மகன் தந்தைக்கு....

|

உயிர் தந்து
உணர்வும் தந்து நல்
உறவு தந்தீர்...

செய்கையிலே மிக
சிறப்பு சேர நல்
சிந்தை தந்தீர்...

அன்பு தந்தீர்
அடித்தும் நல்
அறிவும் தந்தீர்...

பண்புடனே வாழுதற்கு
பாசம் தந்து உடன்
பணிவும் தந்தீர்...

கவிதை தந்தீர்
கவியெழுத நன்கு
கற்றும் தந்தீர்...

புவியுலக புரட்டுக்களை
புரிதல் தந்தீர் மனம்
பொறுத்தல் தந்தீர்...

வீரம் சொன்னீர்
வடுகாட்டி விளக்கி நல்
வீரம் தந்தீர்...

தீரத்தோடு வீரமென
தீர்வாய் சொல்லி நல்
தெளிவை தந்தீர்...

நல்லோரின் கதைகளோடு
நட்பு சொல்லி உண்மை
நட்பும் தந்தீர்...

அல்லலுறும் நேரமதில்
அடுத்தென்ன யோசிக்கும் நல்
ஆற்றல் தந்தீர்...

வன்வேலால் வினையறுக்கும்
வேலவனை வணங்கி நாளும்
வாழ்வுயர்வாய் என சொல்லி

என்னுயர்வில் என்னுயிரில்
எந்நாளும் உறைந்திருக்கும்
என் தந்தை நீர் நீடுவாழ்வீர்.

(உரையாடல் கவிதை போட்டிக்கான இடுகை)

31 : பேர் படிச்சிட்டு சொல்றாங்க...:

நையாண்டி நைனா said...

very nice one.

வால்பையன் said...

//கவிதை தந்தீர்
கவியெழுத நன்கு
கற்றும் தந்தீர்...//

இப்ப தெரியுதா இந்த அடி,உதையெல்லாம் எங்கிருந்து வந்துச்சுன்னு!

பூங்குன்றன்.வே said...

நல்ல கவிதை..வெற்றி பெற வாழ்த்துக்கள் பிரபாகர் !

ஸ்ரீ.கிருஷ்ணா said...

கவிதை கலக்கல் சார் . வாழ்த்துக்கள்..

Anonymous said...

பெரும்பாலும் அம்மாக்களுக்கே கவிதைகள் இருக்கும். இது எனக்கு பிடிச்சிருக்கு.

க.பாலாசி said...

//நல்லோரின் கதைகளோடு
நட்பு சொல்லி உண்மை
நட்பும் தந்தீர்...//

நல்ல வரிகளுடன் கூடிய கவிதை...

வெற்றிபெற வாழ்த்துக்கள்...

ஈரோடு கதிர் said...

அப்பா...!!!

வாழ்த்துகள் அப்பா

கலையரசன் said...

Daddy.. Daddy.. Oh my Dadyy..

சரியா சொன்னீங்க... என் மனசிலிருப்பதை!!

vasu balaji said...

அருமையான அப்பா! கொடுத்த வைத்த பிரபு. பாராட்டுகள்.

aazhimazhai said...

நல்லோரின் கதைகளோடு
நட்பு சொல்லி உண்மை
நட்பும் தந்தீர்...

ரொம்ப நல்லா இருக்கு !!! வாழ்த்துக்கள் !! வார்த்தைகளும் வார்த்தைகளின் தொகுப்பும் ரொம்ப அருமையா இருக்கு !!!

தராசு said...

வார்த்தை கோர்வைகள் அருமை.

வரிகளின் நீளத்தைக் கவனிக்கும் போது, எங்க கேபிள் அண்ணனோட எண்டர் கவிதைகள் டீம்ல சேர்ந்திட்டீங்களோன்னு தோணுது.

ஆரூரன் விசுவநாதன் said...

அழகான வரிகள் பிரபா....

கார்க்கிபவா said...

//எங்க கேபிள் அண்ணனோட எண்டர் கவிதைகள் டீம்ல //

கிகிகி

ஹேமா said...

நல்லதொரு கவிதை பிரபா.
வெற்றிக்கு வாழ்த்துக்கள்.

முனைவர்.இரா.குணசீலன் said...

கவிதை நன்றாகவுள்ளது
வெற்றிபெற வாழ்த்துக்கள்

துபாய் ராஜா said...

தந்தைதம் பெருமைதனை
தரமாய் உரைத்திட்ட
தமையன் பிரபாகரின்
தங்கமான கவிதை
உரையாடல் போட்டியில்
உன்னத வெற்றியடைந்திட
உளம்கனிந்த வாழ்த்துக்கள்.

பிரபாகர் said...

//
நையாண்டி நைனா said...
very nice one.
//
நன்றி நைனா...

//
வால்பையன் said...
//கவிதை தந்தீர்
கவியெழுத நன்கு
கற்றும் தந்தீர்...//


//
இப்ப தெரியுதா இந்த அடி,உதையெல்லாம் எங்கிருந்து வந்துச்சுன்னு!
//
அடி உதை? புரியல வாலு!

பிரபாகர் said...

//
பூங்குன்றன்.வே said...
நல்ல கவிதை..வெற்றி பெற வாழ்த்துக்கள் பிரபாகர் !
//

நன்றி பூங்குன்றன்....

//
ஸ்ரீ.கிருஷ்ணா said...
கவிதை கலக்கல் சார் . வாழ்த்துக்கள்..
//
நன்றி கிருஷ்ணா!

வால்பையன் said...

//அடி உதை? புரியல வாலு! //

பம்மல் கே சம்பந்தம் படத்தில் கமல் சொல்லும் வசனம் அது!

பிரபாகர் said...

//
சின்ன அம்மிணி said...
பெரும்பாலும் அம்மாக்களுக்கே கவிதைகள் இருக்கும். இது எனக்கு பிடிச்சிருக்கு.
//
நன்றிங்க அம்மணி.

//
க.பாலாசி said...
//நல்லோரின் கதைகளோடு
நட்பு சொல்லி உண்மை
நட்பும் தந்தீர்...//

நல்ல வரிகளுடன் கூடிய கவிதை...

வெற்றிபெற வாழ்த்துக்கள்...
//
நன்றி பாலாசி.

Prathap Kumar S. said...

அண்ணே...டாப்பு
வெற்றிபெற வாழ்த்துகள்

பிரபாகர் said...

//

ஈரோடு கதிர் said...
அப்பா...!!!

வாழ்த்துகள் அப்பா
//
நன்றி கதிர். ஒரு வார்த்தையென்றாலும் திருவார்த்தை...

//
கலையரசன் said...
Daddy.. Daddy.. Oh my Dadyy..

சரியா சொன்னீங்க... என் மனசிலிருப்பதை!!
//
நன்றி கலை.

பிரபாகர் said...

//
வானம்பாடிகள் said...
அருமையான அப்பா! கொடுத்த வைத்த பிரபு. பாராட்டுகள்.
//
நன்றிங்கய்யா. என்னை செம்மைப்படுத்த நிறைய பேர்... கொடுத்து வைத்தவன் தான்.

//
aazhimazhai said...
நல்லோரின் கதைகளோடு
நட்பு சொல்லி உண்மை
நட்பும் தந்தீர்...

ரொம்ப நல்லா இருக்கு !!! வாழ்த்துக்கள் !! வார்த்தைகளும் வார்த்தைகளின் தொகுப்பும் ரொம்ப அருமையா இருக்கு !!!
//
முதல் வருகை தந்து, தொடர்ந்து, இனிய பின்னோட்டம் மற்றும் வாழ்த்தியதற்கு நன்றிங்க.

பிரபாகர் said...

//
தராசு said...
வார்த்தை கோர்வைகள் அருமை.

வரிகளின் நீளத்தைக் கவனிக்கும் போது, எங்க கேபிள் அண்ணனோட எண்டர் கவிதைகள் டீம்ல சேர்ந்திட்டீங்களோன்னு தோணுது.
//
ரொம்ப தாமதமா புரிஞ்சிருக்கீங்க! நன்றிங்கண்ணே!

//
ஆரூரன் விசுவநாதன் said...
அழகான வரிகள் பிரபா....
//
அன்புக்கு நன்றி ஆரூரன்...

பிரபாகர் said...

//
கார்க்கி said...
//எங்க கேபிள் அண்ணனோட எண்டர் கவிதைகள் டீம்ல //

கிகிகி
//
வணக்கம் சகா. இந்த வார இறுதியில் பேசுவோம்.
//
ஹேமா said...
நல்லதொரு கவிதை பிரபா.
வெற்றிக்கு வாழ்த்துக்கள்.
//
நன்றி ஹேமா!

பிரபாகர் said...

//
முனைவர்.இரா.குணசீலன் said...
கவிதை நன்றாகவுள்ளது
வெற்றிபெற வாழ்த்துக்கள்
//
உங்களிடம் இருந்து வாழ்த்து பெறுதலை பெருமையாய் கருதுகிறேன், நன்றி அய்யா!

//
துபாய் ராஜா said...
தந்தைதம் பெருமைதனை
தரமாய் உரைத்திட்ட
தமையன் பிரபாகரின்
தங்கமான கவிதை
உரையாடல் போட்டியில்
உன்னத வெற்றியடைந்திட
உளம்கனிந்த வாழ்த்துக்கள்.
//
ஆஹா, கவிதையிலேயே வாழ்த்தா, நன்றி ராஜா...

பிரபாகர் said...

//
வால்பையன் said...
//அடி உதை? புரியல வாலு! //

பம்மல் கே சம்பந்தம் படத்தில் கமல் சொல்லும் வசனம் அது!
//
புரிஞ்சிடுச்சி, படத்த எத்தனையோ முறை பாத்திருக்கேன், இப்பத்தான் புரியுது!

//
நாஞ்சில் பிரதாப் said...
அண்ணே...டாப்பு
வெற்றிபெற வாழ்த்துகள்
//
நன்றி தம்பி!

T.V.ராதாகிருஷ்ணன் said...

நல்ல கவிதை..வெற்றி பெற வாழ்த்துக்கள்

புலவன் புலிகேசி said...

தல அப்ப எனக்கு பரிசு கிடையாதுன்னு உறுதியா சொல்றீங்க...பரிசு உங்களுக்குத்தான்..எனக்கில்லை எனக்கில்லை

ரோஸ்விக் said...

அப்பப்பா இது பொல்லாத புள்ளையப்பா.... :-)
அப்பாகிட்ட இருந்து நிறையத்தான் கத்துக்கிட்டீங்க போல. உண்மைதான் முதல் குருவுல அவரும் ஒருத்தர்.
வெற்றிக்கு வாழ்த்துக்கள்.

பிரபாகர் said...

//
T.V.Radhakrishnan said...
நல்ல கவிதை..வெற்றி பெற வாழ்த்துக்கள்
//

மிக்க நன்றிங்க... உங்களின் அன்பிற்கும் வாழ்த்துக்கும்.
//
புலவன் புலிகேசி said...
தல அப்ப எனக்கு பரிசு கிடையாதுன்னு உறுதியா சொல்றீங்க...பரிசு உங்களுக்குத்தான்..எனக்கில்லை எனக்கில்லை
//
ஆஹா, எப்போ தருமி ஆனீரு?

//
ரோஸ்விக் said...
அப்பப்பா இது பொல்லாத புள்ளையப்பா.... :-)
அப்பாகிட்ட இருந்து நிறையத்தான் கத்துக்கிட்டீங்க போல. உண்மைதான் முதல் குருவுல அவரும் ஒருத்தர்.
வெற்றிக்கு வாழ்த்துக்கள்.
//
வாழ்த்துக்கு நன்றி ரோஸ்விக்.

 

©2009 ”வாழ்க்கை வாழ்வதற்கே” | Template Blue by TNB