எங்கேயோ படிச்சது - 8 ஜோராவும் உழைப்பின் அருமையும்...

|

அந்த சின்ன நகரத்துல தினமும் எல்லா வீட்டுக்கும் தண்ணிய சுமந்துகிட்டு போயி கொடுத்து அதுல கிடைக்கிறத வெச்சி கிட்டு சந்தோஷமா ஒருத்தர் வாழ்க்கைய நடத்திக்கிட்டு இருந்தாரு. ஆதரவுக்குன்னு யாருமில்லாம ஒண்டியா இருந்தாரு.

ஒரு நாள் பக்கத்து கிராமத்துல வேலை பார்த்ததுல அவருக்கு வழக்கத்த விட அதிகமா ஒரு பைசா கிடைக்க, அத என்ன பண்ணலாம்னு யோசிக்கிறப்போ பக்கத்துல இருந்த மதில் சுவற்றில ஒரு கல்லு லேசா வெளிய வந்த மாதிரி இருந்தது. அத இழுத்து காச உள்ள போட்டுட்டு எந்த இடங்கறத சரியா மேல கீழ எண்ணி, மனசுல பதிய வெச்சிகிட்டாரு.

ரொம்ப வருஷம் கழிச்சி கல்யாண வயாசாச்சுன்னு ஊர்ல எல்லாரும் சேர்ந்து அவருக்கு சொந்தத்துலயே ஒரு பொண்ண பாத்து கல்யாணமும் பண்ணி வெச்சாங்க. அம்மணியும் கூட ஒத்தாசையா தண்ணி சுமக்குற வேலை செய்ய அவங்க வாழ்க்கை ரொம்ப சந்தோஷமா போயிட்டிருந்துச்சி.

பக்கத்து ஊர்ல திருவிழா, ரொம்ப கோலாகலமா நடந்துகிட்டிருந்துச்சி. அம்மணி ஆசையா போகலாமானு கேக்க, சந்தோஷமா, 'எங்கிட்ட ஒரு பைசா இருக்கு அத பத்திரமா வெச்சிருக்கேன், எடுத்துட்டு வந்துடறேன், கிளம்பி தயாரா இரு' ன்னு சொன்னாரு. அம்மணி,  'எங்கிட்டயும் ஒரு பைசா இருக்கு' ன்னு சொல்லவும், ரொம்பவும் உற்சாகமா அந்த காச எடுத்து வர கிளம்பி அந்த மதில் சுவர் இருந்த இடத்த நோக்கி வேகமா ஓட்டமும் நடையா போக ஆரம்பிச்சிட்டாரு.

அது சித்திரை மாசம் கத்திரி வெயில், மத்தியான நேரம்.  நம்ம ஜோரா (ஜோவியல் ராஜா... இவரின் அறிமுகம் எங்கேயோ படிச்சது - 5 ஜோவியல் ராஜாவும் தோட்டக்காரனும்) ரெண்டுபேர் அதிகப்படியா சாமரம் வீசியும், புழுக்கம் தாளாம உப்பரிகையில உக்கார்ந்து வெளிய பாத்துகிட்டிருந்தாரு.

அப்போ தூரத்துல கால்ல செருப்பு இல்லாம இடுப்பில துண்ட மட்டும் கட்டிட்டு சுடற வெயில்ல வேகமா நடந்து போறத பாத்துட்டு ரொம்பவும் ஆச்சர்யப்பட்டு சேவகர்களை அனுப்பி அழைச்சிட்டு வரச் சொன்னாரு.

சேவகர்கள் தலை தெறிக்க ஒடி கத்தி கூப்பிட, கண்டுக்காம வேகமா பாட்டு பாடிகிட்டு அவரு பாட்டுக்கும் போயிட்டிருந்தாரு. விரட்டி பிடிச்சி ஜோரா கூப்பிட்டதா சொல்ல 'முக்கியமான வேலையா போயிட்டிருக்கேன் அப்புறம் வரேன்' னு சொன்னாரு.  பொளிச்சுன்னு பொடனியில ஒன்னு உட்டு ஜோராகிட்ட இழுத்துகிட்டு வந்தாங்க.

'நான் பொக்கிஷத்த எடுத்துகிட்டு என் பொண்டாட்டிய திருவிழாவுக்கு கூட்டிட்டு போகணும்னு வேக வேகமா போயிட்டிருந்தேன்,  என்ன மறிச்சி கூட்டிகிட்டு வந்துட்டீங்களே' ன்னு கோவிச்சுக்க,

'சரி சரி, அதுக்கு நான் மன்னிப்பு கேட்டுக்கறேன். உன் பொக்கிஷம் எவ்வளவு இருக்கும் ஒரு ஆயிரம் பவுன்?'

இல்லன்னு தலையாட்ட, கொஞ்சம் கொஞ்சமா ஒரு பவுன்?, ஒரு ரூபா?, அம்பது காசு?...ன்னு குறைச்சிகிட்டே வந்தாரு. எல்லாத்துக்கும் இல்லன்னு சொல்லிகிட்டே வர, கடைசியா எவ்வளவுதான் இருக்குன்னு கேட்டதுக்கு ஒரு பைசான்னு சொல்ல,  சிரிச்சிகிட்டு வந்த எல்லாரும் பரிதாபப்பட ஆரம்பிச்சிட்டாங்க.

ஜோராவும் ரொம்ப பரிதாபப்பட்டு 'ஆமாம் எங்க இருக்கு' ன்னு கேட்டதுக்கு, அவரு இடத்த சொல்ல அதிர்ச்சியாயிட்டாரு. ஏன்னா இன்னும் ஏழு கல் தூரம் போகணும். உடனே ஜோரா, 'சரி, நான் அந்த ஒரு பைசாவ தர்றேன், இப்படியே திரும்பி போயிடு' ன்னாரு.

'சரி வாங்கிக்கிறேன், ஆனா அதையும் எடுத்துக்கிட்டுத்தான் போவேன், சேர்த்தா ரெண்டு பைசாவா ஆகும்ல' ன்னு சொல்ல,

ஜோரா ரெண்டு, பாத்து, நூறு, ஆயிரம், பொற்காசுன்னு ஏத்திகிட்டே போனாரு. ஆனா அவரு அந்த ஒரு பைசாவா விடவே இல்ல. அதையும் சேர்த்து எடுத்துக்கிட்டுத்தான் போவேன்னு பிடிவாதமா சொல்லிட்டிருந்தாரு. ஜோராவும் இவ்வளவு, அவ்வளவுன்னு கை ரெண்டையும் அதுக்கு மேல காமிக்க முடியாத அளவுக்கு சொல்லியும் கடைசி வரைக்கும் மசியல.

கடைசியா நாட்டுலே பாதி தரேன்னு சொல்ல ஒருவழியா அந்த ஒரு பைசாவா எடுக்காம அப்படியே திரும்பி போக ஒத்துகிட்டாரு. சரி நாட்ட ரெண்டா பிரிச்சிடறேன் உனக்கு எந்த பக்கம் வேணும்னு கேக்க, காச வெச்சிருக்கிற இடது பக்கம்னு சொன்னாரு.

ஜோரா அவர அப்படியே தழுவி, 'இப்பவும் நீ ஜெயிச்சிட்ட, கடைசியில் எத்தனை காசு உழைக்காம வந்தாலும் உழைச்ச காசுதான் பெருசுங்கற பெரிய உண்மையை இங்க எல்லாருக்கும் புரிய வச்சுட்டன்னு' னு பாராட்டி, நிறைய பரிசு, பொன்முடிப்புன்னு கொடுத்து கௌரவிச்சி அனுப்பினாரு.

35 : பேர் படிச்சிட்டு சொல்றாங்க...:

Cable சங்கர் said...

தலைவரே இதனால் அறியப்படும் நீதி யாது..?:)

Cable சங்கர் said...

enna alaiyum kaanoom..poonayum kaanoom?

Anonymous said...

:)

vasu balaji said...

நாட்டுல பாதி கிடைச்சதா இல்லையா?

Starjan (ஸ்டார்ஜன்) said...

சே ! என்ன அருமையான கதை ! நல்லாருந்தது

ஜோதிஜி said...

அதையும் செத்து எடுத்துக்கிட்டுத்தான்
சிறப்பு.

இந்த இடத்தில் சேர்த்து என்று வரவேண்டும் சரிதானோ?

சரிபார்த்துக்கொள்ளுங்கள்.

நடை சிறப்பாக இருந்தது.

பூங்குன்றன்.வே said...

உழைப்பின் மகத்துவம் புரிகிறது நண்பா.நல்ல பதிவு,கதை,கட்டுரை இது !!!

கலகலப்ரியா said...

அட அட... அருமையா கதை சொல்றீங்கண்ணா... தொடரட்டும் உங்கள் பணி..! ரொம்ப நல்லா இருக்கு..!

ஈரோடு கதிர் said...

//கலகலப்ரியா said...
அட அட... அருமையா கதை சொல்றீங்கண்ணா... //

அதுதான் எங்களுக்கும் தெரியுமே...உங்க அண்ணன் நல்லா கத விடுவாருனு

ஹேமா said...

என்னதான் உருண்டு புரண்டாலும் ஒட்டுறதுதான் ஒட்டுமாம்.
அதுதானே கதை !

பிரபாகர் said...

//
Cable Sankar said...
தலைவரே இதனால் அறியப்படும் நீதி யாது..?:)
//
உழைக்கிற காசுக்கு மதிப்பு அதிகம்...

//
Cable Sankar said...
enna alaiyum kaanoom..poonayum kaanoom?
//

வேலை அண்ணா... இனிமேல் கொஞ்சம் ஃப்ரீ..

பிரபாகர் said...

//
சின்ன அம்மிணி said...
:)
//
நன்றிங்க அம்மணி...

//
வானம்பாடிகள் said...
நாட்டுல பாதி கிடைச்சதா இல்லையா?
//
நிறைய தப்பா எழுதி அய்யாகிட்ட பாட்டுத்தான் கிடைச்சது. அறிவுறுத்தலுக்கு நன்றிங்கய்யா...

பிரபாகர் said...

//
Starjan ( ஸ்டார்ஜன் ) said...
சே ! என்ன அருமையான கதை ! நல்லாருந்தது
//
நன்றி நண்பரே!

//
தேவியர் இல்லம் ஜோதிஜி said...
அதையும் செத்து எடுத்துக்கிட்டுத்தான்
சிறப்பு.

இந்த இடத்தில் சேர்த்து என்று வரவேண்டும் சரிதானோ?

சரிபார்த்துக்கொள்ளுங்கள்.

நடை சிறப்பாக இருந்தது.

//
நன்றிங்கய்யா! சரி செய்துவிட்டேன்...

பிரபாகர் said...

//
பூங்குன்றன்.வே said...
உழைப்பின் மகத்துவம் புரிகிறது நண்பா.நல்ல பதிவு,கதை,கட்டுரை இது !!!
//
நன்றி பூங்குன்றன்....

//
கலகலப்ரியா said...
அட அட... அருமையா கதை சொல்றீங்கண்ணா... தொடரட்டும் உங்கள் பணி..! ரொம்ப நல்லா இருக்கு..!
//
நன்றி அன்பு சகோதரி!...

பிரபாகர் said...

//
ஈரோடு கதிர் said...
//கலகலப்ரியா said...
அட அட... அருமையா கதை சொல்றீங்கண்ணா... //

அதுதான் எங்களுக்கும் தெரியுமே...உங்க அண்ணன் நல்லா கத விடுவாருனு
//

வாங்கய்யா! எங்க பாசத்த பாத்து ஏதாச்சும் சொல்லலன்னா தூக்கம் வராதே?

//
ஹேமா said...
என்னதான் உருண்டு புரண்டாலும் ஒட்டுறதுதான் ஒட்டுமாம்.
அதுதானே கதை !
//
உழைச்ச காசு ரொம்ப மதிப்பானது... நன்றி சகோதரி.

கலகலப்ரியா said...

//ஈரோடு கதிர் said...

//கலகலப்ரியா said...
அட அட... அருமையா கதை சொல்றீங்கண்ணா... //

அதுதான் எங்களுக்கும் தெரியுமே...உங்க அண்ணன் நல்லா கத விடுவாருனு//

பின்னே... உங்களைத்தானே ஆசான்னு சொல்லிக்கிட்டிருக்காங்க...!

கலகலப்ரியா said...

//
வாங்கய்யா! எங்க பாசத்த பாத்து ஏதாச்சும் சொல்லலன்னா தூக்கம் வராதே?//

ஆமாம்ணா... சரியா சொல்லி இருக்கீங்க..! ஈரோடு ஈ-ரோடு வழியா ஒரு ஆளு தூக்கத்ல நடக்கிறதா நியூஸ் வந்திச்சி... அதும் நீங்க இடுகை போடாத நாள்லதான் 'இது நடக்குதாம்'ல... (நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.. )

பிரபாகர் said...

//கலகலப்ரியா said...
//ஈரோடு கதிர் said...

//கலகலப்ரியா said...
அட அட... அருமையா கதை சொல்றீங்கண்ணா... //

அதுதான் எங்களுக்கும் தெரியுமே...உங்க அண்ணன் நல்லா கத விடுவாருனு//

பின்னே... உங்களைத்தானே ஆசான்னு சொல்லிக்கிட்டிருக்காங்க...!
//
அப்படியா... புது தகவலா இருக்கே!

ஈரோடு கதிர் said...

//கலகலப்ரியா said...
ஒரு ஆளு தூக்கத்ல நடக்கிறதா நியூஸ் வந்திச்சி... அதும் நீங்க இடுகை போடாத நாள்லதான் 'இது நடக்குதாம்'ல... (நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.. )//

ஆத்தா... உங்க அண்ணன் இடுகை பாதி படிக்கிறப்ப்ப்ப்ப்ப்.....வ்வ்வ்வே... தூக்க்க்க்....ம்ம்ம்ம் வந்துடுது

பிரபாகர் said...

//கலகலப்ரியா said...
//
வாங்கய்யா! எங்க பாசத்த பாத்து ஏதாச்சும் சொல்லலன்னா தூக்கம் வராதே?//

ஆமாம்ணா... சரியா சொல்லி இருக்கீங்க..! ஈரோடு ஈ-ரோடு வழியா ஒரு ஆளு தூக்கத்ல நடக்கிறதா நியூஸ் வந்திச்சி... அதும் நீங்க இடுகை போடாத நாள்லதான் 'இது நடக்குதாம்'ல... (நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.. )//

நம்மோடத படிச்சிட்டுத்தான் தூக்கம் வராதுன்னு சொல்லுவார் பாருங்களேன்...

பிரபாகர் said...

////கலகலப்ரியா said...
ஒரு ஆளு தூக்கத்ல நடக்கிறதா நியூஸ் வந்திச்சி... அதும் நீங்க இடுகை போடாத நாள்லதான் 'இது நடக்குதாம்'ல... (நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.. )//

ஆத்தா... உங்க அண்ணன் இடுகை பாதி படிக்கிறப்ப்ப்ப்ப்ப்.....வ்வ்வ்வே... தூக்க்க்க்....ம்ம்ம்ம் வந்துடுது
//
பத்தாவது தடவ படிக்கும் போது அப்படித்தான் இருக்கும் கதிர்...

ஈரோடு கதிர் said...

// பாராட்டி, நிறைய பரிசு, பொன்முடிப்புன்னு கொடுத்து கௌரவிச்சி அனுப்பினாரு.//

அட... அந்த ஒரு பைசாவ எடுத்துட்டாரா... இல்லீங்களா?

கலகலப்ரியா said...

//ஈரோடு கதிர் said...

//கலகலப்ரியா said...
ஒரு ஆளு தூக்கத்ல நடக்கிறதா நியூஸ் வந்திச்சி... அதும் நீங்க இடுகை போடாத நாள்லதான் 'இது நடக்குதாம்'ல... (நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.. )//

ஆத்தா... உங்க அண்ணன் இடுகை பாதி படிக்கிறப்ப்ப்ப்ப்ப்.....வ்வ்வ்வே... தூக்க்க்க்....ம்ம்ம்ம் வந்துடுது//

பாதி படிக்கிறப்பவெவ்வெவ்வேவா... அண்ணா நீங்க இடுகைய முதல்ல மெயில்ல அனுப்பி வச்சுடுறீங்களா இவங்களுக்கு...

கலகலப்ரியா said...

//
நம்மோடத படிச்சிட்டுத்தான் தூக்கம் வராதுன்னு சொல்லுவார் பாருங்களேன்...//

same side goal adikkaapla irukke annaaa... avvvv..

துபாய் ராஜா said...

அருமையான கதை.அழகான கருத்து.

பகிர்வுகள் தொடரட்டும்.

வாழ்த்துக்கள் பிரபாகர்.

ஷங்கி said...

உழைச்சு வந்த காசுல அனுபவிக்கிறதுல தனி சுகம்தான். ஈகோவுக்கு அப்பதான் சாந்தி கிடைக்கும்.
:)

ஆ.ஞானசேகரன் said...

கதையும் கதை சொன்ன விதமும் நல்லாயிருக்கு

பதிவர் சந்திப்பு பிசியில அவரு படிக்கிறதே இல்லங்கறதுதான் உண்மை... அவ்...

//
கலகலப்ரியா said...
//
நம்மோடத படிச்சிட்டுத்தான் தூக்கம் வராதுன்னு சொல்லுவார் பாருங்களேன்...//

same side goal adikkaapla irukke annaaa... avvvv..
//
அவரு சொல்றது தெரியாம, அவசரமா போட்டுட்டேன்... தப்புத்தான்! ஒத்துக்கறேன்....

பிரபாகர் said...

//
துபாய் ராஜா said...
அருமையான கதை.அழகான கருத்து.

பகிர்வுகள் தொடரட்டும்.

வாழ்த்துக்கள் பிரபாகர்.
//
நன்றி ராஜா! அன்பிற்கு என்றும் கடமைப்பட்டிருக்கிறேன்...

//
ஷங்கி said...
உழைச்சு வந்த காசுல அனுபவிக்கிறதுல தனி சுகம்தான். ஈகோவுக்கு அப்பதான் சாந்தி கிடைக்கும்.
:)
//
சரியா சொன்னீங்க ஷங்கி....

//
ஆ.ஞானசேகரன் said...
கதையும் கதை சொன்ன விதமும் நல்லாயிருக்கு

//
நன்றி ஞானசேகரன்...

பிரபாகர் said...

//ஈரோடு கதிர் said...
// பாராட்டி, நிறைய பரிசு, பொன்முடிப்புன்னு கொடுத்து கௌரவிச்சி அனுப்பினாரு.//

அட... அந்த ஒரு பைசாவ எடுத்துட்டாரா... இல்லீங்களா?
//
முழுசா படிச்சிட்டீங்க போலிருக்கு! அத எடுத்துகிட்டு சன்மானத்த வேற இடத்துல வெச்சிட்டு போனாருன்னு இன்னொரு இடுகையில பாத்துக்குவோம்...

ரோஸ்விக் said...

நீங்க ஜோரா-வாவும், நான் அந்த ஒரு காச ஒழிச்சு வச்ச மனுசனாவும் ஒரு தடவ விளையாண்டு பாப்போமா?? :-)

Prathap Kumar S. said...

//நீங்க ஜோரா-வாவும், நான் அந்த ஒரு காச ஒழிச்சு வச்ச மனுசனாவும் ஒரு தடவ விளையாண்டு பாப்போமா?? :-)//
ஐ இந்த ஆட்டம் நல்லாருக்குமே..நானும் வர்றேன் :-)

நல்லாருக்கு கதை...பிரபாண்ணே

அன்புடன் மலிக்கா said...

நல்லதொரு பதிவு பிரபாகரண்ணா..

பிரபாகர் said...

//
ரோஸ்விக் said...
நீங்க ஜோரா-வாவும், நான் அந்த ஒரு காச ஒழிச்சு வச்ச மனுசனாவும் ஒரு தடவ விளையாண்டு பாப்போமா?? :-)
//
ஒரு ஞாயிற்றுக்கிழமை விளையாடுவோம்... நன்றி ரோஸ்விக்...

//
நாஞ்சில் பிரதாப் said...
//நீங்க ஜோரா-வாவும், நான் அந்த ஒரு காச ஒழிச்சு வச்ச மனுசனாவும் ஒரு தடவ விளையாண்டு பாப்போமா?? :-)//
ஐ இந்த ஆட்டம் நல்லாருக்குமே..நானும் வர்றேன் :-)

நல்லாருக்கு கதை...பிரபாண்ணே
//

தாராளமா! நன்றி பிரதாப்...

//
அன்புடன் மலிக்கா said...
நல்லதொரு பதிவு பிரபாகரண்ணா..
//
வாங்க சகோதரி! அண்ணா கொஞ்சம் வேலையில பிஸி...

நாடோடி இலக்கியன் said...

நல்லாயிருக்கு நண்பரே.

©2009 ”வாழ்க்கை வாழ்வதற்கே” | Template Blue by TNB