சிகரெட், பி.டி.ஓ மற்றும் பிரபாகர்...

|

ஆத்தூரிலிருந்து எங்க ஊருக்கு போறதுக்காக பஸ்சில லாஸ்ட் சீட்டுல உக்காந்திருந்தேன். பக்கத்துல பி.டி. வாத்தியார் உக்காந்திருந்தாரு. படிப்ப பத்தியெல்லாம் கேட்டுகிட்டிருந்தார். நல்ல மத்தியான நேரம், ஒரே புழுக்கமா இருந்துச்சி. வண்டி எப்போ கிளம்பும்னு காத்துகிட்டிருந்தோம்.

முன்னாடி, படிக்கு பக்கத்துல வெள்ளை சட்டை, வெள்ளை வேஷ்டியோட ஒருத்தர் உக்காந்திருந்தாரு. சிகரெட்ட பத்தவெச்சி ஜன்னல் கேப்பில வெளிய ஊதிக்கிட்டிருந்தாரு.

அப்பப்போ காத்தடிச்சா புகை உள்ளே வர ஏற்கனவே இருந்த புழுக்கத்துல, புகை வேற மனுஷன் உசிர எடுத்துகிட்டிடுந்துச்சி. ஒரு சிகரெட்டுக்கு பொறுத்திட்டிருந்த எனக்கு, அடுத்தத பத்தவெக்கும் போது அப்படியே கோவம் பொத்துகிட்டு வந்துச்சி.

அவரோட தோள தட்டி, 'அலோ கொஞ்சம் கூட மேனர்ஸ் இல்ல, பஸ்ஸில உக்காந்து விடாம குடிச்சிகிட்டிருக்கீங்க, நாங்கல்லாம் இருக்கிறத வேணாமா’ ன்னு சத்தமா சொல்ல அவர் அப்படியே ஆடிப் போயிட்டாரு. பத்தவெச்ச சிகரெட்ட அதிர்ச்சியில கீழ போட்டுட்டு அப்புறமா எடுத்து அணைச்சி வெளியில போட்டுட்டு தலையை குனிஞ்சிகிட்டாரு.

பக்கத்துல சார் கேட்டாரு, 'பிரபு அவர் யாரு தெரியுமா? நம்ம யூனியன் ஆபிஸ்ல வட்டார வளர்ச்சி அதிகாரியா இருக்காரு' ன்னாரு, சுருக்குன்னுச்சி, சமாளிச்சி 'சார் உங்களுக்கு இன்னொரு விஷயம் தெரியுமா? எங்க அப்ப அவருக்கு கீழ சமூகக் கல்வி அலுவலரா வேலை பாக்கறாரு’ ன்னு சொன்னேன்.

சயங்காலம் அப்பா வந்தவுடனே, 'உங்க பி.டி.ஓ எப்படிப்பான்னு கேட்டேன்'. 'அந்தாளு ஒரு செயின் ஸ்மோக்கர், ஏன் கேக்கற' ன்னு கேட்டாரு. நடந்தத சொல்ல, 'ஒனக்கு இது தேவையா'ன்னாரு.

ரெண்டு வாரம் கழிச்சி மாசந்தர செலவுக்கு காசு வாங்க ஊருக்கு வந்தப்போ அப்பா சம்பளம் வாங்கி தர்றேன்னு சொன்னதால ஆபிசுக்கு வரட்டுமான்னு கேக்கறதுக்கு போன் அடிச்சேன், வாங்கிட்டு அப்படியே காலேஜ் போயிடலாம்னு.

'ஹலோ நான் பி.டி.ஓ. பேசறேன்'னு சொல்லவும் 'சார் நான் ராமசாமியோட சன் பேசறேன், அப்பாவ கொஞ்சம் கூப்பிடறீங்களா' ன்னு கேட்டேன். ஆபீஸ்ல ரெண்டு ராமசாமி இருப்பாங்க போல.

அவரு 'எந்த ராமசாமி' ன்னு கேக்க, 'பட்டை ராமசாமி'ன்னு சொல்ல சிரிச்சிகிட்டே 'என்னது'ன்னு கேக்க, 'ஆமா சார், நெத்தியில பட்ட போட்டிருப்பாரே அத சொன்னேன்' னு சொன்னேன். 'ஓ, எம்.சி.ஏ படிச்ச்சிகிட்டிருக்கிறதா சொன்னாரே, அந்த பையனா, சரி வந்தா என்ன பாத்துட்டு போ' ன்னு சொன்னாரு.

'இல்ல சார் வேணம், என்ன மொதல்லயே பாத்திருக்கீங்க' ன்னு இழுத்தேன். 'எப்போ' ன்னு கேட்க, 'அன்னிக்கு பஸ்ஸில சிகரெட் புடிச்சத கேட்டது நாந்தான்' னு சொல்லவும், 'ஓ அந்த பெரிய மனுஷன் நீங்க தானா, அவசியம் என்ன பாத்துட்டுத்தான் போற' ன்னு சொல்லிட்டு அப்பாவ பியூன விட்டு வர சொல்லி, 'ராமசாமி, உன் பையன கூட்டிகிட்டு சாயந்திரம வீட்டுக்கு வா, என்ன பாத்துட்டுத்தான் போகனும், நான் இப்ப விசிட்டுக்கு போறேன்'னு சொல்லிட்டு போயிட்டாரு.

சாயந்திரம் அப்பாவ பாத்து பணத்த வாங்கிகிட்டு ரெண்டு பேரும் குவாட்ரஸ்ல இருந்த அவரோட வீட்டுக்கு போனோம். கைவெச்ச பனியன், லுங்கி கட்டிட்டு வாசல காத்தோட்டமா வாயில எதையோ மென்னுகிட்டு உக்காந்திருந்தாரு. எங்கள பாத்தவுடனே எழுந்திரிச்சி கையை குலுக்கி பக்கத்துல இருந்த சேர்ல உக்கார சொன்னாரு.

'என்ன சார், சௌக்யமா?' ன்னு நக்கலா என்ன பாத்து கேட்டுட்டு, சிரிச்சிகிட்டே, 'ராமசாமி உன் பையனுக்கு என்னா துணிச்சல் தெரியுமா? பஸ்சில தோள தட்டி...'

சட்டுனு குறுக்க 'இல்லைங்க, எதோ விளையாட்டு பையன்...' னு அப்பா இழுத்தாரு.

'அதெல்லாம் இருக்கட்டும், ஒரு நிமிஷம், லச்சுமி, நீ பாக்கனும்னு சொன்னியே அந்த பையன் வந்திருக்காப்ல, அவங்க அப்பாவோட' ன்னு குரல் கொடுக்க, 'வந்த உடனே கவனிச்சிட்டேன், இதோ வர்றேன்’ னு சொல்லிட்டு ரெண்டு கிளாஸ்ல தண்ணி எடுத்துகிட்டு வந்தாங்க, கூட அவங்க பொண்ணு தட்ட எடுத்துகிட்டு வந்துச்சி. ரெண்டுபேரும் வாங்கன்னு கேட்டுட்டு தண்ணிய ரெண்டு பேருக்கும் கொடுத்தாங்க.

ஒரு தட்டுல இருந்தத அப்பாவுக்கு கொடுக்க சொல்லிட்டு மத்தத கையில வாங்கி எனக்கு கொடுத்துட்டு, 'தம்பி எடுத்துக்கோங்க, இந்த ஸ்வீட் எதுக்கு தெரியும? இருவது வருஷமா எத்தனையோ தடவ யார் யாரோ சொல்லியும் விடாத சிகரெட்ட இப்ப சுத்தமா விட்டுட்டாரு, பதனஞ்சி நாளாச்சி. எவ்வளோ சந்தோஷமா இருக்கு தெரியுமா?'ன்னு பூரிப்பா சொன்னாங்க.

'ஆமா ராமசாமி, அன்னிக்கு பஸ்ஸில தம்பி கேட்டது செருப்பால அடிச்ச மாதிரி இருந்துச்சி. சிகரெட்ட ஸ்டைலா புடிக்கிற வயசில இருக்கிற ஒரு பையன் அந்த மாதிரி கேட்டது ஒரு மாதிரியா இருந்துச்சி. இறங்கின உடனே அந்த பாக்கெட்ட தூக்கி எறிஞ்சிட்டேன்'.

'இனிமே குடிக்க மாட்டேன்னு சொன்னப்போ என் வைஃப் நம்பல. ரெண்டு நாள் ரொம்ப கஸ்டமா இருந்துச்சி. அப்பப்போ தோணறப்போ தம்பி முகம் ஞாபகம் வந்துடும், ஒரு பபிள்கம் போட்டுக்குவேன், இன்னிய வரைக்கும் தொடல, இனிமே தொடவும் மாட்டேன்'.

'லச்சுமி அடிக்கடி அந்த தம்பி எங்கயிருந்தாலும் நல்லாருக்கனும்னு சொல்லிட்டிருப்பா. மதியம் ஃபோன் பண்ணி விவரத்த சொன்னேன், ரொம்ப சந்தோஷப்பட்டு அதான் இப்போ ஸ்வீட்ல ஆரம்பிச்சிருக்கு, விருந்து ரெடியாயிகிட்டிருக்கு' ன்னாரு.

அப்பாவுக்கு ரொம்ப சந்தோஷம், எனக்குந்தான். ரொம்ப நேரம் பேசிகிட்டிருந்துட்டு சாப்பிட்டு வீட்டுக்கு போனோம்.

வலைச்சரத்தில் இன்று இரண்டாவது நாள்... சென்று பாருங்களேன்...

வலைச்சரத்தில் இன்று மூன்றாவது நாள்... சென்று பாருங்களேன்...

27 : பேர் படிச்சிட்டு சொல்றாங்க...:

Ramesh said...

வாவ்வ் நம்ம ஆள்தாங்க நீங்களும்
ரொம்ப சந்தோசம் பிரபாகர்.. இது இதுதான் நான் கேட்பது....
ம்ம்ம் நன்றி தொடரவேண்டும்...
நம்மட வாழ்த்துக்களை அவரிடம் சேர்ப்பீர்களா???

(ஆமா இப்போ நீங்க சிகரெட் பத்திரதில்லையே..ஹிஹிஹி)

sathishsangkavi.blogspot.com said...

//'ஆமா ராமசாமி, அன்னிக்கு பஸ்ஸில தம்பி கேட்டது செருப்பால அடிச்ச மாதிரி இருந்துச்சி. சிகரெட்ட ஸ்டைலா புடிக்கிற வயசில இருக்கிற ஒரு பையன் அந்த மாதிரி கேட்டது ஒரு மாதிரியா இருந்துச்சி. இறங்கின உடனே அந்த பாக்கெட்ட தூக்கி எறிஞ்சேன்'.//

சூப்பர் நண்பா....

கலக்கீட்டிங்க.... சிகரெட் குடிப்பதை விட்ட அவருக்கும், அதற்கு காரணமாக இருந்த உங்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்...

ஆமா நண்பா நீங்க எப்படி....?

ஆரூரன் விசுவநாதன் said...

அறிந்தோ அறியாமலோ ஒரு மனிதனின் நல்ல மன மாற்றத்திற்கு காரணமாக இருந்தது மகிழ்ச்சியாக இருக்கிறது...

பகிர்வுக்கு நன்றி

புலவன் புலிகேசி said...

அட ஒரு வார்த்தையில திருத்தி போட்டீங்களே. சூப்பர் தல

திருவாரூர் சரவணா said...

சிகரெட் - தனக்குத் தானே வைத்துக்கொள்ளும் கொள்ளி அப்படின்னு சொல்லுவாங்க. நம்மளோட இந்த மாதிரியான கோபம் ஒருத்தரையாவது திருத்துனா இந்த கோபம் தப்பே இல்ல.

க.நா.சாந்தி லெட்சுமணன். said...

ஒரு குடும்பத்தோட சந்தோசத்த மீட்டுக்கொடுக்கறதோட புண்ணியம் உஙளுக்கும்,உங்க பரம்பரைக்கும்.
நல்ல பதிவு.

Cable சங்கர் said...

suuppar
super

VISA said...

Nice one

vasu balaji said...

என்னடா சிகரட் பிடிங்கிறாரேன்னு பார்த்தேன். ஆத்தூர்ல எல்லாம் ரோசக்கார புள்ளைங்க போல. மாமா தண்ணிய விட்டாரு. பிடிஓ புகை பிடிக்கிறத.

செ.சரவணக்குமார் said...

சூப்பர் பிரபா. அருமையான பகிர்வு.

Prathap Kumar S. said...

அட்றா சக்கை... அட்றாசக்கை.:-)

ஒரு மனிதரை திருத்திய அண்ணன் பிரபாகர் வாழ்க...

ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும்... இந்த குறள் உங்களக்கு மிகப்பொருத்தம்...

துபாய் ராஜா said...

நல்ல மனுசன் ஒரு வார்த்தையில் திருந்திவிட்டார். எவ்வளவு சொல்லியும் திருந்தாதவரை என்ன செய்ய.... :((

Unknown said...

நல்ல பகிர்வு..

அகல்விளக்கு said...

அருமை அண்ணா...

நானும் முயற்சி செய்திருக்கேன்...

ஆனா புகைய மூஞ்சில ஊதுவாங்க லூசுப்பசங்க...

Paleo God said...

உங்க குரல்ல கேட்டதுதான் என்றாலும், படிக்கும்போது :)))

கதை 5ம் பாகம் அப்டேட் பண்ணிடுங்க பிரபா..:))

பிரபாகர் said...

//
றமேஸ்-Ramesh said...
வாவ்வ் நம்ம ஆள்தாங்க நீங்களும்
ரொம்ப சந்தோசம் பிரபாகர்.. இது இதுதான் நான் கேட்பது....
ம்ம்ம் நன்றி தொடரவேண்டும்...
நம்மட வாழ்த்துக்களை அவரிடம் சேர்ப்பீர்களா???

(ஆமா இப்போ நீங்க சிகரெட் பத்திரதில்லையே..ஹிஹிஹி)
//
எப்பவும் இல்ல றமேஷ்! ரொம்ப அப்பாவி...

//
Sangkavi said...
//'ஆமா ராமசாமி, அன்னிக்கு பஸ்ஸில தம்பி கேட்டது செருப்பால அடிச்ச மாதிரி இருந்துச்சி. சிகரெட்ட ஸ்டைலா புடிக்கிற வயசில இருக்கிற ஒரு பையன் அந்த மாதிரி கேட்டது ஒரு மாதிரியா இருந்துச்சி. இறங்கின உடனே அந்த பாக்கெட்ட தூக்கி எறிஞ்சேன்'.//

சூப்பர் நண்பா....

கலக்கீட்டிங்க.... சிகரெட் குடிப்பதை விட்ட அவருக்கும், அதற்கு காரணமாக இருந்த உங்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்...

ஆமா நண்பா நீங்க எப்படி....?
//
பழக்கமில்லை நண்பா, சிறு வயது முதலே அதன் மேல் ஒரு வெறுப்பு, தொடக்கூட எண்ணம் வரவில்லை.

பிரபாகர் said...

//
ஆரூரன் விசுவநாதன் said...
அறிந்தோ அறியாமலோ ஒரு மனிதனின் நல்ல மன மாற்றத்திற்கு காரணமாக இருந்தது மகிழ்ச்சியாக இருக்கிறது...

பகிர்வுக்கு நன்றி
//
நன்றி ஆரூரன்... உங்களின் அன்பிற்கு, கருத்துக்கு...

//
புலவன் புலிகேசி said...
அட ஒரு வார்த்தையில திருத்தி போட்டீங்களே. சூப்பர் தல
//
நன்றி புலிகேசி...

பிரபாகர் said...

//
சரண் said...
சிகரெட் - தனக்குத் தானே வைத்துக்கொள்ளும் கொள்ளி அப்படின்னு சொல்லுவாங்க. நம்மளோட இந்த மாதிரியான கோபம் ஒருத்தரையாவது திருத்துனா இந்த கோபம் தப்பே இல்ல.
//
எதேச்சையா நல்லபடியா நடந்துச்சி... எப்போதும் சாத்தியமில்லை. நன்றி சரண்...

//
க.நா.சாந்தி லெட்சுமணன். said...
ஒரு குடும்பத்தோட சந்தோசத்த மீட்டுக்கொடுக்கறதோட புண்ணியம் உஙளுக்கும்,உங்க பரம்பரைக்கும்.
நல்ல பதிவு.
//
ரொம்ப நன்றிங்க சகோதரி...

பிரபாகர் said...

//
Cable Sankar said...
suuppar
super
//
நன்றிங்கண்ணா, வார இறுதியில் அழைக்கிறேன், வேலை ரொம்ப அதிகம்...

//
VISA said...
Nice one
//
ரொம்ப நன்றிங்க...

பிரபாகர் said...

//
வானம்பாடிகள் said...
என்னடா சிகரட் பிடிங்கிறாரேன்னு பார்த்தேன். ஆத்தூர்ல எல்லாம் ரோசக்கார புள்ளைங்க போல. மாமா தண்ணிய விட்டாரு. பிடிஓ புகை பிடிக்கிறத.
//
சொல்லி டின்னு கட்டிகிட்டதும் இருக்கு, பின்னால எழுதறேன்... நன்றிங்கய்யா...

//
செ.சரவணக்குமார் said...
சூப்பர் பிரபா. அருமையான பகிர்வு.
//
நன்றி என் அன்பு நண்பா!

பிரபாகர் said...

//
நாஞ்சில் பிரதாப் said...
அட்றா சக்கை... அட்றாசக்கை.:-)

ஒரு மனிதரை திருத்திய அண்ணன் பிரபாகர் வாழ்க...

ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும்... இந்த குறள் உங்களக்கு மிகப்பொருத்தம்...
//
தம்பி, இப்படி உசுப்பேத்தி, உசுப்பேத்தி உடம்ப புண்ணாக்கிடுவீங்க போல... ரொம்ப நன்றி தம்பி...

//
துபாய் ராஜா said...
நல்ல மனுசன் ஒரு வார்த்தையில் திருந்திவிட்டார். எவ்வளவு சொல்லியும் திருந்தாதவரை என்ன செய்ய.... :((
//
பார்த்து வருந்த வேண்டியதுதான். நன்றிங்க ராஜா...

பிரபாகர் said...

//
முகிலன் said...
நல்ல பகிர்வு..
//
நன்றி முகிலன்...

//
அகல்விளக்கு said...
அருமை அண்ணா...

நானும் முயற்சி செய்திருக்கேன்...

ஆனா புகைய மூஞ்சில ஊதுவாங்க லூசுப்பசங்க...
//
ஆமாங்க தம்பி... சாம பேத, தண்டம்...

பிரபாகர் said...

//
பலா பட்டறை said...
உங்க குரல்ல கேட்டதுதான் என்றாலும், படிக்கும்போது :)))

கதை 5ம் பாகம் அப்டேட் பண்ணிடுங்க பிரபா..:))
//
நன்றி சேம் பிளட். உடன் செய்கிறேன்...

வினோத் கெளதம் said...

தல நல்ல தைரியசாலி தான் நீங்கள்..

ரோஸ்விக் said...

அவரு யாருன்னு தெரியாமா தைரியமா சொல்லீருக்கீங்க...நல்லது. :-)

தெரிஞ்சப்புறம் கொஞ்சமா வேர்த்திருக்குமே....?? அந்த வயசுல யாரா இருந்தா என்னங்கிற துணிச்சலும் இருந்திருக்கும்...ம்ம்ம்..

ஒருவழியா அவரு திருந்தியது மகிழ்ச்சி. :-)

பிரபாகர் said...

//
வினோத்கெளதம் said...
தல நல்ல தைரியசாலி தான் நீங்கள்..
//
அப்படில்லாம் இல்லைங்க பாஸ், நாம டரியலான கதையும் இருக்கு, பின்னால எழுதுவோம்ல...

//
ரோஸ்விக் said...
அவரு யாருன்னு தெரியாமா தைரியமா சொல்லீருக்கீங்க...நல்லது. :-)

தெரிஞ்சப்புறம் கொஞ்சமா வேர்த்திருக்குமே....?? அந்த வயசுல யாரா இருந்தா என்னங்கிற துணிச்சலும் இருந்திருக்கும்...ம்ம்ம்..

ஒருவழியா அவரு திருந்தியது மகிழ்ச்சி. :-)
//
நன்றி ரோஸ்விக், இளங்கன்று பயமறியா வயசுல செஞ்சது.

malarvizhi said...

nalla pathivu .nanraaga ullathu. thairiyam thaan ungaluku.

©2009 ”வாழ்க்கை வாழ்வதற்கே” | Template Blue by TNB