தேர்தல் பணியில்... - II

|

(முதல் பகுதியை படிக்காவிட்டால் இங்கு படித்துப் படியுங்களேன்...)

ஐந்து மணிக்கே எல்லோரும் பரபரப்பாய் எழுந்தோம். உடும்பியம், கல்லேறிப்பட்டி என இரு ஊர்களுக்கும் ஒரே தலைவர் என்பதால் இரண்டு ஊர்களைச் சேர்ந்தவர்களுக்கும் பலத்தப் போட்டி.உடும்பியம் கல்லேறிப்பட்டியைவிட பெரியது, எனவே எல்லாத் தேவைகளுக்கும்
அவர்கள்தான் இங்கே வரவேண்டும். இந்த முறை எப்படியாவது நமது ஊரைச் சேர்ந்தவர் தலைவராக வந்தே ஆகவேண்டும் எனௌம் முனைப்போடு க.பட்டிக் காரார்கள் இருந்தார்கள்.

வேட்பாளர்களாய் இருப்பவர்கள் இருவரும் அதிகாலையிலேயே வந்து எங்களுக்கு எல்லாம் வணக்கம் போட்டுவிட்டு என்ன உங்களுக்குத் தேவையோ சொல்லுங்கள், உடனே செய்கிறோம் எனத் துடிப்பாய் நின்றார்கள். பார்க்கும்போதெல்லாம் ஒரு பெரிய புன்னகை மரியாதை கலந்து. என் வாழ்நாளில் இதுவரை என்னை இவ்வளவு மரியாதையாய் பார்த்தவர்கள் கிடையாது.

சூடாய் கிடைத்த இட்லி, தோசை பூரி என எனாவற்றிலும் கொஞ்சம் கொஞ்சமாய் வயிறு நிரம்ப சாப்பிட்டோம். ஓட்டு எண்ணிக்கை ஆரம்பிக்கும் முன்னரே கூட்டம் கூட ஆரம்பித்துவிட்டது, எல்லோரும் வரிசையில் நின்றார்கள்.

மை வைத்தல், இருக்கும் பட்டியலில் சரிபார்த்தல், வாக்குச் சீட்டினை தருதல் என ஒவ்வொருவரும் ஒவ்வொரு வேலை. எங்களுக்கு எதிரில் ஒவ்வொரு வேட்பாளருக்கும் ஒரு ஏஜன்ட். வருபவர் சரியான நபர்தானா என. அப்போதெல்லாம் அடையாள அட்டையோ, புகைப்படத்துடன் கூடிய குடும்ப அட்டையோ கிடையாது. எதிரில் அமர்ந்திருப்பவர்கள் ஏதேனும் மறுப்புத் தெரிவித்தால் நாங்கள் ஓட்டுப்போட அனுமதிக்கக் கூடாது.

முதல் ஒரு மணிநேரம் எல்லாம் ஒழுங்காய் போய்க்கொண்டிருந்தது. திடீரென சலசலப்பு. க.பட்டியைச் சேர்ந்த ஒருவர் கள்ள ஓட்டு போட வந்திருப்பதாய் புகார் சொல்ல, பதிலுக்கு அவர்களும் ஏதோ சொல்ல அந்த இடமே களேபரமாகியது.

பேச்சு பேச்சுவாக்கில் இருக்க, திடீரென ஒருவர் க.பட்டி வேட்பாளரை ஓங்கி கன்னத்தில் அறைந்தார். இது போதாதா, விஷயம் பெரிதாக! எல்லோரும் சகட்டு மேனிக்கு அடித்துக்கொண்டு புரள ஆரம்பித்துவிட்டார்கள். இருந்த சொற்ப காவலர்களைக் கொண்டு எல்லோரையும் அப்புறப்படுத்தி கதவினை தாழிட்டுக்கொண்டோம். வெளியே இன்னும் அதிகமாய் கூச்சல் குழப்பங்கள்.

கதவுகளில் பெரிய பெரிய கற்களால் அடிக்கும் சப்தம் எங்களின் கிலியை அதிகப்படுத்த, கதவில்லா சன்னல்களின் வழியாக சர் சர்-ரென கற்கள் சாரை சாரையாய் உள்ளே விழ ஆரம்பித்தன. வேகமாய் வந்த ஒரு செங்கல் சுவற்றில் பட்டுத் தெறித்து பணியாற்ற வந்திருந்த ஒரு பெண்மணியின் மூக்கில் பட்டு ரத்தம் கொட்டத் தொடங்கியது.

நாங்களெல்லம் கற்கள் வந்து விழாத இடத்தில் தரையோடு தரையாக பல்லிபோல் ஒட்டிக்கொண்டு கிடந்தோம், விழுந்தாலும் தலைக்கு ஏதும் ஆகக் கூடாது என தலையில் மேல் ஒரு மொத்தமான அட்டையை வைத்துக்கொண்டு. இரண்டு மணி நேரம் நரக வேதனை... பெரம்பலூரில் இருந்து போலீசார் நிறைய வந்து, எல்லாவற்றையும் கட்டுப்படுத்தி கதவினைத் திறந்தார்கள்.

அதன் பின் தேர்தல் வழக்கம்போல் நடந்தது. நாங்களெல்லாம் வழக்கத்துக்கு மாறாய் நடுங்கியவாறே கடமைக்கு வேலை செய்தோம். குண்டூசி விழுந்தாலும் சம்தம் கேட்குமளவிற்கு இருந்தது. ஒரு வழியாய் தேர்தல் முடிந்தது.

பெரும் நிம்மதியாய் மெதுவாய் வெளியே வந்தோம். சண்டையிட்டுக் கொண்டிருந்த இரு ஊரின் வேட்பாளர்களும் சிரித்தவண்ணம் பேசிக்கொண்டிருந்தார்கள். எங்களைப் பார்த்ததும் இருவரும் சேர்ந்தார்போல் மிகவும் மரியாதையாய் வணக்கம் சொல்லி புன்னகைத்தார்கள்.

(வாக்கு எண்ணும்போது நடந்த ஒரு விஷயம் அடுத்த இடுகையில்)

7 : பேர் படிச்சிட்டு சொல்றாங்க...:

settaikkaran said...

//பார்க்கும்போதெல்லாம் ஒரு பெரிய புன்னகை மரியாதை கலந்து. என் வாழ்நாளில் இதுவரை என்னை இவ்வளவு மரியாதையாய் பார்த்தவர்கள் கிடையாது.//

வாக்காளர்களையே தேர்தலின்போது தெய்வமாக்குபவர்கள் ஆயிற்றே! :-)

settaikkaran said...

//சண்டையிட்டுக் கொண்டிருந்த இரு ஊரின் வேட்பாளர்களும் சிரித்தவண்ணம் பேசிக்கொண்டிருந்தார்கள். //

ஏன் சிரிக்க மாட்டாங்க? கல்லடி அவங்க மேலேயா பட்டுது?

settaikkaran said...

//(வாக்கு எண்ணும்போது நடந்த ஒரு விஷயம் அடுத்த இடுகையில்)//

ம்..ம்ம்..! ரைட்டு!!

sathishsangkavi.blogspot.com said...

பங்காளி கல்லு மேல விழுந்துச்சா இல்லையா...

vasu balaji said...

எந்தக் கட்சின்னு சொல்லணும் தில்லு தொர:))

ராஜ நடராஜன் said...

//எந்தக் கட்சின்னு சொல்லணும் தில்லு தொர:))//

கரை வேஷ்டி!போதுமா...

ஊர்ப் பெயரத்தான் சொல்றாரே தில்லு தொர:)

Paleo God said...

சங்கவி said...
பங்காளி கல்லு மேல விழுந்துச்சா இல்லையா...//

என்னா வில்லத்தனம்? :))

 

©2009 ”வாழ்க்கை வாழ்வதற்கே” | Template Blue by TNB