பயணம் 1.1.3

|

நாம் மேற்கொள்ளும் பயணங்கள் புதுப்புது அனுபவங்களையும் பாடங்களையும் கற்றுத்தருகின்றன. கொஞ்சம் கூர்ந்து கவனித்தால் நமக்கு பல விஷயங்கள் புலப்படும்.

பயணத்தின்போது புதிதாய் ஒரு நட்பினைப் பெறுவதிலோ, சுற்றுப்புற நிகழ்வுகளை அசைபோடுவதிலோதான் அதிக ஆர்வம் இருக்கும். வெறுமையாய் உணரும்போது இருக்கவே இருக்கிறது இசை, நமது எண்ணவோட்டத்துக்கு ஏற்றவாறு...

சமீபத்தில் நிகழ்ந்த சில விஷயங்களைப் பற்றிய ஒரு பகிர்வை இந்த இடுகை. சில விஷயங்களைப் பற்றி பலமுறை கேள்விப்பட்டிருப்போம், படித்தும் இருப்போம். ஆனால் நேரில் நாமே அதில் சம்மந்தப்ப்படும்போது?

அதிகாலை தெடாவூர் செல்லும் பஸ்ஸில் அமர்ந்திருந்தேன். பெரம்பலூர் செல்லும் எல்லா பேருந்துகளும் எங்களின் ஊர் வழியாய்த்தான் செல்லும். மற்றபடி அரும்பாவூர், புளியங்குறிச்சி என இன்னும் பல ஊர்களுக்கு செல்லும் பேருந்துகளும் வழியாகச் செல்லும்.

முன்னால் அமைந்திருந்த பாட்டி மெதுவாய் திரும்பி என்னிடம் 'தம்பி இந்த பஸ் எங்கு போகும்?' எனக் கேட்டார்கள்.

'அரும்பாவூர் போகிறது' எனச் சொன்னேன்.

'அய்யய்யோ பெரம்பலூர் போகாதா? இந்த வண்டி அங்கதானே போகணும்' என்றார்கள்.

'அடுத்த வண்டி வரும் அதில் வாருங்கள்' எனச் சொன்னேன். எந்த ஒரு பதிலும் சொல்லாமல் அமர்ந்திருக்க மறுபடியும் சொன்னேன்.

'நான் வீரகனூர் தான் போகிறேன், இந்த பஸ் வீரகனூருக்கு போகும்னு எனக்குத் தெரியும்' எனச் சொல்ல சரியான பல்ப்.

எனக்குத் தெரிந்தவரை இந்த பஸ், இந்த ஊருக்கு போகுமா என பெருசுகள் எவருமே கேட்பதில்லை.

******

பக்கத்தில் ஷார்ட்ஸ், அழுக்கேறிய பனியன், எண்ணையைப் பார்த்திராத பரட்டைத்தலை, மழிக்காத தாடி, மஞ்சளாய் மொச்சைப் பற்களுடன் முழுச் சிரிப்போடு ஒருவர் அமர்ந்திருந்தார்.

பார்வையிலேயே கொஞ்சம் மன நிலை குன்றியவர் போலிருந்தார். தலையை அடிக்கடி ஆட்டுவதும் ஏதோ முணுமுணுப்பதாயும் இருந்தார்.

பேருந்து கிளம்ப இன்னும் கொஞ்சம் நேரம் இருக்கும் சமயத்தில் உதவி கண்டக்டர் பையன் வந்து அவரை எந்த ஊருக்கு போகவேண்டும் எனக்கேட்க, 'ஆங், அக்...' என என சைகையோடு சொல்ல ஆரம்பித்தார்.

பேச வராது போலிருக்கிறது, ஒலியெழுப்ப மட்டும் தெரிந்திருக்கிறது. 'இந்த பஸ் போகாது' என சொல்லி அவரை எழுப்பிவிடுவதிலே குறியாய் இருக்க அவரும் இறங்குவேனா பார் என அடம் பிடித்தார்.

 கடைசியாய் கோபத்துடன் அவரை தள்ளி இறக்க முயல அவரின் பாஷையில் திரும்பவும் சொல்லி பக்கத்தில் இருந்த என்னைப் பார்த்து பேச ஆரம்பித்தார்.

நான் ஒவ்வொரு ஊராக சொல்லி, கடைசியில் 'அரும்பாவூர் போகனுமா' எனகேட்க, அவரின் முகத்தில் உற்சாக பல்ப். 'ங்.... அஃ...' என சிரித்தபடி சொல்லி தலையாட்டினார்.

உதவி சென்றுவிட அதன் பின் ஏறிய பாட்டி தான் எனக்கு அழகாய் பல்ப் கொடுத்தது. கண்டக்டர் வந்து டிக்கெட் கேட்க, அவர் பதினைந்து ரூபாயை நீட்டி டிக்கெட் கேட்க, எந்த ஊர் என்றதற்கு 'அங்...கா...கா' எனச் சொல்ல 'போகாது இறங்கு' எனச் சொன்னார்.

 'அண்ணே அரும்பாவூர் போகனுமாம்' என சொன்னவுடன் அவர் சிரித்து 'ங்...' என மலர்ச்சியாய் சிரித்தார்.

தெடாவூரில் இறங்கும்போது எடுத்து வந்திருந்த இரு பைகளையும் இறக்குவதற்கு உதவி செய்த அவரைப் பார்த்து 'தேங்க்ஸ்' என சொல்ல தலையாட்டி ஒரு சிரிப்பு சிரித்தார். சிலீரென்றிருந்தது...

6 : பேர் படிச்சிட்டு சொல்றாங்க...:

rajamelaiyur said...

அனுபவம் அருமை .. தொடரட்டும்

rajamelaiyur said...

இன்றைய ஸ்பெஷல்

Hamster Video Converter – ஒரு பயனுள்ள மென்பொருள் உங்களுக்காக

Prabu Krishna said...
This comment has been removed by the author.
Prabu Krishna said...

உண்மைதான் பயணங்கள் என்றும் வித்தியாசமான அனுபவத்தை நமக்கு தரும். அதுவும் நீண்ட தூர பயணம் என்றால் அருமை தான்.

நிகழ்காலத்தில்... said...

பயணங்கள் பயணங்கள் தாம்.,

பல சமய்ங்களிலும் நாம் அறிந்திராத ஒரு உலகை நமக்கு அறிமுகப்படுத்துகின்றன.,

வாழ்த்துகள் பகிர்வுக்கு..

settaikkaran said...

பயணமும் இளைப்பாறலும் களைப்பும் இல்லாவிட்டால், அனுபத்துக்கு எங்கே போவது நண்பரே? :-) தொடர்க!

 

©2009 ”வாழ்க்கை வாழ்வதற்கே” | Template Blue by TNB