குற்றம்...நடந்தது என்ன?

|

'எலேய், நம்ம அப்புவ யாரோ கொன்னு கெணத்துல போட்டுட்டாங்களாம்... பாக்க போறேன்னு' பரபரப்பா வெளியிலிருந்து ரமேசு கத்தினான்.
பழயத எடுத்து வாயில வெக்கப்போன மணி அப்படியே கெடாசிட்டு வெளிய ஓடினான்.

வண்டிய பரத்த, 'எப்படிடா? ராத்திரி 2 மணி வரைக்கும் நம்ம கூடத்தானே பேசிக்கிட்டிருந்தான்?, அதுக்கப்புறம் அவன் கூட யாரு இருந்தா?'

'கங்கா இருந்தான். அப்படியே அவனுக்கு ஒரு ஃபோன் போடு'

வழியெல்லாம் பரபரப்பா அந்த இடத்தக்கு எல்லோரும் போயிட்டிருந்தாங்க. ஆரன அடிச்சிகிட்டே வேகமா ரமேசு போயிட்டிருந்தான்.

'சுச்சாஃனு வருதுடா, அங்கதான் இருப்பான்னு நினக்குறேன்'

'சரிடா, போலீசு கேட்டா அவந்தான் இருந்தாங்கறத தெளிவா சொல்லிப்புடுவோம், நமக்கெதுக்கு வம்பு...?'

*******

'சொல்லித்தொலைடி, என்னடி ஆச்சு?.., ராத்திரி மூனு மணிக்கு வெளியில் இருந்து பேய் மாதிரி வந்த... அவன் வேற கெணத்துல மெதக்குறான், போலீசு உன்னையுமில்ல விசாரிப்பானுங்க, அய்யோ அந்த எழவெடுத்தவன் வேணாம்னு தலையில அடிச்சிகிட்டனே'

பேயடிச்ச மாதிரி செல்வி உட்காந்திருக்க 'சரி, சரி... ரொம்ப சத்தம் போடாத... போலீசு கீலீசு கேட்ட ஏதாச்சும் சொல்லி சமாளிச்சித் தொலைப்போம்...

பக்கத்து வீட்டில் இருந்த அந்த அம்மா தான் புருஷங்கிட்ட, 'இதோ பாருங்க... நான் யாருக்கும் பயப்பட மாட்டேன்... ராத்திரி அவ தலவிரி கோலமா வெறி புடிச்சமாதிரி வந்தத என் கண்ணால பார்த்தேன்... போலிசுக்கிட்ட கண்டிப்பா சொல்லப்போறேன்...

*******
சென்னை போகிற லாரியில் குழப்பமாய் யோசனையா கங்கா இருந்தான்.

'அவனுக்கு என்ன ஆச்சு? கடைசியா எங்கிட்டதானே பேசிகிட்டிருந்தான்?... மச்சான் என் ஆளைப் பாக்கப்போறேன், ஒரு முடிவோட இருக்கேன், இதுக்கு மேல கண்டிப்பா அவ அப்பனே என் காலில விழுந்தாவனும்னு புதிரா சொல்லிட்டு போனானே... எதுக்கும் ரெண்டு நாளைக்கு யாரு கண்ணுலயும் படாததுதான் நமக்கு நல்லது...'

*******

கொஞ்சமா தண்ணி இருந்த கிணத்துல இருந்து நேத்து ராத்திரி வரைக்கும் அப்புவா  இருந்த அத எடுத்து வெளியேப் போட்டிருந்தாங்க. தகவல் தெரிஞ்சி வந்த ரெண்டு போலீசு பக்கத்துல யாரையும் விடாம பாத்துகிட்டிருந்தாங்க.

அவனோட சின்னம்மா ரொம்ப ஓவராவே ஆக்டிங் கொடுத்து அழுதுகிட்டிருந்துச்சி, மனசுக்குள்ள வேற மாதிரியா நினைச்சிகிட்டு... 'ரங்கன தீர்த்துகட்ட சொன்னோம், ஆனா அவன் ரெண்டு நாளா ஊர்லயே இல்லை... யாரு செஞ்சிருப்பா? எப்படியோ சொத்து நமக்குத்தான்... சந்தேகம் வராதபடி நடந்துக்கனும்...'

******

எல்லாம் தள்ளி மச மசன்னு ஒரு உருவம் எல்லத்தையும் வேடிக்கை பார்த்துகிட்டிருக்கில்ல?... என்னது தெரியலையா? சாரிங்க...  எனக்கு நல்லா தெரியுது, அது அப்புவோட ஆவி... என்னமோ சொல்லுது, இருங்க கேட்டு சொல்றேன்...

'ராத்திரி கங்காகிட்ட சொல்லிட்டு கிணத்தடிக்கு செல்வியப் பாக்க வந்தப்போ ரொம்ப ஆர்வமா அவள கட்டிப் புடிக்க போனேன். பொசுக்குன்னு அவ தள்ளிவிட கீழ சடார்னு விழுந்துட்டேன். தல கல்லுல பொட்டுனு பட்டு கிணத்துக்குள்ள விழுந்து செத்துட்டேன்... அது அதுவும் குழம்பிக்கிட்டு இருக்குது... பாக்கலாம் என்னதான் ஆகுதுன்னு'...

அதுக்கப்புறமா என்ன ஆச்சுன்னு கேக்குறீங்களா? யாருக்குத் தெரியும்? நான் அங்க இருந்து வந்துட்டேன், விசாரிச்சி சொல்றேன், இல்லாட்டி நீங்க பேப்பர வாங்கி பாருங்க...

4 : பேர் படிச்சிட்டு சொல்றாங்க...:

senthil velayuthan said...

அதுக்கப்புறமா என்ன ஆச்சுன்னு கேக்குறீங்களா? யாருக்குத் தெரியும்? நான் அங்க இருந்து வந்துட்டேன், விசாரிச்சி சொல்றேன், இல்லாட்டி நீங்க பேப்பர வாங்கி பாருங்க.

ithu nremba kodumai ... mudiva sollama porathu.................

Chitra said...

அதுக்கப்புறமா என்ன ஆச்சுன்னு கேக்குறீங்களா? யாருக்குத் தெரியும்? நான் அங்க இருந்து வந்துட்டேன், விசாரிச்சி சொல்றேன், இல்லாட்டி நீங்க பேப்பர வாங்கி பாருங்க...


.....இப்படியும் முடிக்கலாமோ? :-)

ஈரோடு கதிர் said...

||இல்லாட்டி நீங்க பேப்பர வாங்கி பாருங்க...||

ஹிந்து பேப்பர்ல ஒன்னும் போடலையே பிரபா! :)

Paleo God said...

ஆவிக்கே பகுத்தறிவு இருக்கு அதுவும் பேப்பரப் பார்த்துத்தான் விஷயத்தை தெரிஞ்சிக்கும்னு பின் நவீன பாணியில சொல்றீங்களா பிரபா? :))

 

©2009 ”வாழ்க்கை வாழ்வதற்கே” | Template Blue by TNB