாகர்...
//ஹேமா said...
சில விஷயங்கள் எங்களுக்கே குழப்பமாக இருக்கும்போது தாத்தா குழம்பியது குழப்பமேயில்லை.நானே காதில வயரை மாட்டிக்கிட்டு கைத்தொலைபேசி பேசிக்கிட்டு போறவங்களைப் பார்த்து யோசிச்சிருக்கேன்...என்னடா தன்பாட்டில புலம்பிட்டு போறானேன்னு.ஆப்புறம்தான் புரிஞ்சுது புலம்பல் போனுக்குள்ளன்னு !
//
ஆம் சகோதரி...
படித்த ஒரு ஜோக் நினைவுக்கு வருகிறது. அப்போ தானே பேசிக்கொண்டு போனால் 'அதோ பைத்தியம் போகுது பாரு' இப்போ....'செல் போனில பேசுறாப்ல'...
பிரபாகர்...
//T.V.ராதாகிருஷ்ணன் said...
நானும் அனுபவித்து இருக்கேன் இவ் வேதனையை :)))
//
நன்றிங்கய்யா!
பிரபாகர்...
நாங்காலேஜ்ல படிக்கறப்ப இப்டித்தான் சில ட்ரைவருங்க படுத்துவாங்க.. ஏன்டா இநத் பஸ்ல ஏறினோம்னு ஆயிடும்.. என்ன பண்றது அவங்க அவங்க கஷ்டம் அவங்கவங்களுக்குத்தானே தெரியும்...
கடைசியில பொதுமக்கள் கமெண்ட்ஸ் சரியான காமடி...
க.பாலாசி-ங்கிற பேர்ல வேற யாரோ கமெண்டிட்டுப் போயிருக்காங்க போல. இவ்வளவு அடக்கி வாசிப்பா இருக்கு?
நல்ல இடுகை. நல்ல காமெடி. நன்றி ஈரோடு கதிர்.
//ராசிபுரம் வழியா போயிருந்தா லேட் லன்ச்சுக்கு போயிருப்பேன். டின்னருக்குல்ல போனேன்...//
ங்கொய்யால இந்த அலம்பல பாரேன். வெளக்கு வைக்கிற நேரத்துல சோறு ஓணுமா சோறுன்னு தொடப்பக்கட்ட பிஞ்சிரும். ராச்சாப்பாட்ட வெள்ளன சாப்புடுடின்னுருப்பாங்க. என்னமோ சீமை மாதிரி லேட் லஞ்சு, டின்னரு.
|| க.பாலாசி said...
நாங்காலேஜ்ல படிக்கறப்ப||
பயபுள்ள படிச்சத பதிவு பண்ணுதாம்
கூட வர்ற பொண்ணுங்களுக்கா, ட்ரைவருக்கு மாமூல் குடுத்து மெதுவா போகச் சொன்னது வரலாறு இருக்கு ராசா!!!!
//கூட வர்ற பொண்ணுங்களுக்கா, ட்ரைவருக்கு மாமூல் குடுத்து மெதுவா போகச் சொன்னது வரலாறு இருக்கு ராசா!!//
இந்த வரலாறு உங்கூட்டு அம்முணிக்குத் தெரியுமா கதிரண்ணே?
|| முகிலன் said...
இந்த வரலாறு உங்கூட்டு அம்முணிக்குத் தெரியுமா கதிரண்ணே? ||
பாலாசிக்கு வரப்போற அம்மினிக்கு தெரிஞ்சாப் போதும்ங்க..முகிலன்
அதனாலதான் வரலாறுல பதியவைக்கிறது.
பஸ்-ல பாட்டுத்தொல்லை இல்லைன்னு ஏறிட்டு... காதுல மாட்டிக்கிட்டு புல் சவுண்ட்-ல பாட்டுக்கேட்டா... என்னா அலும்புடா சாமி!
எல்லோரும் அந்த பஸ்-ல ஏறாம உஷாரா கீழ நிக்கிறத பார்த்தாவது சூதானமா இருக்க வேணாம்... பல்பை பெரிய் பகுமானமா போயி வாங்குறது இது தான்.
அந்த பஸ்-ல இவருக்குப் பக்கத்துல உக்காந்திருந்தது வயசான கிழவன் இல்லை...கிழவி போல...
இன்னேரம் ஒரு அச்சா ஃபிகரு உக்காந்திருந்தா, அந்த ட்ரைவருக்கு மீசை முருக்க சம்பளத்துக்கு ஆள் அனுப்பி இருப்பாரு...
ப்ரேக் இல்லாத பஸ் பார்த்திருக்கிறோம்... ஒருவேளை இது ஆக்சிலேட்டர் இல்லாத பஸ்-சா இருக்குமோ!
தமிழ் நாட்டுல பேருந்துக்கெல்லாம் வேகம் குறைச்சு சட்டம் போட்டாங்களோன்னு தான் இந்த முறை ஒவ்வொரு பயணத்தின் போதும் நானும் நினைச்சேன் சகோ! உங்க அனுபவம் தான் எனக்கும்!
நல்ல இடுகை பிரபா.
avvv... oorla illa annaa... apram vanthu padichukkaren... take care..
சில சமயம் இப்படித்தான் கடுப்படிப்பார்கள் டிரைவர்கள். நல்ல நகைச்சுவை பிரபாகர்.
சில டிரைவர்கள் நல்ல நண்பர்களாவும் ஆகியிருக்காங்க. ரசித்தேன் :)
Post a Comment