தண்ணீர் தண்ணீர்... சிறுகதை...

|

'என்ன விஷயம், சட்டுனு சொல்லிட்டு கிளம்பு, நிறைய வேலை இருக்கு'.

'அதே விஷயம் தான்னா, கொஞ்சம் பெரிய மனசு பண்ணி விட்டுத் தரனும். உங்கிட்ட வசதி வாய்ப்பு எல்லாம் இருக்கு, நீ நினைச்சா...'

'பாண்டியா, எத்தன தடவ சொல்றது, ஒனக்கு ஏறவே ஏறாதா? உன் சொத்த வெச்சிகிட்டு உன் வழிய பாரு. என் வழியில குறுக்க வராத. என்ன பாக்கவும் வராத. உங்கிட்ட பேசறத பாத்தா,  தெரிஞ்சா, அண்ணி அஞ்சு நாளைக்கு அண்ட விட மாட்டா'.

'கூட பொறந்த பொறப்புன்னா, நான் பக்கத்துல இருக்கும்போதே நம்ம குடும்பத்த கெடுத்தவனுக்கு குத்தகைக்கு விட்டிருக்க. நான் பாத்துக்கறேன் அதே குத்தகை தர்றேன்னு சொன்னா, என் மேல நம்பிக்கை இல்லைன்னு சொல்றே. சரி உபயோகப்படுத்தாத அந்த தண்ணி இருக்கிற கிணத்துல இருந்து தண்ணி பாய்ச்சிக்கவாவது விடுவன்னு பாத்தா அதுக்கும் ஒத்துக்க மாட்டேங்கறே. நானும் நீ பொறந்த அதே வயித்துலதான் பொறந்தேன்...'

'சும்மா தொணதொணக்காத. நேரமாச்சு, என்ன பேசினாலும் வேலைக்காவாது. தனியா கிணற வெட்டிக்கோ. இது விஷயமா இதுக்கு மேல பேசாத. வந்து என் மூஞ்சில முழிக்காத. பத்திரிக்கைக்காரங்கள வர சொல்லியிருக்கேன், காத்துகிட்டிருப்பாங்க.கிளம்பு'

'கொஞ்சம் தாமதமாகிவிட்டது, மன்னியுங்கள். ஒரு முக்கியமான அறிக்கை விஷயமா வரச் சொன்னேன். காவிரியில இன்னும் ஒரு வாரத்துக்குள் வழக்கமாய் தரும் தண்ணீரை திறந்து விடவில்லையென்றால் மத்திய அரசுக்கு நாங்கள் அளித்துவரும் ஆதரவை மறு பரிசீலனை செய்ய வேண்டிவரும் என்பதை முதல்வரின் சார்பாக, நீர்ப்பாசனத்துறை அமைச்சர் என்ற முறையில் தெரிவித்துக்கொள்கிறேன்'.
                
38 : பேர் படிச்சிட்டு சொல்றாங்க...:

ஆரூரன் விசுவநாதன் said...

வேடிக்கை மனிதர்கள்......

தமிழ் மணத்திற்கு அனுப்பிவிட்டேன் பிரபா

Anonymous said...

ஹூம்.

ஜெட்லி... said...

உண்மை கதை மாதிரி தெரியுது அண்ணே....

புலவன் புலிகேசி said...

ம்..நச்சுன்னு சொல்லிட்டீங்க தல..

ஆரூரன் விசுவநாதன் said...

பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்

நிறைய எழுதத் தெரியில,,,,,,
இருந்தாலும் நம்ம வாத்தியாரோட பழைய இடுகையை அனுப்பறேன்...

http://maniyinpakkam.blogspot.com/search/label/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81

ரிபீட்டேய்.............

அன்புடன்
ஆரூரன்

நாடோடி இலக்கியன் said...

இனிய பிறந்தநாள் அன்புகள் நன்பரே.

முனைவர் இரா.குணசீலன் said...

பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் அன்பரே..

முனைவர் இரா.குணசீலன் said...

சிறுகதை நன்றாகவுள்ளது நண்பரே.....

T.V.ராதாகிருஷ்ணன் said...

நச்

vasu balaji said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் பிரபா. 100 கடந்த நண்பர் குழாமுக்கும் 100 ஐ அடையும் எழுத்துக்கும் கூட என் எனிய வாழ்த்துகள்:))

Prathap Kumar S. said...

அண்ணே பிறந்தநாளா?? சொல்லவே இல்ல... என்றும் சிரித்துகொண்டு நூறாண்டுகள் வாழ வாழ்த்துக்கள்...

கதை டாப்...பு ஊருக்கு நியாயம் வூட்டுக்கு ஒருநியாயம்..

ஈரோடு கதிர் said...

என் இனிய.... பிரபா...

இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துகள்....

வாழ்த்து சொன்னதிற்காக கேக் வரவில்லையென்றால் சிங்கப்பூருக்கு டிக்கட் கேட்கப்படும் என்பதை அண்ணன் வானம்பாடி சார்பாக தெரிவித்துக்கொள்கிறேன்...

சமீப காலத்தில் வந்ததில் நச்’னு இருக்கும் இடுகை பிரபா

அகல்விளக்கு said...

ஆப்பி பர்த்டே மாம்ஸ்...

பூங்குன்றன்.வே said...

பிறந்தநாள் குழந்தைக்கு(?) மனம் கனிந்த வாழ்த்துக்கள்.
குட்டிக்கதையும் நன்று நண்பா.

க.பாலாசி said...

கதை சுருக்கமாவும் நச்சென்றும் இருக்கிறது.

ஆமா உங்களுக்கு 18வது பிறந்தநாளாமே?? உண்மையா??? அண்ணா...

உண்மைத்தமிழன் said...

சூப்பர் டிவிஸ்ட் பிரபா..!

கதை நன்றாக இருந்தது..!

கலையரசன் said...

ல்
லா
யி
ரு

ரா
சா!

கா.பழனியப்பன் said...

நல்ல எதார்தமான குட்டிக் கதை

பிரபாகர் said...

//
ஆரூரன் விசுவநாதன் said...
வேடிக்கை மனிதர்கள்......

தமிழ் மணத்திற்கு அனுப்பிவிட்டேன் பிரபா
//
அன்பிற்கு நன்றி ஆரூரன்...

//
சின்ன அம்மிணி said...
ஹூம்.
//
ரொம்ப நன்றிங்க!

பிரபாகர் said...

//
ஜெட்லி said...
உண்மை கதை மாதிரி தெரியுது அண்ணே....
//
அப்படியும் வெச்சிக்க்லாம். நன்றி சகோதரா...

//
புலவன் புலிகேசி said...
ம்..நச்சுன்னு சொல்லிட்டீங்க தல..
//
நன்றி புலிகேசி....

பிரபாகர் said...

//
ஆரூரன் விசுவநாதன் said...
பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்

நிறைய எழுதத் தெரியில,,,,,,
இருந்தாலும் நம்ம வாத்தியாரோட பழைய இடுகையை அனுப்பறேன்...

http://maniyinpakkam.blogspot.com/search/label/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81

ரிபீட்டேய்.............

அன்புடன்
ஆரூரன்
//
என்ன சொல்ல, அன்பிற்கு உண்டோ அடைக்கும் தாழ்...

பிரபாகர் said...

//
நாடோடி இலக்கியன் said...
இனிய பிறந்தநாள் அன்புகள் நன்பரே.
//
நன்றி என் இனிய நண்பா!

//
முனைவர்.இரா.குணசீலன் said...
பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் அன்பரே..
//
அய்யா மிக்க சந்தோஷம், நன்றி...

பிரபாகர் said...

//
முனைவர்.இரா.குணசீலன் said...
சிறுகதை நன்றாகவுள்ளது நண்பரே.....
//
நன்றி அய்யா!

//
T.V.Radhakrishnan said...
நச்
//
நன்றிங்கய்யா!

பிரபாகர் said...

//
வானம்பாடிகள் said...
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் பிரபா. 100 கடந்த நண்பர் குழாமுக்கும் 100 ஐ அடையும் எழுத்துக்கும் கூட என் எனிய வாழ்த்துகள்:))
//
வழக்கமான என் பதில்தான்.... எல்லாம் உங்கள் அன்பாலும் அறிவுறுத்துதலாலும் தான்.

//
நாஞ்சில் பிரதாப் said...
அண்ணே பிறந்தநாளா?? சொல்லவே இல்ல... என்றும் சிரித்துகொண்டு நூறாண்டுகள் வாழ வாழ்த்துக்கள்...

கதை டாப்...பு ஊருக்கு நியாயம் வூட்டுக்கு ஒருநியாயம்..
//
நன்றி தம்பி, 36 லிருந்து சரியா 37ன்னு மாத்திட்டேன் பாத்தீங்களா?

பிரபாகர் said...

//
ஈரோடு கதிர் said...
என் இனிய.... பிரபா...

இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துகள்....

வாழ்த்து சொன்னதிற்காக கேக் வரவில்லையென்றால் சிங்கப்பூருக்கு டிக்கட் கேட்கப்படும் என்பதை அண்ணன் வானம்பாடி சார்பாக தெரிவித்துக்கொள்கிறேன்...

சமீப காலத்தில் வந்ததில் நச்’னு இருக்கும் இடுகை பிரபா

//
நன்றி கதிர். எல்லாம் உண்டு, நேரில்.

//
அகல்விளக்கு said...
ஆப்பி பர்த்டே மாம்ஸ்...
//
தேன்க்ஸ் மச்சி...

பிரபாகர் said...

//
பூங்குன்றன்.வே said...
பிறந்தநாள் குழந்தைக்கு(?) மனம் கனிந்த வாழ்த்துக்கள்.
குட்டிக்கதையும் நன்று நண்பா.

//
நன்றி மாமா... குழந்தையிடமிருந்து....
வாழ்த்துக்கு நன்றி பூங்குன்றன்.

//
க.பாலாசி said...
கதை சுருக்கமாவும் நச்சென்றும் இருக்கிறது.

ஆமா உங்களுக்கு 18வது பிறந்தநாளாமே?? உண்மையா??? அண்ணா...
//
ஆமாம் பாலாசி, அசதிட்டாங்க நம்மள...

பிரபாகர் said...

//
உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
சூப்பர் டிவிஸ்ட் பிரபா..!

கதை நன்றாக இருந்தது..!

//
நன்றிண்ணே, உங்கள் அன்பிற்கும், அன்பான வாழ்த்துக்கும்...

//
கலையரசன் said...

ல்
லா
யி
ரு

ரா
சா!

//

ன்
றி

லை

பிரபாகர் said...

//கா.பழனியப்பன் said...
நல்ல எதார்தமான குட்டிக் கதை
//
ரொம்ப நன்றிங்க, உங்களின் வருகைக்கும் கருத்துக்கும்...

இராகவன் நைஜிரியா said...

தம்பி பிரபாகர். இனிய பிறந்த நாள் வாழ்த்துகள். எல்லாம் வல்ல ஆண்டவன் உங்களுக்கு எல்லா நலமும், வளமும் அருளப் ப்ராத்திக்கிறேன்.

தொலைப் பேசியில் உரையாடியது மிக்க மகிழ்ச்சியாக இருக்கின்றது. நடுவில் கட்டானதற்கு காரணம், இங்குள்ள நெட் ஒர்க் பிரச்சினைதாங்க.

இராகவன் நைஜிரியா said...

// தண்ணீர் தண்ணீர்... சிறுகதை.... //

இது சிறுகதையல்ல. பெரிய கதை. அப்பா எவ்வளவு விஷயங்களை சர்வ சாதாரணமாகச் சொல்லிவிட்டீர்கள்.

சொந்த தம்பிக்கு எதுவும் கொடுக்க மாட்டார்கள். அதற்கு அண்ணி மேல் பழியை வேறு போடுவார்கள். ஆனால் வெளியில் வேஷம் போடுவார்கள். பின்னிட்டீங்க.

பொறுப்பி : இத்தனை நாட்கள் உங்கள் வலைப் பதிவு பக்கம் வந்ததில்லைங்க - உண்மையை ஒத்துக்கறேன். அதற்காக ஒரு மன்னிப்பும் கேட்டுகிறேன்.

பிரபாகர் said...

//தம்பி பிரபாகர். இனிய பிறந்த நாள் வாழ்த்துகள். எல்லாம் வல்ல ஆண்டவன் உங்களுக்கு எல்லா நலமும், வளமும் அருளப் ப்ராத்திக்கிறேன்.

தொலைப் பேசியில் உரையாடியது மிக்க மகிழ்ச்சியாக இருக்கின்றது. நடுவில் கட்டானதற்கு காரணம், இங்குள்ள நெட் ஒர்க் பிரச்சினைதாங்க.//

அண்ணா,

இந்த பிறந்த நாள் என் வாழ்வின் மிக மகிழ்ச்சியான ஒன்றாய் உங்கள் எல்லோராலும் ஆகியிருக்கிறது.

நன்றிங்கண்ணா!

பிரபாகர் said...

// இராகவன் நைஜிரியா said...
// தண்ணீர் தண்ணீர்... சிறுகதை.... //

இது சிறுகதையல்ல. பெரிய கதை. அப்பா எவ்வளவு விஷயங்களை சர்வ சாதாரணமாகச் சொல்லிவிட்டீர்கள்.

சொந்த தம்பிக்கு எதுவும் கொடுக்க மாட்டார்கள். அதற்கு அண்ணி மேல் பழியை வேறு போடுவார்கள். ஆனால் வெளியில் வேஷம் போடுவார்கள். பின்னிட்டீங்க.

பொறுப்பி : இத்தனை நாட்கள் உங்கள் வலைப் பதிவு பக்கம் வந்ததில்லைங்க - உண்மையை ஒத்துக்கறேன். அதற்காக ஒரு மன்னிப்பும் கேட்டுகிறேன்.
//
அண்ணா,

இதெல்லாம் எதற்கு? உங்களின் அன்பு ஒன்றே போதும். என் வலைத்தளத்தை படிக்க மாட்டீர்களா என ஏங்கியது உண்மை. பிறந்த நாளான இன்று எனது சந்தோஷம் பன்மடங்கு பெருகியதற்கு நீங்களும் காரணம்.

கலகலப்ரியா said...

அண்ணா பிறந்தநாள் நல்வாழ்த்துகள்....!!!!!!

பிரபாகர் said...

//கலகலப்ரியா said...
அண்ணா பிறந்தநாள் நல்வாழ்த்துகள்....!!!!!!
//
நன்றி சகோதரி...

நிலாமதி said...

மனித வாழ்வில் நடக்கும் சம்பவம். கதை நன்றாய் இருக்கிறது. இன்று பிறந்த நாளா? இன்று விசேடமான்
நாள்.மார்கழி இருபத்தைந்து எல்லோரும் மகிழ்வாக் கொண்டாடும் நாள். இந்த அக்காவின் பிறந்த நாள் வாழ்த்துக்கள். என்றும் இன்பமாய் வாழ்க.

நன்றிங்கக்கா... டிசம்பர் 24 என்னோட பிறந்த நாள்...

துபாய் ராஜா said...

லேட்டானாலும், லேட்டஸ்ட்டான வாழ்த்துக்கள்.

பிரபாகர் said...

//துபாய் ராஜா said...
லேட்டானாலும், லேட்டஸ்ட்டான வாழ்த்துக்கள்.
//
நன்றி ராஜா... உங்கள் அன்பிற்க்கு, ஆதரவுக்கு.

©2009 ”வாழ்க்கை வாழ்வதற்கே” | Template Blue by TNB