காரணமின்றி
கவலையாய்
கால்போக்கில்
கடனேயென
கடைத்தெருவில்
பகலில் என்ன
பளீர் நிலா
பிரமிப்பாய்
பாவையவள்
பெரிய வீட்டில்
அவனை அவளும்
அவளை அவனும்
அசையாமல் பார்க்க
அசைந்தது
அனைத்தும்.
தெய்வீக கானம்
தேவ ராகம்
தெளிவாய் கேட்க
துவண்டிருந்த மனம்
துளிர்த்தது அங்கே.
கடையினில் அமர்ந்து
கவனத்தை செலுத்தி
காதலை கசிந்து
கன்னியும் சேர்த்து
காப்பியை பருக
பேருந்து நின்று
பாலகர் இறங்கி
பெரிதாய் கத்தி
புகுதலின் போது
பூரிப்பு அவளுள்.
கைகளை ஆட்டி
கிடைத்தவர் பற்றி
கவனமாய் செல்ல
கண்ணில்லா அந்த
காட்சியும் அங்கே.
உருவான அன்பது
உடைந்து ஓட
உருவமில்லா அந்த
இறைவனை சாட
உள்ளமெலாம் கோபம்.
இயலாமை தாக்க
எரிச்சலும் சேர
இனம்புரியா சோகம்
ஏமாற்றம் என
எல்லாமும் சேர
காரணமாய்
கவலையாய்
கால்போக்கில்
கடனேயென
கடைத்தெருவில்...
மிச்சர்கடை
4 weeks ago
33 : பேர் படிச்சிட்டு சொல்றாங்க...:
அழகா வந்திருக்கு பிரபா...
வாழ்த்துக்கள்
அந்தாதி
தினசரி வாழ்க்கை கதை கவிதையாய். அருமை நண்பரே...
இயலாமை தாக்க
எரிச்சலும் சேர
இனம்புரியா சோகம்
ஏமாற்றம் என
எல்லாமும் சேர
காரணமாய்
கவலையாய்
கால்போக்கில்
கடனேயென
கடைத்தெருவில்...//
நல்லா இருக்குங்க.. காதலிச்ச எல்லாருக்கும் இந்த அனுபவம் இருக்கும்..
வழக்கம் போல புரியல
\\அவனை அவளும்
அவளை அவனும்
அசையாமல் பார்க்க
அசைந்தது
அனைத்தும்\\
இதுதான் டாப்பு.
அருமை அருமை..
(புரியாத கவிதைக்கெல்லாம் புது டெம்ப்ளேட் புடிச்சிருக்கேன்)
எனக்கு ரெண்டு விதமா புரிச்சுது, எது சரின்னு சொல்லுங்களேன்,
1. அவளுக்கு கல்யாணமாயிடிச்சு, பேருந்தில் வந்தது அவள் குழந்தை,
2. அவளுக்கு கண்ணு தெரியல, பேருந்தில் வந்த குழந்தை அவள் கைபிடித்து சாலையை கடக்க உதவியது,
இல்ல ரெண்டுமே இல்லியா?
இனிமே புரியாத கவிதயெல்லாம், இப்புடி கெட்டு புரிஞ்சுக்கலாம்னு முடிவு பண்ணிட்டேன் :))
//
ஆரூரன் விசுவநாதன் said...
அழகா வந்திருக்கு பிரபா...
வாழ்த்துக்கள்
//
நன்றி ஆரூரன்....
//
சின்ன அம்மிணி said...
அந்தாதி
//
ரொம்ப நன்றிங்க. ஒரு வார்த்தையில அழகா சொல்லிட்டீங்க.
//
புலவன் புலிகேசி said...
தினசரி வாழ்க்கை கதை கவிதையாய். அருமை நண்பரே...
//
நன்றி புலிகேசி!
//
பலா பட்டறை said...
இயலாமை தாக்க
எரிச்சலும் சேர
இனம்புரியா சோகம்
ஏமாற்றம் என
எல்லாமும் சேர
காரணமாய்
கவலையாய்
கால்போக்கில்
கடனேயென
கடைத்தெருவில்...//
நல்லா இருக்குங்க.. காதலிச்ச எல்லாருக்கும் இந்த அனுபவம் இருக்கும்..
//
நன்றிங்க, உங்கள் முதல் வருகை, அழகான விளக்கம் மற்றும் இணைந்தமைக்கு...
//
குடுகுடுப்பை said...
வழக்கம் போல புரியல
//
சங்கருக்கு கீழ விளக்கம் போடப்போறேன் பாருங்க!
//
♠ ராஜு ♠ said...
\\அவனை அவளும்
அவளை அவனும்
அசையாமல் பார்க்க
அசைந்தது
அனைத்தும்\\
இதுதான் டாப்பு.
//
நன்றி ராஜு.....அன்பிற்கு, கருத்திற்கு
//
முகிலன் said...
அருமை அருமை..
(புரியாத கவிதைக்கெல்லாம் புது டெம்ப்ளேட் புடிச்சிருக்கேன்)
//
இருந்தாலும் புரியவெப்போம்ல! கீழ பாருங்க!
//
சங்கர் said...
எனக்கு ரெண்டு விதமா புரிச்சுது, எது சரின்னு சொல்லுங்களேன்,
1. அவளுக்கு கல்யாணமாயிடிச்சு, பேருந்தில் வந்தது அவள் குழந்தை,
2. அவளுக்கு கண்ணு தெரியல, பேருந்தில் வந்த குழந்தை அவள் கைபிடித்து சாலையை கடக்க உதவியது,
இல்ல ரெண்டுமே இல்லியா?
இனிமே புரியாத கவிதயெல்லாம், இப்புடி கெட்டு புரிஞ்சுக்கலாம்னு முடிவு பண்ணிட்டேன் :))
//
காரணமில்லா குழப்பத்தில் கடைத்தெருவில் ஒருவன். ஒரு பெண்ணை பார்த்து மனதை பறிகொடுத்து, இறுதியில் அவள் ஒரு கண் பார்வையற்றவள் என அறிந்து காரணமான குழப்பத்தில்....
புரிஞ்சுதா சங்கர்?
நாட்டாஆஆஆஆஆஆஆமாஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ..ஆல் ட மீஜிக் ஸ்டார்ட்...
கவிஞருக்கு வணக்கம்!
ஹீஹீஹீ... அண்ணே தமிழ்ல கவிதை எழுதுங்கண்ணே... எனக்கும் புரியும்ல...
நல்லாருக்குண்ணு மட்டும்தெரியுது....
//இனிமே புரியாத கவிதயெல்லாம், இப்புடி கெட்டு புரிஞ்சுக்கலாம்னு முடிவு பண்ணிட்டேன் :))//
இதுக்கு நானே தேவலையோ... புரியாத கவிதைக்கு பல மாதிரியா யோச்சிக்கிறாரே....:-)
கவிஞர் பிரபாகர்.....
அழகான வரிகளில் இருக்கு உமது கவிதை
ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் நண்பரே......
ரொம்ப நல்லா வந்து இருக்கு அண்ணா..,
புரிஞ்சிடுச்சு
இனிமேல் காதலிப்பதாய் இருந்தாலும் கண்ணு தெரியுதா, பேச்சு வருதா, நொண்டாம நடக்குதா, காது கேக்குதான்னு எல்லாம் டெஸ்ட் பண்ணிட்டு அப்புறம் காபி சாப்புடறப்போ காதலையும், காதலியையும் நினைச்சி கசிஞ்சிகிட்டே இருந்தா அதுதான் காதல் என்ற புது விளக்கத்தை புரியும்படி சொன்ன பிரபாகர் வாழ்க.
//காரணமில்லா குழப்பத்தில் கடைத்தெருவில் ஒருவன். ஒரு பெண்ணை பார்த்து மனதை பறிகொடுத்து, இறுதியில் அவள் ஒரு கண் பார்வையற்றவள் என அறிந்து காரணமான குழப்பத்தில்....
புரிஞ்சுதா சங்கர்?
//
டேங்ஸ் சங்கர்
பிரபா அருமை(!!!!)
நேரில் பாக்கும்போது இருக்குடி
//
வானம்பாடிகள் said...
நாட்டாஆஆஆஆஆஆஆமாஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ..ஆல் ட மீஜிக் ஸ்டார்ட்...
//
நன்றிங்கய்யாஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ....
//
பழமைபேசி said...
கவிஞருக்கு வணக்கம்!
//
பழமை அண்ணே, உங்களின் அன்பிற்கு நன்றி....
//
நாஞ்சில் பிரதாப் said...
ஹீஹீஹீ... அண்ணே தமிழ்ல கவிதை எழுதுங்கண்ணே... எனக்கும் புரியும்ல...
நல்லாருக்குண்ணு மட்டும்தெரியுது....
//
தம்பி, இதுக்கு மேல தமில் தெரியாது.... ஹி, ஹி...
//
நாஞ்சில் பிரதாப் said...
//இனிமே புரியாத கவிதயெல்லாம், இப்புடி கெட்டு புரிஞ்சுக்கலாம்னு முடிவு பண்ணிட்டேன் :))//
இதுக்கு நானே தேவலையோ... புரியாத கவிதைக்கு பல மாதிரியா யோச்சிக்கிறாரே....:-)
//
ம்... முடிவோடதான் வந்திருக்கீங்க!
//
Sangkavi said...
கவிஞர் பிரபாகர்.....
அழகான வரிகளில் இருக்கு உமது கவிதை
ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் நண்பரே......
//
நன்றி நண்பா, உங்களுக்கும்.
//
பேநா மூடி said...
ரொம்ப நல்லா வந்து இருக்கு அண்ணா..,
//
நன்றிங்க தம்பி. உங்க இடுகையை படிச்சி பாப் அப் விண்டோல கமன்ட் வராததால பதில் போட முடியல...
//
சங்கர் said...
புரிஞ்சிடுச்சு
//
ஸ்ஸ்ஸ்ஸ்... அப்பாடி, கண்ண கட்டுதே!
நன்றி சங்கர்.
//
வானம்பாடிகள் said...
இனிமேல் காதலிப்பதாய் இருந்தாலும் கண்ணு தெரியுதா, பேச்சு வருதா, நொண்டாம நடக்குதா, காது கேக்குதான்னு எல்லாம் டெஸ்ட் பண்ணிட்டு அப்புறம் காபி சாப்புடறப்போ காதலையும், காதலியையும் நினைச்சி கசிஞ்சிகிட்டே இருந்தா அதுதான் காதல் என்ற புது விளக்கத்தை புரியும்படி சொன்ன பிரபாகர் வாழ்க.
//
அய்யா, சிறியோனின் பிழை பொறுத்து என்னை ஆசிர்வதிப்பீராக!
//
ஈரோடு கதிர் said...
//காரணமில்லா குழப்பத்தில் கடைத்தெருவில் ஒருவன். ஒரு பெண்ணை பார்த்து மனதை பறிகொடுத்து, இறுதியில் அவள் ஒரு கண் பார்வையற்றவள் என அறிந்து காரணமான குழப்பத்தில்....
புரிஞ்சுதா சங்கர்?
//
டேங்ஸ் சங்கர்
பிரபா அருமை(!!!!)
நேரில் பாக்கும்போது இருக்குடி
//
நாட்டாம, வருஷக்கடைசியில இப்படியெல்லாம் மிரட்டக்கூடாது, சொல்லுபுட்டேன்.
//
பாரதிக்குமார் said...
Good!
//
நன்றி பாரதிக்குமார்.
கவிதை எப்பவும் போல...
மனம் நிறைந்த
புத்தாண்டு வாழ்த்து பிரபா.
நல்லா இருக்கு அண்ணா...! திரும்பவும் மன்னிப்ஸ்... லேட் பண்ணிட்டேன்...
//ஹேமா said...
கவிதை எப்பவும் போல...
மனம் நிறைந்த
புத்தாண்டு வாழ்த்து பிரபா.
//
நன்றி சகோதரி! உங்களுக்கும்...
//
கலகலப்ரியா said...
நல்லா இருக்கு அண்ணா...! திரும்பவும் மன்னிப்ஸ்... லேட் பண்ணிட்டேன்...
//
லேட்டானும் லேட்டஸ்ட்... அதுதான் ப்ரியா!... நன்றி சகோதரி!
ஆரம்பித்த இடத்திலே கொண்டு வந்து முடித்திருப்பது அருமை.
காட்சியை கண்முன் கொண்டு வந்து விட்டன் கவிதை வரிகள்.
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
//துபாய் ராஜா said...
ஆரம்பித்த இடத்திலே கொண்டு வந்து முடித்திருப்பது அருமை.
காட்சியை கண்முன் கொண்டு வந்து விட்டன் கவிதை வரிகள்.
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
//
நன்றிங்க ராஜா! உங்கள் நட்பால் பெருமை அடைகிறேன்!
மிக்க நன்றி !!! இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள். நீங்களும்,உங்கள் குடும்பமும்,நட்பும் நீடுடி வாழ இயற்கையை வேண்டுகிறேன்.
//பூங்குன்றன்.வே said...
மிக்க நன்றி !!! இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள். நீங்களும்,உங்கள் குடும்பமும்,நட்பும் நீடுடி வாழ இயற்கையை வேண்டுகிறேன்.
//
நன்றி பூங்குன்றன்!.. வாழ்த்துக்கள் உங்களுக்கும்!
Post a Comment