நேற்றையப் பேட்டி இங்கே...
விளம்பர இடைவெளிக்குப்பின் க்ளோஸ்-அப்பில் பீலா பெருமாள்சாமியினைக் காண்பிக்க, 'வெல்கம் பேக்... இன்று ஒரு வித்தியாசமான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பிரபலப்பதிவர் பீதாம்பரத்துடன் உரையாடிக்கொண்டிருக்கிறோம், இதோ அவரிடம் நமது அடுக்கடுக்கான கேள்விகளும் அதற்கான அழகான பதில்களும்...'
பீ.பெ : பால்ய நினைவுகள்னு ஒரு இடுகை எழுதினீர்களே, அதைப்பற்றி சொல்ல முடியுமா?
பி.பீ : ஆஹா, அது ஒரு புதுமையான அனுபவம் ஆச்சே. சிறுவயதில் பிறந்த முதல் நாளிலிருந்து ஒருவருடம் வரைக்கும் ஓடியாடி நான் செய்த எல்லாக் குறும்புகளையும் நினைவுப்படுத்தி அருமையா எழுதியிருந்தேன். உகாண்டாவுல இருந்து ஒருத்தர் படிச்சிட்டு ஒரு மணி நேரம் பேசினாரு.
பீ.பெ : ஒரே முறைதானே உங்களிடம் பேசியிருப்பார்? சிலபேர் வாழ்க்கையோட கடைசி நாளுக்கு முன்னால இது மாதிரி பேசறதுண்டு. சரி, அரசியல் பற்றியும் அருமையா அதிரடியா எழுதறேங்களே அது எப்படி?
பி.பீ : அதிலதான் நம்ம ட்ரிக் இருக்கு. வெள்ளை மாளிகையில் ஊழல்,புஷ்-சின் வாரிசுப் போராட்டம், கிளின்ண்டனின் கால் சுளுக்குன்னு எழுதறதெல்லாமே பத்திரிக்கையில படிச்ச அமெரிக்க அரசியல் தானே. இதிலே முக்கியமான விஷயம் என்னான்ன, நம்மளோட பார்வை எப்போவுமே உலக அளவில இருக்கும்.
பீ.பெ : அப்புறம் லைவ் ஆக்சன் என பதினைந்து நாளுக்கு ஒரு முறை இடுகை போட்டு பரபப்பை ஏற்படுத்துக்கிறீர்களே, அதைப் பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன்.
பி.பீ : அருமையான கேள்வி. கலக்கிட்டீங்க... ச்சை.. பின்னூட்டம் ஸ்டைல்-ல பதில் வருது. உதாரணமா ரோட்டுல ஒரு குழி இருக்குதுன்னு வெச்சுக்குங்க, அதுல நிறைய பேரு விழப்போவாங்க, வண்டிய குழிக்குள்ள விட்டுட்டு தடுமாறிப் போவாங்க. கேமிராவோட அங்க போய் உக்காந்திருந்து, வலுவா ஒருத்தர் விழுந்து அடிபடறத போட்டோ எடுத்து இடுகையாப் போடுவேன். இதுக்கு சரியான வரவேற்பு. சில பேர் போன் பண்ணி எங்க ஏரியாவுல லைவ் ஆக்சனுக்கு மேட்டர் இருக்குன்னு சொல்லுவாங்கன்னா பாத்துக்கோங்களேன்...
பீ.பெ : ஆஹா, என்ன இளகிய மனசு. சரி ஒரு இடுகை பிரபலமாக என்ன செய்ய வேண்டும்?
பி.பீ : இடுகை பேரை பிரபலம்னு வைக்கலாம்... ஹா, ஹா... ஜோக்குக்காக சொன்னேன். எழுதற விஷயம் மனசுல அப்படியே ஓட்டனும்.... பாருங்க இப்ப ஓட்டனும்னு சொன்னதுல இருந்தே ஒரு இடுகைக்கான தலைப்பு 'பசை'ன்னு கிடைச்சிடுச்சி. என்னோட அடுத்த இடுகை 'பசை' எப்படி ஓட்டுதுன்னு மட்டும் பாருங்க...
பீ.பெ : சரி, உங்களோட எதிர்கால லட்சியம் என்னவென்று உங்க வாசகர்களுக்கு சொல்ல முடியுமா?
பி.பீ : இந்தியாவில இடுக்கிற எல்லா மொழியிலயும் பிளாக் ஆரம்பிக்கணும். எல்லா மொழியும் சரளமா தெரிஞ்ச ஒரு மொழிபெயர்ப்பாளர தேடிக்கிட்டிருக்கேன். எனது தமிழ்ல வர இடுகைகள் எல்லாத்தையும் ஒரே நாள்ல எல்லா மொழியிலும் ரிலீஸ் பண்ணப்போறேன்.
பீ:பெ : கடைசியா மொக்கை, மரண மொக்கை இது பற்றியெல்லாம் விளக்கம் சொல்லமுடியுமா?
பி.பீ : இந்த இடுகையோட முன்னாடி இடுகை மொக்கைன்னா இது மரண மொக்கை...
பீ:பெ : நன்றி பிரபலப்பதிவர் பீதாம்பரம் அவர்களே! எங்கள் நேயர்களின் பொன்னான நேரத்தை பாழடித்து உங்கள் பிதற்றலான கருத்துக்களை தெரிவித்ததுக்கு மிக்க நன்றி. இன்றோடு இந்த ப்ரோக்ராமே காலி. விதியிருந்தால் உங்களை மீண்டும் சந்திக்கிறேன் எனச் சொல்லி உங்களிடமிருந்து பிரியா விடை பெறுவது உங்கள் பீலா... பெருமாள்சாமி..
பிரபலப்பதிவர் பீதாம்பரம் - கலந்துரையாடல் - தொடர்ச்சி...
வகை : மரண மொக்கை... | author: பிரபாகர்பிரபலப்பதிவர் பீதாம்பரம் - கலந்துரையாடல்
வகை : மரண மொக்கை... | author: பிரபாகர்தொகுப்பாளினி : வணக்கம், இது உண்மையும் சொல்வோம் (எப்பாவாச்சும்) டிவியோட கலந்துரையாடல் நிகழ்ச்சி. இதில் பிரபலபதிவர் பீதாம்பரத்தோடு பேச வருகிறார் நமது உண்மையும் சொல்வோம் (எப்பாவாச்சும்) டிவியில் எல்லோருக்கும் மிகவும் பரிட்சயமான பீலா பெருமாள்சாமி.
தொகுப்பாளினி மறைய, இருட்டாய் ஒரு அரங்கம்.மெதுவாய் வெளிச்சம் பரவுகிறது. காமிராவின் பார்வையில் இருவர். பளீரென எல்லா விளக்குகளும் ஒளிர நிகழ்ச்சி ஆ...ரம்பமாகிறது.
பீலா பெருமாள்சாமி : வணக்கம் திரு பிரபலப்பதிவர் பீதாம்பரம். எங்கள் உண்மையும் சொல்லுவோம் (எப்பவாச்சும்) டிவி சார்பாக கலந்துரையாடல் நிகழ்ச்சியில் உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி..
பிரபலப்பதிவர் பீதாம்பரம் : ரொம்ப சந்தோஷம். ஒரு நிமிஷம்...(தயாராய் வைத்திருக்கும் அருகிலிருக்கும் ஒரு பாத்திரத்தை எடுத்து டீப்பாயின் மேல் வைக்கிறார். பொரி, கடலை, மிக்சர் எல்லாவற்றையும் பிரித்து கொட்டி, 'வாங்க ரெண்டு பேரும் சேர்ந்து கலந்துட்டு அப்புறம் உரையாடலாம்'
பீ.பெ : ஆஹா என்ன நகைச்சுவை உணர்வு உங்களுக்கு, இந்த மாதிரி ஓர் கலந்து உரையாடலை உலகத்துக்கே அறிமுகப்படுத்தியிருக்கிறீர்கள்.
பி.பீ : அதான் இந்த பதிவுலகத்தின் புதுமை. புதுசு புதுசா ஏதாச்சும் செஞ்சிகிட்டே இருப்போம்.
பீ.பெ : சரிங்க அது பற்றி பிறகு பேசலாம். முதல் கேள்வி உங்க சொந்த ஊர் என்ன?
பி.பீ : அதான் என் பேர்லயே இருக்கே, தாம்பரம்ங்க!
பீ.பெ : ஆஹா, பேர்லயே ஊரு... இது பற்றி ஒரு இடுகை கூட எழுதியிருக்கிறீர்கள் இல்லையா?
பி.பீ : சரியான ஞாபகசக்தி உங்களுக்கு. சிதம்பரம், பழனி, மருதன்னு சும்மா பூந்து விளையாடியிருப்பேன். பதினைஞ்சி பின்னூட்டம், தமிலிஷ்-ல பத்து, தமிழ்மணத்துல நாலுன்னு சூப்பர் டூப்பர் ஹிட்டுங்க அந்த இடுகை.
பீ.பெ : கேட்கவே சந்தோஷமா இருக்கு. அதில் பத்து பின்னூட்டத்துக்கு உங்க பதில்... சரி, பிரபலப்பதிவர்னு பட்டம் உங்களுக்கு யார் கொடுத்தது?
பி.பீ : சரக்கில்லாதவங்கதான் அடுத்தவங்க தர்றத வாங்கணும், இதெல்லாம் நமக்கு நாமே திட்டத்துல வந்ததுதான், உங்க பீலா பெருமாள் மாதிரி...
பீ.பெ : சரி, அதெல்லாம் இருக்கட்டும், வலையுலகத்தில் என்னென்ன புதுமை செய்திருக்கிறீர்கள்?
பி.பீ : அது பற்றி விடிய விடிய பேசிக்கொண்டே இருக்கலாம்...
பீ.பெ : வேண்டாங்க, கொஞ்சம் சுருக்கமா நிகழ்ச்சிக்கான அரை மணி நேரத்துல சொல்லுங்களேன், அதிர்ச்சியான தகவல்களை அதிகம் கேக்கக்கூடாது என நம் டிவியில வர டாக்டர் டக்ளஸ் பாண்டி சொல்லியிருக்காரு.
பி:பீ : ஒரு சினிமா வந்துச்சின்னா மத்தவங்கல்லாம் விமர்சனம் போடறவரைக்கும் காத்திருந்து படத்தைப் பார்க்காமலேயே எல்லாத்தையும் படிச்சிட்டு கலந்து கட்டி அழகா விமர்சனம் எழுதிடுவேன்.
பீ.பெ : ஆமாமாம், படம் எடுக்கப்போவதாய் வந்த தகவலை வைத்தே படம் பார்த்து விமர்சனம் எழுதியதாய் சொல்லி பல்பு வாங்கினீர்களே, நன்றாக நினைவில் இருக்கிறது.
பி:பீ : அப்புறம் பிடிச்ச பத்துன்னு சூப்பரா ஒரு விஷயம். எல்லாரும் என்னென்னவோ எழுதினாங்க! நான் என்ன எழுதினேன் தெரியுமா? தலைப்பிரட்டை, ஓணான், பட்டாம் பூச்சி, பொன்வண்டு.... படிச்சிட்டு எல்லாம் அரண்டுட்டாங்க.
பீ.பெ : ஆகா அருமை, அருமை. அப்புறம் நீங்க எழுதிய கேரக்டர் இடுகையைப் பற்றி சொல்லுங்களேன்!
பி.பீ : பத்தே நிமிஷத்துல எழுதி போட்டேன் அந்த இடுகையை. தமிழ், இந்தி, இங்கிலீஷ் -ல இருக்கிற கேரக்டர் எல்லாத்தையும்போட்டு அதுக்கு அழகா விளக்கமும் கொடுத்தேன் பாருங்க, ஒட்டுப்பட்டையே பிச்சிக்கிச்சி.
பீ.பெ : ரொம்ப அருமையா இருக்குங்க, நேயர்களே, ஒரு சின்ன விளம்பர இடைவெளிக்கு அப்புறம் நமது பேட்டியை தொடரலாம்.
(விளம்பரத்திலிருந்து நாளை பார்க்கலாம், பிடித்திருந்தால்)
