வறுமையின் காதல்... கவிதை...

|

வறுமையின் காதல்...

பார்த்ததும் பற்றிக்கொள்ள
பளிச்சென கேட்டேன்
பாதையில் என்னோடு
பயணிப்பாயா என.

வீரனாய் காத்து
விளக்காய் ஒளிர்ந்து
வசந்தமாய் போற்றி
வாழ்வை இனிதாக்கி

வீசு தென்றலும்
வீழா மோகமும்
வாடா மல்லியாய்
வசதியெல்லாம் செய்து

வாழ்வினை தந்தால்
வருவேன் உந்தனது
வாழ்வின் பாதையில்
வரவா சொல்வீர்

வறுமையின் காதல்
வசந்தத்தின் தேடல்
விளம்பலுக்கு நன்றி
விதியிருந்தால் மீண்டும்...

விலகியவன் சென்று
வாழ்வின் நிலையை
வருத்தமாய் பார்த்து
வழியேதும் இன்றி...

****

என்ன சொல்ல?...

கண்விழி பார்த்து
கவி சொன்னேன்
கைவிரல் சொடுக்கி
கதை சொன்னேன்
கன்னத்தை உரசி
காதல் சொன்னேன்
நானே உன்னுள் இனி
என்ன சொல்லுவேன்....

வலைச்சரத்தில் இன்று எனது முதல் நாள். சென்று பாருங்களேன்



25 : பேர் படிச்சிட்டு சொல்றாங்க...:

ஹாய் அரும்பாவூர் said...

"வாழ்வினை தந்தால்
வருவேன் உந்தனது
வாழ்வின் பாதையில்
வரவா சொல்வீர்"
நல்ல வரிகள்
எனக்கு கவிதை கொஞ்சம் தான் ரசிக்க தெரியும்
நல்ல கவிதை

ஆரூரன் விசுவநாதன் said...

//நானே உன்னுள் இனி
என்ன சொல்லுவேன்....//

ரசனையான வரிகள் பிரபா

Paleo God said...

ஒன்று வலி
இரண்டு நிவாரணி..

வலைச்சரம் ஆசிரியரே வாழ்த்துக்கள்.:)
::))

Unknown said...

இரண்டு கவிதைகளும் அருமை..

வலைச்சர ஆசிரியரானதற்கு வாழ்த்துகள்.

ஈரோடு கதிர் said...

//நானே உன்னுள் இனி
என்ன சொல்லுவேன்....//

அசத்தல்....

வாழ்த்துகள் வலைச்சர ஆசிரியருக்கு

முனைவர் இரா.குணசீலன் said...

அருமை நண்பா..

sathishsangkavi.blogspot.com said...

//நானே உன்னுள் இனி
என்ன சொல்லுவேன்....//

கலக்கல் வரிகள் நண்பரே...

vasu balaji said...

வாழ்த்துகள் பிரபா

ரோஸ்விக் said...

வறுமை கசக்கும்...
இங்கு வறுமையின் கவிதை இனிப்பான தமிழில்... நல்லாயிருக்கு.
வாழ்த்துகள் ஆசிரியரே! ;-)

க.நா.சாந்தி லெட்சுமணன். said...

மரபும்,புதுமையும் கலந்த அழகான கவிதை.

க.பாலாசி said...

//கண்விழி பார்த்து
கவி சொன்னேன்
கைவிரல் சொடுக்கி
கதை சொன்னேன்
கன்னத்தை உரசி
காதல் சொன்னேன்
நானே உன்னுள் இனி
என்ன சொல்லுவேன்....//

அருமையான வரிகள்...

நல்ல கவிதைங்க....

வலைச்சர ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்...

ஹேமா said...

மிகவும் ரசித்து உணர்ந்து எழுதுகிறீர்கள் பிரபா.
அருமையாயிருக்கு வரிகள்.

வலைச்சர வாரத்திற்கும் வாழ்த்துக்கள் சகோதரா.

செ.சரவணக்குமார் said...

ரசித்துப் படித்த கவிதை பிரபாகர். வலைச்சர ஆசிரியராக கலக்கப் போவதற்கும் வாழ்த்துக்கள்.

ரிஷபன் said...

வலைச்சரத்திற்கு வரவேற்பு, வாழ்த்துகள்..

Menaga Sathia said...

நல்ல கவிதை..

Starjan (ஸ்டார்ஜன்) said...

அருமையான கவிதை

கலக்கல் நண்பா

பிரபாகர் said...

//
arumbavur said...
"வாழ்வினை தந்தால்
வருவேன் உந்தனது
வாழ்வின் பாதையில்
வரவா சொல்வீர்"
நல்ல வரிகள்
எனக்கு கவிதை கொஞ்சம் தான் ரசிக்க தெரியும்
நல்ல கவிதை
//
முதல் வரவுக்கு நன்றிங்க. அரும்பாவூர் ஊர் பெயரா? எனில் பெரம்பலூர் பக்கத்தில் உள்ளதா?

//
ஆரூரன் விசுவநாதன் said...
//நானே உன்னுள் இனி
என்ன சொல்லுவேன்....//

ரசனையான வரிகள் பிரபா
//
நன்றி ஆரூரன், சரியான தேர்வு... எனக்கும் பிடித்த வரிகள்.

பிரபாகர் said...

//
பலா பட்டறை said...
ஒன்று வலி
இரண்டு நிவாரணி..

வலைச்சரம் ஆசிரியரே வாழ்த்துக்கள்.:)
::))
//
நன்றி, மொத்தத்தில் வலி நிவாரணி...?

//
முகிலன் said...
இரண்டு கவிதைகளும் அருமை..

வலைச்சர ஆசிரியரானதற்கு வாழ்த்துகள்.
//
நன்றி முகிலன்!

பிரபாகர் said...

//
ஈரோடு கதிர் said...
//நானே உன்னுள் இனி
என்ன சொல்லுவேன்....//

அசத்தல்....

வாழ்த்துகள் வலைச்சர ஆசிரியருக்கு
//
நன்றி என் நண்பருக்கு!

//
முனைவர்.இரா.குணசீலன் said...
அருமை நண்பா..
//
நன்றிங்கய்யா!

பிரபாகர் said...

//
Sangkavi said...
//நானே உன்னுள் இனி
என்ன சொல்லுவேன்....//

கலக்கல் வரிகள் நண்பரே...
//
ரொம்ப நன்றி சங்கவி...

//
வானம்பாடிகள் said...
வாழ்த்துகள் பிரபா
//
நன்றிங்கய்யா!

பிரபாகர் said...

//
ரோஸ்விக் said...
வறுமை கசக்கும்...
இங்கு வறுமையின் கவிதை இனிப்பான தமிழில்... நல்லாயிருக்கு.
வாழ்த்துகள் ஆசிரியரே! ;-)
//
நன்றி தம்பி, வாழ்த்துக்கும், கருத்துக்கும்.

//
க.நா.சாந்தி லெட்சுமணன். said...
மரபும்,புதுமையும் கலந்த அழகான கவிதை.
//
ரொம்ப நன்றிங்க!

பிரபாகர் said...

//
க.பாலாசி said...
//கண்விழி பார்த்து
கவி சொன்னேன்
கைவிரல் சொடுக்கி
கதை சொன்னேன்
கன்னத்தை உரசி
காதல் சொன்னேன்
நானே உன்னுள் இனி
என்ன சொல்லுவேன்....//

அருமையான வரிகள்...

நல்ல கவிதைங்க....

வலைச்சர ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்...
//
நன்றி பாலாசி!

//
ஹேமா said...
மிகவும் ரசித்து உணர்ந்து எழுதுகிறீர்கள் பிரபா.
அருமையாயிருக்கு வரிகள்.

வலைச்சர வாரத்திற்கும் வாழ்த்துக்கள் சகோதரா.
//
நன்றி சகோதரி!

பிரபாகர் said...

//
செ.சரவணக்குமார் said...
ரசித்துப் படித்த கவிதை பிரபாகர். வலைச்சர ஆசிரியராக கலக்கப் போவதற்கும் வாழ்த்துக்கள்.
//
நன்றி சரவணக்குமார்...

//
ரிஷபன் said...
வலைச்சரத்திற்கு வரவேற்பு, வாழ்த்துகள்..
//
ரொம்ப நன்றி ரிஷபன்!

பிரபாகர் said...

//
Mrs.Menagasathia said...
நல்ல கவிதை..
//
நன்றி சகோதரி...

//
Starjan ( ஸ்டார்ஜன் ) said...
அருமையான கவிதை

கலக்கல் நண்பா
//
நன்றி என் சதமடித்த நண்பா!

//
நசரேயன் said...
வாழ்த்துக்கள்
//
ரொம்ப நன்றிங்க...

தமிழ் யாளி said...

தோழரே முதல் கவிக்கு நிறுத்தற் குறிகள் இருந்தால் கவியின்
ஆழத்தை இன்னும்
சிறப்பாக எடுத்துக்
காட்டும்.

இரண்டாம் கவிக்கு
கண்,கை இரண்டையும்
நீக்கி விட்டு
விழி பார்த்து ...
விரல் பிடித்து ...
என்று இருந்தால் இன்னும் அழகு பெறும்

மனதில் பட்டதை
சொன்னேன்

 

©2009 ”வாழ்க்கை வாழ்வதற்கே” | Template Blue by TNB