தாய்மை - கவிதை...

|

- பிரபாகர் ராமசாமி





ஒரு துளி உயிரை
உணர்வோடு வாங்கி
கருவறை காத்து
கடினங்கள் தாங்கி

பொறுமையை போற்றி
பசி தூக்கம் மறந்து
உருகொண்டு வெளியில்
உணர்வாகும் வரையில்

கண்ணெனக் காத்து

கருத்தாய் போற்றி
பண்களை பாடி
பாசத்தை ஊட்டி

தென்படும் பொருளை
தெளிவுடன் விளக்கி
மனதினிற் பதித்து
மறவாமல் செய்து

வேளைக்கு ஓன்றாய்
ஆடைகள் பூட்டி
அழகினில் பூரித்து
ஆனந்தம் கொண்டு

நாழியும் அயராமல்
நினைவாய் இருந்து
பாலினைப் புகட்டி

பாதியாய் இளைத்து

தடுப்பு மருந்துகள்
தவறாது கொடுத்து
நடப்பு நிகழ்வினில்
நாட்டத்தை குறைத்து

அடம் பிடித்தழுதால்
ஆறுதல் சொல்லி
கடமையில் மட்டும்
கவனம் செலுத்தி

நல்லமுது சேர்த்து
நற்கதைகள் புகட்டி
கல்வியின் சிறப்பை
கருத்தாய் உணர்த்தி

பள்ளிக்கு அனுப்பி
பாடத்தைப் பயிற்று

நல்லோர் போதித்த
நல்லவை நல்கி

தந்தையவர் கோபமுடன்
தவறுக்காக திட்டிட
சிந்தைமாறி சினந்து
சோர்ந்து கிடக்கையில்

மந்திர வார்த்தையோடு
மருந்திட்டு மனக்காயம்
வந்த தடம் தெரியாமல்
வலி போகச் செய்து

விடலை பருவத்தில்
உண்டான மாற்றங்களை
கூடவே கவனித்து
குட்டி சரிசெய்து

கடமையினை நினைவூட்டி
கல்வியினில் மனம்திருப்பி
மடமையினை நீக்கி
மகத்தான வழிசெலுத்தி

வேலையில்லை என்று
வாட்டமொடு இருந்தன்று
வேளைவரும் உனக்கென்று
வாஞ்ஜையாய் பேசி

ஆலயங்கள் சென்று
ஆண்டவனை தொழுது
வேலையது கைசேர
வேண்டுதல்கள் புரிந்து

திருமண வயதில்
துணையினை தேடி
இருமனம் இணைத்து
இல்லறம் நுழைத்து

பெற்றிட்ட பிள்ளைகளை
பெரிதும் நினைத்து
பெருமையாய் பிள்ளை
புகழ் பிறரிடம் சொல்லி

பிள்ளைக்காக வாழுகின்ற
புனிதமான தாய்மைக்கு
தலை தாழ்ந்து வணங்கி
திருவடிகள் போற்றி

மேலும்பல பிறவியிலும்
மகனாகப் பிறந்திடவே

ஞாலமாளும் இறையவனை
வணங்கி வேண்டுகிறேன்...

பாசமுடன்
மகன்...

33 : பேர் படிச்சிட்டு சொல்றாங்க...:

நாகா said...

நேத்தே படிச்சுட்டேன் ப்ரபா.. வழக்கம்போல் எளிமையாய் புரியும் அருமையான கவிதை

Raju said...

நல்லாருக்குண்ணே...!
வாழ்த்துக்கள்.

ராமலக்ஷ்மி said...

தாய்மையைப் போற்றும் அருமையான கவிதை.

vasu balaji said...

பாராட்டுக்கள் பிரபாகர்.

/தந்தையவர் கோபமுடன்
தவறுக்காக திட்டிட
சிந்தைமாறி சினந்து
சோர்ந்து கிடக்கையில்

மந்திர வார்த்தையோடு
மருந்திட்டு மனக்காயம்
வந்த தடம் தெரியாமல்
வலி போகச் செய்து/

இத்தனை வரிக்கும் ஒரு வார்த்தை = அம்மா.

தராசு said...

அருமை.

நாடோடி இலக்கியன் said...

arumai.

வெண்ணிற இரவுகள்....! said...

நண்பா உன் தாய்மை உணர்விற்கு தலை வணங்குகிறேன்

புலவன் புலிகேசி said...

தாய்மையின் மகத்துவம் அருமை நண்பா...ஆனால் இன்று இத்தகையத் தாய்மார்களை முதியோர் இல்லத்தில் சேர்க்கும் பிள்ளைகளை என்ன சொல்வது???

ப்ரியமுடன் வசந்த் said...

அருமையா இருக்குண்ணே..

தாய்மையின் மகத்துவத்தை..எளிமையா சொல்லியிருக்கீங்க...

வாழ்த்துக்கள்

மணிஜி said...

நேத்துதான் எங்கம்மாவோட திதி

ஆ.ஞானசேகரன் said...

முதலில் வாழ்த்துகள் பிரபாகர்

ஆ.ஞானசேகரன் said...

அம்மாவை பற்றிய அழகான வரிகளுக்கு பாராட்டுகள்

Unknown said...

கருவறையில் உருவம் இல்லா கிடக்கும் நம்மை,
ராஜாவாக ராணியாக மகுடம் சூட்டி மகிழ்பவள் தாய்.
அவளுக்காக கவிதை மெகவும் அருமை.

ஊடகன் said...

அழகான தமிழ் நடையுடன் தாய்மையை எழுதிஉள்ளீர்கள்..........

ஈரோடு கதிர் said...

"அம்மா"

இதுதானே உலகின்
மிக அழகிய கவிதை

அழகு பிரபு.............

ஆரூரன் விசுவநாதன் said...

அருமை நண்பா.....

வாழ்த்துக்கள்

velji said...

மிகையோ,குறையோ இல்லாத அருமையான கவிதை.

பிரபாகர் said...

//நாகா said...
நேத்தே படிச்சுட்டேன் ப்ரபா.. வழக்கம்போல் எளிமையாய் புரியும் அருமையான கவிதை
//

நன்றி நாகா...

//
♠ ராஜு ♠ said...
நல்லாருக்குண்ணே...!
வாழ்த்துக்கள்.
//

களத்துக்கு வந்துட்ட தம்பி, இனிமே கவலை இல்ல! தம்பியுடையான்...!

//
ராமலக்ஷ்மி said...
தாய்மையைப் போற்றும் அருமையான கவிதை.
//

ரொம்ப நன்றிங்க. என் அம்மா பாதியும், என் துணைவியார் மீதியும் என் பார்வையில்! அனுபவித்து எழுதியது.

//
வானம்பாடிகள் said...
பாராட்டுக்கள் பிரபாகர்.

/தந்தையவர் கோபமுடன்
தவறுக்காக திட்டிட
சிந்தைமாறி சினந்து
சோர்ந்து கிடக்கையில்

மந்திர வார்த்தையோடு
மருந்திட்டு மனக்காயம்
வந்த தடம் தெரியாமல்
வலி போகச் செய்து/

இத்தனை வரிக்கும் ஒரு வார்த்தை = அம்மா.
//

அம்மா! தமிழின் மிக இனிமையான வார்த்தை. பாராட்டுக்கு நன்றிங்கய்யா

//
தராசு said...
அருமை.
//

நன்றிங்கண்ணே... ரொம்ப சந்தோசம்...

//
நாடோடி இலக்கியன் said...
arumai.
//

நன்றி நண்பா....

//
வெண்ணிற இரவுகள்....! said...
நண்பா உன் தாய்மை உணர்விற்கு தலை வணங்குகிறேன்
//

நன்றி கார்த்திக். அன்புக்கு நன்றி.

//
புலவன் புலிகேசி said...
தாய்மையின் மகத்துவம் அருமை நண்பா...ஆனால் இன்று இத்தகையத் தாய்மார்களை முதியோர் இல்லத்தில் சேர்க்கும் பிள்ளைகளை என்ன சொல்வது???
//

பாவிகள், பாவம் சேர்ப்பவர்கள், நாளை அவர்களின் பிள்ளைகளால் அனுப்பப்படுபவர்கள்.

//
பிரியமுடன்...வசந்த் said...
அருமையா இருக்குண்ணே..

தாய்மையின் மகத்துவத்தை..எளிமையா சொல்லியிருக்கீங்க...

வாழ்த்துக்கள்
//

நன்றி தம்பி. உங்களின் அன்பான பாராட்டுக்கள் மேலும் எழுத தூண்டுகிறது.

//
தண்டோரா ...... said...
நேத்துதான் எங்கம்மாவோட திதி
//

கண்டிப்பா இத படிச்சிட்டு மனசு கஷ்டப்பட்டிருப்பீங்க.... அம்மாவ நினைச்சி உருகியிருப்பீங்க... நன்றிங்கண்ணா. அம்மா போல் வருமா?

//
ஆ.ஞானசேகரன் said...
முதலில் வாழ்த்துகள் பிரபாகர்
//

நன்றிங்க. என்னை செதுக்குவதற்கு.

//
ஆ.ஞானசேகரன் said...
அம்மாவை பற்றிய அழகான வரிகளுக்கு பாராட்டுகள்
//

பாராட்டுக்கு நன்றிங்க.

//
Bharathy said...
கருவறையில் உருவம் இல்லா கிடக்கும் நம்மை,
ராஜாவாக ராணியாக மகுடம் சூட்டி மகிழ்பவள் தாய்.
அவளுக்காக கவிதை மெகவும் அருமை.
//

நன்றி பாரதி. ஆம், தாய்மையை போற்றுவோம்....

//
ஊடகன் said...
அழகான தமிழ் நடையுடன் தாய்மையை எழுதிஉள்ளீர்கள்..........
//

நன்றி ஊடகன் உங்களின் அன்பான வாழ்த்துக்கு...

//
கதிர் - ஈரோடு said...
"அம்மா"

இதுதானே உலகின்
மிக அழகிய கவிதை

அழகு பிரபு.............
//

நன்றி என் அன்பு கதிர்! அம்மா இந்த மூன்றெழுத்தை மட்டும் இடுகையாயிடலாம்.

//
ஆரூரன் விசுவநாதன் said...
அருமை நண்பா.....

வாழ்த்துக்கள்
//

நன்றிங்க.

//velji said...
மிகையோ,குறையோ இல்லாத அருமையான கவிதை.
//

உணர்ந்து கண்டவற்றை எழுதியது வேல்ஜி. பாராட்டுக்கு நன்றிங்க.

ஹேமா said...

பிரபா,தாய்மை நிறைந்து கிடக்கிறது ஒவ்வொரு வரிகளிலும்.

அன்புடன் நான் said...

எளிமை + தாய்மை = கவிதை.

butterfly Surya said...

very sorry for late coming.

அருமை

கவிதையிலும் கலக்குங்க பிரபா..

துபாய் ராஜா said...

//வேலையில்லை என்று
வாட்டமொடு இருந்தன்று
வேளைவரும் உனக்கென்று
வாஞ்ஜையாய் பேசி

ஆலயங்கள் சென்று
ஆண்டவனை தொழுது
வேலையது கைசேர
வேண்டுதல்கள் புரிந்து

திருமண வயதில்
துணையினை தேடி
இருமனம் இணைத்து
இல்லறம் நுழைத்து

பெற்றிட்ட பிள்ளைகளை
பெரிதும் நினைத்து
பெருமையாய் பிள்ளை
புகழ் பிறரிடம் சொல்லி

பிள்ளைக்காக வாழுகின்ற
புனிதமான தாய்மைக்கு
தலை தாழ்ந்து வணங்கி
திருவடிகள் போற்றி

மேலும்பல பிறவியிலும்
மகனாக பிறந்திடவே
ஞாலமாளும் இறையவனை
வணங்கி வேண்டுகிறேன்...

பாசமுடன்
மகன்...//

நெகிழ்ச்சியான கவிதை.

வாழ்த்துக்கள் பிரபாகர்.

ஜோதிஜி said...

தகுதியானது தரமானதும் கூட. நீங்கள் ஓவியரும் கூடவா? அற்புதம்.

கலைஞானி பிரபாவா?

lenin said...

அம்மாக்கு நிகர் அம்மா தான்................

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

அருமையான கவிதை பிரபாகர். மிகவும் உன்னதமான வார்த்தைகள்!!

பிரபாகர் said...

//
ஹேமா said...
பிரபா,தாய்மை நிறைந்து கிடக்கிறது ஒவ்வொரு வரிகளிலும்.
//
நன்றிங்க ஹேமா! எல்லாம் என் தாயிடமும் தாரமிடமும் கண்டவைகள்.

//
சி. கருணாகரசு said...
எளிமை + தாய்மை = கவிதை.
//

உங்க முதல் வருகைக்கு நன்றிங்க.

//
butterfly Surya said...
very sorry for late coming.

அருமை

கவிதையிலும் கலக்குங்க பிரபா..
//

நன்றி சூர்யா, உங்களின் அன்பிற்கு.

//
துபாய் ராஜா said...
//வேலையில்லை என்று
வாட்டமொடு இருந்தன்று
வேளைவரும் உனக்கென்று
வாஞ்ஜையாய் பேசி

ஆலயங்கள் சென்று
ஆண்டவனை தொழுது
வேலையது கைசேர
வேண்டுதல்கள் புரிந்து

திருமண வயதில்
துணையினை தேடி
இருமனம் இணைத்து
இல்லறம் நுழைத்து

பெற்றிட்ட பிள்ளைகளை
பெரிதும் நினைத்து
பெருமையாய் பிள்ளை
புகழ் பிறரிடம் சொல்லி

பிள்ளைக்காக வாழுகின்ற
புனிதமான தாய்மைக்கு
தலை தாழ்ந்து வணங்கி
திருவடிகள் போற்றி

மேலும்பல பிறவியிலும்
மகனாக பிறந்திடவே
ஞாலமாளும் இறையவனை
வணங்கி வேண்டுகிறேன்...

பாசமுடன்
மகன்...//

நெகிழ்ச்சியான கவிதை.

வாழ்த்துக்கள் பிரபாகர்.
//
ரொம்ப நன்றிங்க ராஜா.

//
திகழ் said...
அருமையான கவிதை
//

நன்றிங்க திகழ்...

//
ஜோதிஜி. தேவியர் இல்லம். said...
தகுதியானது தரமானதும் கூட. நீங்கள் ஓவியரும் கூடவா? அற்புதம்.

கலைஞானி பிரபாவா?
//
நன்றிங்கய்யா, அன்பு வருகை மற்றும் கருத்துக்கு.

//
lenin said...
அம்மாக்கு நிகர் அம்மா தான்................
//
ஆமாம் தம்பி. அம்மா > உலகம்.

//Mrs.Menagasathia said...
அருமையான கவிதை
//
நன்றிங்க மேடம்.

//
ச.செந்தில்வேலன்(09021262991581433028) said...
அருமையான கவிதை பிரபாகர். மிகவும் உன்னதமான வார்த்தைகள்!!
//

நன்றி செந்தில், உங்களின் அன்பிற்கு.

பழமைபேசி said...

ஏ அப்பா.... வாழ்க்கையே அடக்கத்துல அழகா கொண்டு வந்து இருக்கீங்க.... அபாரம்!

பிரபாகர் said...

//பழமைபேசி said...
ஏ அப்பா.... வாழ்க்கையே அடக்கத்துல அழகா கொண்டு வந்து இருக்கீங்க.... அபாரம்!
//
நன்றிங்க பழமைபேசி....

நாகராஜன் said...

அருமையான கவிதைங்க பிரபாகர்...

இப்படி நம்மை பாராட்டி சீராட்டி வளர்க்கும் அம்மாவை/அப்பாவை ஒவ்வொருவரும் நல்லா பார்த்துட்டாங்கன்னா பரவாயில்லை... ஆனால் நடப்பு அப்படியா இருக்கு... தனக்குன்னு ஒரு துணை வந்து, குழந்தைகள் வந்துட்டா இப்படி சீராட்டி பாராட்டி வளர்த்த அம்மாவை மறக்கிற பதர்கள் எத்தனை பேர்... ஹ்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்...

பிரபாகர் said...

//ராசுக்குட்டி said...
அருமையான கவிதைங்க பிரபாகர்...

இப்படி நம்மை பாராட்டி சீராட்டி வளர்க்கும் அம்மாவை/அப்பாவை ஒவ்வொருவரும் நல்லா பார்த்துட்டாங்கன்னா பரவாயில்லை... ஆனால் நடப்பு அப்படியா இருக்கு... தனக்குன்னு ஒரு துணை வந்து, குழந்தைகள் வந்துட்டா இப்படி சீராட்டி பாராட்டி வளர்த்த அம்மாவை மறக்கிற பதர்கள் எத்தனை பேர்... ஹ்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்...
//

தாயை பழிப்பவர்கள், மறப்பவர்கள் பிறந்தான் அர்த்தம் புரியாதர் பதர்கள் தான். நன்றிங்க, உங்களின் அன்புக்கு..

அன்புடன் மலிக்கா said...

தாய்மை ஒரு தவம்
தாய்மை ஒரு வரம்

மிக நன்றாக உள்ளது, வாழ்த்துக்கள்..

http://niroodai.blogspot.com

பிரபாகர் said...

//அன்புடன் மலிக்கா said...
தாய்மை ஒரு தவம்
தாய்மை ஒரு வரம்

மிக நன்றாக உள்ளது, வாழ்த்துக்கள்..
//

ரொம்ப சந்தோஷங்க... இதே போல் நீங்க எழுதியிருக்கிற தாய்மை பற்றி பதிவும் ரொம்ப நல்லாருக்குங்க.

கோமதி அரசு said...

இன்றைய வலைச்சரத்தில் பாசமிகு இந்த கவிதை. வாழ்த்துக்கள்.

http://blogintamil.blogspot.in/2013/12/blog-post_28.html#comment-form

 

©2009 ”வாழ்க்கை வாழ்வதற்கே” | Template Blue by TNB