விகடன் டிசம்பர் மின்னிதழில் வெளியான கவிதை... பார்க்க இங்கே சுட்டுங்கள்...
HTML வடிவில்...
- பிரபாகர்
கண்ணென தமிழ் காத்து
கவிதைகள் பல புனைந்து
எண்ணத்தை எழுத்தாக்கி
ஏற்றம் பெற வழிசமைத்து
பெண்ணியத்தின் மாண்புகளை
புவியோர்க்கு எடுத்துரைத்து
திண்ணமதை உடனிறுத்தி
தெளிவான கருத்துரைத்து
மதங்களை பாராமல்
மக்களை ஒன்று சேர்த்து
சுதந்திர வேட்கையினை
சுடர்விட்டெறியச் செய்து
வேதவழி முரண்களை
வாதம் செய்து மீறி
சாதனைகள் புரிந்து
சத்திய வழி சென்ற
பாட்டுக் கவி பாரதியும்
பாரினில் இன்றிருந்தால்
நாட்டவலம் கண்டிட்டு
நாணி தலை குனிந்து
பாட்டெழுதி புரட்டுகளை
பலரறியச் செய்து
ஓட்டிடுவான் அவலங்கள்
ஓங்கு தமிழ் துணைகொண்டு
அருந்தவத்தில் பிறந்த சிசு
ஆணில்லை என்பதனால்
பெருமை சேர்க்கும் பெண்மையினை
பெண்மையே வெறுத்தொதிக்கி
பிறந்திட்ட பெண் மகவை
பால் மறுத்து பால் புகட்டி
இறக்கடிக்க செய்வோரை
இகழ்ந்துமிழ்வான் தன் பாட்டில்
திறமையற்றோர் மிகுந்திருந்து
தொலை நோக்கு பார்வையின்றி
வரும் தேர்தல் வோட்டெண்ணி
வாழ்க்கை தரம் உயர்த்தாத
அரசியல் சந்தனத்தில்
அமிழ்ந்துள்ள சாக்கடையை
வாரி இறைத்திடுவான்
வாசமது கூட்டிடுவான்
எண்ணத்தில் தெளிவின்றி
உள்ளத்தில் துணிவின்றி
வீணான எண்ணத்துடன்
வீண்பேசி நெறி மீறி
கண் மூடி கனவுலகில்
காலம் கழிக்கின்ற
தூண்களாம் இளைஞரை
தூண்டிடுவான் தன் பாட்டில்.
20 : பேர் படிச்சிட்டு சொல்றாங்க...:
விரைவில் ஆனந்த விகடன் அச்சுப் பிரதியிலும் வர வாழ்த்துகள் நண்பரே..!
அருமையான கவிதை பிரபாகர். ஒவ்வொரு பத்தியிலும் வரியிலும் உணர்ச்சி பொங்குகிறது. நான் அண்மையில் படித்த சிறந்த இடுகைகளில் இதுவும் ஒன்று. தொடருங்கள்!!
வாழ்த்துக்கள் பிரபா
பாரதி குறித்த கவிதை மின்னிதழில்...
மிக்க மகிழ்ச்சி
பாராட்டுகள் ப்ரபா. நல்ல கவிதை.
தல இப்பத்தான் மின்னிதழில் படித்தேன். அழகான கவிதை...வாழ்த்துக்கள்.
பாரதியின் பிறந்ததினத்தில் நல்லதொரு நினைவஞ்சலி, நன்றி பிரபா
நன்றாக இருக்கிறது, வாழ்த்துகள்!
சிப்பியிலே நல்ல முத்து விளைந்திடுஞ்
செய்தியறியாயோ? நன்னெஞ்சே
என்ற பாரதியின் வரிகளைப்போல் தங்கள் கவிதை பிரபாகர் வாழ்த்துக்கள்...
அருமையா வந்திருக்கு அண்ணா...! மின்னிதழுக்கு வாழ்த்துகள்...!
மகாகவி பற்றி மகத்தான கவிதை. அருமை. அஞ்சலிகள் ஆயிரம் எங்கள் மண் பிறந்த ஈடில்லாத மனிதனுக்கு...
வாழ்த்துகள் நண்பரே,... வரிகளும் அருமை
//நாடோடி இலக்கியன் said...
விரைவில் ஆனந்த விகடன் அச்சுப் பிரதியிலும் வர வாழ்த்துகள் நண்பரே..!
//
நன்றி நண்பா, உங்கள் வாழ்த்துக்கள் பலிக்கட்டும்.
//
ச.செந்தில்வேலன்(09021262991581433028) said...
அருமையான கவிதை பிரபாகர். ஒவ்வொரு பத்தியிலும் வரியிலும் உணர்ச்சி பொங்குகிறது. நான் அண்மையில் படித்த சிறந்த இடுகைகளில் இதுவும் ஒன்று. தொடருங்கள்!!
//
நன்றி செந்தில். மிக்க சந்தோஷத்தை தருகிறது உங்களின் ஊக்கம்.
//
ஈரோடு கதிர் said...
வாழ்த்துக்கள் பிரபா
பாரதி குறித்த கவிதை மின்னிதழில்...
மிக்க மகிழ்ச்சி
//
நன்றி கதிர். எல்லாம் உங்கள் ஆதரவில்தான்.
//
வானம்பாடிகள் said...
பாராட்டுகள் ப்ரபா. நல்ல கவிதை.
//
உங்களின் தொடர் ஊக்கமும் அன்பான அறிவுறுத்தலும்தான் அய்யா...
//
புலவன் புலிகேசி said...
தல இப்பத்தான் மின்னிதழில் படித்தேன். அழகான கவிதை...வாழ்த்துக்கள்.
//
நன்றி புலிகேசி....
//
சங்கர் said...
பாரதியின் பிறந்ததினத்தில் நல்லதொரு நினைவஞ்சலி, நன்றி பிரபா
//
நன்றி சங்கர்.
//
ஷங்கி said...
நன்றாக இருக்கிறது, வாழ்த்துகள்!
//
நன்றி ஷங்கி...
//
பிரியமுடன்...வசந்த் said...
சிப்பியிலே நல்ல முத்து விளைந்திடுஞ்
செய்தியறியாயோ? நன்னெஞ்சே
என்ற பாரதியின் வரிகளைப்போல் தங்கள் கவிதை பிரபாகர் வாழ்த்துக்கள்...
//
நன்றி வசந்த்...
//
கலகலப்ரியா said...
அருமையா வந்திருக்கு அண்ணா...! மின்னிதழுக்கு வாழ்த்துகள்...!
//
நன்றி சகோதரி...
//
துபாய் ராஜா said...
மகாகவி பற்றி மகத்தான கவிதை. அருமை. அஞ்சலிகள் ஆயிரம் எங்கள் மண் பிறந்த ஈடில்லாத மனிதனுக்கு...
//
நன்றி ராஜா... தமிழ் இருக்கும் வரை பாரதி இருப்பார்.
//
ஆ.ஞானசேகரன் said...
வாழ்த்துகள் நண்பரே,... வரிகளும் அருமை
//
நன்றி ஞானசேகரன்...
கவிதை அருமை.
ஆனால் பாரதி இன்று இருந்திருந்தால் ...
"செம்மொழி மாநாட்டில் கலந்து கொள்ள வேண்டுமென்று மிரட்ட பட்டிருப்பார் ...."
அல்லது ...
"தமிழை வைத்து பொழப்பு நடத்த்தும் ஈன பிறவிகளை பார்த்து வெறுத்து போய் , ஆந்திரா பக்கம் சென்று இருப்பார் "
அருமையான கவிதை நண்பா.
இன்னும் நிறைய சாதிக்க வாழ்த்துக்கள் பிரபாகர் !!!
முண்டாசுத் தலை முறுக்கு மீசை
முழியும் நெருப்புத்தான்
அவன் முச்சந்தியில் நின்று பாட
எனக்கும் சிரிப்புத்தான்.
கண்டேன் கனவில், கூட்டி வந்தேன்
நாட்டைக் காட்டினேன்
கதறி, கண்ணீர் விட்டு, நாட்டை விட்டே
ஓட்டம் காட்டினான்.
என்ற கவிஞர் மழைமகன் கவிதைகள் நினைவிற்கு வருகிறது பிரபா...
அருமையான வரிகள்
வாழ்த்துக்கள்
//
அஹோரி said...

மிகச் சரியாய் சொன்னீர்கள்...
//
பூங்குன்றன்.வே said...
அருமையான கவிதை நண்பா.
இன்னும் நிறைய சாதிக்க வாழ்த்துக்கள் பிரபாகர் !!!
//
மிக்க நன்றி பூங்குன்றன்...
//
ஆரூரன் விசுவநாதன் said...
முண்டாசுத் தலை முறுக்கு மீசை
முழியும் நெருப்புத்தான்
அவன் முச்சந்தியில் நின்று பாட
எனக்கும் சிரிப்புத்தான்.
கண்டேன் கனவில், கூட்டி வந்தேன்
நாட்டைக் காட்டினேன்
கதறி, கண்ணீர் விட்டு, நாட்டை விட்டே
ஓட்டம் காட்டினான்.
என்ற கவிஞர் மழைமகன் கவிதைகள் நினைவிற்கு வருகிறது பிரபா...
அருமையான வரிகள்
வாழ்த்துக்கள்
//
நன்றி ஆரூரன்.... அன்பிற்கு என்றும் கடமைப்பட்டிருக்கிறேன்....
Post a Comment