சிவப்பு, ஆரஞ்சு, பச்சை - கவிதை...

|

காதலியை பிரிந்த காதலன்...

காதலுமே என்னை
கைவிட்டு போச்சு
வேதனையும் நானும்
வாக்கப்பட்டு ஆச்சு.

மோதுகின்ற எண்ணம்
முரண்பட்டு போச்சு
சாதலிலே நெஞ்சம்
சிந்திக்கவும் ஆச்சு

கண்விட்டு தூக்கம்
காத தூரம் போச்சு
புண்பட்டு நெஞ்சம்
புகைச்சலாய் ஆச்சு

உனையெண்ணி உயிரும்
உருக்குலைந்து போச்சு
எனைப்பார்த்து எனக்கே
ஏளனமாய் போச்சு.

காதலை இறைஞ்சும் காதலன்...

முன்னாடி வந்து உன்
முகத்தை பார்ப்பதற்கு
கண்ணாடி முகம் பார்த்து
காலம் கழிக்கிறேன்

எண்ணத்தில் உனையன்றி
ஏதும் இல்லாமல்
மண் நிலையில்
மயங்கியே கிடக்கையில்

பொன் பட்டுக்கை தொட்டு
புன்னகை நீறூற்றி
மண்னென்னை பிசைந்திட்டு
மயக்கும் சிற்பமாய்

உண்டாக்கி உயிர்கொடுத்து
உள்மனதில் உறைந்திடுவாய்
என்னருமை காதலியே
என்வாழ்வின் நல் ஒளியே...

காதலின் வென்ற காதலன்...

தென்றல் தழுவியதை
தேகமது உணருது
மென்மையான மெல்லிசையை
மனதும் கேட்குது...

பண்ணிசைக்கும் வண்டு பார்க்க
பேசும் கண்ணாய் தோனுது
விண்மேவும் கார்மேகம்
உன் கூந்தல்போல் தெரியுது

பேருந்தில் நடத்துனரும்
பொறுக்கித் தர சில்லறையை
சிறு குலுக்கல் செய்வதுவுன்
சிரிப்பொலியாய் கேட்குது....

சிறையான நீர்த்துளியை
செடியிலையில் காணும்போது
நெற்றியோடி புருவம் சேர்ந்த
வியர்வையென தோனுது...

30 : பேர் படிச்சிட்டு சொல்றாங்க...:

மணிகண்டன் said...

சூப்பர் பிரபாகர். கவிதையா எழுதி தள்ளறீங்க :)- அதான் கொஞ்ச நாள் தள்ளி இருக்கவேண்டியதா போச்சு !

முதல் தலைப்பை மூணாவது கவிதைக்கும் , மூணாவது தலைப்பை முதல் கவிதைக்கும் போட்டு படிச்சி பார்த்தேன். நல்லா இருந்தது :)-

கலகலப்ரியா said...

நல்லா இருக்குண்ணா... நாட்டுப்புறப் பாடல் மாதிரி.. மெட்டுப் போட்டுப் படிக்கலாம்...

ஹேமா said...

காதலின் உணர்வை மூன்றாய்ப் பிரித்து வித்துயாசமான கவிதையாக்கியிருக்கிறீர்கள் பிரபா.
நல்ல முயற்சி.கவிதையும் நல்லாயிருக்கு.

நிலாமதி said...

உள்ளத்து உணர்வாய் கவிதையின் வெளிப்பாடுகள் அழகாய் சுவையாய் உள்ளன பாராட்டுக்கள் .

vasu balaji said...

நல்லா இருக்கு சார்.

புலவன் புலிகேசி said...

தல மூனும் பிரிவுகளுடன் அருமை

T.V.ராதாகிருஷ்ணன் said...

நல்லா இருக்கு

குடுகுடுப்பை said...

புரியுது.

ஆரூரன் விசுவநாதன் said...

//பொன் பட்டுக்கை தொட்டு
புன்னகை நீறூற்றி
மண்னென்னை பிசைந்திட்டு
மயக்கும் சிற்பமாய்//

பிரபாகர் said...

//
மணிகண்டன் said...
சூப்பர் பிரபாகர். கவிதையா எழுதி தள்ளறீங்க :)- அதான் கொஞ்ச நாள் தள்ளி இருக்கவேண்டியதா போச்சு !

முதல் தலைப்பை மூணாவது கவிதைக்கும் , மூணாவது தலைப்பை முதல் கவிதைக்கும் போட்டு படிச்சி பார்த்தேன். நல்லா இருந்தது :)-
//
வாங்க மணி... கவிதையும் எழுதிகிட்டிருந்தேன்... உங்க வருகை சந்தோஷமா இருக்கு...

//
கலகலப்ரியா said...
நல்லா இருக்குண்ணா... நாட்டுப்புறப் பாடல் மாதிரி.. மெட்டுப் போட்டுப் படிக்கலாம்...
//
நன்றி சகோதரி!

பிரபாகர் said...

//
ஹேமா said...
காதலின் உணர்வை மூன்றாய்ப் பிரித்து வித்துயாசமான கவிதையாக்கியிருக்கிறீர்கள் பிரபா.
நல்ல முயற்சி.கவிதையும் நல்லாயிருக்கு.
//
நன்றி சகோதரி, ரொம்ப சந்தோஷம்...

//
நிலாமதி said...
உள்ளத்து உணர்வாய் கவிதையின் வெளிப்பாடுகள் அழகாய் சுவையாய் உள்ளன பாராட்டுக்கள் .
//
பாராட்டுக்களுக்கு நன்றி சகோதரி...

Unknown said...

நல்லா இருக்கு சார் கவுஜ.. சாரி கவித

பிரபாகர் said...

//
வானம்பாடிகள் said...
நல்லா இருக்கு சார்.
//
நன்றிங்கய்யா!

//
புலவன் புலிகேசி said...
தல மூனும் பிரிவுகளுடன் அருமை
//
நன்றி புலிகேசி...

பிரபாகர் said...

//
T.V.Radhakrishnan said...
நல்லா இருக்கு
//
நன்றிங்கய்யா!

//
குடுகுடுப்பை said...
புரியுது.
//
வாங்க பாஸ்... ரொம்ப சந்தோஷம்...

பிரபாகர் said...

//
ஆரூரன் விசுவநாதன் said...
//பொன் பட்டுக்கை தொட்டு
புன்னகை நீறூற்றி
மண்னென்னை பிசைந்திட்டு
மயக்கும் சிற்பமாய்//
//
நன்றி ஆரூரன்...

//
முகிலன் said...
நல்லா இருக்கு சார் கவுஜ.. சாரி கவித
//
நன்றி முகிலன்...

sathishsangkavi.blogspot.com said...

//உண்டாக்கி உயிர்கொடுத்து
உள்மனதில் உறைந்திடுவாய்
என்னருமை காதலியே
என்வாழ்வின் நல் ஒளியே...//

ரசனையுடன் கூடிய கலக்கல் கவிதை....

சங்கர் said...

'சிங்கை உவமைக் கவிஞர்'னு பட்டம் கொடுத்துவிடலாமா

ஸ்ரீ.கிருஷ்ணா said...

கலக்கல் சார்.

Rekha raghavan said...

//முன்னாடி வந்து உன்
முகத்தை பார்ப்பதற்கு
கண்ணாடி முகம் பார்த்து
காலம் கழிக்கிறேன்//

அருமையான வரிகள். எங்கேயோ போயிட்டீங்க.

ரேகா ராகவன்.

பிரபாகர் said...

//
Sangkavi said...
//உண்டாக்கி உயிர்கொடுத்து
உள்மனதில் உறைந்திடுவாய்
என்னருமை காதலியே
என்வாழ்வின் நல் ஒளியே...//

ரசனையுடன் கூடிய கலக்கல் கவிதை....
//
நன்றிங்க... உங்க அன்புக்கு நன்றி...

//
சங்கர் said...
'சிங்கை உவமைக் கவிஞர்'னு பட்டம் கொடுத்துவிடலாமா
//
ஆஹா, தம்பி, இந்த மாதிரி சொல்லியே அண்ணனை கவுத்துடுவீங்க போலிருக்கு...

பிரபாகர் said...

//
ஸ்ரீ.கிருஷ்ணா said...
கலக்கல் சார்.
//
நன்றி ஜெய்..

//
KALYANARAMAN RAGHAVAN said...
//முன்னாடி வந்து உன்
முகத்தை பார்ப்பதற்கு
கண்ணாடி முகம் பார்த்து
காலம் கழிக்கிறேன்//

அருமையான வரிகள். எங்கேயோ போயிட்டீங்க.

ரேகா ராகவன்.
//
நன்றிங்க மேடம்... உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்...

ஈரோடு கதிர் said...

கலக்குங்க

மணிஜி said...

நீங்கள் மொக்கை பதிவரா? நாளை மானிட்டர் பக்கங்கள் படிக்கவும்

மாதேவி said...

"பேருந்தில் நடத்துனரும்
பொறுக்கித் தர சில்லறையை
சிறு குலுக்கல் செய்வதுவுன்
சிரிப்பொலியாய் கேட்குது...."

புது விதமான வர்ணனை.

அப்பாதுரை said...

ரசிக்கிறேன்

பிரபாகர் said...

//
ஈரோடு கதிர் said...
கலக்குங்க
//
நன்றி கதிர்!

//
தண்டோரா ...... said...
நீங்கள் மொக்கை பதிவரா? நாளை மானிட்டர் பக்கங்கள் படிக்கவும்
//
கண்டிப்பா! காத்திருக்கிறேன்...

பிரபாகர் said...

//
மாதேவி said...
"பேருந்தில் நடத்துனரும்
பொறுக்கித் தர சில்லறையை
சிறு குலுக்கல் செய்வதுவுன்
சிரிப்பொலியாய் கேட்குது...."

புது விதமான வர்ணனை.
//
நன்றிங்க, ரொம்ப சந்தோஷம்...

//
அப்பாதுரை said...
ரசிக்கிறேன்
//
நானும் அப்பாதுரை... உங்களின் முதல் வருகையை...

ரோஸ்விக் said...

வாழ்வின் சிறு சிறு நிகழ்வுகளையும் ரசிச்சு வித்தியாசமா எழுதீருக்கீங்க... கலக்குங்க...:-)

நசரேயன் said...

கலர் கலரா கலக்குங்க

பிரபாகர் said...

//
ரோஸ்விக் said...
வாழ்வின் சிறு சிறு நிகழ்வுகளையும் ரசிச்சு வித்தியாசமா எழுதீருக்கீங்க... கலக்குங்க...:-)
//
நன்றி ரோஸ்விக், உங்களின் அன்பிற்கு...

//
நசரேயன் said...
கலர் கலரா கலக்குங்க
//
நன்றிங்க நசரேயன்...

 

©2009 ”வாழ்க்கை வாழ்வதற்கே” | Template Blue by TNB