உலகத்துலேயே அவருதான் மாவீரன்னு ஒருத்தரு நினைச்சிகிட்டிருந்தாரு. அதுல கொஞ்சம் உண்மையும் இருந்துச்சி, ஏன்னா அவருக்கு சகல வித்தைகளும் தெரியும்.
அதப் பத்தி ஜம்பமா கூட்டாளிங்ககிட்ட சொல்லிருக்கும்போது ஒருத்தர் சொன்னாரு...'நீ பெரிய வீரன் தான் ஒத்துக்கறேன், ஆனா அந்த மலையத் தாண்டிப்போனா அங்க ஒரு குரு இருக்காரு. அவருகிட்ட உன் திறமையக் காமிச்சி அவரு வாயால வீரன்னு சொன்னாத்தான் இந்த உலகத்துலயே நீ பெரிய பலசாலி' ன்னாரு.
சொன்னது நியாயமாப் படவே உடனே கிளம்பி மலையத் தாண்டிப்போய் அந்த குருவப் பார்த்தாரு. அவரு தன்னைப் பத்தி பெருமையா சொன்னத எல்லாம் பொறுமையா காதுல வாங்கிட்டு குரு, 'உங்களோட பலம் என்னன்னு கேட்டாரு.
'சும்மா சாதாரணமா நூறு பேரை அடிச்சிப்போட்டுடுவேன்' னு சொல்லவும், 'ஆஹா, பிரமாதம்' னு சிஷ்யனா சேர்த்துகிட்டு கடுமையான பயிற்சிகளை கொடுத்தாரு.
ஒரு ஆறு மாசம் போனதுக்கப்புறம் கூப்பிட்டு 'உங்களோட பலம் இப்போ எவ்வளவு'ன்னு கேட்டாரு. ஒரு அம்பது பேரை அடிச்சிப் போட்டுடுவேன்'னு சொல்லவும் இன்னும் நிறைய பயிற்சிகளை செய்யச் சொன்னாரு. திரும்ப ஒரு மூனுமாசம் கழிச்சி அதே கேள்வியக் கேட்க, இருபத்தைஞ்சின்னு பதில் வந்துச்சி. இப்படியா பத்து, அஞ்சின்னு நின்னது.
கடைசியா ஒரு நாள் கேட்டப்போ, 'அது எப்படிங்க, எதிராளிய வெச்சித்தானே சொல்ல முடியும்' னாரு.
'ஆஹா, இப்போதான் நீ உண்மையான வீரன்' னு வாழ்த்தி 'உனக்கு பயிற்சி தேவையில்லை' ன்னு அனுப்பி வெச்சாரு.
இதுக்கப்புறமும் நீதின்னு டிஸ்கியில சொல்லி... கதிர் என்னை கும்மனுமா என்ன?
மிச்சர்கடை
4 weeks ago
19 : பேர் படிச்சிட்டு சொல்றாங்க...:
டிஸ்கி போடாட்டி மட்டும் கும்ம மாட்டோமா?
17 நாள்ல ஒரே ஒரு இடுகை தானா?
ச்ச்ச்சீ..... த்த்த்த்...வேணா வேணாம்
ஏன், பிரபா. என்ன ஆச்சு இடுகையே காணோம் எதும் பில்லி சூனியம் வச்சுட்டாய்ங்ளா?
நல்லாருக்கு அண்ணா...
கதை சூப்பரு..
ஆனா, என்னமோ தலைப்புல பெரிய ரவுடி மாதிரி பிலிம் காட்டுற மாதிரி தெரியுது
நல்லாருக்கு பிரபா..
நல்லாருக்கு ப்ரபா
//
ஈரோடு கதிர் said...
டிஸ்கி போடாட்டி மட்டும் கும்ம மாட்டோமா?
//
எப்படியும் உண்டுன்னு தெரியும், கொஞ்சம் கம்மியா இருக்கட்டுமேன்னுதான்...
//
ஈரோடு கதிர் said...
17 நாள்ல ஒரே ஒரு இடுகை தானா?
ச்ச்ச்சீ..... த்த்த்த்...வேணா வேணாம்
ஏன், பிரபா. என்ன ஆச்சு இடுகையே காணோம் எதும் பில்லி சூனியம் வச்சுட்டாய்ங்ளா?
//
சரக்கு காலின்னும் சொல்லலாம். (ஹி...ஹி... நிறைய வேலை, அதான்)
//
கலகலப்ரியா said...
நல்லாருக்கு அண்ணா...
//
நன்றி சகோ... எழுதியன் நிறைவு கிடைக்கிறது.
//
ஈரோடு கதிர் said...
கதை சூப்பரு..
ஆனா, என்னமோ தலைப்புல பெரிய ரவுடி மாதிரி பிலிம் காட்டுற மாதிரி தெரியுது
//
புள்ளையார் புடிக்க குரங்கு மாதிரி...
//
முகிலன் said...
நல்லாருக்கு பிரபா..
//
நன்றி தினேஷ்...
//
வானம்பாடிகள் said...
நல்லாருக்கு ப்ரபா
//
நன்றிங்கய்யா...
நல்லாருக்குங்கண்ணா...கதையும் நீதியும்..
ஜென் கதைகள் சாயலோடு ஒரு நல்ல கதைு..
//
க.பாலாசி said...
நல்லாருக்குங்கண்ணா...கதையும் நீதியும்..
//
நன்றி இளவல்...
//
ஆரூரன் விசுவநாதன் said...
ஜென் கதைகள் சாயலோடு ஒரு நல்ல கதைு..
//
நன்றி ஆரூரன்.
கதை நல்லாயிருக்குங்க
எங்கேயோ படிச்சது - குருவும் சிஷ்யனும்... "புனைவு இல்லைங்கோ..."
சரி, சரி, நம்பிட்டோம்! நம்பிட்டோம்! :-)) இருந்தாலும் இதுலே அந்த சிஷ்யன் கிட்டே குரு வினவுவது மாதிரி, ஓ ஐயாம் சாரி, கேட்பது மாதிரி சிச்சுவேஷன் இருக்கே? :-)
நல்லாயிருக்கு
கதை சொன்னா நீதியும் சொன்னாத்தான் புரியும் பிரபா....எனக்கு !
Nice story Prabahar.
நல்லாருக்கு சகோதரா...
Post a Comment