ஈரோடு பதிவர்களும், ஜூனியரும் நானும்...

|

கதிர் ஊருக்கு வரும்போது கண்டிப்பாய் பார்த்தே ஆகவேண்டும் என தினந்தோறும் மிரட்டல் விட்டுக்கொண்டிருந்ததால் அவரையும், அன்பான மற்றும் சிலரையாவது பார்த்தே ஆகவேண்டும் என முடிவு செய்திருந்தேன். அப்பா நீங்கள் எங்கு சென்றாலும் உங்களோடுதான் வருவேன் என மகன் அன்புக்கட்டளை இட்டிருந்தார். அதன்படி அவரையும் என்னோடு அழைத்துக்கொண்டு டூவீலரில், முன்னே விஷாக், பின்னால் பெட்டி, தலைக்கு ஹெல்மெட், குளிர் கண்ணாடி என கொளுத்தும் அக்கினி நட்சத்திர வெயிலில் கிளம்பினோம். வண்டியை தாத்தா வீட்டில் விட்டுவிட்டு பஸ்ஸில் பயணிப்பதாய் எண்ணம்.


கியர், பிரேக், கிளட்ச் மட்டும்தான் நான். ஆக்ஸிலேட்டர், ஆர்ன், ஒட்டுவது எல்லாம் அவர்தான். வளைவில், எதிரில் வண்டி வரும்போது என சொல்லித்தந்தவாறு அழகாய் ஓட்டுவார், ஓட்டினார். சேலம் ரோட்டில் செல்லும்போது வண்டி இழுத்தாற்போல் செல்ல, பின் டயர் பன்க்சர். நல்லவேளை, சரி செய்யும் கடை வெகு அருகில். அந்த வேகாத வெயிலில் பையனை வைத்துக்கொண்டு... கொஞ்சம் டென்ஷனானேன். ’விடுங்கப்பா, எனக்கு ஒன்னுமில்லை’ என என் முகத்தைப்பார்த்து ஆறுதல் சொல்ல, தணிந்தேன்.

டியூப்பையே மாற்றிவிடலாம் என சொல்ல, கடைக்கு சென்றேன். மூன்று விலையில் இருந்தது. இது ஒரிஜினல், முந்நூறு ரூபாய் என சொல்லி விலை கம்மியாய் இன்னுமிரு ட்யூப்களையும் காட்ட,  போலியை பகிரங்கமாய் விற்பது அதிர்ச்சியாயிருந்தது.

ஒரு வழியாய் வண்டியை விட்டுவிட்டு சேலம். கிளம்பிக்கொண்டிருந்த பஸ்ஸில் அவசரமாய் ஏறிக்கொண்டோம். அப்புறம்தான் தெரிந்தது அது பவானி வழியாக கோவை செல்லும் பேருந்து என. மன்னிப்பு கேட்டு சங்ககிரியில் இறங்கிக்கொண்டு, மற்றுமொரு பஸ் பிடித்து ஈரோடு. அடிக்கடி கதிரின் அழைப்பு. பள்ளிபாளையம் வந்தவுடன் சொல்லுங்கள் என சொன்னார்.

பிருந்தாவன் அருகே வரச்சொல்ல, காரில் காத்திருந்தார். கதிர்... பாராமல் பேசி, எண்ணங்களை பகிர்ந்த என் இனிய நண்பர், கண்முன்னால். சந்தோஷமாய் கைகுலுக்கி வரவேற்க, ஜூனியர் பின்னால் அமர்ந்துகொள்ள, கதிரோடு முன்னால். ஆரூரனும் வந்து வேறொரு பக்கத்தில் காத்திருக்க, பிக்கப் செய்து கொண்டு அலுவலகம் செல்வதாய் சொல்ல அவர் நேரே அங்கே வருவதாய் சொல்லிவிட்டார்.

காரை நிறுத்தி கதிரின் அலுவலகம் சென்றோம். ஆஹா இங்கிருந்துதானா இத்தனை மவுனமும் கசிகிறது என ஆச்சர்யப்பட்டேன். அவரின் அலுவலக நுழைவாயிலேயே இருந்த அச்சடித்து வைக்கப்பட்டிருந்த போஸ்டர்கள் என்னைக் கவர பார்த்தேன். இறுதி அஞ்சலி எனும் போஸ்டரில், கண் தானம் வழங்கியமைக்கு நன்றி என்று நன்றியுடன், இவரின் சொந்த செலவில். தகவல் வந்து கண்ணினை எடுக்கச் செல்லும் அந்த குறுகிய இடைவெளியில் அச்சடித்து எல்லோருக்கும் விழிப்புணர்வினை ஊட்டுவதற்காக வழங்க என அறிந்தபோது கதிரின் மேல் இருந்த மதிப்பு இன்னும், இன்னும் பன்மடங்காகியது.

விஷாக் கிடைத்த கம்ப்யூட்டரில் விளையாட ஆரம்பிக்க, ஆரூரன் வந்து சேர்ந்தார். முதன்முறையாய் பார்ப்பதாய் இல்லை, ஏற்கனவே பழகிய உணர்வு. அதன் பின் இளவல் பாலாசி (அய்யா ஒரு முன்னோட்டம் கொடுத்திருந்ததால் தப்பித்தேன்... பள்ளி செல்லும் சிறுவனாய்...), அகல் விளக்கு ராஜா (சிறு விபத்துக்குப் பின் தேறி வந்ததாய் சொன்னார்), அப்புறமாய் வால்பையன் அருண். காதல் பற்றி அருண் அதிகமாய் பேசியது ஆச்சர்யமாயிருந்தது. ஏற்கனவே பலமுறை போனில் பேசியிருந்தாலும் நேரில் பார்க்கும்போது தோன்றியது வாலு வாலுதான்!

சரி இரவு உணவுக்கு செல்லலாம் என முடிவு செய்தபோது அருணால் வர இயலாத சூழல். இரண்டு காரில் ஒரு பஞ்சாபி தாபாவுக்கு போனோம். நண்பர் சேது, என்னை தொடர்ந்து வாசித்து வரும் பைஜூ என சேர்ந்து கொள்ள கலக்கலாய் இரவு உணவு ஆரம்பித்தது.

அந்த தாபாவின் ஓனர் சேதுவுக்கு மிகவும் வேண்டப்பட்டவராம். நேரிலேயே வந்து என்ன வேண்டும் எனக்கேட்டதோடு மட்டுமல்லாமல் அவரே சில ஸ்பெஷல் ஐயிட்டங்களை அனுப்பிவைத்தார். அதிலும் குறிப்பாய் ஜப்பான் சிக்கன் ரொம்ப அருமையாய் காரம் குறைவாய் இருந்தது விஷாக்கிற்காகவாம். எல்லோருக்கும் பிடித்திருந்தது. உண்மையைச் சொல்லவேண்டுமென்றால் அதுபோல் சாப்பிட்டதே இல்லை. காரம் இல்லையே என்பதை ஈடு செய்ய பள்ளிபாளையம் இன்னும் அருமையாய். கடைசியாய் தயிர் சாதம். விஷாக் சாப்பிட்டுவிட்டு கைகளை உயர்த்தி சூப்பர் என சொல்ல எல்லோரும் சிரித்தோம்.

சேது கதிர், நான் மற்றும் விஷாக்கை கதிரின் வீட்டில் விட்டுவிட்டு சென்றார். வழியில் ஒரு நாய் வீலென கத்திக்கொண்டு ஓட, ‘அப்பா கார் அந்த நாய் மேல மோதிடுச்சா, அதுக்கு குட்டிங்க எல்லாம் இருக்குமா’ என ஜூனியர் கேட்க, அதெல்லாம் இல்லைப்பா ஒன்னுமில்லை என சொன்னேன். ‘இல்லைப்பா, அது கத்தின சவுண்டு வேற மாதிரி இருந்துச்சி’ என மறுத்து சொல்ல ஒன்றும் ஆகவில்லை என திரும்ப சொல்லி சமாளித்தேன்.

இரவு கதிரின் வீட்டில் தங்கியிருந்து காலை கிளம்பி, ஒரு ப்யூர் வெஜிடேரியன் ஓட்டலில் (இங்கு புளி காரம் சேர்ப்பதில்லை, குறைவான எண்ணெய்...) சாப்பிட்டோம். புதினா தோசை நன்றாக இருந்தது. முருங்கைக்கீரை சூப், சட்னி, சாம்பார் எல்லாம் வித்தியாசமான சுவையில். ஜூனியர் ப்ளைன் என்னாப்பா இவ்வளவு சின்னதா மொத்தமா இருக்கு எனக்கேட்க, அய்யா கொஞ்சம் மெலிசா போட்டுத்தாங்க என சொல்லி சாப்பிட்டு முடித்தோம்.

அவரது இரு சக்கர வாகனத்திலேயே எங்களை அழைத்து வந்த போது வழியில் நாங்கள் மறந்து விட்டு வந்ததை எடுக்க கதிர் அலுவலகம் திரும்ப சென்று வர என ஒரு வழியாய் பேருந்து நிலையம் வந்து சேர்ந்தோம். அங்கு பழங்கள் மற்றும் ஜூஸ் கடை வைத்திருக்கும் அவரது நண்பர் தியாகராஜன்(தியாகு) அருமையாய் கவனித்து, லைம் ஜூஸ், வாட்டர் பாக்கெட் என எல்லாம் ஃபிரஷ் ஜூஸோடு பேருந்தில் செல்லும்போது தேவைப்படுமெனத் தந்து கவனித்தார். அவருக்கு ஒரு பலமான நன்றியினைக்கூறி கிளம்பினோம். என் கதிர் எங்களை பேருந்திலேற்றி கடைசிவரை கையாட்டி வழியனுப்பிவைக்க, பிரிய மனமில்லாமல் பிரிந்தோம். ‘அப்பா கதிர் மாமாவை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கப்பா’ என ஜூனியர் சொல்ல, எனக்கும்தான் என மனதில் நினைத்துக்கொண்டேன்.

எங்கோ பிறந்து வளர்ந்து, வாழ்வில் இப்படியெல்லாம் உறவினை, சந்திப்பினை ஏற்படுத்திக்கொடுக்கும் இந்த வலையுலகம் ஒரு பெரிய வரப்பிரசாதம் தான்.

இதற்குதான் எழுதவந்தாயா பிரபாகரா என கேட்டுக்கொண்டேன், அன்பான நண்பர்களோடு அளவளாவிய திகைப்பில்.

எடுத்த புகைப்படங்கள் கீழே... சாப்பிடும்போது கிளிக்கியது ஜுனியர்.

மௌனத்தை கசியவிடும் கதிர்..


ஆளுமைக்குரிய ஆரூரன்..


அன்பின் விஷாக்...


வால்பையன் அருண்...


ஆரூரன், கதிர், நண்பர் சேது...





பைஜு...


சேதுவும் நானும்...

52 : பேர் படிச்சிட்டு சொல்றாங்க...:

நிஜமா நல்லவன் said...

:)

ஷர்புதீன் said...

ithukkuthaanga pathivulagam., athavittu ore sandai, sachcharavu...
:)

Thenammai Lakshmanan said...

விஷாக் குட்டி ரொம்ப அழகு..

ஈரோடு பதிவர்கள் சின்ன வயசுக்காரங்களா இருக்காங்களே..:))

அவங்க விருந்தோம்பலையும் அன்பையும் கருதியே ஈரோடு வரணும்னு எண்ணம் ஏற்படுது,..:))

கதிர் என் கண்ணைக் கூட சேர்த்துக்குங்க..மறந்துடாம.. நிச்சயம் தானம் செய்ய விரும்புறேன்.. வாழ்த்துக்கள் நண்பா..

சத்ரியன் said...

//கதிர் ஊருக்கு வரும்போது கண்டிப்பாய் பார்த்தே ஆகவேண்டும் என தினந்தோறும் மிரட்டல் விட்டுக்கொண்டிருந்ததால்..//

இதெல்லாம் கொஞ்சம் உச்சபட்ச வன்முறையாத் தெரியுது.

நிஜமா நல்லவன் said...

ரைட்டு...ஊருக்கு போகும் போது கதிர் அண்ணனை பார்த்துடுவோம்!

sathishsangkavi.blogspot.com said...

பங்காளி...

அப்பாவும், மகனும் ஈரோடு வந்து நல்ல என்ஜாய் பண்ணீட்டீங்க...

ஆனா நீங்க எங்கிட்ட சொல்லாம வந்துட்டீங்க...

நான் உங்களை மிஸ் பண்ணிட்டேன்.....

உலகம் உருண்டை பங்காளி மீண்டும் சந்திப்போம்....

சத்ரியன் said...

//தலைக்கு ஹெல்மெட், குளிர் கண்ணாடி என கொளுத்தும் ..//

ஏன்... தலைக்கு கண்ணாடியும், கண்ணுக்கு ஹெல்மெட்டும் போட்டுக்கிட்டு போக வேண்டியது தானே! யாரு தடுத்தா?

Paleo God said...

சூப்பர்!

நானாவது கதிர பார்க்கும்போது வேற போஸ்ல படம் எடுக்க ட்ரை பண்றேன்! :)))

க.பாலாசி said...

உங்களை கண்டதில் எனக்கம் மிக்க மகிழ்ச்சி அண்ணா...இனிமையான பொழுதாக அமைந்தது...

T.V.ராதாகிருஷ்ணன் said...

:)))

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

நண்பர்கள் சந்தித்தால் மகிழ்ச்சி தான். அது உங்கள் பதிவில் தெரிகிறது.

;)

ராம்ஜி_யாஹூ said...

thanks for sharing, very nice

அகல்விளக்கு said...

உங்களை சந்தித்ததில் மிக்க மிக்க மகிழ்ச்சி அண்ணா...

மறக்கவியலாத சந்திப்பாக, இனிமையான மாலையாக அது அமைந்தது...

:)

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

விஷாக் குட்டி ரொம்ப அழகு..

nalla natpu

Prathap Kumar S. said...

அருமையான சந்திப்பு...பகிர்தலுக்கு நன்றிங்கணோவ்...

settaikkaran said...

இதெல்லாம் நல்லாயில்லை! (ஏன் இப்படிச் சொல்றேன்னு உங்களுக்குத் தெரியுமே!) :-)

ஹேமா said...

படங்களில் பார்க்க முடிகிறது பெயர்களில் பார்த்தவர்களை.
சந்தோஷம் பிரபா.

விஷாக் குட்டி ரொம்ப அழகு.

vasu balaji said...

/【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...
சூப்பர்!

நானாவது கதிர பார்க்கும்போது வேற போஸ்ல படம் எடுக்க ட்ரை பண்றேன்! :)))//

பண்ணீட்டாலும்:)))

அந்த சிவப்பு டி ஷர்ட் இஃகிஃகி. ஹய்ய்யோ ஹய்யோ. ஒரு கைல எஸ்.எம்.எஸ். அனுப்பறாராமா. யூத்து போசுக்கு என்னல்லாம் பாடு படுறாய்ங்கப்பா.

ஆளுமைக்குறியவா

ஏம் பிரவு! அர்த்தம் சரியா வருது?

Cable சங்கர் said...

நடுவுல நான் போன் பேசினேன்.. அதை மறந்திட்டீங்க..?:)

தாராபுரத்தான் said...

எங்கோ பிறந்து வளர்ந்து, வாழ்வில் இப்படியெல்லாம் உறவினை, சந்திப்பினை ஏற்படுத்திக்கொடுக்கும் இந்த வலையுலகம் ஒரு பெரிய வரப்பிரசாதம் தான்.

Unknown said...

//அந்த சிவப்பு டி ஷர்ட் இஃகிஃகி. ஹய்ய்யோ ஹய்யோ. ஒரு கைல எஸ்.எம்.எஸ். அனுப்பறாராமா. யூத்து போசுக்கு என்னல்லாம் பாடு படுறாய்ங்கப்பா.
//
பாலா சார், பிரவு ட்ரஸ்ஸப் பாத்தீங்களா?? இவரும் யூத்தாமா..

வால்பையன் said...

//காதல் பற்றி அருண் அதிகமாய் பேசியது ஆச்சர்யமாயிருந்தது. //

ஏற்கனவே பத்திகிட்டு எரியுது, இதுல பெட்ரோல் ஊத்தனுமா!?

ஆரூரன் விசுவநாதன் said...

thanks prabha

ஈரோடு கதிர் said...

பிரபா...

உங்களைச் சந்தித்தது மிக அற்புதமான ஒன்று...

விஷாக்குக்கு என் அன்பைச் சொல்லுங்கள்...

இன்னும் எங்க பாப்பா நீங்கள் மற்றும் விஷாக் வந்த கதையை திரும்ப திரும்ப கேட்கிறது...

Menaga Sathia said...

விஷாக் குட்டி ரொம்ப அழகு

ILA (a) இளா said...

இப்படி ஈரோட்டுல சந்திப்பு வெச்சா மட்டும், வயிறு வாயெல்லாம் எனக்கு எரிய ஆரம்பிச்சுருது. நம்மூருல நம்மூர் மக்களோட சந்திக்கிறீங்க., நான் இங்கே வயிச்செரிச்சலோட பின்னூட்டம் போட வேண்டியிருக்கே

ILA (a) இளா said...

மேலே இருக்கிற பின்னூட்டம் பொறாமையால இல்லீங். ஆற்றாமைதான் காரணம்

செ.சரவணக்குமார் said...

நண்பர்களுடனான சந்திப்பை அருமையாக எழுதியுள்ளீர்கள்.

ஈரோடு பதிவர்களுக்கு வணக்கங்கள்.

விஷாக்கிற்கு எனது அன்பு.

Starjan (ஸ்டார்ஜன்) said...

அருமையான சந்திப்பு பிரபா.., மறக்க முடியாத அனுபவமாக இருந்திருக்கும் என்று நினைக்கிறேன். அனைவருக்கும் என்னுடைய வாழ்த்தை சொல்லிடுங்க பிரபா. அன்புக்குட்டி விஷாக்கை கேட்டதாக சொல்லவும்.

உங்கள் ஸ்டார்ஜன்.

சிநேகிதன் அக்பர் said...

வாழ்த்துகள் பாஸ்.

vasu balaji said...

இவிங்க சந்திப்புக்கு இரையான கோழிக்கு யாராச்சும் வருந்தராய்ங்களான்னு பார்த்தா..ஊஹூம். கோழிகளின் ஆன்மா சாந்தி அடைவதாக:(

மரா said...

நல்ல பகிர்வு.நட்பு நல்ல விசயம் பாஸ்.

Chitra said...

பதிவுலக நண்பர்களின் சந்திப்பை குறித்த அருமையான பதிவும் படங்களும்........

கலகலப்ரியா said...

மருமகப் புள்ளைக்கு ... திருஷ்டி பட்டுடும்ன்னு கதிர் படத்தையும் போட்டிருக்கிற ட்ரிக்கு நமக்கு தெரியாதாக்கூ...

குடுகுடுப்பை said...

போட்டோவெல்லாம் இப்படியா குளோஸ்ல எடுக்கிறது, கதிர் தலைல வெளிச்சம் அதிகமாயிருக்கு

பழமைபேசி said...

தமிழகத் தலைநகரை ஈரோடுக்கு மாத்தச் சொல்லி ஒரு இடுகை போடுங்க நண்பா!

ரோஸ்விக் said...

அந்த சாப்பாட்டுக்காகவாவது நான் அங்க ஒரு தடவை வாறேன் கதிர்....
:-)

ரோஸ்விக் said...

//பழமைபேசி said...
தமிழகத் தலைநகரை ஈரோடுக்கு மாத்தச் சொல்லி ஒரு இடுகை போடுங்க நண்பா!
///

அண்ணே உங்க வேண்டுகோளை கொஞ்சம் மாத்திக்கங்களே.... ஒரு கவிதை போட சொல்லிடுவோம்.... :-))) அது ஓகே-வா?

cheena (சீனா) said...

அன்பின் பிரபாகர்

அருமையான சந்திப்பு - ஈரோடு மறக்க இயலாத நண்பர்கள் நிறைந்த ஊர். படங்களுடன் கூடிய இடுகை அருமை.

நானும் சமீபத்தில் ஈரோடு சென்று வந்தேன். கார்த்திக், கதிர், மாதேஷ், நந்து, ரவி, அருண் ( தொலைபேசியில் பாலாசி ) என சக பதிவுலக நண்பர்களைக் க்ண்டு வந்தேன். மனம் மகிழ்ந்தது.

நன்று நன்று நல்வாழ்த்துகள் பிரபாகர்

ஆமா மதுர மதுரன்னு ஒண்ணு இருக்கு தெரியுமா - அடுத்த தடவ மரியாதயா இங்கே வரல - ஆமா சொல்லிப்புட்டேன்.

நட்புடன் சீனா

cheena (சீனா) said...

சொல்ல மறந்திட்டேனே

க்யூட் விஷாக்கிற்கு அன்பு முத்தங்கள் - அனபினைத் தெரிவிக்கவும்

நல்வாழ்த்துகள் விஷாக் பிரபாகர்
நட்புடன் சீனா

சத்ரியன் said...

பிரபா,

நம் ஈரோடு நண்பர்கள் அனைவரையும் நேரில் சந்தித்தது போன்றதொரு நெகிழ்வைக் கொடுத்தது உங்களின் இந்த பகிர்வு.

“பாலாசி”-யோட படத்தை யாரைக்கேட்டு நீக்கினீர்கள்.?

வலையுலகத் தலைவனிடம் புகார் கொடுக்கவிருக்கிறேன். வி வில் மீட்...!

சத்ரியன் said...

பிரபா,

விஷாக் அவர்களை சிங்கைக்கு அழைச்சிக்கிட்டு வாரதா சொல்லி ஏமாத்திட்டீங்க.

விரைவில் நாங்கள் சந்த்தித்துக்கொள்வோம் என நம்புகிறேன்.

சத்ரியன் said...

கதிர் அண்ணே, ஆ.வி. மாமா,

அப்படியே அந்த டாபா உணவகத்துல இன்னொரு தேதிய பதிவு செஞ்சி வெய்யிங்க. வந்துக்கிட்டே இருக்கேன். (நாட்டுக்கோழி 2 சேத்து சொல்லிடுங்க)

ஈரோடு கதிர் said...

|| ஈரோடு பதிவர்கள் சின்ன வயசுக்காரங்களா இருக்காங்களே||
அய்யா வானம்பாடியய்யா... நோட் திஸ் பாயிண்ட்... தேங்ஸ் ஆச்சி


||கதிர் அண்ணனை பார்த்துடுவோம்!||

வரும்போது ஒரு எதிர் இடுகையோட வரணும் பாரதி


||நானாவது கதிர பார்க்கும்போது வேற போஸ்ல படம் எடுக்க ட்ரை பண்றேன்! :)))||

சங்கர் இருக்கும் போது, ஒரு ஹீரோ உருவாகுறது தடுக்க முடியுமா என்ன?

||மறக்கவியலாத சந்திப்பாக, இனிமையான மாலையாக அது அமைந்தது...||

அதுக்கு, அதுவும் காரணம் தானே!!!

||அந்த சிவப்பு டி ஷர்ட் இஃகிஃகி. ஹய்ய்யோ ஹய்யோ. ஒரு கைல எஸ்.எம்.எஸ். அனுப்பறாராமா. யூத்து போசுக்கு என்னல்லாம் பாடு படுறாய்ங்கப்பா.||

பொறாறாறாறாறாறாறாம...!!!

||நடுவுல நான் போன் பேசினேன்.. அதை மறந்திட்டீங்க..?:)||

ஆமா... பிரவுக்கு வன்மையான கண்டனங்கள்


||இப்படி ஈரோட்டுல சந்திப்பு வெச்சா மட்டும், வயிறு வாயெல்லாம் எனக்கு எரிய ஆரம்பிச்சுருது. ||
இளா, அடுத்தவாட்டி பச்சாம்பாளைய பைபாசுல ஒரு பஞ்சாபில மீட் பண்ணிருவோம்


||ஈரோடு பதிவர்களுக்கு வணக்கங்கள்.||

நன்றி சரவணன்

||இவிங்க சந்திப்புக்கு இரையான கோழிக்கு யாராச்சும் வருந்தராய்ங்களான்னு பார்த்தா..ஊஹூம். கோழிகளின் ஆன்மா சாந்தி அடைவதாக:(||

சப்பான் மொழியில சொல்லுங்க உங்க இரங்ங்ங்ங்ங்களை

||மருமகப் புள்ளைக்கு ... திருஷ்டி பட்டுடும்ன்னு கதிர் படத்தையும் போட்டிருக்கிற ட்ரிக்கு நமக்கு தெரியாதாக்கூ...||

பிரவுண்ணே, உம்பட தங்கச்சி ரொம்ப லொல்லு பண்ணுது, அப்புறம் இன்னும் அழகா இருக்கிற சில போட்டோவ போட்ருவேன்... கண்ணு பத்திரம்

||போட்டோவெல்லாம் இப்படியா குளோஸ்ல எடுக்கிறது, கதிர் தலைல வெளிச்சம் அதிகமாயிருக்கு||

அது ஒளி வட்டம்னே


||தமிழகத் தலைநகரை ஈரோடுக்கு மாத்தச் சொல்லி ஒரு இடுகை போடுங்க நண்பா!||

அடியோட வெட்டிச் சாய்க்றீங்களே மாப்பு

||அந்த சாப்பாட்டுக்காகவாவது நான் அங்க ஒரு தடவை வாறேன் கதிர்....||

வாங்க..வாங்க..
இஃகிஃகி... பில்லு கொடுத்தது பிரவுதான்னு சொல்லலையா?
||நானும் சமீபத்தில் ஈரோடு சென்று வந்தேன். கார்த்திக், கதிர், மாதேஷ், நந்து, ரவி, அருண் ( தொலைபேசியில் பாலாசி ) என சக பதிவுலக நண்பர்களைக் க்ண்டு வந்தேன். மனம் மகிழ்ந்தது.||

இன்ப அதிர்ச்சி உங்கள் வருகை, மிகுந்த மகிழ்ச்சியும் கூட

||“பாலாசி”-யோட படத்தை யாரைக்கேட்டு நீக்கினீர்கள்.?||
அட அந்தப் படத்த பார்த்துட்டு ஒரே ஃபிகர்ங்க தொல்லையாம், அதனாலதான்

||கதிர் அண்ணே, ஆ.வி. மாமா||
ஹைய்... ஆ.வி.... அங்கிளா!!!??

||(நாட்டுக்கோழி 2 சேத்து சொல்லிடுங்க)||
வாடி.. வா... உமக்கு பூனைக் கறிதாண்டியோ

சத்ரியன் said...

//|“பாலாசி”-யோட படத்தை யாரைக்கேட்டு நீக்கினீர்கள்.?||
அட அந்தப் படத்த பார்த்துட்டு ஒரே ஃபிகர்ங்க தொல்லையாம், அதனாலதான்//

ஒரு ஃபிகர் தொல்லைக்கே போட்டோவ நீக்கன மொத ஆளு பாலாசி தான்யா..!
நேர்ல வந்து வெச்சிக்கறேன்டி..!

சத்ரியன் said...

//||கதிர் அண்ணே, ஆ.வி. மாமா||
ஹைய்... ஆ.வி.... அங்கிளா!!!??//

அது எனக்கு மட்டுந்தான். ஆ.வி.கதிருக்கு மாமான்னு சொல்லலியே..!

சத்ரியன் said...

/(நாட்டுக்கோழி 2 சேத்து சொல்லிடுங்க)/
வாடி.. வா... உமக்கு பூனைக் கறிதாண்டியோ..//

போங்கண்ணே! எப்பவுமே குறும்பு நீங்க. எனக்கு மட்டும் என்ன தனியாவா வாங்கிடப் போறீங்க.?

*இயற்கை ராஜி* said...

//கதிர் ஊருக்கு வரும்போது கண்டிப்பாய் பார்த்தே ஆகவேண்டும் என தினந்தோறும் மிரட்டல் விட்டுக்கொண்டிருந்ததால்//



ம்ம்... இப்பிடி நாலுபேரு வந்து பார்த்தாதானே அந்த டிசர்டப் போட்டுகிட்டு யூத் பில்டப் குடுக்கலாம்.. அதுக்குத் தானுங்க அந்த மெரட்டல்

*இயற்கை ராஜி* said...

மௌனத்தை கசியவிடும் கதிர்..
//


அது மட்டுமாங்க.. தீய பூக்க வைக்கறாரு.. பச்சத் தண்ணிய எரியவிடராரு.. ஹ்ம்ம்.. இன்னும் என்னல்லாம் நடக்குமோ

*இயற்கை ராஜி* said...

யாருக்காவது திருடன் அட்ரஸ் தெரிஞ்சா குடுங்க பிளீஸ்... அந்த செவப்புச் சட்டைய திருடிட்டு போகச் சொல்லணும்..எத்தனை பேருக்கு கண்ணு போகுமோ அதப் பார்த்து

ஸ்ரீ.கிருஷ்ணா said...

சார் ஊருக்கு வந்ததை சொல்லவே இல்ல ....

வசூல்ராஜாmbbs said...

அதெல்லாம் சரி சாப்பிட்டதர்க்கு யாரு பணம் கொடுத்தது....சொல்லிருந்தால் நானும் வந்திருப்பேன்...

 

©2009 ”வாழ்க்கை வாழ்வதற்கே” | Template Blue by TNB