வானம்பாடிகள் அய்யாவும் நானும் எக்மோரில் சாப்பிட்டுவிட்டு வெளியே வந்தோம். என்னை அனுப்பி செல்வதாய் சொல்லி, ஆட்டோவை பேச அவர்கள் கேட்டதைப் பார்த்து வியப்பாயிருந்தது, எப்படி மனசாட்சியே இல்லாமல் கேட்கிறார்கள் என. கடைசியாய் ஒருவர் எவ்வளவு சார் தருவீர்கள் எனக் கேட்க, அய்யா ஒரு தொகையை சொல்ல, அவர் கொஞ்சம் சேர்த்து கேட்டார். ’சரி பிரபா, பார்த்துப்போங்க, சேர்ந்ததும் அழையுங்க’ எனச் சொல்லி விடைபெற்று சென்றார்.
கிளம்பிய சிறிது நேரத்தில் ’சார் எங்க சார் போகனும்’ எனக் கேட்க பகீரென்றிருந்தது, சொல்லித்தானே ஏறினோமென. ராகவன் காலனி என சொன்னவுடன், 'சார் ரெண்டு இருக்கு. தெளிவா சொல்லனும், அப்படித்தான்' என ஐந்து நிமிடம் நிறுத்தாமல் ஒரு கதையை சொன்னார். ஸ்ரீனிவாசா தியேட்டர், கோவிந்தன் ரோடு அருகில் என திரும்பச் சொல்ல, ’ஆமாம் சரியா சொன்னீங்க, இல்லன்னா கோடம்பாக்கத்தில இருக்கிற ராகவன் காலனிக்கு போயிருப்பேன்’ என சொன்னார்.
கொஞ்சம் உற்று அவரைப்பார்க்க அப்போதுதான் சரியான போதையில் இருக்கிறார் என. ஆஹா, சிக்கினோமடா என நினைத்தபோது சட்டென வண்டியை நிறுத்தினார். ’சார், உங்க நண்பர கூப்பிட்டு ஃபோன எங்கிட்ட கொடுங்களேன், வழி கேட்டுக்கறேன்’ நியாயமாய்ப் படவே, அழைத்தேன்.
‘டேய் டிரைவர் பேசனுமாம்’ என கொடுத்தவுடன், ‘வணக்கம் சார், சரிங்க சார், தெரியும் சார், ஆமாங்க சார், கண்டிப்பா சார், நிறைய வாட்டி வந்திருக்கேன் சார், தேங்க்யூ சார், நண்பர்கிட்ட பேசுங்க சார்’ பவ்வியாமாய் கொடுத்தார், பேசி வைத்தேன்.
’சார் இந்த இடத்துல ரோடு பிரியுது பாருங்க, எப்படி போகனுங்கறதுக்காகத்தான் உங்க நண்பர்கிட்ட பேச சொன்னேன். இப்போ கிளியர்’ என வலது பக்க ரோட்டில் வளைத்தார். இதில் அவர் குடும்பத்தைப்பற்றிய விவரங்கள் வேறு. இரு மகள்கள். முதல் மகள் லவ் மேரேஜ் வீட்டிற்கு தெரியாமல். ரொம்ப கஷ்டப்படுகிறாராம். இரண்டாவது மகள் அக்காளின் நிலையைப்பார்த்து இவர் சொன்னவரைக் கல்யாணம் செய்துகொண்டு சந்தோஷமாய். இரவில் மட்டும் ஆட்டோ ஓட்டுவாராம். சராசரியாம் நானூறு ரூபாய் கிடைக்குமாம். சொந்த ஆட்டோ வாங்குவதில் உள்ள சிக்கல்கள் மற்றும் இடுகையெழுதும் அளவிற்கு பல விஷயங்களை சொல்லிவந்தார்.
ஒரு இடத்தை நெருங்கினோம். வண்டியை நிறுத்தி ‘சார், ராகவன் காலனி எப்படி போகனும்’ எனக்கேட்டார். ‘நேரா போய் லெஃப்ட், கொஞ்ச தூரம் போனா ஒரு...’ என சொல்ல, மறக்காமல் ’தேங்க்யூ சார்’ சொன்னார். இடதுபுறம் திரும்பியவுடன் வண்டியை நிப்பாட்டி அங்கு நின்றிருந்த பெரியவரிடம் கேட்க, நான்கைந்து கேள்விகளைக் கேட்டுவிட்டு, ‘நானும் புதுசுதான்’ எனச் சொல்ல, இதை ஆரம்பத்துலேயே சொல்லியிருக்கலாமே சார்!’ என அடுத்துவந்தவரிடம் கேட்க ஆரம்பித்தார்.
ஒரு கடைக்கு வெளியே படுக்க எத்தனித்த ஒருவரிடம் கேட்க அவர் கையைக்காட்டி எதோ சொல்ல முயல ‘வேண்டாம் சார், சொல்றதுக்குள்ள விடிஞ்சிடும், நன்றி’ என சொல்லி கிளப்பினார்.
என் நண்பன் என்ன இன்னும் வரவில்லையே என டென்ஷனாகி அழைத்து, ’நேத்துதானடா வீட்டுக்கு வந்த, இதுக்கு முன்னால் எத்தனை தடவை வந்திருப்பாய் சரி டிரைவர் கிட்ட கொடு’ எனச் சொல்ல, அவர் வாங்க மறுத்து, ’சாரி சார், ஒரு தடவைதான் அட்ரஸ் கேட்பேன், சுகுரா கொண்டுபோய் விட்டுவிடுவேன்’ என சொன்னார். அவர் கொஞ்சமும் சளைக்காமல் சகட்டு மேனிக்கு விசாரித்தபடியே விரட்டினார்.
அந்த ராகவன் காலனி ஏரியாவில் ஏறக்குறைய எல்லா இடங்களையும் ஆள் அரவமில்லாத இருட்டான இடங்களையும் சேர்த்து பார்க்க நேர்ந்தது. ஒரு வழியாய் எனக்கு அறிமுகமான வழியில் செல்ல ஆரம்பிக்க நான் வழி சொல்ல ஆரம்பித்தேன். வீட்டு வாசலில் நிறுத்தும்போது, ’சார் உங்க நண்பர் மாதா கோவில் அது இதுன்னு குழப்பிட்டாரு. இல்லையின்னா’ என சொல்லப்போக, ’வேண்டாம் சார்’ என நிப்பாட்டி பேசியதை விட அவரே எதிர்ப்பார்க்காத ஒரு தொகையைக் கொடுத்த்து ஆளை விட்டால் போதும் என வீட்டிற்குள் சென்றேன்.
அடுத்த நாள், மாமா கஜகஸ்தான் செல்ல சென்னை வர, அவரைப் பார்த்தபின் அப்படியே ஊருக்கு செல்ல உத்தேசம். நண்பனின் வீட்டிலிருந்து ஆட்டோவில் மாம்பலம் ஸ்டேஷன் சென்று ட்ரெயினில் செல்லலாம் என உத்தேசித்து ஒரு ஆட்டோவை நிறுத்தி மாம்பலம் ரயில் நிலையம் எனச் சொல்லி கவனித்தேன், முன் கண்ணாடியில் பெரிதாய் எம்.ஜி.ஆர். படம்.
’தலைவர்னா ரொம்ப பிடிக்குமா’ எனக்கேட்டேன். ’அய்யோ, அவருன்னா உயிருங்க’ எனச் சொன்னார். ’சரி வண்டியை ஏர்போர்ட் விடுங்க’ என சொல்ல அவருக்கு ஆச்சர்யம். ’மாம்பலம்னு சொன்னீங்க?’ எனக்கேட்க, ‘ட்ரெயின்ல போறதா இருந்தேன், ஆட்டோவிலயே தலைவருக்காக போறதா முடிவு பண்ணிட்டேன்’ என சொல்ல அவர் வண்டியை திருப்பினார்.
விளையாட்டுக்கு ‘எவ்வளவு வேணும், தலைவர நினைச்சிக்கிட்டு கேளுங்க’ எனச் சொல்ல, பதிலுக்கு ‘தலைவர நினைச்சிட்டு கொடுங்க’ என விவரமாக சொன்னார்.
‘அய்யய்யோ, அப்புறம் வெறும் பாக்கெட்டோடத்தான் நான் போகனும்’ எனச் சொல்ல இருவரும் சிரித்தோம். பேசியபடி சந்தோஷமான பயணம். கட்டணத்தை தரும்போது கண்கள் பணிக்க, நீங்களும் தலைவர்தான் என சொல்லிச் சென்றார்.
மிச்சர்கடை
4 weeks ago
14 : பேர் படிச்சிட்டு சொல்றாங்க...:
அடங்கொன்னியா. இது தெரிஞ்சிருந்தா நானும் தலைவரேன்னு சொல்லி ஆட்டய போட்டிருக்கலாம் போலயே:))
//அய்யய்யோ, அப்புறம் வெறும் பாக்கெட்டோடத்தான் நான் போகனும்//
சூப்பர்... வாரி வழங்கும் வள்ளல் தலைவர் எம்ஜீஆர்-ங்கறைதை நச்சுன்னு சொன்னீங்க...
முதல்ல போன ஆட்டோ டிரைவர் செம காமெடி... நல்ல டைம் பாஸ் ஆச்சுல்ல....:))
//அய்யய்யோ, அப்புறம் வெறும் பாக்கெட்டோடத்தான் நான் போகனும்//
நாலஞ்சு பாக்கெட் வைச்சுகிட்டா பிரச்சனை இல்லை :)
புரட்சிப் பதிவர் பிரபாகர்!! :))
en kitta inthak kathaiyai sonnappuramum naan mulichikkalai paarunga. evvalavu emaaliya irukken...
appave thalaivar perai solli iruntha mayajaal billai praba kuduththuruppar..
//சாரி சார், ஒரு தடவைதான் அட்ரஸ் கேட்பேன்//
இது பாலிசி
இதுவரைக்கும் இனிமையான ஆட்டோ பயணம் எனக்கு தமிழ் நாட்டுல கிடைச்சதில்லை.
வலைப் பதிவில் கண்டது மகிழ்ச்சி . மீண்டுவருக.
வாங்க பிரபாகர் அண்ணா,
உங்களுக்கு மட்டும் எப்புடி இப்படி நல்ல ஆட்டோ காரங்க கிடைக்கிறாங்க .....
நாங்க எல்லாம் கை கடிகாரத்த அடகு வைக்கிற நிலைமைக்கு ஆளாகிருக்கோம்....
மறுபடியும் உங்களை பதிவுலகில் பார்த்ததில் ரொம்ப மகிழ்ச்சி அண்ணா ....
ஆட்டோவா? அய்யா ஆள விடு, நான் பொடிநடையா போய்க்கிறேன். யப்பா, வேணாம் சாமி.
வித்யாசமான அனுபவங்கள் :)
ஆமா நீங்க தலைவர் ரசிகரா... சொல்லவே இல்லை... நானும் தான்... (அப்பா கைச்செலவுக்கு இப்பவே அடி போட்டு வைச்சாச்சு...)
இப்பவெல்லாம் ஆட்டோவில அடியாளுங்க வரத் தேவையில்லை... ஆட்டோக்காரன் வந்தாலே நம்ம கதை கந்தல் தான்...
//【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...
புரட்சிப் பதிவர் பிரபாகர்!! :))
//
சங்கர் அண்ணே! உங்களுக்கே ஓவராத் தெரியல... போதும் விட்டுருங்க... அவரு பாவம்... :-)))))
Post a Comment