சென்னையும், நானும் அவரும்...

|

அலுவலக வேலையினை முடித்து அவரமாய்க் கிளம்பி சென்றால் ஏர் இந்தியா விமானம் இரண்டு மணிநேரத்தாமதம். ஒரு வழியாய் சென்னை சென்றால், வரவேண்டிய லக்கேஜ் வராமலேயே நெடுநேரம் எல்லோரும் காத்திருக்க, வெகு தாமதாய்த் தான் தெரிந்தது நாளைதான் வருமென. கொதிப்பு, கோபம், பரபரப்பில் உள்ளிருந்தும் தொடர்புகொள்ள இயலாமல், லக்கேஜ் எண்ணை புகார் கொடுத்துவிட்டு ஒரு வழியாய் வெளியே வந்தால், நண்பன் காத்திருந்து வெறுத்துப்போய் சென்றிருந்தான். அருகிலிருந்தவர் செல்பேசியை நாகரீகப் பிச்சையில் வாங்கி தொடர்பு கொள்ள அவன் எடுக்கவே இல்லை. (பிறகு அவனது மெயிலைப் பார்த்துதான் தெரிந்தது, அங்குதான் ஒரு பெஞ்சில் படுத்து உறங்கியிருக்கிறான் என).

’அவர்’ என்னை எந்த நேரம் என்றாலும் அழையுங்கள் எனச் சொல்லியிருந்ததால் மணி நான்கை நெருங்கியிருந்தாலும் அழைக்க, உடன் எடுத்து பாம்பு பட்டத்தோடு சந்தோஷ வரவேற்பு. தாமதமான காரணம் கேட்க, விவரங்களைச் சொல்ல, எங்கு தங்க எண்ணம் எனக்கேட்க, நண்பன் வீட்டுக்கு என சொன்னேன். முதலில் ஓய்வெடுங்கள், லக்கேஜ் காலையில் பார்த்துக்கொள்ளலாம் எனச் சொல்லி, விவரம் கேட்க விமான நிலையத்தொடர்பு எண்ணை வாங்கிகொண்டார்.

அடுத்து மற்றொரு நண்பன் வீட்டுக்கு அழைத்து வந்த தகவல் சொல்லி, கார் ஒன்று பேசி ஒரு வழியாய் இரவு பன்னிரண்டுக்கு பதிலாய் நாலரைக்கு சேர்ந்தேன். நெடுநாட்கள் கழித்து சந்திப்பதால் நிறைய பேசி அளவளாவினோம். தூக்கமில்லாமல் கடமைக்கு படுத்து எழுந்து அணிவதற்கான துணிகளும் வராது போன லக்கேஜில் இருந்ததால் கல்லூரியில் படிக்கும் மருமகனை அழைத்துக் கொண்டு ஆட்டோவில் சரவணா ஸ்டோர்ஸ் சென்றோம். அங்காடித்தெரு பாதிப்பில் அங்கு செல்ல வேண்டும், துணியினை எடுக்கவேண்டும் போல் எண்ணம் இருந்ததால் செயலில்.

’அவர்’ எனக்கு அழைத்து லக்கேஜ் காலை ஏர் இந்தியாவில் வரயிருப்பதாகவும், இன்னும் ஒரு மணிநேரம் கழித்து சென்றால் வாங்கிக்கொள்ளலாம் என சொன்னார். நடேசன் தெருவில் இறக்கிவிட அங்கிருந்து நடந்தது செல்கையில் சரவணா பாத்திரக்கடை பின்புறத்தில் சென்றோம்.சினிமாவில் பார்த்த ஏறக்குறைய தொண்ணூறு சதம் ஒத்துப்போன தங்கும் இடம், மற்றும் அவர்கள் புழங்கும் இடம் மனதிற்கு நெருடலாய் இருந்தது.

காலை வேளை, ரொம்ப பரபரப்பில்லாமல் இருந்தது. வரப்போகும் ஒரு நெரிசலான நாளை எதிர்கொள்ள தங்களை ஆயத்தப்படுத்திக் கொண்டிருந்தார்கள். ஒரு பேன்ட், டி-ஷர்ட் மற்றும் பெர்ஃயூம் வாங்க விசாரித்து மாடியேற, சரிவர பதில் சொல்லவில்லை என்றாலும் ஏனோ அவர்களின் மேல் ஏனோ கோபம் வரவில்லை.

டி-ஷர்ட் வாங்க விசாரிக்கும்போது, நமது எதிர்ப் பார்ப்பை சொல்ல கடைசியாய் இருந்த இடத்தைக் காட்டினார்கள். அதிகம் எடுத்து காட்டச்சொல்ல மனமில்லாமல் அளவை சொல்லி, கண்களாலேயே பார்த்து இரண்டினை எடுத்து அதில் ஒன்றினை சட்டென எடுத்துக்கொள்ள, எடுத்துக் காண்பித்த பையனுக்கு வியப்பு. அதேபோல்தான் பேண்ட் வாங்குமிடத்திலும்.

பெர்ஃயூம் வாங்குபோதும் அங்கிருந்த ஒரு பெண்ணிடம் நல்லதாய் ஒன்று கொடுங்கள் என சொல்ல அவர் கொடுத்ததை மறுபேச்சில்லாமல் வாங்கிக்கொள்ள(வழக்கமாய் உபயோகிப்பதெல்லாம் லக்கேஜில் இருக்கிறது) அவருக்கு மெலிதாய் வெட்கச்சிரிப்போடு ஆச்சர்யம். உடை மாற்றுவது எங்கே எனக்கேட்க, பேஸ்மெண்டில் என சொல்ல, அங்கு சென்றோம்.

இருந்த ஒரே அறைக்குள் மேக்கப் செய்துகொண்டு பணிக்கு தயாராகும் சிறுவர்கள்(?). தலையை ரொம்ப நேரம் சீவி அழகு பார்த்துக்கொண்டு விதவிதமாய் தயாராக, உள்ளே சென்று தாழிட்டுக்கொண்டு உடை மாற்ற கொஞ்சம் நேரம் எடுத்துக்கொண்டேன். இருக்கும் ஒரே கண்ணாடியைப் பார்க்க அவசரம், பொறுமையின்றி கதவை தட்ட, வெளியே தலை வாரிக்கொள்ள ஆர்வமாய் இன்னும் சிலர். எல்லாம் பசங்கள்தானே என திறந்து வைத்தே உடைகளை மாற்றிக்கொண்டு, ம்....சூப்பர் என தலைவாரிக்கொண்டிருந்த ஒரு பையனிடம் சொல்லி சிநேகிதப்பார்வையோடு வந்தேன். அவர்களிடம் தான் எத்தனைக் கனவுகள்?

’அவர்’ லக்கேஜ் வந்து விட்டதாய் விசாரித்து சொல்ல, அங்கிருந்து நேராய் மின்சார ரயிலில் பயணித்து திரிசூலம். தங்கியிருந்த மவுண்ட் ஸ்டேஷனை கடக்கும்போது மனதிற்குள் பூச்சி பறந்தது. கண்ணில்லா பிச்சைக்காரர் அழகாய் 'புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே' என பாடி ஆழ்மனதுள் தாலாட்ட, மகிழ்ந்து அவரிடம் பணம் கொடுத்தேன்.பக்கத்தில் இருந்தவர் என்னை ஒரு மாதிரியாய் பார்த்தார். இன்னொருவர் ஆர்மோனியப் பெட்டியை அழகாய் கையாண்டு கணீர் குரலில் பாட, வசூலுக்கு ஒரு சிறுமி. முன்பு கொடுத்த அளவிற்கு கொடுக்க மனமில்லை, சிறுமியை வைத்து பிச்சை எடுப்பதாலோ? ஏழு வருடத்துக்குப்பின் மின்சார இரயில் பயணம், கொஞ்சம் வித்தியாசமாய் இருந்தது.

ஏர்போர்ட் வேலை நடந்து கொண்டிருப்பதால் மிகவும் சிரமமாய் இருந்தது. நெரிசல், ஆயினும் இன்னும் இரு வருடத்திற்குப்பின் சரியாகிவிடுமே என சமாதானம் சொல்லி, உள்ளே சென்று வந்திருந்த லக்கேஜினை ஆயிரத்தெட்டு சரிபார்த்தலுக்குப்பின் ஓரு வழியாய் வாங்கி வந்தேன். மருமகனிடம் கொடுத்து அனுப்பிவிட்டு அங்கிருந்து சென்னை அலுவலகம் சென்று எல்லோரையும் சந்தித்து, மதிய உணவுக்கு வெளியே சென்று அன்றைய பொழுதை மிக சந்தோஷமாய் கழித்தேன். மாலை எக்மோர் செல்லும் கம்பனி பஸ்சிலேயே செல்லும்போது சென்னையின் நெரிசலான அந்த மாலையினை ஆறு வருடங்களுக்குப்பின் சந்திக்க, திரும்ப சென்னைக்கு வரலாமென்றிருந்த எண்ணம் நீர்த்துப்போயிற்று.

அதற்குள் அவரின் அழைப்பு, எப்படி வரவேண்டும் என்றெல்லாம் அறிவுறுத்தல். பக்கத்தில் பேசிக்கொண்டு வந்த சென்னை அலுவலகத்தில் வேலைபார்க்கும் தோழியிடம் கொடுத்து பேருந்து வரும் விவரங்களை சொல்லச் சொன்னேன். அவரை சந்திக்கும் நேரம் வந்துவிட்டதால் அவரைப்பற்றிய எண்ணங்கள் என்னை முழுதாய் வியாபிக்க ஆரம்பித்தது.

அவரின், அவரின் எழுத்தின் மேல்தான் எனக்கு எத்தனை மரியாதை, காதல்?... அன்பாய் அறிவுறுத்தியும், ஆதரவாய் தோள்கொடுத்தும், உரிமையாய் தட்டி தவறுகளை சுட்டிக்காட்டியும்... அப்பப்பா, சொல்ல வார்த்தைகள் இல்லை. அப்படிப்பட்ட ஆதர்ஷ நாயகரை நேரில் சந்திக்கப்போகிறோமே எனும் பரபரப்பு, இனம் புரியா தவிப்பு என பல்வேறு எண்ணங்களால் ஆட்பட்டிருந்தேன்.

ஸ்பென்சர் தாண்டி இறங்கி, வந்த ஒரு ஆட்டோவைப் பிடித்து அவரின் சென்ட்ரல் அலுவலகம் அருகே வெளியே தவிப்போடு நின்றிருந்தேன். அதோ தொலைவில் வருவது அவரா? யோசிக்க, ஆஹா, அவரே தான். சராசரி உயரத்தில் நிறைய முடியுடன்... என்ன சொல்ல, கடவுளைக் கண்ட பரவசம், ஆரத்தழுவிக்கொண்டோம். ஆஹா, யூத் மாதிரியில்லை, யூத்தேதான் என நம்மைப் பார்த்து சொல்ல, தும்ம நேர்ந்தது. அருகிலிருந்த கடையில் குளிர்பானம் மற்றும் ஐஸ் மோர் பாக்கெட்டுகள் வாங்கிக்கொண்டு அதே ஆட்டோவில் மெரீனா பீச் சென்றோம்.

இனிமையான ஒரு மணிநேரம். என்ன சொல்ல, சிஷ்யனாய் அவர் சொல்வதை மெய்மறந்து கேட்க, என் வாழ்வின் மிகவும் சிறப்பான சந்தோஷமான தருணம் அது. நிறைய பேசினோம். நேரமானதால் திரும்ப ஆட்டோ பிடித்து எக்மோர் சென்று அங்கிருந்த ஒரு ஓட்டலில் இரவு உணவு முடித்து என்னை ஆட்டோவில் அனுப்பி சென்றார். (ஆட்டோ அனுபவங்கள் அடுத்த இடுகையில்)

அவர் என் ஆசான் வானம்பாடிகள் அய்யா! திருப்பதி சென்று பாலாஜியை தரிசித்த உணர்வு சென்னையில் என் அய்யாவை சந்தித்ததில் கிடைத்தது. அந்த அற்புத மனிதரை ஆசானாய், நண்பராய், வழிகாட்டியாய் தந்த இந்த வலையுலகிற்கு என் நன்றி சொல்லி, இன்று போல் எங்களின் நட்பு இறுதிவரை இருக்க எல்லாம் வல்ல இறையவனை வேண்டுகிறேன்..

முடியில்லை என பின்னூட்டத்தில் கும்முபவர்களுக்காக இதோ அய்யாவின் போட்டோவும் அவர் எடுக்கச் சொன்ன இன்னொரு போட்டோவும் மற்றும் அன்றிருந்த நானும்...

43 : பேர் படிச்சிட்டு சொல்றாங்க...:

சத்ரியன் said...

படிச்சிட்டு வந்துடறேன் சாமீ!

சத்ரியன் said...

மொத பின்னூட்டமா படிச்சிட்டு வாரேன்னு சொன்னேனே, அது எதுக்குன்னா நல்லா கேட்டுக்குங்க.

மகா ஜனங்களே,

ஜூன் 6 -ஆம் தேதிக்கும், 10 -ஆம் தேதிக்கும் எத்தனை நாள் இடைவெளி இருக்குன்னு ஒருமுறை கணக்கு போட்டு பாத்துக்குங்க.

ஏன்னா, ஜூன் 6-ஆந்தேதி தற்காலிகமா வலையுலகத்திற்கு விடுமுறை குடுக்கறதா ஒரு மானஸ்தன் பதிவு ஒன்னு போட்டிருந்தார்.

அந்த பதிவத்தேடி படிச்சிட்டு, அத எழுதின “மானஸ்தனை” இப்ப தேடிக்கிட்டிருக்கேன். உங்க கண்ல தென்பட்டார்னா நான் தேடிக்கிட்டிருக்கிற விவரத்தை சொல்லி அனுப்புங்க.

சத்ரியன் said...

//கண்களாலேயே பார்த்து இரண்டினை எடுத்து அதில் ஒன்றினை சட்டென எடுத்துக்கொள்ள..//

இது என்னைய்யா விசித்திரமா இருக்கு! நாங்கெல்லாம் வாயாலயா பாக்குறோம். நல்லா சொல்றாய்ங்க வெவரம்.

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

என்ன பிரதர்.. சொல்லவேயில்லை..
முதல்லையே சொல்லியிருந்தா..உதவி கேட்டிருப்பேனே..

ஆமா சார்..வானம்பாடிகள் சார்கிட்ட, ரெண்டு ரயில்பொட்டி வாங்கிட்டு வரனுமுனு ரொம்ப நாளா ஆசை..ஹி..ஹி

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

ஜூன் 6 -ஆம் தேதிக்கும், 10 -ஆம் தேதிக்கும் எத்தனை நாள் இடைவெளி இருக்குன்னு ஒருமுறை கணக்கு போட்டு பாத்துக்குங்க.
//

ஏண்ணே..காலையில ஒண்ணு..மாலையில ஒண்ணுனு பதிவ போடுபவருக்கு..

4 நாள் என்பது பெரிய இடைவெளிதான் ..ஹி..ஹி

பிரபாகர் said...

கண்ணா!

ஏற்கனவே எழுதாம இருந்த 10 நாள் சேர்த்துக்கோ சாமி. அப்புறம் எழுதனும்னு பல நல்ல உள்ளங்களின் வற்புறுத்தல். அப்புறம் ஒரு நாளுன்னாலும் விடுமுறைதானே?

பிரபாகர்...

T.V.ராதாகிருஷ்ணன் said...

உங்க நட்பு மேன் மேலும் வளர என் அன்பு வாழ்த்துக்கள்...

பிரபாகர் said...

// பட்டாபட்டி.. said...
ஜூன் 6 -ஆம் தேதிக்கும், 10 -ஆம் தேதிக்கும் எத்தனை நாள் இடைவெளி இருக்குன்னு ஒருமுறை கணக்கு போட்டு பாத்துக்குங்க.
//

ஏண்ணே..காலையில ஒண்ணு..மாலையில ஒண்ணுனு பதிவ போடுபவருக்கு..

4 நாள் என்பது பெரிய இடைவெளிதான் ..ஹி..ஹி
//
பட்டா, எழுதியே ஆகனும்னு கண்ணீர் விட்டு கதறிட்டு(கனவுல ஹிஹி...) இப்போ கவுத்து விடுறீங்களே?

பிரபாகர்...

பிரபாகர் said...

//Sangkavi said...
பங்காளி....

உங்க நட்பு மேன் மேலும் வளர என் அன்பு வாழ்த்துக்கள்...
//
நன்றி பங்காளி...

பிரபாகர் said...

//T.V.ராதாகிருஷ்ணன் said...
உங்க நட்பு மேன் மேலும் வளர என் அன்பு வாழ்த்துக்கள்...
//
நன்றிங்கய்யா! உங்களை வரும்போது சந்தித்து ஆச்ர்வாதம் வாங்க எண்ணியிருந்தேன். சூழல், அவசரமாய் திரும்பி வரும்படி ஆயிற்று. அன்பிற்கு நன்றிங்கய்யா!

பிரபாகர்...

யூர்கன் க்ருகியர் said...

Super ..Super..Super!

Chitra said...

அவர் என் ஆசான் வானபாடிகள் அய்யா! திருப்பதி சென்று பாலாஜியை தரிசித்த உணர்வு சென்னையில் என் பாலாஜி அய்யாவை சந்தித்ததில் கிடைத்தது. அந்த அற்புத மனிதரை ஆசானாய், நண்பராய், வழிகாட்டியாய் தந்த இந்த வலையுலகிற்கு என் நன்றி சொல்லி, இன்று போல் எங்களின் நட்பு இறுதிவரை இருக்க எல்லாம் வல்ல இறையவனை வேண்டுகிறேன்...

....... Amen! Amen! Amen!

Paleo God said...

நல்ல பகிர்வு சேம் ப்ளட்:))))

--
(ஆட்டோ அனுபவங்கள் அடுத்த இடுகையில்)

ஹி ஹி ! வெய்ட்டிங்.

vasu balaji said...

// கடவுளைக் கண்ட பரவசம், ஆரத்தழுவிக்கொண்டோம்.//

தோடா. 50 அடி தூரத்துல வரும்போதே ஜவுளிக்கடை சூட்டிங் பொம்மை மாதிரி அணைக்கறா மாதிரி கை விரிக்கறதும், டக்குன்னு கை குலுக்க நீட்றது,அப்புறம் விரிக்கிறது நீட்றதுல கிட்ட வந்ததும் கையோட சேர்த்து அமுக்க ட்ரை பண்ணி முடியாம உங்க குந்தாணி தொப்பையை சுத்திப் புடிக்க கேவலமா ட்ரை பண்ணதுக்கு பேரு ஆரத்தழுவலாங்ணா?

//ஆஹா, யூத் மாதிரியில்லை, யூத்தேதான் என நம்மைப் பார்த்து சொல்ல, தும்ம நேர்ந்தது.//

முக்கால் இருட்டு. மூஞ்சியத்தான் பார்த்தேன். அடுத்த நாள் காலையில பார்க்கிறப்பதான் பின்மண்டை, கிருதா பக்கம் எல்லாம் வெள்ளை முடிய டை போட்டு மறைச்சது தெரிஞ்சது.

அப்புறம் எங்கூரு ஆட்டோக்காரனுவள பத்தி தெரியாம, அல்டாப்பா நான் குடுக்குற காச சந்தோஷமா வாங்கிப்பாரு பாருங்கன்னு அலட்டிகிட்டு, சந்தோஷமான்னு கேக்க வேற கேட்டு, அவன் இன்னும் 20ரூ குடுங்கன்னு அவன் மதிப்ப காப்பாத்திக்கிட்டதையும், சாய்ச்சுப்புட்டான்யான்னு நீங்க அசடு வழிஞ்சதையும் சொல்லியிருக்கலாமே:))

Jokes apart

It was a very nice evening and meeting Praba. Thank you so much for you luv and affection. அது எப்புடிய்யா எவ்வளவு அடிச்சாலும் வலிக்காதமாதிரியே நடிக்கறது:))

செ.சரவணக்குமார் said...

பாலா சாருடனான சந்திப்பை அழகாக எழுதியிருக்கிறீர்கள் நண்பா. படிக்கும்போதே மனசு மகிழ்ச்சியில் துள்ளுகிறது.

பாலா சார் போன்ற நல்ல உள்ளங்கள் ஆசான்களாக அமைவது வரம். வாழ்த்துகள்.

ஃபோட்டோ போட்டிருக்கலாமே பிரபா.

க.பாலாசி said...

அடடா... நீங்களும் பாக்யசாலிதான்...

//நிறைய முடியுடன்...//

இது மட்டும்தான் எங்கயோ இடிக்குது....

//தோடா. 50 அடி தூரத்துல வரும்போதே ஜவுளிக்கடை சூட்டிங் பொம்மை மாதிரி அணைக்கறா மாதிரி கை விரிக்கறதும், டக்குன்னு கை குலுக்க நீட்றது,அப்புறம் விரிக்கிறது நீட்றதுல கிட்ட வந்ததும் கையோட சேர்த்து அமுக்க ட்ரை பண்ணி முடியாம உங்க குந்தாணி தொப்பையை சுத்திப் புடிக்க கேவலமா ட்ரை பண்ணதுக்கு பேரு ஆரத்தழுவலாங்ணா?//

அட... எங்கண்ணன் என்னமா ஃபீல் பண்ணி எழுதியிருக்காரு...அவரப்போயீ...... (உண்மையல்லாம் வெளிய சொல்லக்கூடாது...)

கலகலப்ரியா said...

||சராசரி உயரத்தில்||

ஏனுங்கண்ணா.. உங்க ஊர்ல அதுக்குப் பேரு சராஆஆசரி ஒசரமா... ம்க்கும்... என்னதான் ஆசான்னாலும் இம்பூட்டுப் பொய் ஆவாதுண்ணா... அடி ஆத்தீ.. அரைப்பூசினிக்காய சோத்தில மறைக்கிறதுன்னா இதுதானா...

||நிறைய முடியுடன்... ||

அண்ணா... நான் உசிரோட இருக்கணுமா வேணாமா... என்ன கொடுமைடா சாமீ... நிறைய்ய்ய்ய முடின்னா... அப்போ நம்ம உசிலமணி ஐய்யாவுக்கு தலை நிறைய்ய்ய முடின்னு அர்த்தமா...

||என்ன சொல்ல,||

என்னத்த சொல்றது... அதுதான் சொல்லியாச்சே.. கொடுமை கொடுமைன்னு... அவ்வ்வ்வ்..

||கடவுளைக் கண்ட பரவசம்,||

என்ன குருவாயூரப்பனா...

||ஆரத்தழுவிக்கொண்டோம். ஆஹா, யூத் மாதிரியில்லை, யூத்தேதான் என நம்மைப் பார்த்து சொல்ல, தும்ம நேர்ந்தது. ||

ஏன்ணா... அவங்க முடி மூக்கில பாய்ஞ்சுடுத்தா.. இதெல்லாம் ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப டூ மச்சு... ஆபீஸ்ல இருந்து வந்து வச்சுக்கறேன் கச்சேரிய...

வாஆஆஆனம்பாஆஆஆடி... என்ன ஜூஸ் வாங்கிக் கொடுத்தீங்க எங்கண்ணாவுக்கு... ஆத்தீ... செய்வினை வச்சிட்டாங்கடி... மந்திரிச்சு விட்ட கோழிமாதிரி ஆய்ட்டாங்களே... அவ்வ்வ்வ்வ்...

கோவி.கண்ணன் said...

உங்கள் நட்பு தொடர நல்வாழ்த்துகள்

vasu balaji said...

/ஏன்ணா... அவங்க முடி மூக்கில பாய்ஞ்சுடுத்தா../

முடி இருக்குன்னு ஒத்துக்கிட்ட இந்த நேர்மை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு:))

கலகலப்ரியா said...

||வானம்பாடிகள் said...

/ஏன்ணா... அவங்க முடி மூக்கில பாய்ஞ்சுடுத்தா../

முடி இருக்குன்னு ஒத்துக்கிட்ட இந்த நேர்மை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு:))||

அண்ணாவே இல்லாத முடியப்பத்தி இவ்ளோ நீளத்துக்கு எழுதினா... நாம எழுத மாட்டோமா... எங்களுக்கும் கற்பனை வளம் ஜாஸ்திதானுங்கோ...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//ஏன்னா, ஜூன் 6-ஆந்தேதி தற்காலிகமா வலையுலகத்திற்கு விடுமுறை குடுக்கறதா ஒரு மானஸ்தன் பதிவு ஒன்னு போட்டிருந்தார்.

அந்த பதிவத்தேடி படிச்சிட்டு, அத எழுதின “மானஸ்தனை” இப்ப தேடிக்கிட்டிருக்கேன். உங்க கண்ல தென்பட்டார்னா நான் தேடிக்கிட்டிருக்கிற விவரத்தை சொல்லி அனுப்புங்க//

அந்த ஆளைத்தான் நான் தேடிட்டு இருக்கேன். அவரு என் கைல கிடைச்சார்ந்னா அவ்ளோதான்

எறும்பு said...

அண்ணாச்சி, அய்யா ஆபிசில் இருந்து உங்களிடம் பேசியதில் சந்தோசம்..

:)

எறும்பு said...

மீண்டும் வரும்போது சந்திக்க ஆவல்..

settaikkaran said...

ஐயாவுக்கும் அவரது ஆதர்ச சீடருக்கும் வாழ்த்துக்கள்!

ஈரோடு கதிர் said...

என் இனிய பிரவு...

அருமை..

மிக அருமை...

மிக மிக அருமை...

அடுத்து முறை பாக்குறப்போ வச்சிக்கிரேண்டி கச்சேரிய!!!

(ங்கொய்யா இதே மாதிரி ஈரோடு வந்ததுக்கும் டூப் வுட்டா, கடன் வாங்கியாவது சிங்கப்பூர் வந்து மொட்டைத் தலையில குட்டிப்புடிவேன்)

சிநேகிதன் அக்பர் said...

பாலா சார்தானா அது. நட்புக்கு மரியாதை!

க ரா said...

//ஸ்பென்சர் தாண்டி இறங்கி, வந்த ஒரு ஆட்டோவைப் பிடித்து அவரின் சென்ட்ரல் அலுவலகம் அருகே வெளியே தவிப்போடு நின்றிருந்தேன். அதோ தொலைவில் வருவது அவரா? யோசிக்க, ஆஹா, அவரே தான். சராசரி உயரத்தில் நிறைய முடியுடன்... என்ன சொல்ல//
இப்பவே தெரிஞ்சிருச்சி நீங்க ஐயாவதான் சொல்லப்போறீங்க. இந்த முடிய பத்தி சொல்லேன்னா உங்களுக்கு பொழுது போகதே :-).

பழமைபேசி said...

ஆகா... நாந்தான் உங்க அனுபவங்கள்ல இருந்து பின் தங்கியே இருக்கேனா??

Unknown said...

இடுகை ரெடியாகிட்டே இருக்கு...

beer mohamed said...

விமானத்தில் செல்பவரா நீங்கள் ? எச்சரிக்கை வீடியோ
http://athiradenews.blogspot.com/2010/06/blog-post_10.html

ஜோதிஜி said...

உங்கள் இருவரின் அன்பு தொடரட்டும்.
ஆளுமை வாழ்க்கை முழுவதும் நல்ல புரிதல்களை வழங்கட்டும்.

மங்குனி அமைச்சர் said...

(பிறகு அவனது மெயிலைப் பார்த்துதான் தெரிந்தது, அங்குதான் ஒரு பெஞ்சில் படுத்து உறங்கியிருக்கிறான் என).
///

ஹா,ஹா ,ஹா

CS. Mohan Kumar said...

பதிவையும் பல பின்னூட்டங்களையும் ரசித்தேன். சென்னையில் இருந்தும் இன்னும் " அவரை" சந்திக்கலை

பிரபாகர் said...

//
யூர்கன் க்ருகியர் said...
Super ..Super..Super!
//
நன்றிங்க!

//
Chitra said...
அவர் என் ஆசான் வானபாடிகள் அய்யா! திருப்பதி சென்று பாலாஜியை தரிசித்த உணர்வு சென்னையில் என் பாலாஜி அய்யாவை சந்தித்ததில் கிடைத்தது. அந்த அற்புத மனிதரை ஆசானாய், நண்பராய், வழிகாட்டியாய் தந்த இந்த வலையுலகிற்கு என் நன்றி சொல்லி, இன்று போல் எங்களின் நட்பு இறுதிவரை இருக்க எல்லாம் வல்ல இறையவனை வேண்டுகிறேன்...

....... Amen! Amen! Amen!
//
நன்றிங்க சித்ரா!

//
【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...
நல்ல பகிர்வு சேம் ப்ளட்:))))

--
(ஆட்டோ அனுபவங்கள் அடுத்த இடுகையில்)

ஹி ஹி ! வெய்ட்டிங்.
//
நன்றி சங்கர், கிளப்பிடுவோம்...

பிரபாகர் said...

//
வானம்பாடிகள் said...
// கடவுளைக் கண்ட பரவசம், ஆரத்தழுவிக்கொண்டோம்.//

தோடா. 50 அடி தூரத்துல வரும்போதே ஜவுளிக்கடை சூட்டிங் பொம்மை மாதிரி அணைக்கறா மாதிரி கை விரிக்கறதும், டக்குன்னு கை குலுக்க நீட்றது,அப்புறம் விரிக்கிறது நீட்றதுல கிட்ட வந்ததும் கையோட சேர்த்து அமுக்க ட்ரை பண்ணி முடியாம உங்க குந்தாணி தொப்பையை சுத்திப் புடிக்க கேவலமா ட்ரை பண்ணதுக்கு பேரு ஆரத்தழுவலாங்ணா?

//ஆஹா, யூத் மாதிரியில்லை, யூத்தேதான் என நம்மைப் பார்த்து சொல்ல, தும்ம நேர்ந்தது.//

முக்கால் இருட்டு. மூஞ்சியத்தான் பார்த்தேன். அடுத்த நாள் காலையில பார்க்கிறப்பதான் பின்மண்டை, கிருதா பக்கம் எல்லாம் வெள்ளை முடிய டை போட்டு மறைச்சது தெரிஞ்சது.

அப்புறம் எங்கூரு ஆட்டோக்காரனுவள பத்தி தெரியாம, அல்டாப்பா நான் குடுக்குற காச சந்தோஷமா வாங்கிப்பாரு பாருங்கன்னு அலட்டிகிட்டு, சந்தோஷமான்னு கேக்க வேற கேட்டு, அவன் இன்னும் 20ரூ குடுங்கன்னு அவன் மதிப்ப காப்பாத்திக்கிட்டதையும், சாய்ச்சுப்புட்டான்யான்னு நீங்க அசடு வழிஞ்சதையும் சொல்லியிருக்கலாமே:))

Jokes apart

It was a very nice evening and meeting Praba. Thank you so much for you luv and affection. அது எப்புடிய்யா எவ்வளவு அடிச்சாலும் வலிக்காதமாதிரியே நடிக்கறது:))
//
நன்றிங்கய்யா! எல்லாம் என் உள்மன வார்த்தைகள் என்பது உங்களுக்குத்தெரியும்...

//
செ.சரவணக்குமார் said...
பாலா சாருடனான சந்திப்பை அழகாக எழுதியிருக்கிறீர்கள் நண்பா. படிக்கும்போதே மனசு மகிழ்ச்சியில் துள்ளுகிறது.

பாலா சார் போன்ற நல்ல உள்ளங்கள் ஆசான்களாக அமைவது வரம். வாழ்த்துகள்.

ஃபோட்டோ போட்டிருக்கலாமே பிரபா.
//
உங்களுக்காக போட்டிருக்கிறேன் நண்பா!

பிரபாகர் said...

//
க.பாலாசி said...
அடடா... நீங்களும் பாக்யசாலிதான்...

//நிறைய முடியுடன்...//

இது மட்டும்தான் எங்கயோ இடிக்குது....

//தோடா. 50 அடி தூரத்துல வரும்போதே ஜவுளிக்கடை சூட்டிங் பொம்மை மாதிரி அணைக்கறா மாதிரி கை விரிக்கறதும், டக்குன்னு கை குலுக்க நீட்றது,அப்புறம் விரிக்கிறது நீட்றதுல கிட்ட வந்ததும் கையோட சேர்த்து அமுக்க ட்ரை பண்ணி முடியாம உங்க குந்தாணி தொப்பையை சுத்திப் புடிக்க கேவலமா ட்ரை பண்ணதுக்கு பேரு ஆரத்தழுவலாங்ணா?//

அட... எங்கண்ணன் என்னமா ஃபீல் பண்ணி எழுதியிருக்காரு...அவரப்போயீ...... (உண்மையல்லாம் வெளிய சொல்லக்கூடாது...)
//
ம்... ஈரோட்டுல சந்திச்சத எழுதறப்போ மாட்டாமயா போயிடுவீங்க?

//
கலகலப்ரியா said...
||சராசரி உயரத்தில்||

ஏனுங்கண்ணா.. உங்க ஊர்ல அதுக்குப் பேரு சராஆஆசரி ஒசரமா... ம்க்கும்... என்னதான் ஆசான்னாலும் இம்பூட்டுப் பொய் ஆவாதுண்ணா... அடி ஆத்தீ.. அரைப்பூசினிக்காய சோத்தில மறைக்கிறதுன்னா இதுதானா...

||நிறைய முடியுடன்... ||

அண்ணா... நான் உசிரோட இருக்கணுமா வேணாமா... என்ன கொடுமைடா சாமீ... நிறைய்ய்ய்ய முடின்னா... அப்போ நம்ம உசிலமணி ஐய்யாவுக்கு தலை நிறைய்ய்ய முடின்னு அர்த்தமா...

||என்ன சொல்ல,||

என்னத்த சொல்றது... அதுதான் சொல்லியாச்சே.. கொடுமை கொடுமைன்னு... அவ்வ்வ்வ்..

||கடவுளைக் கண்ட பரவசம்,||

என்ன குருவாயூரப்பனா...

||ஆரத்தழுவிக்கொண்டோம். ஆஹா, யூத் மாதிரியில்லை, யூத்தேதான் என நம்மைப் பார்த்து சொல்ல, தும்ம நேர்ந்தது. ||

ஏன்ணா... அவங்க முடி மூக்கில பாய்ஞ்சுடுத்தா.. இதெல்லாம் ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப டூ மச்சு... ஆபீஸ்ல இருந்து வந்து வச்சுக்கறேன் கச்சேரிய...

வாஆஆஆனம்பாஆஆஆடி... என்ன ஜூஸ் வாங்கிக் கொடுத்தீங்க எங்கண்ணாவுக்கு... ஆத்தீ... செய்வினை வச்சிட்டாங்கடி... மந்திரிச்சு விட்ட கோழிமாதிரி ஆய்ட்டாங்களே... அவ்வ்வ்வ்வ்...
//
ஆசானை இப்படியெல்லாம் சொல்லப்படாது...சாமி கண்ண குத்தும்.

பிரபாகர் said...

//
கோவி.கண்ணன் said...
உங்கள் நட்பு தொடர நல்வாழ்த்துகள்
//
நன்றிங்கண்ணா!

//
வானம்பாடிகள் said...
/ஏன்ணா... அவங்க முடி மூக்கில பாய்ஞ்சுடுத்தா../

முடி இருக்குன்னு ஒத்துக்கிட்ட இந்த நேர்மை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு:))
//
அதானே...

//
கலகலப்ரியா said...
||வானம்பாடிகள் said...

/ஏன்ணா... அவங்க முடி மூக்கில பாய்ஞ்சுடுத்தா../

முடி இருக்குன்னு ஒத்துக்கிட்ட இந்த நேர்மை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு:))||

அண்ணாவே இல்லாத முடியப்பத்தி இவ்ளோ நீளத்துக்கு எழுதினா... நாம எழுத மாட்டோமா... எங்களுக்கும் கற்பனை வளம் ஜாஸ்திதானுங்கோ...
//
முன்னாடி கொஞ்சம் இல்லை அதான். சேர்த்து பின்னால வெச்சிருக்காரு, அதான் முடி அதிகம்னு எழுதிட்டேன்...

பிரபாகர் said...

//
ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
//ஏன்னா, ஜூன் 6-ஆந்தேதி தற்காலிகமா வலையுலகத்திற்கு விடுமுறை குடுக்கறதா ஒரு மானஸ்தன் பதிவு ஒன்னு போட்டிருந்தார்.

அந்த பதிவத்தேடி படிச்சிட்டு, அத எழுதின “மானஸ்தனை” இப்ப தேடிக்கிட்டிருக்கேன். உங்க கண்ல தென்பட்டார்னா நான் தேடிக்கிட்டிருக்கிற விவரத்தை சொல்லி அனுப்புங்க//

அந்த ஆளைத்தான் நான் தேடிட்டு இருக்கேன். அவரு என் கைல கிடைச்சார்ந்னா அவ்ளோதான்
//
ஆளு சேக்கறாங்கய்யா!

//
எறும்பு said...
அண்ணாச்சி, அய்யா ஆபிசில் இருந்து உங்களிடம் பேசியதில் சந்தோசம்..

:)
//
எனக்கும், நிறையவே!

//
எறும்பு said...
மீண்டும் வரும்போது சந்திக்க ஆவல்..
//
கண்டிப்பாய்!

பிரபாகர் said...

//
சேட்டைக்காரன் said...
ஐயாவுக்கும் அவரது ஆதர்ச சீடருக்கும் வாழ்த்துக்கள்!
//
நன்றி சேட்டை நண்பா!

//
ஈரோடு கதிர் said...
என் இனிய பிரவு...

அருமை..

மிக அருமை...

மிக மிக அருமை...

அடுத்து முறை பாக்குறப்போ வச்சிக்கிரேண்டி கச்சேரிய!!!

(ங்கொய்யா இதே மாதிரி ஈரோடு வந்ததுக்கும் டூப் வுட்டா, கடன் வாங்கியாவது சிங்கப்பூர் வந்து மொட்டைத் தலையில குட்டிப்புடிவேன்)
//
நானும் வெச்சிக்கிறென் ஈரோடு இடுகையில...

//
அக்பர் said...
பாலா சார்தானா அது. நட்புக்கு மரியாதை!
//
நன்றி என் சினேகிதா!

பிரபாகர் said...

//
இராமசாமி கண்ணண் said...
//ஸ்பென்சர் தாண்டி இறங்கி, வந்த ஒரு ஆட்டோவைப் பிடித்து அவரின் சென்ட்ரல் அலுவலகம் அருகே வெளியே தவிப்போடு நின்றிருந்தேன். அதோ தொலைவில் வருவது அவரா? யோசிக்க, ஆஹா, அவரே தான். சராசரி உயரத்தில் நிறைய முடியுடன்... என்ன சொல்ல//
இப்பவே தெரிஞ்சிருச்சி நீங்க ஐயாவதான் சொல்லப்போறீங்க. இந்த முடிய பத்தி சொல்லேன்னா உங்களுக்கு பொழுது போகதே :-).
//
ரொம்ப நன்றிங்க!

//
பழமைபேசி said...
ஆகா... நாந்தான் உங்க அனுபவங்கள்ல இருந்து பின் தங்கியே இருக்கேனா??
//
நன்றிங்கண்ணா!

//
முகிலன் said...
இடுகை ரெடியாகிட்டே இருக்கு...
//
ம்... எழுதிக்கலக்குங்க!

பிரபாகர் said...

//
beer mohamed said...
விமானத்தில் செல்பவரா நீங்கள் ? எச்சரிக்கை வீடியோ
http://athiradenews.blogspot.com/2010/06/blog-post_10.html
//
நன்றிங்க!

//
ஜோதிஜி said...
உங்கள் இருவரின் அன்பு தொடரட்டும்.
ஆளுமை வாழ்க்கை முழுவதும் நல்ல புரிதல்களை வழங்கட்டும்.
//
மிக்க நன்றிங்க!

//
மங்குனி அமைச்சர் said...
(பிறகு அவனது மெயிலைப் பார்த்துதான் தெரிந்தது, அங்குதான் ஒரு பெஞ்சில் படுத்து உறங்கியிருக்கிறான் என).
///

ஹா,ஹா ,ஹா
//
வாங்க மங்குனி!

//
மோகன் குமார் said...
பதிவையும் பல பின்னூட்டங்களையும் ரசித்தேன். சென்னையில் இருந்தும் இன்னும் " அவரை" சந்திக்கலை
//
நன்றிங்க மோகன்...

ரோஸ்விக் said...

உங்க லீவு நாலு நாள் தான் தாங்குச்சா சாமி...???
எதோ பாலா அண்ணனை சந்திச்சதைப் பத்தி போட்டதுக்காக சும்மா விடுறோம்... இல்ல அபராதம் தாண்டியோவ்... :-)

butterfly Surya said...

சென்னையில் இல்லை பிரபா. தங்களை சந்திக்க முடியாமல் போனது வருத்தமே... :(

©2009 ”வாழ்க்கை வாழ்வதற்கே” | Template Blue by TNB