படித்த, அன்றாட வாழ்வில் நிகழ்ந்த நகைச்சுவை சம்பவங்களை இந்த விகடம் வரிசையில் எழுத ஆசை. படித்து உங்களின் கருத்தினை சொல்லுங்களேன்...
*****
ஒருத்தர் கழுதையில் போய்க்கொண்டிருந்தபோது எதிரில் இன்னொருவர் குதிரையில் வருவதைப் பார்த்து 'எஸ்குஸ்மி, இந்த கழுதையைத் தரேன், உங்க குதிரையைத் தர்றீங்களா?' எனக் கேட்டாராம். அதற்கு எதிரில் வந்த நபர், 'யாராவது கழுதைக்கு குதிரையை தருவாங்களா?, என்னை அந்த அளவுக்கு கேனைன்னு நினைச்சியா?' என பதிலுக்குக் கேட்க, 'ஒரு வேளை அப்படி இருந்தா' என பதில் சொன்னாராம். என்ன விவரம் பாருங்க?*****
என் சித்தப்பாவிடம் அவர் மகன் விவேக் 'அப்பா கட்டுரை நோட்டு வாங்க நூறு நூபாய் வேணும்' எனக்கேட்க சரி என அவர் இருபது நூபாய் கொடுத்தார். அவனும் பதில் ஏதும் சொல்லாமல் வாங்கிச் செல்ல எனக்கு ஒன்றுமே புரியவில்லை. இருவரிடமும் தனித்தனியே கேட்டு கடைசியில் நான் மயக்கமானேன்.சித்தப்பா 'கட்டுரை நோட்டு பதினாறு ரூபாயிலிருந்து இருபது ரூபாய்க்குள்ளத்தான் இருக்கும். கேட்டதைக் கொடுத்திட முடியுமா?'
விவேக் 'நூறு ரூபா கேட்டாத்தான் இருபது ரூபாயாவது கொடுப்பாரு. சரியான காசு கேட்டா எப்பாவாச்சும் கொடுத்தத சொல்லி, அதுல மீதிய என்ன பண்ணினன்னு ஆயிரத்தெட்டு கேள்வி கேட்பாரு'
*****
நேற்று அம்மாவினை அழைத்தபோது அவர்களுக்கு பதில் எடுத்து பேசியது என் மகன் விஷாக். 'அப்பா நீங்க புளிச்ச கீரைன்னா ரொம்ப விரும்பி சாப்பிடுவீங்களா?'
'ஆமாம் குட்டி, என்ன விஷயம்?'
'ஆயா இதைதான் இன்னிக்கு செஞ்சிருக்காங்க, எனக்குப் பிடிக்காது, சாப்பிட மாட்டேன்னு சொன்னேன், உங்களுக்கு ரொம்ப பிடிக்கும்னு சின்ன வயசிலிருந்து விரும்பி சாப்பிடுவீங்கன்னு சொன்னாங்க, அதான் கேட்டேன்' எனச் சொல்லிவிட்டு 'ஆயாகிட்ட தர்றேன்' என கொடுத்துவிட்டார்.
'பிரபு இந்த கூத்த பாரேன், உனக்கு பிடிக்கும்னு சொன்னதும் அதை கன்ஃபார்ம் பண்ணிட்டு ரசிச்சி சாப்பிடறான்' என ஆச்சரியப்பட்டார். எனக்குள் ஒரு கேள்வி, எனக்கு பிடிக்கும் என்பதற்காக தனக்கும் பிடித்ததாக மாற்றிக்கொள்ளும் இது இன்னும் எத்தனை நாளைக்கு?
11 : பேர் படிச்சிட்டு சொல்றாங்க...:
kallori sellum varai
எல்லாமும் எத்தனை நாளைக்குன்னு நினைப்பதைவிட நல்லதா கெட்டதான்னு நினைப்பது நல்லது.
நல்ல பகிர்வுகள்..
புளிச்ச கீரையும் பொறிச்ச குழம்பும்(சூப்பர் காம்பினேசன்!) சாப்பிட்ட மாதிரி ஒரு ஃபீலிங்கு.......! :-)
நல்ல பகிர்வு
பகிர்வுக்கு நன்றி
//எனக்கு பிடிக்கும் என்பதற்காக தனக்கும் பிடித்ததாக மாற்றிக்கொள்ளும் இது இன்னும் எத்தனை நாளைக்கு?//
தந்தையாதிக்கத்திற்கு எதிரான என் கண்டனத்தைப் பதிவு செய்கிறேன்:))).
சித்தப்பாவும் விவேக்கும் தான் டாப்பு....
பகிர்வுகள்...
நல்லாருக்கு அண்ணா..
அருமை நண்பரே ஒவ்வொன்றிலும் நகைச்சுவை ததும்பி வழிகிறது . அதிலும் அந்த குதிரை , கழுதை கலக்கல் போங்க .பகிர்வுக்கு நன்றி
மீண்டும் வருவேன் !
ரொம்ப நாளைக்கு பிறகு உங்க ப்ளாக்அ ஓப்பன் பண்ணினேன்.
அட் என்னை பத்தி எதொ எழுதிருக்கிங்களேனு படிச்சேன்.
இதில் ஆச்சர்யம் என்னானா இது நடந்தது எனக்கே நினைவில்லை.
Post a Comment