ஜாக்கி அண்ணனுக்கு ஒரு மடல்...

|

எவ்வளவு நாள் பழகியிருக்கிறோம் என்பதில் நட்பல்ல, எப்படி பழகியிருக்கிறோம் என்பதில்தான்... இதற்கு ஒரு நல்ல உதாரணம் என் அன்பு அண்ணன், பங்காளி நீங்கள்தான்...

சிலரிடம் மரியாதையை எதிர்பார்க்க முடியாது, அண்ணா உங்களிடம் எதிர்ப்பார்க்கவே முடியாது, பதிலாய் ஏகமாய் பாசத்தினை, உண்மையான் நட்பினை. ஆம், உங்களுக்கு குழந்தை மனசு அண்ணா, அதனால்தான் மனதில் உள்ளதைப் பட்டென பேசுகிறீர்கள்.

முதல் நாள் சந்தித்த நாம் இருவரும் மனம் விட்டு நிறைய பேசினோம், உணவகத்தில் மதிய உணவு உண்டவாறு. எவ்வளவு எதார்த்தமாய் பேசினீர்கள், அதில் நான் உங்கள்பால் ஈர்க்கப்பட்டு 'அண்ணன் ஒருத்தன் நமக்கு இருக்காண்டா' (பார்த்தீர்களா, உங்களைப்பற்றி எழுதும்போதே எனக்கும் வார்த்தைகள் தடுமாறுகின்றன)எனத் தோன்றியது.

அண்ணா, கதிர் என்னிடம் சிரித்தபடி விளையாட்டாய் கேட்டார் 'பிரபா, என்ன அண்ணன் அண்ணன்னு பாசத்தைப் பொழியுறீங்க, உங்களைவிட ரொம்ப சின்னவர் தெரியுமா?' என.

'வயதில் தம்பியாயிருக்கலாம், அனுபவத்தில் எனக்கு அவர் அண்ணன்'என பதில் சொன்னதும், 'அப்பா சாமி இந்த விளையாட்டுக்கு நான் வரலை' எனச் சிரித்தார்.

உலகப்படவிழாவில் சந்தித்த நாம் ஒன்றாய் படங்கள் சில பார்த்தோம். மன்மதன் அம்பு படத்தினை பரங்கிமலை ஜோதியில் பார்த்தபோது படம் பார்த்து ரசித்ததைவிட உங்களின் அளப்பரைகளைதான் அதிகம் ரசித்தேன். ஜெய் ஜாக்கி.

ஈரோடு பதிவர் சந்திப்பு நமது மறு சந்திப்புக்கு அடிகோல, இன்னும் உங்களைப்பற்றி தெரிந்து, அறிந்துகொள்ள வாய்ப்பாய் அமைந்தது.

என்று அழைத்தாலும் 'ம்... சொல்லுடா' என அன்பாய் விளிப்பீரே அதற்காகவே போன் செய்துகொண்டே இருக்கலாமா எனத் தோன்றும்.

சமீபத்தில் ஈக்காடுத்தாங்கலில் இருக்கிறேன் என உங்களிடம் சொன்ன அடுத்த பத்தாவது நிமிடம் வந்து சந்தித்து, செல்லவேண்டிய இடத்துக்கு அழைத்துச்சென்று கோயம்பேடு வரை வந்து வழியனுப்பிவைத்தீரே, இதை நான் மறக்கவா முடியும்?

அண்ணா எல்லோருக்கும் கடிதம் எழுதிகிறீர்கள், உங்களுக்கு நான் எழுதப்போகிறேன் என விளையாட்டுக்காய் உங்களிடம் சொன்னது இன்று உண்மையாகிவிட்டது.

அண்ணா உங்களின் அன்புத் தம்பி என்பதில் இறுமாப்பு கொள்கிறேன், பெருமையடைகிறேன். ஜெய் ஜாக்கி...

உங்கள் அன்புத் தம்பி,

பிரபாகர்...

3 : பேர் படிச்சிட்டு சொல்றாங்க...:

sathishsangkavi.blogspot.com said...

என் அருமை பங்காளிகளுக்கு வாழ்த்துக்கள்...

Kumky said...

அண்ணன் சாக்கி வாழும் காலத்திலேயே நானும் வாழ்ந்து அவரை சந்தித்திருக்கிறேன் என பூரிப்படைவதில் நானும் பெரு மப்பு கொள்கிறேன்...

ஜெய் சாக்கி பேரவை
வடாக்கு தமிழ்நாடு.

Jackiesekar said...

நானே கோவமாதான் இருந்தேன்... என்டா... பஸ் விட்டோம்..திரும்ப வந்து வேலைக்கு சேர்ந்தானா? இல்லையா? இந்த பயபுள்ள ஒரு போனை கூட பண்ணலை பாருன்னு கோவத்துல இருந்தேன்...இப்ப கோவம் கொஞ்சம் தனிஞ்சி இருக்கு...தம்பி...

 

©2009 ”வாழ்க்கை வாழ்வதற்கே” | Template Blue by TNB