கருத்த உடம்புக்காரி
கனிவான பேச்சுக்காரி
பொருத்தமா நானிருக்க
புடிக்காம போனதென்ன
தெருவிலென்ன பாத்துபுட்டா
வாடிப்போன பூவாட்டம்
சிரிச்சிட்டே வந்தாலும்
சிடுமூஞ்சா மாத்திக்கிற
பொருத்தமெலாம் பாத்துபுட்டு
புகளூரு சோசியனும்
சிறப்பா இருக்குதுன்னு
சிலிர்த்திடவே சொல்லிபுட்டான்.
வருகிற தைமாசம்
ஊரையெல்லாம் சேர்த்தழச்சி
திருமணத்த செஞ்சிடத்தான்
தினமும் நான் ஏங்கையில
வருத்தியென்னை நோவுசேரும்
வழியெனக்கு காட்டி நீயும்
வருத்தம் மட்டும் தந்துயென்ன
வாட்டத்தில விடுறியே
இரும்பான உடம்பிருந்தும்
இளகுன மனசெனக்கு
கரும்புனக்கு புரியலையா
காள மனம் தெரியலையா?
கண்ணுக்குள்ள உன்ன வெச்சி
காதலையும் பேசி பேசி
ஆணிமுத்தே உன்ன நானும்
அணுவணுவா நேசிக்கிறேன்
திண்ணையில தூங்கயில
தெருவோரம் போகையில
மண்ண விண்ண பாக்கையில
மாலையில காலையில
எல்லாமா நீயிருக்க
இது உனக்கு தெரியலையா
பொல்லாத உயிரதயும்
பொத்திவெச்சி காத்திருக்கேன்
நல்ல பதில் சொல்லிபுட்டா
நா வணங்கும் சாமிக்கு
எல்லா சிறப்பு செஞ்சி
ஊரெல்லாம் மெச்சும்படி
கலகலன்னு செஞ்சிடுவேன்
கவலையெல்லாம் விட்டிடுவேன்
நிலை குலஞ்ச எம்மனசும்
நெறைஞ்சி தெளிஞ்சிடுவேன்
வாழறதும் சாவறதும் உன்
வார்த்தையில தாயிருக்கு நல்
சொல்லதயும் சொல்லிநீயும்
சொர்க்கமத காட்டு புள்ள...
இதோட தொடர்ச்சியையும் அத்தையவ பெத்தெடுத்த... எனும் இடுகையில படிச்சிடுங்களேன்....
மிச்சர்கடை
4 weeks ago
35 : பேர் படிச்சிட்டு சொல்றாங்க...:
//நா வணங்கும் சாமிக்கு//
பிரபா...
அந்த அம்மணி சரினு சொல்லிடுச்சுன்னா.. உங்களுக்கு இன்னொருவாட்டி காதுகுத்தி மொட்டையடிச்சு, கெடா வெட்டறதா வேண்டிக்கட்டுமா
கவிதை... அருமை
ரசிச்சேன்.... சிந்தும் புன்னகையோடு
//எல்லாமா நீயிருக்க
இது உனக்கு தெரியலையா
பொல்லாத உயிரதயும்
பொத்திவெச்சி காத்திருக்கேன்//
//நல்ல பதில் சொல்லிபுட்டா
நா வணங்கும் சாமிக்கு
எல்லா சிறப்பு செஞ்சி
ஊரெல்லாம் மெச்சும்படி//
மொத்தத்தில் கிடா வெட்டி பொங்க வைப்பேன்னு சொல்லுங்க...
கலக்கல் கவிதை தோழரே...
மிகவும் ரசித்துப் படித்தேன்....
அலகு குத்தாம விடமாட்டாங்க போல..:)) சாக்கிரத பிரபா::))
இப்பத்தான் கதிர் பதிவு படிச்சிட்டு வாறேன். என்ன ஆளாளுக்கு தெம்மாங்கு பாட்டு எழுதறீங்களா?
நல்லா இருக்குங்க.
//பொறுத்தமா நானிருக்க//
பொருத்தமா
தாலேலோ, ஏலேலோ, தன்னானே இதெல்லாம் விட்டுட்டீங்களே :))
நல்லாருக்கு,
அந்த இங்கிலீஷ் கவிதை எப்போ போடப் போறீங்க ??
நல்லா இருக்குங்க...எல்லா வசனமும் அம்மணிய கல்யாணம் கட்ட வரையில்தானே. அப்புறம் மாத்தியில்ல பாடுவீங்க....
//வாழறதும் சாவறதும் உன்
வார்த்தையில தாயிருக்கு நல்
சொல்லதயும் சொல்லிநீயும்//
நல்லாயிருக்குங்க பிரபா,...
[[கண்ணகி said...
நல்லா இருக்குங்க...எல்லா வசனமும் அம்மணிய கல்யாணம் கட்ட வரையில்தானே. அப்புறம் மாத்தியில்ல பாடுவீங்க....]]
ரிபீட்ட்ட்ட்ட்
//வருகிற தைமாசம்
ஊரையெல்லாம் சேர்த்தழச்சி
திருமணத்த செஞ்சிடத்தான்
தினமும் நான் ஏங்கையில//
தை மாசந்தாங்க நடக்குது....நீங்க மட்டுமா?????
சொல்ல மறந்துட்டேனே...கிராமியப்பாடல் மாதிரி அருமையான கவிதை...
கிராமிய மணங்கமழும் வரிகள்...
அருமை
:)). நல்லாருக்கு.
நல்லாயிருக்கு பிரபா. அருமையான வரிகள்.
தல காலைல கதிர் அண்ணன் எழுதுன கிராமியத்த படிச்சேன். இப்ப உங்களோடது. நல்லா இருக்கு தல. பொங்கல் முடிஞ்சி இன்னைக்குதான் சென்னை வந்தேன்
//
ஈரோடு கதிர் said...
//நா வணங்கும் சாமிக்கு//
பிரபா...
அந்த அம்மணி சரினு சொல்லிடுச்சுன்னா.. உங்களுக்கு இன்னொருவாட்டி காதுகுத்தி மொட்டையடிச்சு, கெடா வெட்டறதா வேண்டிக்கட்டுமா
கவிதை... அருமை
ரசிச்சேன்.... சிந்தும் புன்னகையோடு
//
நன்றி கதிர்...
//
Sangkavi said...
//எல்லாமா நீயிருக்க
இது உனக்கு தெரியலையா
பொல்லாத உயிரதயும்
பொத்திவெச்சி காத்திருக்கேன்//
//நல்ல பதில் சொல்லிபுட்டா
நா வணங்கும் சாமிக்கு
எல்லா சிறப்பு செஞ்சி
ஊரெல்லாம் மெச்சும்படி//
மொத்தத்தில் கிடா வெட்டி பொங்க வைப்பேன்னு சொல்லுங்க...
கலக்கல் கவிதை தோழரே...
மிகவும் ரசித்துப் படித்தேன்....
//
ரொம்ப சந்தோஷம்... உங்களின் பாராட்டுக்கள் இன்னும் நிறைய எழுதத்தூண்டுது...
//
பலா பட்டறை said...
அலகு குத்தாம விடமாட்டாங்க போல..:)) சாக்கிரத பிரபா::))
//
ஆமாங்க, ஊருப்பக்கம் வரும்போது சாக்கிரதாயாத்தான் இருக்கோனும்...
//
முகிலன் said...
இப்பத்தான் கதிர் பதிவு படிச்சிட்டு வாறேன். என்ன ஆளாளுக்கு தெம்மாங்கு பாட்டு எழுதறீங்களா?
//
எதேச்சையா ஒரே மாதிரி ரெண்டு பேரும் எழுதியிருக்கோம் போல...
//
சின்ன அம்மிணி said...
நல்லா இருக்குங்க.
//பொறுத்தமா நானிருக்க//
பொருத்தமா
//
மாத்திடறேன், சுட்டலுக்கு நன்றிங்க.
//
சங்கர் said...
தாலேலோ, ஏலேலோ, தன்னானே இதெல்லாம் விட்டுட்டீங்களே :))
//
கற்பனையா சேத்துக்குங்க பாஸ்...
//
சங்கர் said...
நல்லாருக்கு,
அந்த இங்கிலீஷ் கவிதை எப்போ போடப் போறீங்க ??
//
சீக்கிரம், மெயில்ல... உங்களுக்கு மட்டும்... ஒருத்தருகிட்டத்தான் அவமானப்படனும்...
//
கண்ணகி said...
நல்லா இருக்குங்க...எல்லா வசனமும் அம்மணிய கல்யாணம் கட்ட வரையில்தானே. அப்புறம் மாத்தியில்ல பாடுவீங்க....
//
கம்பனி சீக்ரட்.... நன்றிங்க உங்க வருகைக்கும், பின்னூட்டத்துக்கும்...
//
ஆ.ஞானசேகரன் said...
//வாழறதும் சாவறதும் உன்
வார்த்தையில தாயிருக்கு நல்
சொல்லதயும் சொல்லிநீயும்//
நல்லாயிருக்குங்க பிரபா,...
[[கண்ணகி said...
நல்லா இருக்குங்க...எல்லா வசனமும் அம்மணிய கல்யாணம் கட்ட வரையில்தானே. அப்புறம் மாத்தியில்ல பாடுவீங்க....]]
ரிபீட்ட்ட்ட்ட்
//
நன்றிங்கண்ணா...
//
க.பாலாசி said...
//வருகிற தைமாசம்
ஊரையெல்லாம் சேர்த்தழச்சி
திருமணத்த செஞ்சிடத்தான்
தினமும் நான் ஏங்கையில//
தை மாசந்தாங்க நடக்குது....நீங்க மட்டுமா?????
//
ஜனவரியில வர்ற ஜனவரின்னு சொன்னா அடுத்த வருஷம் ஜனவரின்னு அர்த்தம் இளவல்...
//
க.பாலாசி said...
சொல்ல மறந்துட்டேனே...கிராமியப்பாடல் மாதிரி அருமையான கவிதை...
//
நன்றி பாலாசி...
//
ஆரூரன் விசுவநாதன் said...
கிராமிய மணங்கமழும் வரிகள்...
அருமை
//
நன்றிங்க ஆரூரன்...
//
வானம்பாடிகள் said...
:)). நல்லாருக்கு.
//
நன்றிங்கய்யா!
//
செ.சரவணக்குமார் said...
நல்லாயிருக்கு பிரபா. அருமையான வரிகள்.
//
நன்றி சரவணக்குமார், அன்பிற்கு தொடர் வருகைக்கு!
கவிதையை மொழிவழக்கு இன்னும் மெருகூட்டுது.நல்லாருக்கு பிரபா.
நாட்டுப்புறக்கவிஞர் பிரபா வாழ்க!
பிரபாண்ணே சொல்லவே இல்ல...
உங்களுக்குள்ள ஒரு புஷ்பவனம் குப்புசாமி ஒளிஞச்சட்டு இருக்காருன்னு இப்பத்தான் தெரியுது...
அருமை அப்பப்ப அவரை வெளியவுடுங்க
//சினிமா புலவன் said...
This post has been removed by the author.
January 22, 2010 4:52 PM
சினிமா புலவன் said...
This post has been removed by the author.
January 22, 2010 4:53 PM
//
சொல்ல வந்ததுக்கு நன்றி சினிமா புலவன்...(வந்துட்டா நன்றி சொல்லாம விடுவோமா?)
//
புலவன் புலிகேசி said...
தல காலைல கதிர் அண்ணன் எழுதுன கிராமியத்த படிச்சேன். இப்ப உங்களோடது. நல்லா இருக்கு தல. பொங்கல் முடிஞ்சி இன்னைக்குதான் சென்னை வந்தேன்
//
வாங்க புலிகேசி, இல்லாமே கடையே வெறிச்சுன்னு இருந்துச்சி!
//
ஹேமா said...
கவிதையை மொழிவழக்கு இன்னும் மெருகூட்டுது.நல்லாருக்கு பிரபா.
//
ரொம்ப நன்றி சகோதரி!
//
பழமைபேசி said...
நாட்டுப்புறக்கவிஞர் பிரபா வாழ்க!
//
நன்றிங்க பழமைபேசி...
//
நாஞ்சில் பிரதாப் said...
பிரபாண்ணே சொல்லவே இல்ல...
உங்களுக்குள்ள ஒரு புஷ்பவனம் குப்புசாமி ஒளிஞச்சட்டு இருக்காருன்னு இப்பத்தான் தெரியுது...
அருமை அப்பப்ப அவரை வெளியவுடுங்க
//
நன்றி பிரதாப்! கண்டிப்பாய்...
நல்ல பதிவு
//நாஞ்சில் பிரதாப் said...
பிரபாண்ணே சொல்லவே இல்ல...
உங்களுக்குள்ள ஒரு புஷ்பவனம் குப்புசாமி ஒளிஞச்சட்டு இருக்காருன்னு இப்பத்தான் தெரியுது...
அருமை அப்பப்ப அவரை வெளியவுடுங்க//
ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்.....
//
பட்டாபட்டி.. said...
நல்ல பதிவு
//
நன்றி நண்பா!
//
துபாய் ராஜா said...
//நாஞ்சில் பிரதாப் said...
பிரபாண்ணே சொல்லவே இல்ல...
உங்களுக்குள்ள ஒரு புஷ்பவனம் குப்புசாமி ஒளிஞச்சட்டு இருக்காருன்னு இப்பத்தான் தெரியுது...
அருமை அப்பப்ப அவரை வெளியவுடுங்க//
ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்.....
//
ரொம்ப நன்றி ராஜா!
நன்றாக உள்ளது. தொடரவும்
உங்களுக்குள்ள ஒரு புஷ்பவனம் குப்புசாமி ஒளிஞச்சட்டு இருக்காருன்னு இப்பத்தான் தெரியுது...நன்றாக உள்ளது. தொடரவும்
//
Sabarinathan Arthanari said...
நன்றாக உள்ளது. தொடரவும்
//
நன்றிங்க, உங்க வருகைக்கும் பாராட்டுக்கும்...
//
நிலாமதி said...
உங்களுக்குள்ள ஒரு புஷ்பவனம் குப்புசாமி ஒளிஞச்சட்டு இருக்காருன்னு இப்பத்தான் தெரியுது...நன்றாக உள்ளது. தொடரவும்
//
நன்றி சகோதரி!
Post a Comment