இடுகையெழுத வந்த கதையும் எனக்கு பிடித்த இடுகையாளர்களும்...

|

அன்புத் தம்பி அர்விந்த் என்னை இடுகை எழுத வந்ததன் கதையினை கூறுமாறு அழைப்பு விடுக்க, என்னுள் ஒரு எண்ணம் 'எழுதவந்து முழுதாய் ஆறு மாதங்கள் கூட முடியவில்லை, அதற்குள்ளா?' என. எண்ணத்தை மறுத்து, இதோ எழுத வந்ததன் காரணத்தையும் எனக்கு கிடைத்த அன்பு உள்ளங்களைப் பற்றியும் இந்த இடுகை.

பிளாக் என ஒன்று இருப்பதாய் இரண்டாயிரத்து ஐந்தில் சிங்கப்பூர் வந்த புதிதில் நான் வேலை பார்த்த இடத்தில் வேறு ஒரு பிரிவை சேர்ந்த அன்பு என்பவரின் மூலமாக தெரிய வந்தது. தமிழ் முரசு பத்திரிகையில் வெளியான எனது கவிதைகளைப்பார்த்து நீங்களும் பிளாக் எழுதலாமே என அறிவுறுத்தி அவரது பிளாக் முகவரியையும் கொடுக்க, அதை அப்போது பார்த்ததோடு சரி.

அதன்பின் தட்ஸ் தமிழ் செய்திகளை படித்து அதில் வரும் மகா விரசமான பின்னூட்டங்களுக்கு (குறிப்பிட்ட சில நட்சத்திரங்களுக்கு) காட்டமாய் ஆசிரியருக்கு பின்னூட்டம் போட்டதோடு, அவ்வப்போது ஆனந்த விகடன் படித்து பின்னூட்டம் இட்டு வந்தேன்.

அப்போதுதான் டாப் 10 வலைப்பதிவுகள் என குமுதத்தில் வந்ததாய் செய்தியில் படித்து கூகிள் ல் தேட எனது வலைப்பயண வாழ்க்கை ஆரம்பித்தது.

முதலில் என்னை கவர்ந்தது, லக்கி. தொடர்ந்து படித்து தவறாது பின்னூட்டம் இட்டு, தொடக்கத்தில் ஆங்கிலத்தில் தான், பிறகு தான் எடிட்டர் மூலம் தமிழில் எழுதி, தொடர்ந்தேன். பின் நரசிம், பட்டர்ஃபிளை சூர்யா, ஆதி, கார்க்கி, செல்வேந்திரன், பரிசல், கேபிள் அண்ணா என எல்லோரையும் படிக்க ஆரம்பிக்க, பிரம்மிப்பாய் இருந்தது.

லக்கி எனது விமர்சனத்தை பாராட்டி, என்னையும் ஏன் ஒரு வலைப்பூ ஆரம்பிக்கக்கூடாது என கேட்க, விளையாட்டாய் ஆரம்பித்தேன். படிப்பில் நிறைய ஆர்வம் இருந்ததும், ஏற்கனவே படித்திருந்ததும் பெரிதும் உதவ எழுதி வைத்திருந்த கவிதைகளை முதலில் வெளியிட வரவேற்பு எதிர்பார்த்ததையும் விட பயங்கரமாய் இருந்தது.

ஆம், பத்து பேர் படிக்க, என் மாமா மட்டும் வாழ்த்தி பின்னூட்டமிட்டார். எனக்கு எழுதுவதைவிடவும் படித்து பின்னூட்டமிடலில் அதிக ஆர்வம் இருந்ததால் ஏதும் கவலை இன்றி எழுத ஆரம்பித்தேன்.

தமிழ் வலையுலகம் மணி எனது பின்னூட்டங்களினால் என்னையும் படித்து சிறந்த வலைப்பதிவர்களுள் என்னையும் சுட்டிக்காட்ட, நாகாவும் அவ்வாறே செய்யதொடு அல்லாமல் உடன் கதிர் மற்றும் ஜோதிஜி அவர்களையும் அறிமுகப்படுத்த ஒன்றிரண்டு விகடன் குட் ப்ளாக் ல் வர நண்பர்கள் நிறைய சேர ஆரம்பித்தார்கள்.

நண்பர் பீர் பின்னூட்டங்களை பற்றி எழுதிய ஒரு இடுகையில் நன்கு பின்னூட்டம் இடுபவர்களில் நானும் ஒருவன் என குறிப்பிட்டு எழுதியிருந்தார். ஒய்வு நேரங்களிலெல்லாம் நிறைய எழுத ஆரம்பிக்க, விரைவாய் ஐம்பதை தொட்டேன்.

படிப்பதில் நிறைய நேரம் செலவிட்டதால் எழுதுதல் குறைந்தாலும் நிறைய நட்புகள் கிடைத்தவண்ணம் இருந்தது. எழுதியவற்றில் எனக்கு மிகவும் பிடித்த பதிவு என பார்த்தால் மூன்றை சொல்லுவேன். எனது பள்ளி அனுபவங்கள், குருவணக்கம் மற்றும் அப்பாவுக்கு பிறந்த நாள்...

நேரில் சந்தித்த முதல் பதிவர் வண்ணத்துப்பூச்சியார். அடுத்தமுறை அவருடன் கேபிள் அண்ணா, தண்டோரா, என் பிரியமான லக்கி ஆகியோர். இரண்டும் என் வாழ்வின் மிக முக்கியமான நாட்கள்.

இன்னும் நேரில் பார்க்காமல் சந்திக்க விழையும் சென்னை பதிவர்களின் முதல் இரு இடங்கள் எல்லோரையும் சகா என அழைக்கும் கார்க்கிக்கும், எழுத்துக்களின் ஒரு தனியான கவர்ச்சியை வைத்திருக்கும் நர்சிம்முக்கும்.

தவிர என்னோடு இயைந்து இருக்கும் அன்பு நண்பர் கதிர், வானம்பாடிகள் அய்யா, ஜோதிஜி... என இன்னும் நிறைய பேரை நேரில் சந்திக்க ஆசை.

பின்னூட்டத்தால் என்னை செம்மைபடுத்துபவர்கள் எனப்பார்த்தால் எல்லோரையும் சொல்லலாம், ஆனாலும் ஆரம்பம் முதலே என்னை தொடரும் ராசுக்குட்டிக்கு ஒரு தனி இடம் உண்டு.

எழுதுபவர்களில் என்னை கவர்ந்தவர்களைப் பற்றியும் இந்த இடுகையில் எழுதலாம் என்றிருந்தேன், நீண்டு கொண்டே செல்வதால் அடுத்த இடுகையில் என் பார்வையில் எல்லோரைப் பற்றியும் கீழ்க்கண்ட வரிசையில் எழுத இருக்கிறேன்.

சமுதாய சிந்தனைகளோடு எழுதுபவர்கள்:
இளமை துள்ளலோடு எழுதுபவர்கள்:
வாழ்வியலோடு எழுதுபவர்கள்:
சினிமா மற்றும் இதர விஷயங்கள்:
சிறுகதைகள் தொடர், பயண அனுபவங்கள்:
கவிதையோடு கதைகள்: 

அடுத்த இடுகையில் சந்திப்போம்

இந்த பதிவு உங்களுக்கு பிடிச்சிருந்தா என்னை மேம்படுத்த உங்க கருத்துக்களையும், உற்சாகப்படுத்த ஓட்டையும் போடுங்களேன்!

46 : பேர் படிச்சிட்டு சொல்றாங்க...:

vasu balaji said...

நீங்க 100,150,200 ஆ இருக்கலாம். நாந்தான் முதல். பின்னூட்டம் அப்புறம். இப்போ காலை வணக்கம்.

Cable சங்கர் said...

ப்ளாஷ் பேக் நல்லாருக்கு பிரபா..

பிரபாகர் said...

//வானம்பாடிகள் said...
நீங்க 100,150,200 ஆ இருக்கலாம். நாந்தான் முதல். பின்னூட்டம் அப்புறம். இப்போ காலை வணக்கம்.
//

காலை வணக்கம்...

நன்றிங்கய்யா, நீங்கள்தான் எப்போதும் முதல்.

பிரபாகர் said...

//
Cable Sankar said...
ப்ளாஷ் பேக் நல்லாருக்கு பிரபா..

October 20, 2009 12//

நன்றிங்கண்ணா, வருகைக்கும் உங்களின் அன்பான கருத்துக்கும்.

ஈரோடு கதிர் said...

வலையில் எழுத வந்த கதை நயமாய் இருக்கிறது....

"பின்னூட்ட பிரபாகர்" என்று பட்டமே கொடுக்கலாம் (ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்........
அதுவும் நேத்து கலகலப்பிரியா இடுகையில்.........)

உங்களை எனக்கு அறிமுகப்படுத்திய நாகாவிற்கு மீண்டும் ஒருமுறை நன்றிகள்

வாழ்த்துகள் பிரபா

பிரபாகர் said...

//"பின்னூட்ட பிரபாகர்" என்று பட்டமே கொடுக்கலாம் (ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்........
அதுவும் நேத்து கலகலப்பிரியா இடுகையில்.........)

உங்களை எனக்கு அறிமுகப்படுத்திய நாகாவிற்கு மீண்டும் ஒருமுறை நன்றிகள்
//

உங்கள் அன்புக்கு நன்றி கதிர். இணைத்த நாகாவுக்கும்தான் மறுபடியும்...

பின்னூட்ட பிரபாகர்..? 'ப' னாவுக்கு 'ப' னா..? கொஞ்சம் அதிகம்தான்..

நர்சிம் said...

சுவாரஸ்யமாய் எழுதி,அதைவிட சுவாரஸ்யமாய் தொடரும் போட்டு இருக்கிறீர்கள்..தொடருங்கள்.காத்திருக்கிறோம்.சென்னை வரும்பொழுது சந்திப்போம் நண்பரே.

துபாய் ராஜா said...

அப்போ எங்களை எல்லாம் சந்திக்க ஆசை இல்லையா... :))

மணிகண்டன் said...

வோட்டு போட்டுட்டேன் தமிழ்மணத்துல. சூப்பரா எழுதறீங்க. தொடருங்கள் உங்கள் சேவையை.

பிரபாகர் said...

//நர்சிம் said...
சுவாரஸ்யமாய் எழுதி,அதைவிட சுவாரஸ்யமாய் தொடரும் போட்டு இருக்கிறீர்கள்..தொடருங்கள்.காத்திருக்கிறோம்.சென்னை வரும்பொழுது சந்திப்போம் நண்பரே.

October 20, 2009 2:34 PM//

நன்றி நரசிம். கண்டிப்பாய் சந்திக்க வேண்டும்.

Starjan (ஸ்டார்ஜன்) said...

பிரபாகரின் எழுத்து சிறக்க என் வாழ்த்துக்கள்

பிரபாகர் said...

//துபாய் ராஜா said...
அப்போ எங்களை எல்லாம் சந்திக்க ஆசை இல்லையா... :))//

நாகா, செந்தில், ராஜா எல்லாம் மிடில் ஈஸ்ட் வந்தால் சந்திக்க விழைபவர்கள்... நன்றி ராஜா.

பிரபாகர் said...

//மணிகண்டன் said...
வோட்டு போட்டுட்டேன் தமிழ்மணத்துல. சூப்பரா எழுதறீங்க. தொடருங்கள் உங்கள் சேவையை.//

நன்றி மணி.

எல்லாம் உங்களின் மோதிரக்கையால் குட்டு பட்டதுதான்...

பிரபாகர் said...

//Starjan ( ஸ்டார்ஜன் ) said...
பிரபாகரின் எழுத்து சிறக்க என் வாழ்த்துக்கள்
//

நன்றி நண்பரே!

வாழ்த்துக்கு நன்றி.

வால்பையன் said...

நல்லதொரு பயணம்!

நீங்கள் குறிப்பிட்டுள்ள அனைவரும் அருமையான பதிவர்கள்!

பிரபாகர் said...

//வால்பையன் said...
நல்லதொரு பயணம்!

நீங்கள் குறிப்பிட்டுள்ள அனைவரும் அருமையான பதிவர்கள்!

October 20, 2009 3:40 PM//

நன்றி அருண். இன்னும் நிறைய பதிவர்களை அடுத்த இடுகையில் குறிப்பிட இருக்கிறேன். இவர்களெல்லாம் எனக்கு ஆரம்ப அறிமுகங்கள்...

ஸ்ரீ.கிருஷ்ணா said...

nice post sir...

ஜெட்லி... said...

மேலும் கலக்குங்கள் பிரபா...
வாழ்த்துக்கள்

பிரபாகர் said...

//October 20, 2009 3:54 PM
ஸ்ரீ.கிருஷ்ணா said...
nice post sir...
October 20, 2009 4:28 PM //

நன்றி கிருஷ்ணா... வரவிற்கும் பாராட்டிற்கும்.

பிரபாகர் said...

//ஜெட்லி said...
மேலும் கலக்குங்கள் பிரபா...
வாழ்த்துக்கள்
//
நன்றி ஜெட்லி... உங்களின் அன்பிற்கு என்றும் கடமைப்பட்டிருக்கிறேன்.

ரவி said...

voted.

பிரபாகர் said...

//செந்தழல் ரவி said...
voted.//
நன்றி ரவி, உங்களின் அன்பான வரவிற்கும் ஓட்டிற்கும்...

க.பாலாசி said...

உங்களின் பிளாக் அனுபவமும் நன்றாயிருக்கிறது. உங்களுக்கு லக்கி மாதிரி எனக்கு கேபிள் சங்கர்....

மேன்மேலும் தங்களின் எழுத்துப்பணி சிறக்க வாழ்த்துகிறேன். உங்களின் எழுத்து நீங்களே அருகிலிருந்து சொல்வது போல் அமைந்துள்ளது. இந்த இடுகையில் மட்டுமல்ல இதற்கு முந்தைய இடுகையிலும். நல்ல நடை...

எனது வாழ்த்துக்களும்....

பழமைபேசி said...

தொடருங்கள் பிரபாகர், வாழ்த்துகள்!

ARV Loshan said...

வாழ்த்துகள் பிரபாகர்

கலகலப்ரியா said...

வாழ்க வளர்க..! (நூடுல்ஸ் பத்தி சொல்லவே இல்ல.. =)))

பிரபாகர் said...

//க.பாலாசி said...
உங்களின் பிளாக் அனுபவமும் நன்றாயிருக்கிறது. உங்களுக்கு லக்கி மாதிரி எனக்கு கேபிள் சங்கர்....

மேன்மேலும் தங்களின் எழுத்துப்பணி சிறக்க வாழ்த்துகிறேன். உங்களின் எழுத்து நீங்களே அருகிலிருந்து சொல்வது போல் அமைந்துள்ளது. இந்த இடுகையில் மட்டுமல்ல இதற்கு முந்தைய இடுகையிலும். நல்ல நடை...

எனது வாழ்த்துக்களும்....//

நன்றி பாலாஜி... உங்களின் கருத்துக்கள் என்னை மேம்படுத்த பெரிதும் உதவும்...

பிரபாகர் said...

//பழமைபேசி said...
தொடருங்கள் பிரபாகர், வாழ்த்துகள்!

October 20, 2009 6:38 PM//

நன்றி பழமைபேசி... வருகைக்கும் வாழ்த்துக்கும்...

பிரபாகர் said...

//
LOSHAN said...
வாழ்த்துகள் பிரபாகர்//

வாழ்த்துக்கு நன்றி LOSHAN....

பிரபாகர் said...

//கலகலப்ரியா said...
வாழ்க வளர்க..! (நூடுல்ஸ் பத்தி சொல்லவே இல்ல.. =)))

October 20, 2009 9:07 PM//

இன்னும் நொந்து நூடுல்ஸ் ஆகல அதான்... வாழ்த்துக்கு நன்றிங்க ப்ரியா....

மணிஜி said...

பண்டிகை முடிந்து திரும்பிட்டேன் தம்பி

பிரபாகர் said...

//தண்டோரா ...... said...
பண்டிகை முடிந்து திரும்பிட்டேன் தம்பி
October 20, 2009 9:57 PM //

என்னடா இது அண்ணனை காணுமேன்னு கவலைப்பட்டுட்டிருந்தேன்... வாங்கண்ணே!

ஜோதிஜி said...

நீங்கள் சொன்ன அத்தனையிலும் ஒரு எளிமை இருக்கிறது. பதிவர்கள் பட்டியலில் கூட. அக்கரையில் இருந்தாலும் உங்களின் அக்கரை வியக்க வைக்கிறது. உங்கள் புகைப்படத்தில் உங்களை கண்ட முதல் நாள் நான் நினைத்தது வெள்ளந்தியாக இருப்பாரோ என்று. தொடர்ந்த பின் ஊட்டமும், வார்த்தைகளும், இன்று உள்ளே வந்த போது அதுவே நிதர்சனமாய் ஆகிவிட்டது பிரபாகர். அவரும் இப்படித்தான் வீரம் பெற்றது கூட அவரின் வெள்ளந்திதனத்தால் இன்று?

நாகராஜன் said...

சுய புராணமா இருந்தாலும் ரொம்ப நல்லா ரசிக்கும் படி எழுதியிருக்கீங்க... பாராட்டுகள்... தனி இடம் கொடுத்ததற்கு மிக்க நன்றிங்க... அடுத்த பகுதிக்காக எதிர் பார்த்துட்டு இருக்கேன்...

ப்ரியமுடன் வசந்த் said...

வாழ்த்துக்கள் பிரபாகர்

பிரபாகர் said...

//ஜோதிஜி. தேவியர் இல்லம். said...
நீங்கள் சொன்ன அத்தனையிலும் ஒரு எளிமை இருக்கிறது. பதிவர்கள் பட்டியலில் கூட. அக்கரையில் இருந்தாலும் உங்களின் அக்கரை வியக்க வைக்கிறது. உங்கள் புகைப்படத்தில் உங்களை கண்ட முதல் நாள் நான் நினைத்தது வெள்ளந்தியாக இருப்பாரோ என்று. //

இன்னும் அப்படித்தாங்கயா... ஆனாலும் நட்புக்குத்தான் எப்பொழுதும் முதலிடம். வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்கய்யா...

பிரபாகர் said...

//ராசுக்குட்டி said...
சுய புராணமா இருந்தாலும் ரொம்ப நல்லா ரசிக்கும் படி எழுதியிருக்கீங்க... பாராட்டுகள்... தனி இடம் கொடுத்ததற்கு மிக்க நன்றிங்க... அடுத்த பகுதிக்காக எதிர் பார்த்துட்டு இருக்கேன்...

October 21, 2009 12:14 AM//

ராசுக்குட்டி, இது எல்லாராலும் எழுதப்பட்டுக்கொண்டு வந்திருக்கும் தொடர் பதிவு, சுய புராணம்தான். ஹி...ஹி... நன்றிங்க ராசுக்குட்டி, அடுத்த இருக்கையில் இன்னும் சுவராஸ்யமா எழுத முயற்சிக்கிறேன்.

பிரபாகர் said...

//பிரியமுடன்...வசந்த் said...
வாழ்த்துக்கள் பிரபாகர்

October 21, 2009 12:22 AM//

வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றி என் அன்பு வசந்த்.

ரோஸ்விக் said...

பின்னீட்டிங்க பின்னூட்ட பிரபாகர். இன்னும் பல மைல்கள் கடக்க வாழ்த்துக்கள்.

http://thisaikaati.blogspot.com

பிரபாகர் said...

//ரோஸ்விக் said...
பின்னீட்டிங்க பின்னூட்ட பிரபாகர். இன்னும் பல மைல்கள் கடக்க வாழ்த்துக்கள். //

நன்றிங்க ரோஸ்விக்... உங்கள் பாராட்டிற்கும், வாழ்த்துக்கும்....

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

நல்ல நினைவுகூறல் பிரபாகர். அருமையான இடுகைகளைக் கொடுத்து வருகிறீர்கள். தொடர்ந்து எழுதுங்கள். நன்றி.

பிரபாகர் said...

//ச.செந்தில்வேலன்(09021262991581433028) said...
நல்ல நினைவுகூறல் பிரபாகர். அருமையான இடுகைகளைக் கொடுத்து வருகிறீர்கள். தொடர்ந்து எழுதுங்கள். நன்றி.
//

நன்றி செந்தில், உங்களின் தொடர்ந்த ஆதரவிற்கும் அன்பிற்கும்..

புலவன் புலிகேசி said...

உங்கள் பதிவு வரலாறு நல்லா இருக்கு.. அடுத்த பதிவுக்காக காத்திருக்கிறேன்.....

பிரபாகர் said...

//புலவன் புலிகேசி said...
உங்கள் பதிவு வரலாறு நல்லா இருக்கு.. அடுத்த பதிவுக்காக காத்திருக்கிறேன்.....
//

நன்றி புலிகேசி. அன்பிற்கும் பாராட்டுக்கும்.

ஷங்கி said...

நல்லாருக்கு பிரபாகர்

பிரபாகர் said...

//ஷங்கி said...
நல்லாருக்கு பிரபாகர்
October 22, 2009 11:16 AM //

வாழ்த்துக்கு நன்றி ஷங்கி...

 

©2009 ”வாழ்க்கை வாழ்வதற்கே” | Template Blue by TNB