சின்ன வயசுல ரொம்ப விஷேசமா கொண்டாடற ரெண்டு பண்டிகை தீபாவளி, அப்புறம் பொங்கல். பொங்கல்னா ரொம்ப விஷேசம், ஏன்னா மொத்தம் நாலு நாள் கொண்டாடுவோம்.
ஊர்ல சுண்ணாம்பு சூலை இருக்கும், ஆயா(அப்பாவோட அம்மா) நெல்லு கொடுத்துட்டு சுண்ணாம்பு வாங்கிட்டு வந்து பெரிய பானையில போட்டு வெச்சிருந்து மெதுவா ஆரம்பிச்சி ரெண்டு வாரம் எடுத்துக்குவாங்க.
வீட்டையெல்லாம் நல்லா சுண்ணாம்பு அடிச்சி பளிச்சின்னு வெச்சிருவாங்க. நாம கூட மாட சின்ன சின்ன வேலையெல்லாம் செய்யுவோம்.
மொத நாளு போகி, ஒன்னும் அவ்வளவா விஷேசம் இல்லை எங்க பக்கத்து கிராமங்கள்ல. பழைய பாயி, ஆவாத போவாத அது இதுன்னு எதாச்சும் போட்டு எரிப்பாங்க. அடுத்த நாள் சூரியன் பொங்கல், வாச பொங்கல்னும் சொல்லுவோம். காலையிலேயே பொங்கல் வெச்சி சூரியன பாத்து கும்பிட்டுட்டு அதுக்கும் அடுத்த நாளானா மாட்டுப்பொங்கலுக்கு ரொம்ப ஆர்வமா தயாராக ஆரம்பிச்சிடுவோம். ஆக ரெண்டாவது நாளும் அவ்வளவா சுறுசுறுப்பா இருக்காது.
களை கட்டறது மாட்டுப்பொங்கல் தான், ரொம்ப அருமையா இருக்கும். ஆத்துல தண்ணி வந்துகிட்டு இருக்கும். மாட்டையெல்லாம் அங்க ஓட்டிகிட்டு போயி கழுவி கொம்புக்கு வர்ணம் அடிச்சி கலர் கலரா குங்கும முத்திரை வெச்சி வித விதமா அலங்காரம் பண்ணுவாங்க.
சாயந்திரம் மாட்டுப்பொங்கலுக்கு தேவையானதை தயார்ப்படுத்த தாத்தா கூட காட்டுக்கு போயி மஞ்சள் கொத்து, கரும்பு சவாளம், பூலாப்பூ எல்லாம் கொண்டு வருவோம்.
மாட்டுப் பட்டியோட வாசல்ல வாழை மரத்த தாரோட கட்டி வளைச்சி கரும்பையும் சேர்த்துக்கட்டி பூலாப்பூவ சொருகி, மஞ்சள் கொத்து, வேப்ப இலையை கட்டி மாலை மாதிரி செஞ்சு எல்லாம் தோரணமா தொங்கவிடுவோம். அப்புறமா மாடுங்க எல்லாத்துக்கும் மாலை செஞ்சி வெப்போம்.
மஞ்சள்ல புள்ளையார் பிடிச்சி, சாணியில பாத்திகட்டி அதுல அருகம்புல் சொருகி, குழியில எல்லாம் சாதத்துக் கஞ்சிய ஊத்தி நிரப்புவாங்க.
சக்கரை பொங்கல், வெண்பொங்கல்னு எல்லாம் வெப்பாங்க. நாங்க சின்ன பசங்கல்லாம் ஆளுக்கொடு தட்டும் குச்சும் வெச்சிகிட்டு தயரா தட்டறதுக்கு காத்திருப்போம்....
தாத்த கடவுள் பக்தி இல்லாதவருன்னாலும் பொங்கலன்னிக்கு மட்டும் எல்லா வேலையையும் ஆர்வமா செய்வாரு. சின்னப்பையங்கறதால பக்கத்துல விடமாட்டாங்க.
எல்லாம் தயாரானதுக்கு அப்புறம் இலையில பொங்கல் பழம் எல்லாம் பிசைஞ்சி எடுத்துகிட்டு கலயத்துல தண்ணியோட ‘பொங்கலோ பொங்கல் போலியோ போலி’ன்னு உற்சாகமா கத்திகிட்டு ஒவ்வொரு மாடா போயி வாயை கழுவி சாதத்த ஊட்டிவிடுவாங்க.
நாங்க சின்ன பசங்க எல்லாம் கத்திகிட்டு தட்ட தட்டிகிட்டு பின்னாலயே போவோம். அப்புறமா எல்லா சொந்தக்காரங்களையும் (குறிப்பா மாடு இல்லாதவங்க) பொங்கல் வடை பாயசம்னு நல்லா கவனிப்பாங்க.
மாட்டுங்களுக்கு புது கயிறு, மூக்கணாங்கயிறுன்னு எல்லாம் மாத்துவாங்க. முறைக்காரங்ககிட்ட (அத்தை, மாமா) எல்லாருகிட்டயும் ‘பால் பொங்குச்சா’ ன்னு கேட்போம். ‘வேண்டிய அளவுக்கு பொங்குச்சி’ ன்னு சொல்லி காசு கொடுப்பாங்க. பயங்கரமா காசு வேட்டை நடக்கும். கேட்ட யாரும் மறுக்காம அவங்களால முடிஞ்சத கொடுப்பாங்க.
அடுத்த நாள் கரிநாள்னு சொல்லுவோம். முழு நாளும் பரபரப்பா இருக்கும். காலையிலேயே மாரியம்மன் கோவிலுக்கு போயி உருளத்தண்டம் போடறதுக்கு கூட்டிட்டு போவாங்க.கையில வேப்பிலை எடுத்துகிட்டு இடுப்பில் துண்ட கட்டிகிட்டு கோயில சுத்து உருண்டு வந்து கும்பிட்டுட்டு கொண்டு போன சுடு தண்ணியில குளிச்சிட்டு சாமி கும்பிடுவோம்.
புது துணிய போட்டுகிட்டு தயார வீட்டுல சூடா இருக்கிற இட்லி, கறிக்குழம்புன்னு ஒரு புடி புடிச்சிட்டு பசங்ககூட சேந்து வேடிக்கை பாக்க கிளம்பிடுவோம். அக்கினி சட்டி தூக்கிட்டு வருவாங்க, அலகு குத்தி வருவாங்க, வாயில ஒருத்தர் ஆட்டு குடல வெச்சிகிட்டு ஆட்டம் போட்டுகிட்டு வருவாரு, பாக்க பயமா இருக்கும்.
மதியத்துக்கு சாமிக்கு கொழுக்கட்ட பொங்கல்னு திரும்பவும் வெச்சு மாரியம்மன் கோவிலுக்கு எடுத்துகிட்டு போயி படைப்பாங்க. அதுக்கப்புறம்தான் எருதாட்டம் ஆரம்பிக்கும். மந்தைவெளின்னு சொல்ற இடத்துல எல்லா காளை மாட்டையும் கொண்டு வந்து வேடிக்கைக் காட்டுவாங்க. மாடுங்கள சீண்டறது, ஆளுங்கள முட்டறது, பயந்து ஓடறதுன்னு, பொழுது போறதே தெரியாது.
எல்லாம் முடிஞ்சதுக்கு அப்புறம், ’ஆயா, கருநாள் முடிஞ்சாச்சு, நாளைக்கு என்ன’ ன்னு கேட்டா, ’ம்.... கருநாளுக்கு அடுத்தநாளு வெறு நாளு’ ம்பாங்க. மறுபடியும் எப்போ பொங்கல் வரும்னு ஏங்க ஆரம்பிச்சிடுவோம்.
எல்லோருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்...
மிச்சர்கடை
5 weeks ago
41 : பேர் படிச்சிட்டு சொல்றாங்க...:
அருமையான நினைவுகள் பிரபாகர்.
//புது துணிய போட்டுகிட்டு தயார வீட்டுல சூடா இருக்கிற இட்லி, கறிக்குழம்புன்னு ஒரு புடி புடிச்சிட்டு பசங்ககூட சேந்து வேடிக்கை பாக்க கிளம்பிடுவோம்//
அதெல்லாம் ஒரு காலமுங்க!!
இனிய தமிழர் திருநாள் நல்வாழ்த்துகள் பிரபாகர்
இனிமையான காலத்தை அழகாக பகிர்ந்திருக்கிறீர்கள் பிரபா......
பழைய நாட்களுக்கே சென்றுவிட்டேன்...
அப்பத்தாவை விட(அப்பனை பெற்றவள்) அம்மாயி(அம்மாவைப் பெற்றவள்) வீட்டில்தான் எங்கள் பொங்கல் நடக்கும்.....நகரத்திலேயே வசித்துப் பழகிய எங்களுக்கு, அது ஒரு வசந்த விழாவாகத்தான் இருக்கும்...
வாழ்த்துக்கள்
பொங்கல் வாழ்த்துகள்
அன்பின் பிரபாகர்
கொசுவத்தி சுத்தீட்டிங்க = அருமை அருமை - நானும் நெனெச்சிப் பாத்து மகிழ்ந்தேன்
இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்
அழகான நினைவுகள்...
கரிநாள் அன்று ஊரில் விளையாட்டுப்போட்டிகள் எல்லாம் நடக்கும் முக்கியமாக உரி அடிப்பது, வழுக்குமரம், கபடி மற்றும் மிக முக்கியமாக
கட்டுச்சாவல்... நினைவுகளை ஞாபகப்படுத்தியதற்கு மிகவும் நன்றி பிரபாகர்....
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்....
இனிய தமிழ்ப்புத்தாண்டு, பொங்கல் வாழ்த்துகள்
//
ச.செந்தில்வேலன் said...

நன்றி செந்தில், உங்களுக்கும் குடும்பத்தாருக்கும் வாழ்த்துக்கள்.
//
ஆரூரன் விசுவநாதன் said...
இனிமையான காலத்தை அழகாக பகிர்ந்திருக்கிறீர்கள் பிரபா......
பழைய நாட்களுக்கே சென்றுவிட்டேன்...
அப்பத்தாவை விட(அப்பனை பெற்றவள்) அம்மாயி(அம்மாவைப் பெற்றவள்) வீட்டில்தான் எங்கள் பொங்கல் நடக்கும்.....நகரத்திலேயே வசித்துப் பழகிய எங்களுக்கு, அது ஒரு வசந்த விழாவாகத்தான் இருக்கும்...
வாழ்த்துக்கள்
//
நன்றி ஆரூரன்... பொங்கல் வாழ்த்துக்கள் உங்களுக்கு, உங்களின் குடும்பத்தாருக்கு!
//
குடுகுடுப்பை said...
பொங்கல் வாழ்த்துகள்
//
நன்றிங்க நண்பரே, உங்களுக்கும் குடும்பத்தாருக்கும் வாழ்த்துக்கள்.
//
cheena (சீனா) said...
அன்பின் பிரபாகர்
கொசுவத்தி சுத்தீட்டிங்க = அருமை அருமை - நானும் நெனெச்சிப் பாத்து மகிழ்ந்தேன்
இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்
//
நன்றிங்கய்யா! உங்களுக்கும் எனது இதயம் கனிந்த பொங்கல் நல் வாழ்த்துக்கள்...
//
Sangkavi said...
அழகான நினைவுகள்...
கரிநாள் அன்று ஊரில் விளையாட்டுப்போட்டிகள் எல்லாம் நடக்கும் முக்கியமாக உரி அடிப்பது, வழுக்குமரம், கபடி மற்றும் மிக முக்கியமாக
கட்டுச்சாவல்... நினைவுகளை ஞாபகப்படுத்தியதற்கு மிகவும் நன்றி பிரபாகர்....
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்....
//
இது பொங்கல் முடிஞ்ச பிறகு இளவட்டங்கள்லாம் செய்வாங்க! ரொம்ப நன்றிங்க!
திகழ் said...
இனிய தமிழ்ப்புத்தாண்டு, பொங்கல் வாழ்த்துகள்
//
நன்றி திகழ்... உங்களுக்கும் வாழ்த்துக்கள்.
பண்டிகைன்னாலே கிராமம்தான், நகரத்துல எங்க இதெல்லாம்...
பொங்கல் வாழ்த்துக்கள் அண்ணே....
நேத்து பொங்கல் வாழ்த்து சொல்லியாச்சு, அதுனால,
அண்ணே, இனிய மாட்டு பொங்கல் வாழ்த்துக்கள் :))
//போலியோ போலி’ன்னு//
இது என்னது புதுசா, "பொலியோ பொலி"யா?
வாழ்த்துகள் பிரபாகர்
அன்புடன்
ஆ.ஞானசேகரன்
நல்ல அனுபவப் பகிர்வு நண்பரே..
தமிழர்திருநாள் வாழ்த்துக்கள்..
இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்
தங்களுக்கும், குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும் தமிழர் திருநாளாம் இனிய தைப்பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்.
கால வேகத்தில் பல இனிய நிகழ்வுகளை இழந்து தொலைக்காட்சி முன் எல்லா திருவிழா நாள்களையும் கழித்து கொண்டிருக்கிறோம். :((
இனிய தமிழர் திருநாள் வாழ்த்துகள்.
நல்ல பதிவு ,அருமையான நினைவுகள்.வாழ்த்துக்கள் ,
இனிய பொங்கல் மற்றும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் .
கொசுவர்த்தி ஜூப்பர்,
பொங்கல் வாழ்த்துக்கள்.
நல்ல பொங்கல் அனுபவங்கள்.
இனிய தைத்திருநாள் பொங்கல் வாழ்த்துக்கள்.
பொங்கல் வாழ்த்துக்கள் பிரபாகர் :))
இனிமையான நினைவுகள்.
இனிய பொங்கல் வாழ்த்துகள் பிரபாகர்.
பொங்கலோ பொங்கல். பொங்கல் வாழ்த்துகள் அண்ணே.
//
நாஞ்சில் பிரதாப் said...
பண்டிகைன்னாலே கிராமம்தான், நகரத்துல எங்க இதெல்லாம்...
பொங்கல் வாழ்த்துக்கள் அண்ணே....
//
நன்றி பிரதாப்...
//
சங்கர் said...
நேத்து பொங்கல் வாழ்த்து சொல்லியாச்சு, அதுனால,
அண்ணே, இனிய மாட்டு பொங்கல் வாழ்த்துக்கள் :))
//போலியோ போலி’ன்னு//
இது என்னது புதுசா, "பொலியோ பொலி"யா?
//
அப்படின்னு சொல்லித்தான் எல்லாரும் சந்தோஷமா கத்துவோம்... நன்றி தம்பி...
//
ஆ.ஞானசேகரன் said...
வாழ்த்துகள் பிரபாகர்
அன்புடன்
ஆ.ஞானசேகரன்
//
நன்றிங்க அண்ணே...
//
முனைவர்.இரா.குணசீலன் said...
நல்ல அனுபவப் பகிர்வு நண்பரே..
தமிழர்திருநாள் வாழ்த்துக்கள்..
//
மிக்க நன்றிங்கய்யா...
//
T.V.Radhakrishnan said...
இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்
//
மிக்க நன்றிங்கய்யா...
//
துபாய் ராஜா said...
தங்களுக்கும், குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும் தமிழர் திருநாளாம் இனிய தைப்பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்.
கால வேகத்தில் பல இனிய நிகழ்வுகளை இழந்து தொலைக்காட்சி முன் எல்லா திருவிழா நாள்களையும் கழித்து கொண்டிருக்கிறோம். :((
//
ஆம் ராஜா, எதற்கும் ஒரு முடிவு உண்டு, கண்டிப்பாய் இதற்கும்... மிக்க நன்றி...
//
வானம்பாடிகள் said...
இனிய தமிழர் திருநாள் வாழ்த்துகள்.
//
ரொம்ப நன்றிங்கய்யா...
//
சாஷீ said...
நல்ல பதிவு ,அருமையான நினைவுகள்.வாழ்த்துக்கள்
//
வாங்க சாஷீ... முதல் வருகை மற்றும் வாழ்த்துக்கு நன்றிங்க...
//
Starjan ( ஸ்டார்ஜன் ) said...
இனிய பொங்கல் மற்றும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் .
//
நன்றி என் இனிய நண்பா...
//
தராசு said...
கொசுவர்த்தி ஜூப்பர்,
பொங்கல் வாழ்த்துக்கள்.
//
ரொம்ப நன்றிங்கண்ணே...
//
மாதேவி said...
நல்ல பொங்கல் அனுபவங்கள்.
இனிய தைத்திருநாள் பொங்கல் வாழ்த்துக்கள்.
//
நன்றி அன்பு சகோதரி...
//
மயில் said...
பொங்கல் வாழ்த்துக்கள் பிரபாகர் :))
//
ரொம்ப நன்றிங்க...
//
அக்பர் said...
இனிமையான நினைவுகள்.
இனிய பொங்கல் வாழ்த்துகள் பிரபாகர்.
//
நன்றிங்க நண்பா... மிக்க மகிழ்ச்சி
//
ரோஸ்விக் said...
பொங்கலோ பொங்கல். பொங்கல் வாழ்த்துகள் அண்ணே.
//
நன்றி தம்பி... பேசுவோம்...
நினைவுகள் பேசுகின்றது..
பொங்கல் நல்வாழ்த்துக்கள்..;)
நல்ல நினைவுகள்... நல்லாருக்கு... வாழ்த்துக்கள்....
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்
இனிய தமிழ்ப்புத்தாண்டு, பொங்கல் வாழ்த்துகள்
pongal vazhthugal annaa...
வீட்டையெல்லாம் நல்லா சுண்ணாம்பு அடிச்சி பளிச்சின்னு வெச்சிருவாங்க. //
இப்ப ஏதுங்க சுண்ணாம்பு..?? காத்துல இருக்கற நச்ச சுண்ணாம்பு உறிஞ்சிடும், இப்ப அதெல்லாம் நாகரீகத்துல காணாம போய் நச்சுகள் நம்மை சுற்றி..:(
நல்ல பதிவு..::) வாழ்துக்கள்.
//
வினோத்கெளதம் said...
நினைவுகள் பேசுகின்றது..
பொங்கல் நல்வாழ்த்துக்கள்..;)
//
நன்றிங்க நண்பா...
//
அண்ணாமலையான் said...
நல்ல நினைவுகள்... நல்லாருக்கு... வாழ்த்துக்கள்....
//
நன்றிங்க, ரொம்ப சந்தோசம்.
//
நசரேயன் said...
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்
//
நன்றி நசரேயன்...
//
நிலாமதி said...
இனிய தமிழ்ப்புத்தாண்டு, பொங்கல் வாழ்த்துகள்
//
நன்றி சகோதரி...
//
கலகலப்ரியா said...
pongal vazhthugal annaa...
//
நன்றி சகோதரி...
//
பலா பட்டறை said...
வீட்டையெல்லாம் நல்லா சுண்ணாம்பு அடிச்சி பளிச்சின்னு வெச்சிருவாங்க. //
இப்ப ஏதுங்க சுண்ணாம்பு..?? காத்துல இருக்கற நச்ச சுண்ணாம்பு உறிஞ்சிடும், இப்ப அதெல்லாம் நாகரீகத்துல காணாம போய் நச்சுகள் நம்மை சுற்றி..:(
நல்ல பதிவு..::) வாழ்துக்கள்.
//
நன்றி நண்பா... நச்சுக்களில் வாழ்வதை அழகா சொல்லியிருக்கீங்க...
அட... அருமையான இடுகை
கடவுள் நம்பிக்கை இல்லதா தாத்தாவும் பொங்கலுக்கு முன்னின்று செய்வது....
பால் பொங்குச்சானு கேட்டு வசூல் பண்றது
அருமையோ அருமை சாமி
//
ஈரோடு கதிர் said...
அட... அருமையான இடுகை
கடவுள் நம்பிக்கை இல்லதா தாத்தாவும் பொங்கலுக்கு முன்னின்று செய்வது....
பால் பொங்குச்சானு கேட்டு வசூல் பண்றது
அருமையோ அருமை சாமி
//
நன்றி கதிர்! என் தாத்தா அதற்கு சொன்ன விளக்கம், இது நன்றி செலுத்தும், கொண்டாடும் திருவிழா...
Post a Comment