அன்பிற்கும் உண்டோ...

|

என் ஆசானிடம் திட்டு வாங்கவேண்டுமென்றால் இந்த இடுகைக்கு 'ட்ரெயினில் பல்பு வாங்கிய கதை' என்று வைக்கலாம். நல்ல மாடு என்பதால்... சரி விஷயத்திற்கு வரலாம்.

ஏழு வருடங்களுக்கு முன் டெல்லியிலிருந்து விடுமுறையில் சென்னை நோக்கி நானும் எனது மனைவியும் தமிழ்நாடு எக்ஸ்பிரஸில் வந்து கொண்டிருந்தோம்.

அம்மணியோடு பேசிக்கொண்டு கடலையை கொறித்தபடி, போட்டுக்கொண்டு... ஆம், பக்கத்தில் இருந்த ஒரு அழகான பெண்ணைப் பற்றி கிண்டலடித்தவாறு இனிமையாய் நேரத்தைக் கழித்துக் கொண்டிருந்தோம்.

அந்த பெண் சிறு வயது கிரண் போலவும், ரொம்பவும் துறுதுறுவென இருந்தாள். கோலி குண்டுகளை வைத்து எல்லோருமாய் சேர்ந்து விளையாடிக்கொண்டிருந்தார்கள்.

வட்ட வடிவிலான ஒரு ப்ளாஸ்டிக் தகட்டில் கோலி குண்டுகளை வைப்பதற்கான குழிகள். நடுவில் தவிர எல்லாம் நிரப்பி ஒவ்வொன்றாய் தாண்டி எடுத்துக் கொள்ள, கடைசியாய் ஒன்று மட்டும் இருந்தால் வெற்றி பெற்றதாய் அர்த்தம். எவ்வளவு மோசமாய் விளையாடினாலும் நான்குதான் மீதம் இருக்கும்.

'ரொம்பவும் வழியாதீங்க, உங்களை அந்த பொண்ணு கண்டிப்பா பையான்னு சீக்கிரத்தில் கூப்பிடும் பாருங்க' என அம்மணி சாபம் விட்டார்கள்.

இதை பல முறை விளையாடியிருக்கிறேன், சாதாரணமாய் ஜெயித்திருக்கிறேன், அதற்கென ஒரு முறையை கண்டுபிடித்து வைத்திருப்பதால்.

அந்த பெண் மற்றும் அவர்கள் குடும்பத்தில் எவராலும் சரியாய் ஒன்று வரும்படியாய் விளையாடத் தெரியவில்லை. ஒவ்வொரு முறை தோற்கும்போது பெருத்த கூச்சல், ஆரவாரம் என எங்களின் பெட்டியே குதூகலமாய் இருந்தது.

அவர்கள் விளையாடுவதையே பார்த்துக்கொண்டிருக்க, அந்த பெண் என்னைப் பார்த்து 'பையா நீங்கள் விளையாடுகிறீர்களா?' எனக் கேட்க, என் மனைவி முகத்தில் ஆயிரம் வாட் பல்ப். 'தங்கச்சி கூப்பிடுதில்ல போங்க' என நக்கலாய் சொல்ல, களத்தில் புகுந்தேன்.

நான் விளையாட்டினை முதன் முதலாய் விளையாடும்போது கூட நான்கு மிச்சம் இருந்ததில்லை, என் நேரம் அன்று நான்கு மிச்சம் இருந்தது. கேலிச் சிரிப்புக்களூம், ஆரவாரங்களும் நான் பல்ப் வாங்கியதைப் பறைச்சாற்ற வெட்கப்பட்டு வழிந்த வண்ணம் அங்கிருந்து நகர்ந்தேன்.

என் மனைவியின் முகத்தைப் பார்க்க கூச்சமாய் இருந்தது. 'நான் முயற்சி செய்து பார்க்கட்டுமா?' என அழகான இந்தியில் கேட்டது அம்மணிதான். இதற்கு முன் விளையாண்டே பார்த்ததில்லை, நான் விளையாடும்போது மட்டும் அம்மணி பார்த்துக்கொண்டுதான் இருப்பார்கள்.

'யெஸ் பாபி, ஆப் ட்ரை கரோ' என கையைப் பிடித்து அந்த பெண் அழைத்துச் சென்றாள்.

சட் சட்டென ஒவ்வொன்றாய் தாண்டி வெகு சுளுவாய் எடுக்க, மிச்சம் ஒன்றே ஒன்று. எல்லோரும் கைத்தட்ட என் முகத்தில் ஏகமாய் பெருமிதம்.

'பாபி இதற்குமுன் நிறைய ப்ராக்டீஸ் செய்திருக்கிறீர்கள் தானே என அந்தப் பெண் கேட்க,

'இல்லை இல்லை. எனது வீட்டுக்காரர் விளையாடும்போது பார்த்துக் கொண்டிருப்பேன், அவர் சூப்பராய் விளையாடுவார், இன்று என்னவோ தெரியவில்லை முதல் முறையாய் தோற்றிருக்கிறார் எனச் சொல்லி என்னைப் பார்த்து அம்மணி சிரித்தார்கள்.

கொஞ்சம் கழித்து 'எப்படி அபி சாத்தியம்' என ஆச்சர்யமாய் கேட்டேன். நீங்கள் தோற்றபோது எல்லோரும் சிரித்தது ஒரு மாதிரியாய் இருந்தது. ஜெயித்தே ஆகவேண்டும் என விளையாண்டேன், அவ்வளவுதான் என என் அம்மணி கூலாக சொன்னார்கள்.

அன்று நான் தோற்றாலும் என் அம்மணியிம் அன்பையும் திறமையையும் புரிந்துகொள்ள ஒரு வாய்ப்பாக அமைந்தது...

7 : பேர் படிச்சிட்டு சொல்றாங்க...:

Agal said...

Nice :)

Niroo said...

எல்லாம் நீங்க செஞ்ச புண்ணியம்

settaikkaran said...

//என் ஆசானிடம் திட்டு வாங்கவேண்டுமென்றால் இந்த இடுகைக்கு 'ட்ரெயினில் பல்பு வாங்கிய கதை' என்று வைக்கலாம்//

ட்ரெயினில் பல்பு திருடின கதை என்று எழுதினால் ஆசான் கோபித்துக் கொள்வதில் நியாயம் இருக்கிறது. இதற்குமா?

எனக்கும் இதே மாதிரி, அதாவது ஒரு பல்பு அல்ல, பற்பல பல்புகளை வாங்கிய ஒரு அனுபவம் இருக்கிறது. அப்பாலிக்கா எழுதறேன். :-)

Karthikeyan Rajendran said...

மொக்கை பதிவுகளுக்கு மத்தியில் இது சக்கை பதிவு!!!!!!!!
சூப்பரப்பு

Karthikeyan Rajendran said...

http://sparkkarthikovai.blogspot.com/p/own-details.html

சீனுவாசன்.கு said...

கொடுத்து வைத்த கணவர்!
தொடரட்டும் அன்பு!

இராஜராஜேஸ்வரி said...

அன்று நான் தோற்றாலும் என் அம்மணியிம் அன்பையும் திறமையையும் புரிந்துகொள்ள ஒரு வாய்ப்பாக அமைந்தது.../

ஒளிரும் வாழ்க்கைத்துணை நலம்..
வாழ்த்துக்கள்..

 

©2009 ”வாழ்க்கை வாழ்வதற்கே” | Template Blue by TNB