தியேட்டரில் சென்று படம் பார்த்து நாளாகிவிட்டபடியால் ஓஎம்ஆர் ஏஜிஎஸ்-ல் போராளி படம் பார்க்க நண்பரோடு சென்றேன். இரவு பத்தரை மணிக்காட்சி.
பாதிக்கும் மேல் அரங்கம் நிறைந்திருந்தது. சிங்கையின் கோல்டன் வில்லேஜில் படம் பார்க்கும் உணர்வினை ஏற்படுத்தியது.
கதை ஏறக்குறைய பலரின் விமர்சனங்களைப் படித்ததால் ஏற்கனவே தெரிந்த ஒன்றாகவே இருக்க, அதிக எதிர்ப்பார்ப்பு இல்லாமல் பார்க்கும்படியாய் இருந்தது.
பார்க்கும் போது பலரின் விமர்சனங்களோடு ஒத்துப்போவதாய் தான் எனது புரிதலும் இருந்தது.
ஒவ்வொருவருமே ஒரு விதத்தில் போராளிதான், ஏதாவது ஒரு தருணத்தில் மனப் பிசகு ஏற்படுகிறது, உடலுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை மனதுக்கு கொடுக்க மறுக்கிறோம், சொந்தக்காரங்களை மட்டும் நம்பவே முடியாது (இந்த இடத்தில் நிறைய கைத்தட்டல்கள்) என ஏகமாய் தத்துவ மழைகள்.
நகைச்சுவைக் காட்சிகள் பெரிதாய் கவரவில்லையென்றாலும் மென்முறுவலை வரவழைக்கிறது, ஆரோக்கியமாய் இருக்கிறது என்பதில் சந்தோஷமே.
சிலோனே பிடிக்காது, இதில் சிலோன் பரோட்டாவா என தமிழுணர்வை வெளிப்படுத்தும் வசனங்கள். சசிக்குமார் ஏகமாய் வசனம் பேசி சில சமயங்களில் நிறையவே படுத்துகிறார். நடிப்பும் சில இடங்களில் செயற்கையாக இருக்கிறது.
இசை ரொம்பவும் சுமார். இளையராஜா இசையமைத்திருந்தால் இந்த இடத்தில் எவ்வளவு அருமையாய் செய்திருப்பார் என பல இடங்களில் எண்ணி பார்க்கும்படியாய் பிண்ணனி இசை. காட்சிகள் நன்றாக படமாக்கப்பட்டிருக்கின்றன.
சிலபல படங்களின் மொத்தக் கலைவையாய் தெரிந்ததே தவிர எந்த ஒரு தனித் தன்மையுடனும் இல்லை என்பதே பெரிய குறை. அடி, வெட்டு, குத்து என வன்முறைகளுக்கு பஞ்சமில்லாமல் இருந்தாலும் ஆபாசம் அறவே இல்லை என்பதில் பெரிய ஆறுதல்...
2 : பேர் படிச்சிட்டு சொல்றாங்க...:
ஆபாசம்னா என்னங்கண்ணா?
just ok.... something missing..
All in one Link | Why This Kolaveri D -All Video Song Collections( female voice, child version, english Voice, hindi Voice), Lyrics & Stills
Post a Comment