வசந்தப்புயல்...அத்தியாயம் இரண்டு

|


முதல் அத்தியாயத்தை படிக்கவில்லையெனில் இங்கு படித்து தொடருங்களேன்..

கண்ணன்

'எப்படி சார்' என எல்லோரிடமும் சேர்ந்து பிரமித்துக் கேட்டேன்.

'உங்களின் எல்லோரின் பெயரையும் கேட்டு மனனம் செய்துகொண்டேன், வருகைப் பதிவேட்டில் பார்த்து இல்லாத பெயர்களின் வரிசை எண்களை குறித்துக்கொண்டேன் கண்ணன், திருப்பெரும்புதூர்' என என் பெயர் மற்றும் ஊர்ப்பெயரை சொன்னார்.

உண்மையில் எங்களுக்கெல்லாம் இது ஓர் புது அனுபவம். இவ்வளவு ஞாபக சக்தியா என வியந்தோம்.

’என் பெயர் சொல்லுங்கள், என் ஊர் சொல்லுங்கள்’ என ஒவ்வொருவராய் கேட்கக் கேட்க தெளிவாய் பதில் சொல்லி அசத்தினார்.

அடுத்த நாற்பது நிமிடங்களுக்கு அவர் பாடத்தினை எடுத்தவிதம்... சொல்லவே வார்த்தைகள் இல்லை, மெய் மறந்து அமர்ந்திருந்தோம். நெட்வொர்க் பேப்பரை மிகவும் கடினமென்று நினைத்துக்கொண்டிருந்த நாங்கள் 'ஆஹா இனிமேல் கவலையில்லை' என ஒரு மனதாய் நினைக்கும் வண்ணம் இருந்தது.

நடத்த நடத்த ஆர்வமாய் குறிப்பெடுத்துக்கொண்டோம். கடைசியாய் அவராய் தயாரித்து வைத்திருந்த அன்றைய பாடத்துக்கான குறிப்புக்களை என்னிடம் கொடுத்து எழுதிக்கொண்டு எல்லோருக்கும் கொடுக்கச் சொன்னார்.

ஏதேனும் சந்தேகங்கள் இருக்கிறதா எனக் கேட்டார். வானதி கையை உயர்த்தி சந்தேகம் கேட்க, நல்ல கேள்வி எனப் பாராட்டி அழகாய் பொறுமையாய் எங்களுக்கும் புரியும்படி தெளிவாய் விளக்கினார். எனக்கும் நிறைய கேட்கவேண்டும், பேசவேண்டும் என எழுந்த ஆர்வத்தை அடுத்த வகுப்புக்கு தள்ளிப்போட்டேன்.

கடைசி ஐந்து நிமிடம் எல்லோரும் சிரிக்கும் வண்ணம் ஒரு நகைச்சுவை கலந்த ஒரு சிறுகதையை சொல்லி வகுப்பை நிறைவு செய்தார். பாடத்தில் எந்த சந்தேகம் என்றாலும் உடன் கேட்கச் சொன்னார். ஆங்கிலத்தில் நன்றாகப் பேசத் தெரியவில்லையே என மனம் வருந்தாமல் நிறைய பேசிப் பழகச் சொன்னார்.

உண்மையில் எங்களுக்கெல்லாம் தலைகால் புரியவில்லை. எங்களின் கண்களுக்கு அவர் வாழும் தெய்வமாக தெரிந்தார். படிக்க வந்ததின் அர்த்தமே அன்றுதான் புரிந்தார்போல் இருந்தது.

எப்போது வகுப்பு முடியும் என மற்றவர்கள் நடத்தும் போது வேண்டி காத்திருக்கும் எங்களுக்கெல்லாம், இவ்வளவு விரைவாய் முடிந்துவிட்டதே என வருந்தும் வண்ணம் இருந்தது.

போர்டினை முன்பிருந்ததைவிட சுத்தமாய் இலாவகமாய் அழித்து சன்னல் புறம் சென்று அழிப்பானைத் தட்டி அதற்கான இடத்தில் வைத்துவிட்டு மணி ஒலித்ததும் மின்னலாய் சிரித்து விடைபெற்று செல்ல மனம் முழுதும் நிறைவாய் உணர்ந்தோம்.

(தொடரும்)

3 : பேர் படிச்சிட்டு சொல்றாங்க...:

sathishsangkavi.blogspot.com said...

//எங்களின் கண்களுக்கு அவர் வாழும் தெய்வமாக தெரிந்தார். படிக்க வந்ததின் அர்த்தமே அன்றுதான் புரிந்தார்போல் இருந்தது.//

:))))

sathishsangkavi.blogspot.com said...

பங்காளி...

ரொம்ப நாளைக்கு அப்புறம் பதிவு போடுறீங்க...

இனி அடிக்கடி எதிர்பார்க்கிறேன்...

இராஜராஜேஸ்வரி said...

மணி ஒலித்ததும் மின்னலாய் சிரித்து விடைபெற்று செல்ல மனம் முழுதும் நிறைவாய் உணர்ந்தோம்./

நிறைவான பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.

 

©2009 ”வாழ்க்கை வாழ்வதற்கே” | Template Blue by TNB