ஒரு நாள் கூத்து...

|

அவனுக்கு மிகவும் ஆச்சர்யமாயிருந்தது, இன்னமும் இதுபோல் இருக்கிறதா என. அவன், கிருஷ்ணன், வெளி மாநிலத்தில் வேலை செய்பவன் விடுமுறைக்கு தனது ஊருக்கு வந்திருக்கிறான்.

மெதுவாய் அவனது நண்பன் வெங்கடேஷை கேட்டான். 'இன்னமும் இது மாதிரி இருக்கிறதா' என.

'இல்ல கிஷ்ணா, ரொம்ப வருஷத்துக்கு முன்னால இது மாதிரி பாத்திருக்கோம், இப்போ ஆச்சர்யமாத்தான் இருக்கு'

ஆச்சரியப்பட்ட அந்த விஷயம் இதுதான். ஒரு இளைஞன், ஒரு இளைஞி மற்றும் ஒரு சிறு குழந்தை நன்றாய் வேடமிட்டு தெரு முனையில் ஆடுவதற்கு தயாராக இருந்தார்கள். ஒரு சைக்கிளில் அவர்களது எல்லா உடமைகளும் இருந்தது, தயாராய் வெளியே பாடுவதற்கு எடுத்து வைத்திருந்த இரு ஸ்பீக்கர், ஒரு டேப் ரெக்கார்டர் உட்பட.

பக்கத்தில் இருந்த வீட்டில் கெஞ்சி கரண்ட் எடுத்து சினிமா பாட்டினைப் போட்டு ஆட ஆரம்பித்தார்கள்.

அது மாலை வேளையென்றாலும் அவ்வளவாய் கூட்டமில்லை, வரவேற்பும் இல்லை. இப்போதெல்லாம் டி.வியை விட்டு யார் வெளியே வருகிறார்கள்?

எவ்வளவோ பாட்டுக்களுக்கு ஆடியும் கூட்டமும் இல்லை, காசும் சேரவில்லை. அவர்களைப் பார்க்க ரொம்ப பாவமாய் இருந்தது.

கிருஷ்ணன் அந்த நபரை அழைத்து 'ஏப்பா, காலம் மாறிப்போச்சில்ல, வேற வேலை பாக்கலாம்ல, சரியான வரவேற்பு இல்லல்ல?' என கேட்க,

'வேற எதுவும் தெரியாதுங்க, ஆட்டமாடறதுதான் எனக்குத்தெரியும், அப்படி ஆடித்தான் இவளை கல்யாணம் கட்டிகிட்டேன், புள்ளையும் பெத்துகிட்டேன், சாவர வறைக்கும் இதுதான், நம்மள மாத்திக்க முடியாது' என சொல்ல அவனுக்கு மனசுக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது.

சரி இன்னிக்கு எவ்வளவு வசூல் ஆச்சு என கேட்க அவன் உதட்டை பிதுக்க, சட்டென பையில் கையைவிட்டு இரு ஐம்பது ரூபாய்த் தாள்களைக் கொடுக்க, கண்கலங்க பெற்றுக்கொண்டு, 'தப்பா நினைச்சிக்காதீங்க, எனக்கு இன்னிய செலவுக்கு ஐம்பது ரூவா போதும், நாளைக்கு ஆண்டவன் பாத்துக்குவான்' எனச் சொல்லி ஒரு ஐம்பதை திருப்பிக்கொடுக்க கிருஷ்ணன் விக்கித்து நின்றான்.

28 : பேர் படிச்சிட்டு சொல்றாங்க...:

புலவன் புலிகேசி said...

வறுமையிலும் நேர்மை. அந்த ஆட்டக் காரனுக்கு சல்யூட்.

cheena (சீனா) said...

அன்பின் பிரபாகர்

சிறுகதையின் கருத்து பாராட்டத் தக்கது. ஒரு தாளைத் திருப்பித் தந்த அந்தக் கலைஞன் வாழ்க - நாளி இறைவன் பார்த்துக்கொள்வான் என்ற நம்பிக்கைக்கும் - இன்று பார்த்துக் கொண்டவனை ஆண்டவன் அளவுக்கு உயர்த்திய பெருந்தனமையும் அவனின் நல்ல குணங்கள்

நல்வாழ்த்துகள் பிரபாகர்

நிலாமதி said...

ஏழ்மையிலும் உழைத்து பிழைக்கும் அவர்களது பண்பு வாழ்க. சிறு கதையில்
பெரும் தத்துவம். பாராட்டுக்கள். உங்களுக்கு. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

ஈரோடு கதிர் said...

அருமை பிரபாகர்

வாழ்த்துகள்

அன்புடன்
கதிர்

ஆரூரன் விசுவநாதன் said...

nice

ரோஸ்விக் said...

இரண்டு நல்லவர்களுக்கும் வாழ்த்துகள். :-)

Raju said...

நல்லாருக்குண்ணே.

ஸ்ரீ.கிருஷ்ணா said...

short & sweet....

பூங்குன்றன்.வே said...

//தப்பா நினைச்சிக்காதீங்க, எனக்கு இன்னிய செலவுக்கு ஐம்பது ரூவா போதும், நாளைக்கு ஆண்டவன் பாத்துக்குவான்'//

படிக்கும்போதே அவரை பார்க்க வேண்டுமென்ற ஆசை வருது நண்பா.அவர் எங்கிருந்தாலும் வாழ்க !!!

Narmada said...

உண்மையான கருத்து... அடிமட்டத்தில் இருப்பவர்கள் நேர்மையாகத் தான் இருக்கிறார்கள் இன்னமும்....

படித்தவர்கள், நன்கு சம்பாதிப்பவர்கள் நிச்சயமாக நினைத்து பார்க்க வேண்டிய விஷயம்....

கிறுக்கல்கள்/Scribbles said...

Good

தராசு said...

கடைசி வார்த்தை தான் சிக்ஸர்

vasu balaji said...

கிருஷ்ணா! ஒன் ஃபிஃப்டி ப்ளீஸ்:)

ஹேமா said...

ஏழ்மை இருக்கும் இடத்தில்தான் அன்பும் நேர்மையும் எப்பவுமே கூடியிருக்கிறது.வாழ்த்துகள் பிரபா.

Prathap Kumar S. said...

கொள்ளை அடிக்கிறது கோடீஸ்வரனுங்க வேலை..ஏழைகள் எப்பவும் கண்ணிமானவர்கள்தான்...நல்லாருக்குண்ணே கதை..

balavasakan said...

மனதை தொட்டு விட்டீர்கள் அண்ணா..

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

நறுக்குனு இருக்கு பிரபாகர். தொடருங்கள் :)

பிரபாகர் said...

//
புலவன் புலிகேசி said...
வறுமையிலும் நேர்மை. அந்த ஆட்டக் காரனுக்கு சல்யூட்.
//
நன்றி புலிகேசி!

//
cheena (சீனா) said...
அன்பின் பிரபாகர்

சிறுகதையின் கருத்து பாராட்டத் தக்கது. ஒரு தாளைத் திருப்பித் தந்த அந்தக் கலைஞன் வாழ்க - நாளி இறைவன் பார்த்துக்கொள்வான் என்ற நம்பிக்கைக்கும் - இன்று பார்த்துக் கொண்டவனை ஆண்டவன் அளவுக்கு உயர்த்திய பெருந்தனமையும் அவனின் நல்ல குணங்கள்

நல்வாழ்த்துகள் பிரபாகர்
//
மிக்க நன்றிங்கய்யா, உங்களின் அன்பிற்கும் வாழ்த்துக்கும்.

பிரபாகர் said...

//
நிலாமதி said...
ஏழ்மையிலும் உழைத்து பிழைக்கும் அவர்களது பண்பு வாழ்க. சிறு கதையில்
பெரும் தத்துவம். பாராட்டுக்கள். உங்களுக்கு. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.
//
நன்றி என் அன்பு சகோதரி...

//
ஈரோடு கதிர் said...
அருமை பிரபாகர்

வாழ்த்துகள்

அன்புடன்
கதிர்
//
அன்பிற்கு நன்றி கதிர்.

பிரபாகர் said...

//
ஆரூரன் விசுவநாதன் said...
nice
//
நன்றி ஆரூரன்...

//
ரோஸ்விக் said...
இரண்டு நல்லவர்களுக்கும் வாழ்த்துகள். :-)
//
நன்றி ரோஸ்விக்...

பிரபாகர் said...

//
♠ ராஜு ♠ said...
நல்லாருக்குண்ணே.
//
நன்றி ராஜு...

//
ஸ்ரீ.கிருஷ்ணா said...
short & sweet....
//
நன்றி ஜெய்.

பிரபாகர் said...

//
பூங்குன்றன்.வே said...
//தப்பா நினைச்சிக்காதீங்க, எனக்கு இன்னிய செலவுக்கு ஐம்பது ரூவா போதும், நாளைக்கு ஆண்டவன் பாத்துக்குவான்'//

படிக்கும்போதே அவரை பார்க்க வேண்டுமென்ற ஆசை வருது நண்பா.அவர் எங்கிருந்தாலும் வாழ்க !!!
//
நன்றி பூங்குன்றன். இந்தியப்பயணம் இனிதாய் அமைய வாழ்த்துக்கள்.

//
Narmada said...
உண்மையான கருத்து... அடிமட்டத்தில் இருப்பவர்கள் நேர்மையாகத் தான் இருக்கிறார்கள் இன்னமும்....

படித்தவர்கள், நன்கு சம்பாதிப்பவர்கள் நிச்சயமாக நினைத்து பார்க்க வேண்டிய விஷயம்....
//
நன்றி சகோதரி.

பிரபாகர் said...

//
கிறுக்கல்கள் said...
Good
//
நன்றி மாமா...

//
தராசு said...
கடைசி வார்த்தை தான் சிக்ஸர்
//
நன்றிங்கண்ணே!

//
வானம்பாடிகள் said...
கிருஷ்ணா! ஒன் ஃபிஃப்டி ப்ளீஸ்:)
//
சேர்ந்து கேட்போம் அய்யா...

பிரபாகர் said...

//
ஹேமா said...
ஏழ்மை இருக்கும் இடத்தில்தான் அன்பும் நேர்மையும் எப்பவுமே கூடியிருக்கிறது.வாழ்த்துகள் பிரபா.
//
நன்றி ஹேமா!

//
நாஞ்சில் பிரதாப் said...
கொள்ளை அடிக்கிறது கோடீஸ்வரனுங்க வேலை..ஏழைகள் எப்பவும் கண்ணிமானவர்கள்தான்...நல்லாருக்குண்ணே கதை..
//
நன்றி பிரதாப், அன்பிற்கு, கருத்துக்கு.

பிரபாகர் said...

//
Balavasakan said...
மனதை தொட்டு விட்டீர்கள் அண்ணா..
//
நன்றி பாலவாசகன்.

//
ச.செந்தில்வேலன் said...
நறுக்குனு இருக்கு பிரபாகர். தொடருங்கள் :)
//
நன்றிங்க செந்தில்.

சிநேகிதன் அக்பர் said...

நெகிழ்ச்சியான உணர்வைத்தந்தது உங்கள் எழுத்து.

Paleo God said...

கடமையை செய் பலனை எதிர்பார்க்காதே என்பது போல கண்ணியமாய் (காசு கிடைக்கா விட்டாலும்) இவர்கள் வாழ்க்கை அந்த 50 ருபாய் தாளை திருப்பிக்கொடுக்கத்தான் வைக்கும். எதிர்பார்த்தே அலையும் மனது 60 இன்ச் டி வி இருந்தாலும் இலவச டி வி க்கு அலையும். நல்ல பதிவு.

//தமிழின் மேல் மிகுந்த ஆர்வம் கொண்ட 37 வயதான(மனதால் 27 மட்டும்)இளைஞன்.// same blood :))

பிரபாகர் said...

//
henry J said...
தினசரி 10 இணையதலங்களை பார்பதான் மூலம் இணையதளத்தில் 5$ சம்பாதிக்கலாம். நன் இந்த இனையதளம் மூலம் 5$ பெற்றேன். அதற்கான ஆதாரம் இந்த தலத்தில் உள்ளது. http://simplygetit.blogspot.com/2009/12/make-money-online-100-orginal-ptc-site.html
//
ரொம்ப சந்தோஷங்க...

//
அக்பர் said...
நெகிழ்ச்சியான உணர்வைத்தந்தது உங்கள் எழுத்து.
//
நன்றி அக்பர், வரவிற்கு, கருத்துக்கு.

//
பலா பட்டறை said...
கடமையை செய் பலனை எதிர்பார்க்காதே என்பது போல கண்ணியமாய் (காசு கிடைக்கா விட்டாலும்) இவர்கள் வாழ்க்கை அந்த 50 ருபாய் தாளை திருப்பிக்கொடுக்கத்தான் வைக்கும். எதிர்பார்த்தே அலையும் மனது 60 இன்ச் டி வி இருந்தாலும் இலவச டி வி க்கு அலையும். நல்ல பதிவு.

//தமிழின் மேல் மிகுந்த ஆர்வம் கொண்ட 37 வயதான(மனதால் 27 மட்டும்)இளைஞன்.// same blood :))
//
நன்றிங்க... சக நண்பராகிய உங்களின் அழகிய பின்னூட்டத்துக்கு நன்றி...

©2009 ”வாழ்க்கை வாழ்வதற்கே” | Template Blue by TNB