அறிவுரை...

|

பேருந்துப் பயணம் ஏதாவது ஒரு விதத்தில் சுவராஸ்யமாகிவிடுகிறது, சுற்றுப்புறங்களை கூர்ந்து கவனித்து வரும்பொழுது. அன்றும் அப்படித்தான் ஒரு நண்பரைப் பார்ப்பதற்காக சின்னசேலம் செல்லுவதற்கு கிளம்பத் தயாராய் இருந்த ஒரு தனியார் பேருந்தில் ஏறி, நின்றேன். கிளம்பும் தருணத்தில் ஒருவர் அவசரமாய் 'செல்லி'யபடி இறங்கிப்போக காலியாயிருந்த அந்த கடைசி சீட்டில் அமர்ந்தேன்.

வழியில் ஒருவர் ஏறி, படியிலேயே நின்றுகொண்டு உள்ளே செல்லுவதற்கு எண்ணமே இல்லாதவர் போல் இருந்தார். கொஞ்சம் கழித்துத்தான் தெரிந்தது அவர் நல்ல போதையில் இருக்கிறார் என்று.

சாலையின் இருமருங்கிலும் வேலைகள் நடந்து கொண்டிருப்பதால் பேருந்து மாறி மாறி இரு பக்க சாலைகளிலும் வளைந்து வளைந்து அதி விரைவாய் சென்று கொண்டிருந்தது. ஒரு இடத்தில் இடது புறம் சட்டென வளைத்து வேகமாய் செல்ல, நமது நாயகர் நிலை தடுமாறி வெளியே சரிய கடைசி சீட்டில் இருந்த நாங்கள் இருவர் அவரது சட்டையை தாவிப் பிடித்துக் காப்பாற்றினோம்.

'ஒரு செகண்ட் தாமச்சிருந்தாலும் சங்குதாண்ணா' என்னோடு அந்த நபரை சேர்ந்திழுத்த உடனிருந்த ஒரு இருபது வயது இளைஞன்.

கேட்ட நமது நாயகர் 'பிறக்குறதே சாவறதுக்குத்தான். நான் எதுக்கும் தயார். போனால் போகட்டும் போடா' என பாட ஆரம்பித்துவிட்டார்.

டிக்கெட் வழங்க முன்புறத்திலிருந்து வந்த கண்டக்டரிடம் விவரம் சொல்ல, அவர் நம்மவரை மேலே வந்து நிற்கச் சொல்ல 'நான் செடியா இருக்கேன், இப்படித்தான் வருவேன்' எனச் சொல்லி வண்டியின் ஆட்டத்துக்கு ஏற்றபடி ஆடியவண்ணம் வர,

'ஏன் சார் புடிச்சி காப்பாத்தினீங்க, விட்டிருக்க வேண்டியது தானே... நேத்துதான் இதே மாதிரி ஒரு கேசுக்காக கோர்ட்டுக்கு போயிட்டு வந்தேன். விழுந்துட்டா கண்டுக்காம போயிட்டுருப்போம், யாரால ஆவும் இந்த எழவெல்லாம்' என அவருக்கு நேர்ந்த கடுப்பில் சொன்னார்.

கொஞ்சம் கழித்து வழியில் கல்லூரி அருகே பேருந்து நிற்க, என்ன நினைத்தாரோ தெரியவில்லை, மெதுவாய் உள்ளே வந்து கம்பியைப் பிடித்துக் கொண்டு தள்ளாடியபடி நின்றுகொண்டார்.

அப்போதுதான் ஏறிய ஒரு கல்லூரி மாணவர் ஸ்டைலாக படியில் நின்றவாறு பயணம் செய்ய ஆரம்பிக்க நம்மவருக்கு வந்தது பாருங்கள் கோபம்... 'அறிவில்ல? படியில நின்னுகிட்டு வர்றீயே,  விழுந்து சாவறதுக்கா உன்ன பெத்தாங்க' என சகட்டு மேனிக்கு திட்ட ஆரம்பித்தார்.


அந்த மாணவர் பேயடித்தார்போல் ஆகி, முகம் சிறுத்து வண்டியின் நடுவில் போய் நின்று கொண்டார். இருப்பினும் நம்மவர் தனது வசைகளை நிறுத்தவில்லை, மாணவரைப் பார்த்து திட்டிக்கொண்டே வந்தார்.

ஒரு வழியாய் நம்மவர் இறங்கி சென்றதும் அந்த மாணவர், 'என்னை எப்படி அப்படி சொல்லலாம், பார்த்து விடுகிறேன், தீர்த்துவிடுகிறேன்' என ஆரம்பிக்க, இதையெல்லாம் கவனித்து வந்த ஒரு முதியவர்,

'தம்பி, கொஞ்சம் மூடு. அந்த ஆளு இருக்கிற வரைக்கும் கம்முனு இருந்துட்டு இறங்கி போனதுக்கப்புறம் ஓவரா சவுண்டு விடுற?' எனக் கேட்க, அந்த கல்லூரி மாணவர் வண்டியின் முன்பக்கத்துக்கு விருட்டென சென்று விட்டார்.

பக்கத்தில் இருந்தவர் 'அது எப்படின்னா அந்த ஆளு அட்வைஸ் பண்ணலாம், அந்த தம்பிக்கு' என அங்கலாய்ப்பாய் கேட்க,

'விடுங்க தம்பி, எமனோட கைகுலுக்கிட்டுல்ல வந்திருக்காரு, சொன்னதும் நல்லதுக்குத்தானே' என்றேன்.

14 : பேர் படிச்சிட்டு சொல்றாங்க...:

சமுத்ரா said...

ok :)

♠ ராஜு ♠ said...
This comment has been removed by the author.
பாட்டு ரசிகன் said...

தொடருங்கள்..

பாட்டு ரசிகன் said...

//////
உன்னை நான் இந்த நெஞ்சில் வாங்கிட
மெத்தை போல் உன்னை மெல்லத் தாங்கிட
/////

என்ன இது..


http://tamilpaatu.blogspot.com/2011/03/blog-post.html

Kathir said...

||தள்ளாதியபடி||

நீங்க ஏன் தள்ளாடுறிங்க?

Kathir said...

அறிவு’றை’...

இந்த உறை எங்கே கிடைக்குதுங்க பிரவு

வானம்பாடிகள் said...

படித்து முடித்தும் இன்னும் படபடப்பு அடங்கவில்லை. நீங்கள் மட்டும் சுற்றுப்புறங்களைக் கூர்ந்து கவனிக்காமல், அவரது சட்டைய தாவிப் பிடித்து காப்பாற்றியிராவிடில் என்று நினைக்கும்போதே பதறிப் போகிறது. அதுவும் அந்த ஆள் சிச்சுவேசஷன் சாங்..சான்ஸே இல்லை. சிரித்து சிரித்து வயிறு புண்ணாகிவிட்டது.
/நான் செடியா இருக்கேன்/

அத்து. அவன் மட்டும் செடியா இல்லாம மரமா இருந்திருந்தா தெரிஞ்சிருக்கும் எங்கண்ணன் யாருன்னு.

/அந்த மாணவர் பேயடித்தார்போல் ஆகி, முகம் சிறுத்து வண்டியின் நடுவில் போய் நின்று கொண்டார். /

சே. இவனெல்லாம் கல்லூரி மாணவனா?

/'விடுங்க தம்பி, எமனோட கைகுலுக்கிட்டுல்ல வந்திருக்காரு, சொன்னதும் நல்லதுக்குத்தானே' என்றேன்./

அருமையாச் சொன்னீங்கண்ணா.

அந்த ஆளை ட்ரைவர் சீட் பக்கத்துல நிக்க விட்டு சடன் ப்ரேக் போட வச்சிருக்கணும்ணா. வடிவேலு மாதிரி கண்ணாடிய உடைச்சிட்டு விழுந்திருப்பான்.

விறுவிறுப்பான நடை.

சங்கவி said...

//
'விடுங்க தம்பி, எமனோட கைகுலுக்கிட்டுல்ல வந்திருக்காரு, சொன்னதும் நல்லதுக்குத்தானே' என்றேன்.//


நல்ல அறிவுரை...


இப்படி நிறைய இருக்கறாங்க... நாம தான் கண்டுக்காம போகனும்...

சேட்டைக்காரன் said...

//ஒருவர் அவரமாய் 'செல்லி'யபடி இறங்கிப்போக//

அடிக்கடி சுஜாதாவோட விசிறின்னு நிரூபிச்சிடறீங்க நண்பரே! :-)

சேட்டைக்காரன் said...

//அவர் நல்ல போதையில் இருக்கிறார் என்று//

அதான் பிரச்சினையே! கெட்ட போதையில் இருந்திருந்தா, சீட்டுலே உட்கார்ந்திருப்பாரு!

சேட்டைக்காரன் said...

//'நான் செடியா இருக்கேன், இப்படித்தான் வருவேன்' எனச் சொல்லி//

செடியா இருந்தாரா? இது டாஸ்மாக் அகராதிப்படி சரியா?

சேட்டைக்காரன் said...

Buzz-லே அடிக்கடி பார்க்க முடியாமப்போனதுக்கு இந்த Bus பயணங்கள்தான் காரணமா?

ரொம்ப நாள் கழிச்சு இடுகை போட்டிருக்கீங்க! தொடரட்டும் நண்பரே! :-)

cheena (சீனா) said...

அன்பின் பிரபாகர்

ஒரு நிக்ழ்வினை அழகாக வடித்திருக்கிறாய். நடை அருமை. "செல்லியபடியே" சொற்பிரயோகத்தின் அழகு கவர்கிறது. வெவ்வேறு விதமான சிந்தனைகளை - செடியாய் இருப்பவன், நடத்துனர், கல்லூரி மாணவன், பெரியவர், பினிருக்கையில் இருவர் - இவர்கலீன் சிந்த்னைகளைக் கொண்டு ஒரு அழகான இடுகை. திறமை ஒளிர்கிறது. நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

நாடோடி இலக்கியன் said...

/'விடுங்க தம்பி, எமனோட கைகுலுக்கிட்டுல்ல வந்திருக்காரு, சொன்னதும் நல்லதுக்குத்தானே' என்றேன்./

ம்ம்ம்ம் மிகச் சரி.

 

©2009 ”வாழ்க்கை வாழ்வதற்கே” | Template Blue by TNB