தாய்மை

|


ஒரு துளி உயிரை
உணர்வோடு வாங்கி
கருவறை காத்து
கடினங்கள் தாங்கி

பொறுமையை போற்றி
பசி தூக்கம் மறந்து
உரு கொண்டு வெளியில்
உணர்வாகும் வரையில்

கண்ணென காத்து
கருத்தாய் போற்றி
பண்களை பாடி
பாசத்தை ஊட்டி

தென்படும் பொருளை
தெளிவுடன் விளக்கி
மனதினிற் பதித்து
மறவாமல் செய்து

வேளைக்கு ஓன்றாய்
ஆடைகள் பூட்டி
அழகினில் பூரித்து
ஆனந்தம் கொண்டு

நாழியும் அயராமல்
நினைவாய் இருந்து
பாலினை புகட்டி
பாதியாய் இளைத்து

தடுப்பு மருந்துகள்
தவறாது கொடுத்து
நடப்பு நிகழ்வினில்
நாட்டத்தை குறைத்து

அடம் பிடித்தழுதால்
ஆறுதல் சொல்லி
கடமையில் மட்டும்
கவனம் செலுத்தி

நல்லமுது சேர்த்து
நற்கதைகள் புகட்டி
கல்வியின் சிறப்பை
கருத்தாய் உணர்த்தி

பள்ளிக்கு அனுப்பி
பாடத்தை பயிற்று
நல்லோர் போதித்த
நல்லவை நல்கி

தந்தையவர் கோபமுடன்
தவறுக்காக திட்டிட
சிந்தை மாறி சினந்து
சோர்ந்து கிடக்கையில்

மந்திர வார்த்தையோடு
மருந்திட்டு மனக்காயம்
வந்த தடம் தெரியாமல்
வலி போகச் செய்து

விடலை பருவத்தில்
உண்டான மற்றங்களை
கூடவே கவனித்து
குட்டி சரி செய்து

கடமையினை நினைவூட்டி
கல்வியினில் மனம் திருப்பி
மடமையினை நீக்கி
மகத்தான வழி செலுத்தி

வேலையில்லை என்று
வாட்டமொடு இருந்தன்று
வேளைவரும் உனக்கென்று
வஞ்ஜையாய் பேசி

ஆலயங்கள் சென்று
ஆண்டவனை தொழுது
வேலையது கைசேர
வேண்டுதல்கள் புரிந்து

திருமண வயதில்
துணையினை தேடி
இருமனம் இணைத்து
இல்லறம் நுழைத்து

பெற்றிட்ட பிள்ளைகளை
பெரிதும் நினைத்து
பெருமையாய் பிள்ளை
புகழ் பிறரிடம் சொல்லி

பிள்ளைக்காக வாழுகின்ற
புனிதமான தாய்மைக்கு
தலை தாழ்ந்து வணங்கி
திருவடிகள் போற்றி

மேலும் பல பிறவியிலும்
மகனாக பிறந்திடவே
ஞாலமாளும் இறையவனை
வணங்கி வேண்டுகிறேன்...

பாசமுடன்
மகன்....

6 : பேர் படிச்சிட்டு சொல்றாங்க...:

Unknown said...

Thats really really good. It came from the bottom of your heart

Chandran

Bala said...

Its Really SUPERB, Bala

STSPriya said...

extreme sentimental, reach everyone heart.. make everyone to be proud of motherhood.its superb prabhagar anna!
priya

பிரபாகர் said...

Thank you sister...
Prabhagar...

தமிழ். சரவணன் said...

இதுபோல் தாய்மையேல்லாம் தற்பொழுது உள்ள (சில) பெண்களிடம் தேட வேண்டியதாய்இருக்கின்றது... ஆருமையான கவிதை

பிரபாகர் said...

நன்றி சரவணன்

பிரபாகர்...

 

©2009 ”வாழ்க்கை வாழ்வதற்கே” | Template Blue by TNB