இதோட முதல் பாகம் (கல்லூரி ரேகிங் அனுபவங்கள் - பட்டது...) படிக்கலன்னா படிச்சிட்டு வந்துடுங்களேன், பிளீஸ்...
ஃபர்ஸ்ட் இயர்ல வசமா சிக்கினதால நான் யாரையும் ரேகிங் பண்ணமாட்டேன்னு பசங்க கிட்ட ரொம்ப தெளிவா சொல்லியிருந்தேன். இருந்தும் விதி விட்டுடுமான்னேன், வாய்ப்பு தானா அமைஞ்சது.
பசங்கள்லாம் தீவிரமா போன வருஷம் கிடைச்ச அனுபவத்தை வெச்சும், புதுசு புதுசாவும் பண்ணிட்டிருந்தானுங்க.
டே ஸ்காலர ரேகிங் பண்ணிட்டிருக்கும்போது ஒருத்தன் ரொம்ப அப்பாவியா தெரிஞ்சான். அவன் ரொம்ப நடிக்கிறதா தெரிய, நமக்கு அண்ணனா இருப்பான் போலிருக்குன்னு நினைச்சிகிட்டு அவன கூப்பிட்டேன். அதுக்கு இன்னொரு காரணமும் இருந்துச்சி, அது அவன் போட்டிருந்த செருப்பு, வெச்சிருந்த பை.
ஹை ஹீல்ஸ் செருப்பு போட்டுகிட்டு, ஒரு மஞ்சப்பையும் வெச்சிருக்க, மொதல்ல வசதி பத்தி கேக்கலாம்னு ’அப்பா என்ன பண்றாரு' ன்னு கேட்டேன். சொன்ன பதில் கொஞ்சம் பிரமிப்பா இருந்துச்சி. விவசாயம் பண்றாரு ரெண்டு டிராக்டர் இருக்கு ஐம்பது ஏக்கருக்கு மேல நிலம், பண்ணையத்துல பத்து பேரு நிரந்திரமா வேலை பாக்குறாங்க... வீட்டுல அஞ்சி நாயி இருக்கு’ (உன்னையும் சேர்த்தாண்ணு கேட்டேன், ஹி, ஹி... அப்பன்னா ஆறுன்னுட்டு, நீங்க வந்தா ஏழுன்னான். இது தேவையான்னு நினைச்சிட்டேன்).
சோ, நம்மாளு நல்ல வசதின்னு தெரிஞ்சிகிட்டு, கால்ல என்ன ஹை ஹீல்ஸ் செருப்பு போட்டிருக்கன்னு கேட்டதுக்கு, 'என் அக்காவோடது' ன்னு சொல்ல ஆடிப் போயிட்டேன். அத்தோட இல்லாம ’எடுக்க நேரமில்லண்ணே, இந்த காலேஜுக்கு இது போதாதா’ ன்னு கேட்டான்.
’அதென்ன மஞ்சப் பை, புரோக்கர் மாதிரி’ ன்னு கேட்டதுக்கு எதோ சொல்ல வர, ’எதுவும் சொல்ல வேணாம், நாளைக்கு பேட்டா செருப்பு குறைஞ்சது நூறு ரூபாயில, அப்புறம் டீசன்டா ஒரு பை மகேஷ்ல கிடைக்கும். எங்கிட்ட காமிச்சிட்டுத்தான் கிளாசுக்கு போகனும்’ னு சொல்ல, 'திருச்சிக்கு போயி வாங்கிட்டு வந்துடறேன், இந்த ஊர்ல மனுஷன் வாங்குவானா?' ன்னு சொல்லி நோகடிச்சிட்டு உற்சாகமா தலையாட்டிட்டு போயிட்டான்.
அடுத்த நாள் ஒம்பதரைக்கெல்லாம் கிளாஸுக்கு வந்து ஒரு அசைன்மென்ட்ட எழுதிகிட்டிருந்தேன். வாசல்ல அவன் வந்து நிக்கிறத ஓரக்கண்ணால பாத்துட்டு, கண்டுக்காத மாதிரி தீவிரமா எழுதிட்டிருந்தேன்.
நான் அவன பார்ப்பேனான்னு பாத்துகிட்டே இருந்தான். நான் திரும்பறதாயில்ல. வர்ற பசங்கல்லாம், ’டேய் ஃபர்ஸ்ட் இயரா? இங்கென்ன வேலை’ ன்னு கேக்க, ’பிரபாகர் அண்ணன பாக்கனும்’ னு சொல்ல, ’டேய் பிரபாகர்லாம் ரேக்கிங் பண்றான்டா’ ன்னு ஆச்சர்யமா சொல்லிட்டு போயிட்டிருந்தானுங்க.
ஃபர்ஸ்ட் பெல் அடிக்கிற நேரமாச்சு. ரமேஷ் (அடி வாங்கி டரியலானோமே அந்த ரமேஷ்தான்) 'மாப்ளே பிகு பண்ணியது போதும் அவனை பாத்துடு' ன்னு சொல்ல, அவன அப்போதான் பாக்கிற மாதிரி, 'ஹே, என்னப்பா, ரொம்ப நேரமா வெயிட் பண்றியா, பாக்கல' ன்னு சொல்ல,
'மொதல்லயே பாத்துட்டீங்க, கண்டுக்காத மாதிரி இருக்கீங்க, சரிண்ணே, செருப்பு புதுசு, பையும் புதுசு' ன்னு காமிச்சான். குவாடிஸ் செருப்பு, விலை அதிகமான பேக்.
’நாலு செருப்பு, ரெண்டு பேக் வாங்கிட்டேன்னே, அதையும் எடுத்துகிட்டு போட்டுகிட்டு வர்றப்போ வந்து காமிக்கிறேன்’ னு சொல்லிட்டு, என் கால்ல போட்டிருக்கிற செருப்ப ஏளனமா பாத்துட்டு, அண்ணே ஷூ வாங்கனும் என்ன பிராண்ட் நல்லாருக்கும்னு கேட்டான்.
இது தான் நாம ரேகிங் செஞ்ச வரலாறு. பின்னூட்டத்துல நீங்க கேக்கக்கூடாதுங்கறதுக்காக நானே ஒரு கேள்விய கேட்டுக்கறேன், 'ஆமா இதுல ரேகிங் பண்ணினது யாரு?'
மிச்சர்கடை
4 weeks ago
24 : பேர் படிச்சிட்டு சொல்றாங்க...:
//'ஆமா இதுல ரேகிங் பண்ணினது யாரு?' //
அதான் நானும் கேட்கிறேன்.
=)). நாய் சேகர் அல்லாவ். எங்கள எல்லாம் பார்த்தா ரவுடி மாதிரி தெரியலயான்னு கேட்டது கவனம் வருது. அப்பிடி சொல்லிகிட்டுதான் ரேகிங் பண்ணிங்களோ=)).. சாமி முடியல.
//பின்னூட்டத்துல நீங்க கேக்கக்கூடாதுங்கறதுக்காக நானே ஒரு கேள்விய கேட்டுக்கறேன், 'ஆமா இதுல ரேகிங் பண்ணினது யாரு?' //
இப்புடி நாங்க பின்னூட்டத்துல கேக்க வேண்டியதை நீங்களே எழுதிட்டா நாங்க எதை எழுதறது
நல்லா மாட்டினீங்களா..?
//அஞ்சி நாயி இருக்கு’ (உன்னையும் சேர்த்தாண்ணு கேட்டேன், ஹி, ஹி... அப்பன்னா ஆறுன்னுட்டு, நீங்க வந்தா ஏழுன்னான். இது தேவையான்னு நினைச்சிட்டேன்).//
//'ஆமா இதுல ரேகிங் பண்ணினது யாரு?' //
கேக்கணும்னு அவசியமே இல்ல, தெளிவா தெரியுது
நம்ம பெருமைய நாமலே பேசிகிட்டா தான் ஆச்சு!
//என் கால்ல போட்டிருக்கிற செருப்ப ஏளனமா பாத்துட்டு//
தேவையா இதுன்னு தோணியிருக்குமே... சந்தேகமே இல்ல.. அந்த ‘பை’யன்தான் உங்கள காலவாரியிருக்கான்.
எல்லாரும் கேட்ட கேள்விதான்.. எனக்கும்.. யாரு..???
கேபிள் சங்கர்
அவன கண்டும் காணாம இருந்தீங்களே... அதானே ரேகிங்... ??
அவன் ரெண்டு பேக்கும், நாலு செருப்பும் வாங்கிட்டு வந்தானே.... அது எதுக்கு தெரியுமா??
அதுல ரெண்டு செருப்பும், ஒரு பேக்கும் உங்களுக்கு. நீங்க அவன மொதல்லே கண்டுகிட்டு இருந்தா உங்களுக்கு அன்பு பரிசா கொடுத்திருப்பான்...
இப்ப வடை போச்சே!
கடைசியா அவன் உங்கள ரேகிங் பண்ணிட்டு போய்ட்டானோ?? :-)))))
ஆமா..நீங்க எல்லோரும் என்னவோ ராகிங் ன்னு பேசிட்டு இருக்கிங்களே? அப்படின்னா என்னா :)
//
நாடோடி இலக்கியன் said...
//'ஆமா இதுல ரேகிங் பண்ணினது யாரு?' //
அதான் நானும் கேட்கிறேன்.
//
இதெலென்ன சந்தேகம், பண்ணனும்னு நெனச்சி சூனியம் வெச்சிகிட்டது நாந்தான்.
//
வானம்பாடிகள் said...
=)). நாய் சேகர் அல்லாவ். எங்கள எல்லாம் பார்த்தா ரவுடி மாதிரி தெரியலயான்னு கேட்டது கவனம் வருது. அப்பிடி சொல்லிகிட்டுதான் ரேகிங் பண்ணிங்களோ=)).. சாமி முடியல.
//
ஆமாங்கய்யா, இது நடந்தது தொன்னூறுலயாக்கும்.
//
ஆரூரன் விசுவநாதன் said...
//பின்னூட்டத்துல நீங்க கேக்கக்கூடாதுங்கறதுக்காக நானே ஒரு கேள்விய கேட்டுக்கறேன், 'ஆமா இதுல ரேகிங் பண்ணினது யாரு?' //
இப்புடி நாங்க பின்னூட்டத்துல கேக்க வேண்டியதை நீங்களே எழுதிட்டா நாங்க எதை எழுதறது
//
இந்த மாதிரி ஏதாச்சும் ஆரூரன், ரொம்ப நன்றிங்க.
//
butterfly Surya said...
நல்லா மாட்டினீங்களா..?
//
தப்பிச்சும் ஆச்சு. அவர நிஜமா ஓட்டுனது இன்னொரு இடுகையில.
//
சங்கர் said...
//அஞ்சி நாயி இருக்கு’ (உன்னையும் சேர்த்தாண்ணு கேட்டேன், ஹி, ஹி... அப்பன்னா ஆறுன்னுட்டு, நீங்க வந்தா ஏழுன்னான். இது தேவையான்னு நினைச்சிட்டேன்).//
//'ஆமா இதுல ரேகிங் பண்ணினது யாரு?' //
கேக்கணும்னு அவசியமே இல்ல, தெளிவா தெரியுது
//
ஆமா சங்கர், பண்ணனும்னு நாம சிக்கிகிட்டது...
//
வால்பையன் said...
நம்ம பெருமைய நாமலே பேசிகிட்டா தான் ஆச்சு!
//
வேற வழி... நன்றி அருண்.
//
க.பாலாசி said...
//என் கால்ல போட்டிருக்கிற செருப்ப ஏளனமா பாத்துட்டு//
தேவையா இதுன்னு தோணியிருக்குமே... சந்தேகமே இல்ல.. அந்த ‘பை’யன்தான் உங்கள காலவாரியிருக்கான்.
//
'பை'யன்... இந்த மாதிரி 'பின்'னூட்டம் பாலாசியாலதான் முடியும்.
//
shortfilmindia.com said...
எல்லாரும் கேட்ட கேள்விதான்.. எனக்கும்.. யாரு..???
கேபிள் சங்கர்
//
வேற யாரு, உங்க அன்பு தம்பிதான் சிக்கியிருக்காரு பலிகெடாவா!
//
ரோஸ்விக் said...
அவன கண்டும் காணாம இருந்தீங்களே... அதானே ரேகிங்... ??
அவன் ரெண்டு பேக்கும், நாலு செருப்பும் வாங்கிட்டு வந்தானே.... அது எதுக்கு தெரியுமா??
அதுல ரெண்டு செருப்பும், ஒரு பேக்கும் உங்களுக்கு. நீங்க அவன மொதல்லே கண்டுகிட்டு இருந்தா உங்களுக்கு அன்பு பரிசா கொடுத்திருப்பான்...
இப்ப வடை போச்சே!
கடைசியா அவன் உங்கள ரேகிங் பண்ணிட்டு போய்ட்டானோ?? :-)))))
//
அவன வெச்சு பண்ணின காமெடிய ஒரு இடுகையா பின்னால போடறேன். நன்றி ரோஸ்விக்.
//
பூங்குன்றன்.வே said...
ஆமா..நீங்க எல்லோரும் என்னவோ ராகிங் ன்னு பேசிட்டு இருக்கிங்களே? அப்படின்னா என்னா :)
//
ம்.... என்ன அந்த பையன் செஞ்சது...
நல்லவேளை செருப்பும், பையோட விட்டீங்க...
தல,ஜூனியர் நல்லாத்தான் கலாய்ச்சிருக்கான் உங்களை... :))
100 நூறு பேரை இதயத்தில் இணைத்ததற்கும் வாழ்த்துக்கள்.
//
கலையரசன் said...
நல்லவேளை செருப்பும், பையோட விட்டீங்க...
//
ஆமாமா, இல்லன்னா இன்னும் டரியலாயிருப்பேன்...
//
துபாய் ராஜா said...
தல,ஜூனியர் நல்லாத்தான் கலாய்ச்சிருக்கான் உங்களை... :))
100 நூறு பேரை இதயத்தில் இணைத்ததற்கும் வாழ்த்துக்கள்.
//
அதனாலதானே இந்த இடுகை... நன்றி ராஜா...
அதனாலதானே இந்த இடுகை... நன்றி ராஜா... பின்னால இவரை உண்மையா கலாய்ச்சதப்பத்தி பேசுவோம்.
ஆகா... வசமா மாட்டீருக்கீங்க தல.
ரொம்ப டமாஷுதான் போங்க... ஸ்ஸ்ஸபா.. முடியல... =))
//
செ.சரவணக்குமார் said...
ஆகா... வசமா மாட்டீருக்கீங்க தல.
//
நன்றி சரவணக்குமார்... வருகைக்கும் கருத்துக்கும்...
//
கலகலப்ரியா said...
ரொம்ப டமாஷுதான் போங்க... ஸ்ஸ்ஸபா.. முடியல... =))
//
நன்றி சகோதரி! எனக்கும்தான். இரவு முழுதும் அலுவலகத்தில் வேலை. முடியும் நேரம்...
//நானே ஒரு கேள்விய கேட்டுக்கறேன், 'ஆமா இதுல ரேகிங் பண்ணினது யாரு?' //
நான் கேட்க வாயெடுததேன் நீங்க சொல்லிட்டீங்க... அவரு உங்களவச்சு நல்லாவே காமெடி பண்ணிட்டாரு போங்க... ராக்கிங் பண்றதுக்கெல்லாம் கொஞசம் அது வேணும்ணே... அதுன்னு தில்லு...
avaru ungala vachi comedy kimedy pannalaye?

தப்பா நினைக்க வேணாம் பிரதாப்பு, அதே பையன நாம பின்னாடி படுத்தினத இன்னொரு இடுகையில சொல்றேன்...
//
angel said...
avaru ungala vachi comedy kimedy pannalaye?
//
காமெடிதான் பண்ணி டரியல் ஆக்கிட்டாரே!
Post a Comment