பழமொழி பற்றிய விளக்கங்களை எனக்கு தெரிந்த வகையில் ஒரு தொடர் இடுகையாய் எழுதலாம் என ஒரு எண்ணம். பழமொழிகளுக்கு கண்டிப்பாய் பல்வேறு கோணங்களில் அர்த்தம் இருக்கும். உங்களுடைய மாற்று கருத்துக்களை, விளக்கங்களை பின்னூட்டத்தில் பகிர்ந்தால் நிறைய தெரிந்து, தெளியலாம்...
இந்த இடுகையில் ’அரசன் அன்றே கொல்வான், தெய்வம் நின்று கொல்லும்...’ என வழக்கமாய் கேட்ட ஒன்றையும் 'இன்னும் இவளுக்கு ஒரு புழு பூச்சிக்கூட இல்லை' என பரவலாய் சொல்லும் மற்றொன்றையும் எழுத எண்ணம்.
அரசன் அன்றே கொல்வான், தெய்வம் நின்று கொல்லும்... என்பதற்கு நாம் மேற்கோள் காட்டுவது, புரிந்திருப்பது எல்லாம், அரசன் அவசரப்பட்டு உடனடியாக தண்டனை கொடுத்துவிடுவான், தெய்வம் பொறுமையாய் காத்திருந்து தண்டிக்கும் என்பதுதான்.
இது சரியான ஒன்றல்ல. அரசனன்றே கொல்வான், தெய்வம் நின்று கொல்லும் என்பதுதான் சரியான ஒன்று. அரசனன்றே - தவறு செய்த ஒவ்வொருவரையும் தண்டிப்பவன், கொல்பவன் அரசன் அல்ல. தெய்வம், பொறுத்து அவர்களுக்கு சரியான தண்டனை கொடுக்கும் என்பதே சரியான பொருளாக இருக்க முடியும்.
அடுத்து குழந்தை இல்லாமல் இருக்கும் பெண்ணைப்பார்த்து ‘இன்னும் இவளுக்கு ஒரு புழு பூச்சி கூட இல்லை’ என சொல்வதில் புழு என்றால் ஆண் குழந்தையையும் , பூச்சி என்றால் பெண் குழந்தையையும் குறிக்கும்.
வேறு எங்கும் செல்லாமல் புழு ஒரே இடத்தில் இருக்கும். அதே போல் ஆண்கள் பிறந்த வீட்டிலேயே கடைசி வரை இருப்பார்கள். பூச்சி இறக்கை முளைத்தவுடன் பறந்துவிடுதல் போல, பெண்கள் திருமணம் செய்தவுடன் பிறிதோர் இடத்துக்கு வாழ்வதற்கு சென்றுவிடுவார்கள்.
விளக்கங்கள் சரியா என்பதை பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்...
மிச்சர்கடை
4 weeks ago
23 : பேர் படிச்சிட்டு சொல்றாங்க...:
என்னமோ விளங்குதுங்கண்ணே. ஆனா புழுவில் பிரச்சினை இருந்தாலும் பூச்சிக்குதான் பழமொழியா?
//குடுகுடுப்பை said...
என்னமோ விளங்குதுங்கண்ணே. ஆனா புழுவில் பிரச்சினை இருந்தாலும் பூச்சிக்குதான் பழமொழியா?//
குடுகுடுப்பை, சத்தியமா முடியலங்க. எப்படி இப்படியெல்லாம் யோசிக்கிறீங்க!
பழமொழி பற்றிய விளக்கங்களை எனக்கு தெரிந்த வகையில் ஒரு தொடர் இடுகையாய் எழுதலாம் என ஒரு எண்ணம்.
நல்ல முயற்சி...தொடருங்கள் பிரபா
நல்ல எண்ணம்..! நடத்துங்க... ஒரு கை பார்ப்போம்.. நான் இடக்குமுடக்கா அர்த்தம் எல்லாம் கண்டு புடிச்சு சொல்லுவேன்... அம்புட்டுதேன்.. =))
தல விளக்கங்கள் நன்கு புரிகிறது. தொடருங்கள்.
//Blogger கலகலப்ரியா said...
நல்ல எண்ணம்..! நடத்துங்க... ஒரு கை பார்ப்போம்.. நான் இடக்குமுடக்கா அர்த்தம் எல்லாம் கண்டு புடிச்சு சொல்லுவேன்... அம்புட்டுதேன்.. =))//
அதேதான்....
அய்.. நல்லாருக்கே இது.
இந்த போங்காட்டத்துக்கு நான் வரலை. நாட்டாஆஆஆஆஆஆம தீர்ப்ப மாத்தச் சொல்லு:-l
/பழமொழிகளுக்கு கண்டிப்பாய் பல்வேறு கோணங்களில் அர்த்தம் இருக்கும். உங்களுடைய மாற்று கருத்துக்களை, விளக்கங்களை பின்னூட்டத்தில் பகிர்ந்தால் நிறைய தெரிந்து, தெளியலாம்.../
/என்பதே சரியான பொருள்./
போனா போகுது ஆச படுறாரேன்னு அண்ணன்னா அழகிரின்னு நினைப்போ. எலக்சன் வைக்கிறா மாதிரி வைய்யி. நாங்கதான் ஜெயிப்போம்னு சொல்றா மாதிரி இல்ல மாற்றுக் கருத்து சொல்லணுமாம், ஆனா இவரு சொல்றது தான் சரியாம்.
நைட் டூட்டில இடுகை போட்டா இப்புடித்தான்.
அரசன் அன்று கொல்வான்னு தான இருக்கு. அதெப்புடி சேர்த்து அரசனன்றுன்னு சொல்றது?
அரச நீதிக்கு தப்புனாலும் தெய்வ நீதிக்கு தப்ப முடியாதுன்னு சொல்ற பழமொழிதான். ஆனாலும் உங்க விளக்கம் பரவால்ல.
ரெண்டாவது விளக்கம் அந்தக் காலத்துக்கு சரி. இப்போதான் புள்ளீங்க பொண்டாட்டி வந்ததும் தனிக்குடித்தனம்னு போறதும், ஊட்டோட மாப்பிள்ளைன்னு இருக்கறதும் சகஜமா போட்டுதே.
ஏப்பு. இந்த திருடப் போயி தலையாரி வீட்டில ஒளிஞ்சதுக்கு அர்த்தம் சொல்லுங்க பாப்பம்:)):P
புழு பூச்சிக்கு இதான் அர்த்தமா??... இதுதெரியாம இத்தன வருசமா இருந்திட்டேனே... நல்லது....
அழகான விளக்கம் நண்பரே...........
புதுமையான விளக்கம்.
வயிற்றில் சிலநேரம், சிலருக்கு உருவாகும் புழு,பூச்சி கூட இவள் வயிற்றில் உருவாகவில்லையே என்பதுதான் எனக்கு தெரிந்த விபரம்.
(நாக்குப்புழு,வயிற்றில் பூச்சிக்கடி கேள்விப்பட்டிருப்பீர்களே....)
சரியான விளக்கம் நண்பரே..
நீங்க சொன்ன கரெக்ட் தான் அண்ணே...
//
ஆரூரன் விசுவநாதன் said...
பழமொழி பற்றிய விளக்கங்களை எனக்கு தெரிந்த வகையில் ஒரு தொடர் இடுகையாய் எழுதலாம் என ஒரு எண்ணம்.
நல்ல முயற்சி...தொடருங்கள் பிரபா
//
நன்றி ஆரூரன், கண்டிப்பாய்.
//
கலகலப்ரியா said...
நல்ல எண்ணம்..! நடத்துங்க... ஒரு கை பார்ப்போம்.. நான் இடக்குமுடக்கா அர்த்தம் எல்லாம் கண்டு புடிச்சு சொல்லுவேன்... அம்புட்டுதேன்.. =))
//
அதத்தான் எதிர்ப்பார்க்கிறேன் சகோதரி.
//
புலவன் புலிகேசி said...
தல விளக்கங்கள் நன்கு புரிகிறது. தொடருங்கள்.
//Blogger கலகலப்ரியா said...
நல்ல எண்ணம்..! நடத்துங்க... ஒரு கை பார்ப்போம்.. நான் இடக்குமுடக்கா அர்த்தம் எல்லாம் கண்டு புடிச்சு சொல்லுவேன்... அம்புட்டுதேன்.. =))//
அதேதான்....
//
நன்றி புலிகேசி... அன்பிற்கு.
//
♠ ராஜு ♠ said...
அய்.. நல்லாருக்கே இது.
//
நன்றி ராஜு!
//
வானம்பாடிகள் said...
இந்த போங்காட்டத்துக்கு நான் வரலை. நாட்டாஆஆஆஆஆஆம தீர்ப்ப மாத்தச் சொல்லு:-l
/பழமொழிகளுக்கு கண்டிப்பாய் பல்வேறு கோணங்களில் அர்த்தம் இருக்கும். உங்களுடைய மாற்று கருத்துக்களை, விளக்கங்களை பின்னூட்டத்தில் பகிர்ந்தால் நிறைய தெரிந்து, தெளியலாம்.../
/என்பதே சரியான பொருள்./
போனா போகுது ஆச படுறாரேன்னு அண்ணன்னா அழகிரின்னு நினைப்போ. எலக்சன் வைக்கிறா மாதிரி வைய்யி. நாங்கதான் ஜெயிப்போம்னு சொல்றா மாதிரி இல்ல மாற்றுக் கருத்து சொல்லணுமாம், ஆனா இவரு சொல்றது தான் சரியாம்.
நைட் டூட்டில இடுகை போட்டா இப்புடித்தான்.
அரசன் அன்று கொல்வான்னு தான இருக்கு. அதெப்புடி சேர்த்து அரசனன்றுன்னு சொல்றது?
அரச நீதிக்கு தப்புனாலும் தெய்வ நீதிக்கு தப்ப முடியாதுன்னு சொல்ற பழமொழிதான். ஆனாலும் உங்க விளக்கம் பரவால்ல.
ரெண்டாவது விளக்கம் அந்தக் காலத்துக்கு சரி. இப்போதான் புள்ளீங்க பொண்டாட்டி வந்ததும் தனிக்குடித்தனம்னு போறதும், ஊட்டோட மாப்பிள்ளைன்னு இருக்கறதும் சகஜமா போட்டுதே.
ஏப்பு. இந்த திருடப் போயி தலையாரி வீட்டில ஒளிஞ்சதுக்கு அர்த்தம் சொல்லுங்க பாப்பம்:)):P
//
/என்பதே சரியான பொருள்./
மொதல்ல மாத்திட்டேன்.
திருடன புடிக்கிற வேலை தலையாறிக்கு. அவரு வீட்டுல போயி பதுங்கி இருக்கிறது பாதுகாப்புத்தானே...
//
க.பாலாசி said...
புழு பூச்சிக்கு இதான் அர்த்தமா??... இதுதெரியாம இத்தன வருசமா இருந்திட்டேனே... நல்லது....
//
பில்டப் படிச்சா மட்டும் போதாது ராசா... இதுவும் தேவை.
நன்றி பாலாசி...
//
Sangkavi said...
அழகான விளக்கம் நண்பரே...........
//
மிக்க நன்றி நண்பா...
//
துபாய் ராஜா said...
புதுமையான விளக்கம்.
வயிற்றில் சிலநேரம், சிலருக்கு உருவாகும் புழு,பூச்சி கூட இவள் வயிற்றில் உருவாகவில்லையே என்பதுதான் எனக்கு தெரிந்த விபரம்.
(நாக்குப்புழு,வயிற்றில் பூச்சிக்கடி கேள்விப்பட்டிருப்பீர்களே....)
//
இது என் தம்பியின் மனைவி சொன்ன விளக்கம், பொறுந்துவதாய் இருந்தது.
நன்றி ராஜா!
//
முனைவர்.இரா.குணசீலன் said...
சரியான விளக்கம் நண்பரே..
//
நன்றி அய்யா, நீங்கள் சொன்னதால் சரியாய் சொன்னதாய் ஒரு நிறைவு.
//
ஜெட்லி said...
நீங்க சொன்ன கரெக்ட் தான் அண்ணே...
//
வாங்க தம்பி, தொடர்பெண்ணை மெயில் பண்ணுங்க.
//ஆண்கள் பிறந்த வீட்டிலேயே கடைசி வரை இருப்பார்கள். பூச்சி இறக்கை முளைத்தவுடன் பறந்துவிடுதல் போல, பெண்கள் திருமணம் செய்தவுடன் பிறிதோர் இடத்துக்கு வாழ்வதற்கு சென்றுவிடுவார்கள்.
//
ங்கொய்யாலே எப்பூடியெல்லாம் ரோசிக்கிறீங்க....
வீட்டுக்காரம்ம ஊருக்கு அனுப்பிபோட்டு... பொழுது போகாம பின்றீங்க போங்க பிரபா
அருமையான விளக்கம்
இதை இணைமொழிகள் என்று கூறுவதுண்டு.
இதைப் பற்றி விரிவாக விளக்கமாக
புலவர் இரா. இளங்குமரன் அவர்கள் இணைச்சொல் அகராதி என்னும் நூலில்
எழுதியுள்ளார்.
இதைப் பற்றி இன்னும் ஒரு இடுகை
//
ஈரோடு கதிர் said...

நன்றி கதிர், என்ன செய்ய, நம்மல புரிஞவர்ல ஒருத்தரா இருக்கீக...
December 29, 2009 7:12 PM
//
திகழ் said...
அருமையான விளக்கம்
இதை இணைமொழிகள் என்று கூறுவதுண்டு.
இதைப் பற்றி விரிவாக விளக்கமாக
புலவர் இரா. இளங்குமரன் அவர்கள் இணைச்சொல் அகராதி என்னும் நூலில்
எழுதியுள்ளார்.
December 29, 2009 7:55 PM
திகழ் said...
இதைப் பற்றி இன்னும் ஒரு இடுகை
//
நன்றி திகழ், பார்த்து படித்து மகிழ்ந்தேன். அய்யா அவர்களை தொடர்ந்தும் வந்துகொண்டிருக்கிறேன். உங்களின் அன்பான பாராட்டுக்கள் என்னை மேலும் இதுபோல் எழுத தூண்டுகிறது.
Mr Tha Explanation is already given by Mr.Thenkathci Swaminathan in the "mundru emiyangal". Kindly use the source that u read or hear or view abt the content.
Vasanth
m.e.vasanth@gmail.com
//
Anonymous said...
Mr Tha Explanation is already given by Mr.Thenkathci Swaminathan in the "mundru emiyangal". Kindly use the source that u read or hear or view abt the content.
//
நன்றி வசந்த். படித்ததாய் நினைவிலிருந்தால் குறிப்பிட்டிருப்பேன். இவை யாவும் ஏதோ ஒரு விதத்தில் கேட்டது, படித்தது தான். சிறு வயதிலேயே கேட்டதாய் ஞாபகம். சுட்டலுக்கு நன்றிங்க
Post a Comment