வலையுலகம் - தற்காலிக விடுமுறை...

|

வலையுலகத் தொடர்பு விடுத்து பத்து நாட்கள் அன்பான குடும்பத்தோடு கழித்து சந்தோஷமாய் சிங்கை திரும்பி வந்தேன். அதற்குள்தான் எத்தனை எத்தனை நிகழ்வுகள்? இடுகை எழுத வந்ததன் நோக்கமே எண்ணத்தை வெளிப்படுத்தி, மற்றோரின் மாசில்லா எண்ணங்களை பகிர்ந்துகொள்ளவும்தான். நடப்பு நிகழ்வுகள் நிச்சயம் நல்லதொரு நிலையில் இல்லை என்பதுதான் மிகவும் வருந்தக்கூடிய ஒன்றாயிருக்கிறது.

இருக்கின்ற பிரச்சினைகளை அதிகமாக்கி, தேவையில்லாதவற்றை நம்முள் வலியத் திணித்து நம்மை நாமாக இருக்க விடாத இந்த நிலையில், கொஞ்சம் எல்லாவற்றையும் விட்டு விலகி இருக்க்கலாமா எனத் தோன்றுகிறது.

இவரை ஆதரிப்போம், அவரை ஆதரிப்போம் என்றெல்லாம் வரிந்துகட்டிக்கொண்டு உள்மன உளைச்சல்கள், காழ்ப்புணர்ச்சிகளையெல்லாம் இடுகையிலேற்றி நேற்று இடுகையிட வந்தோரெல்லாம் பிரச்சனையின் சாராம்சம் தெரியாமல் கேள்விகள் கேட்டும் வசைபாடியும் கருத்துக்களை வாந்தியெடுத்தல் பார்த்து மனம் எண்ணிலாத் துயருறுகிறது.

கிடைத்த அன்பு உள்ளங்களை போற்றியும், நடந்த நல்ல விஷயங்களை அசைபோட்டும் சில நாட்களை வலையிலிருந்து விலகி, ஒரு தற்காலிக விடுமுறை எடுத்துக்கொள்வதாய் உத்தேசித்திருக்கிறேன். இந்த ஒய்வினை நிறைய படிக்கவும், எழுதவும் உபயோகப்படுத்தி, எல்லாம் சரியானபின் முந்தைய அதே உத்வேகத்தோடு வருவேன் எனச்சொல்லி அதுவரை உங்களுக்கெல்லாம் என் அன்பினையும் நன்றியினையும் சொல்லி விடைபெறுகிறேன்.

பிரபாகர்...

17 : பேர் படிச்சிட்டு சொல்றாங்க...:

T.V.ராதாகிருஷ்ணன் said...

பிரபா..எனக்கு நீங்கள் இட்ட பின்னூட்டம் இது

//பிரபாகர் said...
வலையுலகில் அய்யாவாக என்னுள் வியாபித்திருக்கும் இரண்டாவது நபரான நீங்கள் இன்னும் பல எழுதவேண்டும், எஙகளுக்கெல்லாம் வழிகாட்டியாய் இருக்கவேண்டும்! ஒருவார கால ஓய்வுக்குப்பின் வலைக்கு வந்த நான் தடுமாறி நிற்கிறேன், மீண்டும் தொடர!

பிரபாகர்...//

Cable சங்கர் said...

எல்லாம் சரி.. நீங்க செஞ்சது நியாயமா..? உங்களுக்கு தெரியும்....

செ.சரவணக்குமார் said...

ஆம் பிரபா.. இந்தப் பிரச்சனை அனைவருக்குமே மன உளைச்சலை ஏற்படுத்தியிருக்கிறது.

தேவையான ஓய்வுதான்.

சீக்கிரம் வாருங்கள் நண்பா.

செ.சரவணக்குமார் said...

ஆகா.. பாலா சார் கும்முறதுக்கு படை திரட்டுறார் போலயே..

செ.சரவணக்குமார் said...

//போய்ய்யா காமெடி பீசு. இதுக்கு ஓட்டு வேற போடுறாய்ங்களோ.//

இதுக்கு ஓட்டுப் போட்டது தப்புங்களாய்யா??

சத்ரியன் said...

பிரபா,

மீண்டும் வந்து
“வலையுலகம் வாழ்வதற்கே!”-ன்னு “ப்ளாக்”குக்கு தலைப்பு வைக்கப்போறீங்களா?

எனக்கொரு பழமொழி ஞாபகத்துக்கு வருது.

“தண்ணிக்கு பயந்து ’எதையோ’ கழுவாம போன கதையால்ல இருக்கு”!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

அண்ணே சீக்கிரம் வாங்க.

Veliyoorkaran said...

@@@வானம்பாடிகள் said...
பட்டா கும்மறதுக்கு ரெடி. வெளியூர கூப்புடு..///

என்னை ஒரு பதிவுலக அடியாள் போல விமர்சிப்பதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்..இப்போ வெளியூர்க்காரன் அமைதியாக அன்பின் வழியில் செல்லும் பதிவுலக காந்தி என்பதையும் இந்த காலகட்டத்திலே சொல்லிக்கொள்ள கடமைபட்டிருக்கிறேன்...! (வானம்பாடி சார்...என்ன கொஞ்ச நாள் ரொமான்ஸ் பண்ண விடுங்க சார்...! நான் வன்முறை எல்லாம் விட்டுடுட்டேன்...என்ன கட்டிக்கபோற பொண்ணுக்கு இதெல்லாம் புடிக்காதாம்...!):)

Veliyoorkaran said...

ஆனா, குஷி ஆய்ட்டா வெளாட்டுக்கு அடுத்தவன கொலை கொலை பண்ணி வேலாடரத வெளியூர்க்காரன், ரெட்டைவால்ஸ்,பட்டாப்பட்டி கூட்டணி எந்த காலத்துலயும் விடமாட்டோம் என்பதையும் தாழ்மையுடன் சொல்லிக்கொள்ள கடமைபட்டிருக்கிறேன்...! :)

ஈரோடு கதிர் said...

//“தண்ணிக்கு பயந்து ’எதையோ’ கழுவாம போன கதையால்ல இருக்கு”!//

கண்ணா.. பிரபாவ நேர்ல பார்த்தா ஓங்கி மொட்டை மண்டையில ஒரு கொட்டு வை சாமி...

பெரிய வெண்ணை இவரு... லீவு போடுறாராம் லீவ்வ்வ்வ்வ்வு..

எத்தனை பேர்யா இப்படிக் கிளம்பியிருக்கீங்க....

ஒழுங்கா எழுதுடி மவனே... இல்லாட்டி அடுத்த வாட்டி பாக்குறப்போ உச்சந்தலையில ஆப்புதாண்டியோவ்.........

ரோஸ்விக் said...

சாமி இப்போ உங்களை ஆதரிக்கனுமா?? எதிர்க்கனுமா?? அதையும் சொல்லிடுங்க.... :-)

லீவ் லெட்டர்லாம் இங்க்லீஷ்-ல எழுதனும். அப்பத்தான் எனக்கு புரியும்...

VR said...

" நண்பர்கள் யாரையும் ஆலோசிக்காமல், தன்னிச்சையாக தற்காலிக விடுமுறை அறிவித்த சினேக் பிரபாவின் ஆணாதிக்கத்தை எதிர்த்து என் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். தேவையான ஓய்வுதான் அனால் சிக்கிரம் வராவிட்டால் போராட்டம் நடத்துவோம் "

Starjan (ஸ்டார்ஜன்) said...

என்ன செய்ய பிரபா?.. வலையுலகம் சிலசமயங்களில் இக்கட்டான சூழ்நிலைக்கு ஆளாகி சிக்கித் தவிக்கிறது.

சிநேகிதன் அக்பர் said...

இப்படி ஆளாளுக்கு விலகினா எப்படி? ரெஸ்ட் எடுத்துட்டு அடுத்த வாரம் திரும்புங்க பாஸ்.

நிலாமதி said...

விடுப்பு அவசியமானால் எடுத்துக்கொண்டு ...மீண்டும் புதுப்பொலிவுடன் வருக...........

Prathap Kumar S. said...

அண்ணே...சீக்கிரம் வந்தருவீங்கல்ல

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

இது செல்லாது பாஸ்... நீங்க சென்னை போனதும் குஷ்பு தலைவர் கட்சியில சேர்ந்திருக்காங்கனு எங்களுக்கு செய்தி வந்தது..

இப்ப திடுதிடுப்புனு லீவ் வேணுமுனு சொன்னா எப்படி?....

 

©2009 ”வாழ்க்கை வாழ்வதற்கே” | Template Blue by TNB