இவங்களோட அத்த மவன் புலம்புனத வாழறதும் சாவறதும் உன் வார்த்தையில... இடுகையில படிச்சிட்டு வந்துடுங்களேன்...
கருப்புன்னு சொல்லுறியே
கரி போல இருக்கும் நீயும்
வெறுப்பெல்லாம் உன் மேல
ஒரு துளியும் கிடையாது
எரிகின்ற நெருப்பு போல
என்மேல ஆசையின்னு
தெரிஞ்சித்தான் உனைவிட்டு
ஒதுங்கியும் போறேன் நானு.
அத்தையவ பெத்தெடுத்த
அன்பு நிறை மச்சானே
சொத்தையின்னு ஒதுக்கவில்ல
சொல்லுறத கேட்டுத்தொல
பெத்துக்கிற புள்ளங்களும்
முத்தாட்டம் இருந்தாத்தான்
செத்து போற காலம் மட்டும்
சந்தோஷம் சேர்ந்திருக்கும்
சொந்தத்தில பண்ணிகிட்டச்
சந்ததிங்க விளங்காது
சிந்தனைய மாத்திகிட்டு
சீக்கிரமா வேறொருத்தி
எந்த ஊரில் இருந்தாலும்
சீக்கிரமா கண்டுபிடி
வந்தவளும் உன்னுடைய
வாட்டமெல்லாம் போக்கிடுவா
சோசியனு சொல்லுறான்னு
சொக்கிப்போயி நிக்காத
வேசம் போடும் அந்தாளு
வேரிடத்தில் அமையுமுன்னு
கூசாம சொல்லுறான்னு
கண்டுவந்த அம்மாவும்
விசும்பலோட சொன்னாங்க
விளங்களயா ஆசமச்சான்
தன்கு தடயில்லாம
தாங்கி வரும் செல்வத்தோட
தங்கக்கிளி கிடைச்சிடுவா
தங்கமான ஒன் மனசுக்கு
சிங்கம் போல மயில் போல
சிறப்பான புள்ளங்களும்
உங்களுக்கு பொறந்துவிடும்
உற்சாகம் கொடுத்துவிடும்.
வேண்டாத தெய்வமெலாம்
வேண்டுறேன் நா உனக்கு
மீண்டுமொரு சென்மத்துல
மாறி பொறந்து நானும்
மனைவியா இருந்துட்டு
மனசெல்லாம் நிறையும்படி
உனக்காக வாழ்ந்திடனும்
உயிறதுவும் போறமட்டும்...
மிச்சர்கடை
4 weeks ago
31 : பேர் படிச்சிட்டு சொல்றாங்க...:
அட்டகாசம் பிரபாகர்.. அத்தை மகள் இதை விட பாசத்தை வெளிப்படுத்த முடியுமா?
இதுவே அழகான நாட்டுப்புறப்பாடலிற்கு ஏற்ற மாதிரி உள்ளது :) நேரமிருக்கும் பொழுது முயற்சி செய்து பாருங்கள். வாழ்த்துகள்
//வேண்டாத தெய்வமெலாம்
வேண்டுறென் நா உனக்கு
மீண்டுமொரு சென்மத்துல
மாறி பொறந்து நானும்
மனைவியா இருந்துட்டு
மனசெல்லாம் நிறையும்படி
உனக்காக வாழ்ந்திடனும்
உயிறதுவும் போறமட்டும்//
நன்றாய் இருந்தது அண்ணன் ...................................மாறி பிறந்து சூப்பர் அண்ணன்
//சொந்தத்தில பண்ணிகிட்டச்
சந்ததிங்க விளங்காது//
அருமையான கருத்தை அழகாக எழுதியிருக்கிறீர்கள்.வாழ்த்துக்கள்.
அட்ர்ர்ர்ரா சக்கை....
கெடா வெட்டி பொங்க வச்சது பலிச்சிடுச்சுங்கோவ்...
(புரியாதவங்க எதுக்கு அந்த இடுகையில என் பின்னூட்டத்த படிச்சிட்டு வந்திருங்க)
அருமையான கவிதை
அருமையான கவிதை பிரபாகர்
படிக்கவே இதமா இருக்கு.
தெம்மாங்கு பாட்டாய், தென்பாங்கு காற்றாய்....வரிகள்
//
ச.செந்தில்வேலன் said...
அட்டகாசம் பிரபாகர்.. அத்தை மகள் இதை விட பாசத்தை வெளிப்படுத்த முடியுமா?
இதுவே அழகான நாட்டுப்புறப்பாடலிற்கு ஏற்ற மாதிரி உள்ளது :) நேரமிருக்கும் பொழுது முயற்சி செய்து பாருங்கள். வாழ்த்துகள்
//
நன்றி செந்தில்வேலன்... ரொம்ப சந்தோஷம். உங்களின் பாராட்டுக்கள் உற்சாகமா இருக்கு. கண்டிப்பாய் இன்னும் செம்மையாய் எழுத முயற்சிக்கிறேன்...
//
வெண்ணிற இரவுகள்....! said...
//வேண்டாத தெய்வமெலாம்
வேண்டுறென் நா உனக்கு
மீண்டுமொரு சென்மத்துல
மாறி பொறந்து நானும்
மனைவியா இருந்துட்டு
மனசெல்லாம் நிறையும்படி
உனக்காக வாழ்ந்திடனும்
உயிறதுவும் போறமட்டும்//
நன்றாய் இருந்தது அண்ணன் ...................................மாறி பிறந்து சூப்பர் அண்ணன்
//
நன்றி என் அன்பு தம்பி...
//
துபாய் ராஜா said...
//சொந்தத்தில பண்ணிகிட்டச்
சந்ததிங்க விளங்காது//
அருமையான கருத்தை அழகாக எழுதியிருக்கிறீர்கள்.வாழ்த்துக்கள்.
//
நன்றி ராஜா....
//
ஈரோடு கதிர் said...
அட்ர்ர்ர்ரா சக்கை....
கெடா வெட்டி பொங்க வச்சது பலிச்சிடுச்சுங்கோவ்...
(புரியாதவங்க எதுக்கு அந்த இடுகையில என் பின்னூட்டத்த படிச்சிட்டு வந்திருங்க)
//
அந்த பின்னூட்டத்துக்குத்தாங்க இந்த பதிலே! நன்றி கதிர்!
//
ஸ்ரீ.கிருஷ்ணா said...
அருமையான கவிதை
//
நன்றி ஜெய்.... அன்பிற்கு...
//
Starjan ( ஸ்டார்ஜன் ) said...
அருமையான கவிதை பிரபாகர்
//
நன்றி என் இனிய நண்பரே!
//
சின்ன அம்மிணி said...
படிக்கவே இதமா இருக்கு.
//
நன்றிங்க சின்ன அம்மணி... உங்க ஊக்கம்தான் என்னை இன்னும் நல்லா எழுதத் தூண்டுது!
//
ஆரூரன் விசுவநாதன் said...
தெம்மாங்கு பாட்டாய், தென்பாங்கு காற்றாய்....வரிகள்
//
நன்றி ஆரூரன்...
ஏனுங் கதிர். அத்த மவ கட்டமாட்டன்னா கெடா வெட்றன்னா நேர்ந்துகிட்டாரு பிரவு?
நல்லாருக்கு பிரபா
அடடா...நாமல்லாம் யூத்துன்னு மறுமடியும் நிருபிச்சிட்டீங்க...
அருமை...அருமை....
தல கிராமியத்தின் தொடர்ச்சியில அறிவியல் ரீதியான சமூக பார்வை. சிறப்பான பாடல் தல...
//
வானம்பாடிகள் said...
ஏனுங் கதிர். அத்த மவ கட்டமாட்டன்னா கெடா வெட்றன்னா நேர்ந்துகிட்டாரு பிரவு?
//
அய்யா, அடுத்த ஜென்மத்துல பண்ணிக்கப்போறாங்கள்ல அதனால சொல்லியிருக்காருங்கோ!
//
வானம்பாடிகள் said...
நல்லாருக்கு பிரபா
//
நன்றிங்கய்யா!
//
க.பாலாசி said...
அடடா...நாமல்லாம் யூத்துன்னு மறுமடியும் நிருபிச்சிட்டீங்க...
அருமை...அருமை....
//
நன்றி இளவல்... ரொம்ப சந்தோஷம்...
//
புலவன் புலிகேசி said...
தல கிராமியத்தின் தொடர்ச்சியில அறிவியல் ரீதியான சமூக பார்வை. சிறப்பான பாடல் தல...
//
நன்றி புலிகேசி...
வழக்கம் போல... அருமையா இருக்குண்ணா... ஆரூர் சொன்னத வழிமொழியறேன்...
"சொந்தத்தில பண்ணிகிட்டச்
சந்ததிங்க விளங்காது"
நல்ல கருத்தை வலியுறுத்தி இருக்கிறீர்கள்.அருமை.
//மனைவியா இருந்துட்டு
மனசெல்லாம் நிறையும்படி
உனக்காக வாழ்ந்திடனும்
உயிறதுவும் போறமட்டும்... //
அருமை.
மிகப் பிடித்திருக்கிறது பிரபா. அந்தப் பெண் சொல்வது அத்தனையும் அருமையான கருத்துக்கள் தான் என்றாலும் இதில் தோற்றுப்போன காதலின் வலியும் இருப்பதாக நினைக்கிறேன்.
எந்த வரியைப் பாராட்டுறது? எல்லாமே நல்லாயிருக்கு ரெண்டு பதிவுலையும்.
ஆமா, எப்பவுல இருந்து நாட்டுப்புறப்பாட்டு எழுத ஆரம்பிச்சீங்க?? புஷ்பவனம் குப்புசாமி உங்களைத் தேடிகிட்டு இருக்காரு. :-))
//
கலகலப்ரியா said...
வழக்கம் போல... அருமையா இருக்குண்ணா... ஆரூர் சொன்னத வழிமொழியறேன்...
//
நன்றி அன்பு சகோதரி!
//
மாதேவி said...
"சொந்தத்தில பண்ணிகிட்டச்
சந்ததிங்க விளங்காது"
நல்ல கருத்தை வலியுறுத்தி இருக்கிறீர்கள்.அருமை.
//
நன்றி சகோதரி, அன்பிற்கு, பாராட்டிற்கு.
//
Sangkavi said...
//மனைவியா இருந்துட்டு
மனசெல்லாம் நிறையும்படி
உனக்காக வாழ்ந்திடனும்
உயிறதுவும் போறமட்டும்... //
அருமை.
//
நன்றிங்க நண்பா!
//
செ.சரவணக்குமார் said...
மிகப் பிடித்திருக்கிறது பிரபா. அந்தப் பெண் சொல்வது அத்தனையும் அருமையான கருத்துக்கள் தான் என்றாலும் இதில் தோற்றுப்போன காதலின் வலியும் இருப்பதாக நினைக்கிறேன்.
//
ஆம் சரவணக்குமார்! நன்றிங்க!
//
ரோஸ்விக் said...
எந்த வரியைப் பாராட்டுறது? எல்லாமே நல்லாயிருக்கு ரெண்டு பதிவுலையும்.
ஆமா, எப்பவுல இருந்து நாட்டுப்புறப்பாட்டு எழுத ஆரம்பிச்சீங்க?? புஷ்பவனம் குப்புசாமி உங்களைத் தேடிகிட்டு இருக்காரு. :-))
//
நன்றி தம்பி.... ஹி... ஹி...
அடடா அருமையான கவிதைதான் .
வாழ்த்துக்கள் நண்பரே !
தொடரட்டும் உங்களின் கவிப் பயணம் .
ஒரு மெல்லிய தாளக்கட்டோடு வாசிக்க இதமாயிருக்கு.நல்ல கருத்தோட பாச மழையாய் இருக்கு வரிகள்.
//
வாசகனாய் ஒரு கவிஞன் சங்கர் !!! said...
அடடா அருமையான கவிதைதான் .
வாழ்த்துக்கள் நண்பரே !
தொடரட்டும் உங்களின் கவிப் பயணம் .
//
ரொம்ப சந்தோஷம் சங்கர்! மிக்க நன்றி.
//
ஹேமா said...
ஒரு மெல்லிய தாளக்கட்டோடு வாசிக்க இதமாயிருக்கு.நல்ல கருத்தோட பாச மழையாய் இருக்கு வரிகள்.
//
மிக்க நன்றி சகோதரி!
அருமையான கவிதை
//
" உழவன் " " Uzhavan " said...
அருமையான கவிதை
//
வாருங்கள் நண்பா! நீண்ட இடவெளிக்குப்பின் வந்திருக்கிறீர்கள்... நன்றி...
Post a Comment