'நிஜமாவா சொல்றே சுஜி? என்னமோ உங்க அப்பா ரொம்ப கண்டிப்பானவரு, காதல்னா புடிக்காது,காதல் சம்மந்தமா சீன் எதாச்சும் டி.வி. சேனல்ல வந்தாலும் உடனே மாத்திடுவாரு, அப்படி இப்படின்னு சொல்லுவே'
'ஆமா ரகு, எனக்கும் அதான் ஆச்சர்யமா இருக்கு. போன்ல அதிக நேரம் பேசறத கவனிச்சிருப்பாரு போல இருக்கு, நேத்து என் ரூம்ல செக் பண்ணி கண்டு பிடிச்சிட்டாரு. காலைல என்ன நேருக்கு நேரா ரகு-ங்ற பையனை காதலிக்கிறியான்னாரு. நடுங்கிகிட்டே ஆமான்னேன். உடனே சாயந்திரம் வீட்டுக்கு அழைச்சிட்டு வான்னாரு'
'ச்சே, சப்புனு போயிடுச்சே, என்னன்னமோ நடக்கும்னு கற்பனை பண்ணி வெச்சுருந்தேன், இப்போ எல்லாம் வேஸ்ட் ஆயிடுச்சி....'
'ரொம்ப அலட்டிக்காத, நினச்சது இப்போதான் நடக்க ஆரம்பிச்சிருக்கு, ரொம்ப பயமா இருக்கு, கடவுளை எல்லாம் வேண்டிட்டு இருக்கேன்'
'சேச்சே, எனக்கும் ரொம்ப உதறலா இருக்கு,பாப்போம், எல்லாம் அவன் விட்ட வழி'
'சரிப்பா, ஷார்ப்பா 7.00 க்கு வந்துடு, அப்பா ரொம்ப பன்ச்சுவல்'
'வாங்க தம்பி, உட்காருங்க, எனக்கு காப்பி, உங்களுக்கு... ராஜி, காப்பியாம், சரி உங்களை பத்தி சொல்லுங்க'
'அப்பா கிடையாது, அம்மா மட்டும்தான். சேலம் பக்கத்துல சொந்த ஊரு. இன்ஜினீரிங் முடிச்சுட்டு சொந்தமா கன்ச்ட்ரக்சன் கம்பனி வெச்சிருக்கேன், 50 பேர் என்கிட்ட வேலை பாக்கறாங்க, நுங்கம்பாக்கத்துல ஆஃபிஸ்.
சுஜியோட காலேஜ்-க்கு பில்டிங் வேலையா போயிருந்தப்போ எதேச்சையாய் ரெண்டு மூணு தடவை பாத்தோம், ரொம்ப பிடிச்சிருந்தது.பேசும்போதுதான் ஒரே ஜாதின்னு தெரிஞ்சது'
'அப்பன்னா ஜாதியை பாத்துத்தான் காதலிக்க ஆரம்பிச்சிங்களா?'
'அப்படி இல்லைங்க சார், பிரச்சனைகள் கம்மியா வரும்னு சந்தோஷப்பட்டுட்டோம். ஆனா உங்களை பத்திதான் சுஜி தினமும் பயந்துட்டு இருக்கும்'
'பயப்படற பொண்ணுதான் இவ்வளோ வேலை செஞ்சிருக்கா?, தம்பி எனக்கும் என் வைஃப்க்கு மட்டும் தெரிஞ்ச விஷயத்தை இப்போ சொல்லப்போறேன். என்னோட மேரேஜ்-ஏ லவ் மேரேஜ் தான். என்னம்மா உனக்கு அதிர்ச்சியா இருக்க? நான் போஸ்ட் மாஸ்டரா சேலம் பக்கத்துல 25 வருஷத்துக்கு முன்னால வேலை பாத்துட்டு இருந்தேன்'.
'அந்த ஊர்ல காதல்னாலே அவ்வளவு கட்டுப்பாடு, யாரும் காதலிக்கவே கூடாது, மீறினா பஞ்சாயத்து அது இதுன்னு சொல்லி அந்த ஜோடியை பிரிச்சி, பொண்ணுக்கு உடனே அன்னிக்கே வேற கல்யாணம் செஞ்சி வெச்சி சம்மத்தப்பட்ட பையனை ஊரை விட்டே துரத்தி விட்டுடுவாங்க'.
'எனக்கும் காதல் வந்தது, ஊர் தலைவர் பொண்ணு மேல. விஷயம் தெரிஞ்சு ஒரே களேபரமாயிடுச்சி. நினைச்சா இப்பகூட பகீர்னு இருக்கு. உள்ளூர்காரன் பண்ணினாலும் பரவாயில்லை, வெளியூர் ஆளு.
வெவகாரம் இன்னும் மோசமா ஆச்சு. அப்போதான் சுஜி அம்மாவோட பெஸ்ட் ஃபிரண்டு சொர்ணம் என்ன வந்து பாத்துச்சி. ரெண்டு பேரையும் ஊரை விட்டே ஓடி போயுடுங்கன்னு சொல்லி, அதான் ஒரே சரியான வழின்னு சொல்லுச்சி'.
'வேல, சொந்த பந்தம் எல்லாத்தையும் உதறிட்டு நேரா பம்பாய் போயிட்டோம், இப்போ மும்பைங்கறாங்க'.
'10 வருஷம் ரொம்ப கஷ்டப்பட்டோம். அப்புறம் சென்னை வந்து பிசினஸ் ஆரம்பிச்சு...இப்போ ஒரு வழியா செட்டில் ஆயாச்சு. ஆனா அதுக்கப்புறம் அங்க என்ன நடந்ததுன்னே தெரியாது'
'நான் சொல்லுறேன், மகள் ஓடிப்போன அதிர்ச்சியில தலைவர் தற்கொலை பண்ணிட்டார். அந்த ஊர்ல காதலுக்கு இருந்த கட்டுப்பாடு தூள் தூளாயிடுச்சி. இதெல்லாம் எப்படி தெரியும்னு பாக்கறீங்களா? எங்க அம்மாதான் சொர்ணம், உங்களை பத்தி நிறைய சொல்லியிருக்காங்க'
'சொர்ணம் பையனா நீ? கடவுளே, ராஜி ஏன் அப்பா வை நினைச்சு அழறியா? என்ன பண்றது, கடவுளோட கிருபையை பாத்தியா? நினைச்சாலே பிரமிப்பா இருக்கு. எதோ இழந்த மாதிரியே இருந்துச்சி, இப்போ தான் கொஞ்சம் நிறைவா இருக்கு. சுஜி, ரொம்ப தேங்க்ஸ்மா. உன்னாலதான் எங்களோட இழப்பையெல்லாம் ஈடு செய்ய வாய்ப்பு கிடச்சிருக்கு'
'சார் அம்மா இந்த விஷயத்தை கேட்டா ரொம்ப சந்தோஷப்படுவாங்க'
'இன்னும் என்ன, சார் சார்னு', 'மாமான்னு சொல்லுங்க'
'சரிங்க மாமா'
முன்னோட்டம்.
அடுத்த பதிவு 'மொன்னக்கத்தியும் மொத்த பனியனும்'.
கங்காதரன போலீஸ் ஸ்டேஷன் ல வெச்சி பின்னி எடுத்துட்டாங்க.
'என்னது ஐ விட்னசா, யாரு' ன்னு என் தம்பி கேக்க, 'சரவணன்' னு சொல்லவும் என் தம்பி சரி மேட்டர ஈஸியா முடிச்சிடலாம்னு நெனச்சிகிட்டான்.
இந்த பதிவு உங்களுக்கு பிடிச்சிருந்தா என்னை மேம்படுத்த உங்க கருத்துத்தையும், உற்சாகப்படுத்த ஓட்டையும் போடுங்களேன்!
அன்னச்சத்திரம் 2025
3 months ago
