இன்னிக்கு ஃபிளைட்டுல வருஷத்துல நாலு தடவ ஊருக்கு போயிட்டு வர்றோம், ஆன் லைன்ல டிக்கெட் புக் பண்ணி ட்ரெய்ன்ல சாதாரணமா பயணம் செய்யறோம். ஆனா கொஞ்சம் கொசுவர்த்திய சுத்தி நம்மோட ஆரம்ப நாட்கள பாத்தா சிரிப்பாத்தான் வருது. (நம்மளன்னு சொல்லறதெல்லாம் என்னப்பத்தி தாங்க).
எம்.சி.ஏ முடிச்சிட்டு ஒரு கம்ப்யூட்டர் சென்டர்ல வேலை பாத்துகிட்டிருந்தேன். இன்னிக்கு பிளாக்ல பட்டய கிளப்பிகிட்டிருக்கிற சங்கர் அண்ணா அறிமுகம் ஆனது அங்க தான்.
ஹிண்டுவ பாத்து அப்பப்போ வேளைக்கும் அப்ளை பண்ணிட்டிருந்தேன். எல்.அன்.டியில நம்ம சகா இருகிற ஹைதராபாத்ல இருந்து இன்டர்வியூ வந்திருந்துச்சி. ஃபர்ஸ்ட் கிளாஸ் ட்ரெயின் சார்ஜ கொடுக்கறதாவும் சொல்லியிருந்தாங்க.
ஹிண்டுவ பாத்து அப்பப்போ வேளைக்கும் அப்ளை பண்ணிட்டிருந்தேன். எல்.அன்.டியில நம்ம சகா இருகிற ஹைதராபாத்ல இருந்து இன்டர்வியூ வந்திருந்துச்சி. ஃபர்ஸ்ட் கிளாஸ் ட்ரெயின் சார்ஜ கொடுக்கறதாவும் சொல்லியிருந்தாங்க.
'தம்பி உனக்கு கண்டிப்பா வேலை கிடைச்சிடும், பேசியே வேலைய வாங்கிடுவ, வாழ்த்துக்கள்' சங்கர் அண்ணா.
'ஃபர்ஸ்ட் கிளாஸ் எப்படின்னா இருக்கும்' அண்ணன்கிட்ட கேக்கவும், 'அதான் போகப்போறல்ல, வந்து சொல்லு' ன்னாப்ல.
சரி டிக்கெட் எப்படி புக் பண்றதுன்னு யோசிச்சப்போ பாலா அவனோட ஃபிரண்டு மூலமா எலைட் டிராவல்ஸ்ல புக் பண்ணிட்டு (பாலாவும் சங்கர் அண்ணாவும்தான் அந்த சென்டர பாத்துகிட்டிருந்தாங்க...) 'டேய் ட்ரைன் 5.30 க்காம், 4 மணிக்கெல்லாம் வந்து டிக்கட்ட வாங்கிக்க சொல்லிட்டாங்க' ன்னான்.
சரி டிக்கெட் எப்படி புக் பண்றதுன்னு யோசிச்சப்போ பாலா அவனோட ஃபிரண்டு மூலமா எலைட் டிராவல்ஸ்ல புக் பண்ணிட்டு (பாலாவும் சங்கர் அண்ணாவும்தான் அந்த சென்டர பாத்துகிட்டிருந்தாங்க...) 'டேய் ட்ரைன் 5.30 க்காம், 4 மணிக்கெல்லாம் வந்து டிக்கட்ட வாங்கிக்க சொல்லிட்டாங்க' ன்னான்.
சரின்னுட்டு எதோ கடமைக்கு பிரிப்பேர் பண்ணிட்டு மூனு மணிக்கு சங்கர் அண்ணாவும் நானும் சேலம் கிளம்பினோம்.
ஒன்னேகால் மணி நேரத்துல போயிடலாம்னு தான் நினைச்சோம், ஆனா விதி விளையாட ஆரம்பிச்சது. வழியில ரெண்டு லாரிங்க மோதி பயங்கரமான ஆக்ஸிடென்ட்.
ரோடு பிளாக் ஆக, பக்கத்துல இருந்த செம்மண் ரோட்டுல ஒரு லாரி திரும்பி போகவும், நம்ம பஸ் டிரைவர் பின்னாலயே விரட்ட ஆரம்பிச்சாரு.
எங்களுக்குப் பின்னால ரெண்டு காரு, லாரி, ஒரு டூரிஸ்ட் பஸ்ஸுன்னு வர ஆரம்பிக்க காட்டு வழியில ஊர்வலம் மாதிரி போக ஆரம்பிச்சது.
'அண்ணா, சகுனமே சரியில்ல, பஸ் வேற எங்கேயோ போகுது, நேரத்துக்கு போக முடியுமா' ன்னு கேக்க,
'ஏன் தம்பி கவலைப் படுற, கரெக்டா போயிடலாம், வழியனுப்பறது என் பொறுப்பு' ன்னு தெம்பா பேசினாப்ல.
கொஞ்ச தூரம் போனதும் முன்னால போற லாரி நின்னுடுச்சி. இறங்கி கிளி வேகமா வந்தாப்ல. 'ஏன் பின்னாலயே வர்றீங்க, இது மலைக்கு போற ரூட்டு, கிழங்கு ஏத்த போறோம்' னு சொல்ல பகீர்னு ஆயிடுச்சி. அப்புறம் எல்லாம் ரிவர்ஸ் எடுத்து ரோட்டுக்கு வர்றதுக்குள்ள ரோடு க்ளியர் ஆயிடுச்சி.
'பங்காளி ட்ரெயின புடிச்ச மாதிரிதான்' நான்
'தொண தொணன்னு, சும்மா இரு. ஏத்திவிடறது என் பொறுப்பு' ன்னு திரும்பவும் சொன்னாப்ல. ஒரு வழியா சேலம் பழைய பஸ் ஸ்டாண்ட் பக்கத்துல இருக்கிற டிராவல்ஸ் போறதுக்குள்ள அஞ்சு மணி ஆயிடுச்சி.
டிக்கெட்ட காசு கொடுத்து வாங்கும் போது, 'என்ன சார் இவ்வளவு அசால்ட்டா இருக்கீங்க, அஞ்சரை மணிக்கு ட்ரைய்ன் வந்துடும், கன்பார்ம் ஆயிடுச்சி, டி.டி.ஆர் கிட்ட கேட்டுக்கோங்க, சீக்கிரம் போங்க, ஆட்டோவில போனாலும் பிடிக்கிறது சந்தேகம்தான்' னு பீதிய கிளப்பினாரு.
வேகமா வெளிய ஓடி வந்து, ஒரு ஆட்டோவ பிடிச்சோம். இளரத்தம். 'ராஜா கொஞ்சம் விரட்டி ஓட்டு, காசு சேத்து தர்றோம், அஞ்சரைக்கு ட்ரைன்' னு சொன்னோம்.
தம்பி ரொம்ப குஷியாயிட்டு, வண்டிய கிளப்பும்போதே வயித்த கலக்க ஆரம்பிச்சிடுச்சி, அவ்வளோ வேகம். பறக்கிற மாதிரி ஃபீலிங். எங்கேயோ வண்டிய விரட்டி ஒரு நிமிஷத்துக்கு முன்னாலயே விட்டுட்டாரு. காச கொடுத்துட்டு உள்ள சப் வேயில நுழையிறோம், ட்ரையினும் வந்துடுச்சி.
'அண்ணா சீட் நம்பர பாரு' ன்னு சொல்ல', 'WL 32' ன்னு சொன்னாரு.
'அப்படின்னா என்ன'ன்னு கேக்க, 'விண்டோ லெஃப்ட் 32'.
ட்ரையின் ரெண்டு நிமிஷம்தன் நிக்கும். 'ஃபர்ஸ்ட் கிளாஸ் எங்க'ன்னு கேக்க 'முன்னால'ன்னு சொல்லவும் லக்கேஜ தூக்கிகிட்டு வேகமா ஓடினோம்.
கிட்டப்போயி அண்ணன் விண்டோ லெஃப்ட் 32 தேட, நான் வேகமா அங்க நின்ன டி.டி.ஆர் கிட்ட போயி, டிக்கட்ட காமிச்சி 'சார் விண்டோ லெஃப்ட் 32 எங்க' ன்னு கேட்டேன்.
'யேப்பா WLனா வெயிட்டிங் லிஸ்ட். கொஞ்சம் கூட அறிவே இல்ல? படிச்சவங்க மாதிரி இருக்கீங்க' ன்னாரு டி.டி.ஆர். படிச்சவங்களுக்கு நிறையா அறிவிருக்கும்னு தப்பா புரிஞ்சிருப்பாரு போலிருக்கு.
ட்ரையின் கிளம்ப ஆரம்பிக்க, 'வண்டி கிளம்புது...மொதல்ல உள்ள போ, பாத்து சொல்றேன்' னு சொல்ல பட்டுனு பொட்டியோட உள்ள ஏறிட்டேன்.
அப்புறம் டி.டி.ஆர் சார்ட்ட பாத்து சரியான இடத்த சொல்ல, அவர்கிட்ட ரொம்ப க்ளோசா பேசி ஃபிரண்ட் ஆகி, ட்ரெயின்ல வந்த கேரளாவில இருந்து வந்த ஒரு குட்டி பாப்பா அங்கிள் கதை சொல்லுங்கன்னு சொல்ல, தடுமாறி, இன்டெர்வியுல சொதப்பி.... வெயிட், இன்னொரு பதிவாவே சொல்றேனே?
ஓ.கே, அடுத்த பதிவுக்கு மேலே உள்ளதுதான் முன்னோட்டம். ஆனா மாசத்துக்கானது கீழே...
முன்னோட்டம்:
ஒரு வித்தியாசமா இந்த மாசத்துக்கான பதிவுகளுக்கு முன்னோட்டம்..
கிராமத்து அநியாயங்கள்.
'இதோ அவங்கிட்டயே கேளு' ன்னு தம்பி சொன்னான்.
'எப்படிப்பா சாத்தியம், ஒன்னுக்கே அவனவன் சிங்கியடிக்கிறான்...'ன்னு அவன பாத்து கேட்க,
இனிமே பொய்யே சொல்ல மாட்டேன்
'செல்வராஜுக்கு என்னாச்சு பிரபாகர்?, நல்லாத்தானே இருந்தாப்ல?' ன்னு கண்ணு கலங்கி குணா கேட்டாப்ல.
கூட நாலு பேரு, மாலையெல்லாம் வாங்கிகிட்டு அம்பாசிடர் கார வாடகைக்கு எடுத்துகிட்டு வந்திருந்தாங்க.
பிரபுவுக்கு இளகின மனசு...
'பிரபுவுக்கு அத்தன்னா அவ்வளோ பாசம், எப்படி அழுவுது பாரு' ன்னுட்டு கூட எல்லாரும் அழ ஆரம்பிச்சிட்டாங்க. இத பாத்துட்டு இன்னும் அதிகமா அழ ஆரம்பிச்சிட்டேன்.
எதிர்ப்பில்லா காதல்... - வென்ற காதல்...
'ஆமா ரகு, எனக்கும் அதான் ஆச்சர்யமா இருக்கு. போன்ல அதிக நேரம் பேசறத கவனிச்சிருப்பாரு போல இருக்கு, நேத்து என் ரூம்ல செக் பண்ணி கண்டு பிடிச்சிட்டாரு. காலைல என்ன நேருக்கு நேரா ரகு-ங்ற பையனை காதலிக்கிறியான்னாரு. நடுங்கிகிட்டே ஆமான்னேன். உடனே சாயந்திரம் வீட்டுக்கு அழைச்சிட்டு வான்னாரு'
'ச்சே, சப்புனு போயிடுச்சே, என்னன்னமோ நடக்கும்னு கற்பனை பண்ணி வெச்சுருந்தேன், இப்போ எல்லாம் வேஸ்ட் ஆயிடுச்சி....'
35 : பேர் படிச்சிட்டு சொல்றாங்க...:
//'WL 32' ன்னு சொன்னாரு, 'விண்டோ லெஃப்ட் 32'
இது சிரிப்பை வரவழைத்தாலும், ட்ரெயின் டிக்கெட்டில் உபயோகப்படும் இந்த மாதிரி வார்த்தைகளுக்கு தனியே புக் போடலாம்
//பின்னோக்கி said...
//'WL 32' ன்னு சொன்னாரு, 'விண்டோ லெஃப்ட் 32'//
நன்றி நண்பா...
இந்த பதிவை எழுதுமுன் சங்கர் அண்ணாவிடம் இது பற்றி பேசி நிறைய சிரித்தோம்.
உங்களின் கருத்துக்கும், வருகைக்கும் நன்றி...
படிக்கப் படிக்க டிரென்ய் பிடிப்பீங்களா
மாட்டீங்களானு ஒரு பதைப்பு
//'விண்டோ லெஃப்ட் 32'//
உட்காந்து யோசிச்சீங்களோ!!!
இஃகிஃகி
என்ன
டிரெய்லர் எல்லாம் சூப்பர் சூப்பரா இருக்கு
கலக்குங்க பிரபா
ஹி.. ஹி.. ஹி.. நல்லா இருக்குது...
//படிக்கப் படிக்க டிரென்ய் பிடிப்பீங்களா
மாட்டீங்களானு ஒரு பதைப்பு
//
நிஜமா?
//டிரெய்லர் எல்லாம் சூப்பர் சூப்பரா இருக்கு
கலக்குங்க பிரபா//
நன்றி கதிர்...
மேட்டரையும் சுவராஸ்யமா எழுத முயற்சிக்கிறேன்....
//
நையாண்டி நைனா said...
ஹி.. ஹி.. ஹி.. நல்லா இருக்குது...//
நன்றி நைனா...
அய்யோ...அய்யோ...
வெயிட்டிங் லிஸ்ட்டு..வின்டோ லெஃப்ட்டு.நல்ல வேளை. RAC வரல..!
//
அய்யோ...அய்யோ...
வெயிட்டிங் லிஸ்ட்டு..வின்டோ லெஃப்ட்டு.நல்ல வேளை. RAC வரல..!//
நன்றி தம்பி...
Sir super sir....
Sir super sir....
பிரபா. கலக்கல். சிரிப்பை அடக்க முடியலை..
முன்னோட்டத்திற்கே பின்னூட்டம் போடலாம் இருக்கே.
கலக்குங்க..
சூப்பர்.. சூப்பர்.. சூப்பர்..
படிச்சவங்களுக்கு நிறையா அறிவிருக்கும்னு தப்பா புரிஞ்சிருப்பாரு போலிருக்கு.////
hahahaha...
பிரபா, பதிவை படிக்கும் போது உங்ககிட்ட பேசுறது போல அவ்வளவு இயல்பாக இருக்கு.
Great. Keep it up..
//krishna said...
Sir super sir....//
நன்றி கிருஷ்ணா! ரொம்ப பிசியா? பதிவெதுவும் இல்லை உங்களிடமிருந்து?
//butterfly Surya said...
பிரபா, பதிவை படிக்கும் போது உங்ககிட்ட பேசுறது போல அவ்வளவு இயல்பாக இருக்கு.//
சூர்யா!
உங்களின் பின்னோட்டங்களை படிக்கும் போதும் நேரில் பார்ப்பதாய்த்தான் உணர்கிறேன். சீக்கிரம் சிங்கப்பூர் வாருங்கள்...
பிரபா..படிச்சுகிட்டிருக்கேன்..பழைய இடுகைகளை..நல்லாயிருக்கு
//தண்டோரா ...... said...
பிரபா..படிச்சுகிட்டிருக்கேன்..பழைய இடுகைகளை..நல்லாயிருக்கு//
அண்ணே,
ரொம்ப சந்தோஷம். படிச்சிட்டு உங்கள் கருத்துக்களை எழுதுங்க...
பின்னிட்டீங்க தலைவா...ஃபுளோ நல்லாருக்கு....
//'யேப்பா WLனா வெயிட்டிங் லிஸ்ட். கொஞ்சம் கூட அறிவே இல்ல? படிச்சவங்க மாதிரி இருக்கீங்க'ன்னாரு டி.டி.ஆர். படிச்சவங்களுக்கு நிறையா அறிவிருக்கும்னு தப்பா புரிஞ்சிருப்பாரு போலிருக்கு.//
ஹா...ஹா....சரியான காமெடி....எம்.சி.ஏ முடிக்கிறவரை WL ன்னா தெரியாம இருந்தது ஆச்சரியமான விஷயம்தான்.
இன்னும் ஒருமாசத்துக்கு சப்ஜெக்ட் வச்சிருப்பீங்க போலருக்கு...ம்ம்ம்....நடத்துங்க....
சார் அப்படியே உங்களோட ஃபாண்ட் சைஸை இன்னும் கொஞ்சம் பெரிசா பண்ணினா நல்லாருக்கும். என்ன மாதிரி வயசானவங்க படிக்க சிரமமா இருக்கு....
//ஹா...ஹா....சரியான காமெடி....எம்.சி.ஏ முடிக்கிறவரை WL ன்னா தெரியாம இருந்தது ஆச்சரியமான விஷயம்தான்.
//
//சார் அப்படியே உங்களோட ஃபாண்ட் சைஸை இன்னும் கொஞ்சம் பெரிசா பண்ணினா நல்லாருக்கும். என்ன மாதிரி வயசானவங்க படிக்க சிரமமா இருக்கு....//
பின்னூட்டத்துல அதான் குறிப்பிட்டிருந்தேன். சங்கர் அண்ணா கிட்ட பேசும்போது கூட அது பத்தி ரொம்ப சிரிச்சோம்...
ஃபான்ட் சைச மாத்திட்டேன்....
நன்றி பாலாஜி....
அருமை பிரபாகர். இப்பவும் நமக்கும், டிரெயினுக்கும் எப்பவுமே ஒத்துவராது.
முன்னோட்டமெல்லாம் கலக்கல்.
அடிச்சு தூள் கெளப்புங்கள்.
/முன்னோட்டமெல்லாம் கலக்கல்.
//
நன்றி ராஜா...
எல்லாம் நீங்கள் தரும் ஆதரவுதான்...
உங்களோட ரயில் அனுபவம் சூப்பருங்கோவ். நல்ல எழுதிருக்கீங்க பிரபாகர். இதோட தொடர்ச்சியை எதிர் பார்த்துட்டு இருக்கேன்...
ஆமாம் என்ன, அவசரத்துல எழுதின(தட்டின) மாதிரி தெரியுதே (கொஞ்சம் எழுத்து பிழைகள் இருக்கே...)
ஆஹா. ஒரு மாசத்துக்கே முன்னோட்டம் போட்டாச்சா... கலக்குங்க நீங்க. (இது எல்லாம் யாரோட ஐடியா-னு எனக்கு தெரியுமே!!!! கோயமுத்தூர்... ரைட்???)
//ஆமாம் என்ன, அவசரத்துல எழுதின(தட்டின) மாதிரி தெரியுதே (கொஞ்சம் எழுத்து பிழைகள் இருக்கே...)//
கொஞ்சம் இல்ல, நிறையவே இருந்துச்சி.
லேப்டாப்ப அம்மணி ஊருக்கு எடுத்துட்டு போயிட்டாங்க. பையனோட டெஸ்க் டாப்ல ரொம்ப நாளைக்கு அப்புறம் டைப் பண்றதாலன்னு சொல்லி தப்பிக்கலாம். இருந்தாலும் அடிச்சு முடிச்சிட்டு பார்க்கனும்ல? சாரி ராசுகுட்டி...
சரி பண்ணிட்டேன். ரொம்ப ரொம்ப நன்றி....
WL32 மேட்டர் சூப்பர்......
இதெல்லாம் சகஜம் பாஸ்.....
அடுத்து வரபோகும் பதிவுகளுக்கு
காத்து இருக்கிறேன்.
WL32 மேட்டர் சூப்பர்......
இதெல்லாம் சகஜம் பாஸ்.....
அடுத்து வரபோகும் பதிவுகளுக்கு
காத்து இருக்கிறேன்.
//WL32 மேட்டர் சூப்பர்......
இதெல்லாம் சகஜம் பாஸ்.....
அடுத்து வரபோகும் பதிவுகளுக்கு
காத்து இருக்கிறேன்.//
நன்றி ஜெட்லி...
உங்களின் பதிவினையும் தொடர்ந்து படித்து வருகிறேன்... தொடர்பு எண்ணையும் ஏதுவான நேரத்தையும் தாருங்கள்.
பிரபாகர், உங்க ரயில் அனுபவம் சுவாரஸ்யமாக இருந்தது. கலக்கல் :)
//ச.செந்தில்வேலன்(09021262991581433028) said...
பிரபாகர், உங்க ரயில் அனுபவம் சுவாரஸ்யமாக இருந்தது. கலக்கல் :)//
நன்றி செந்தில்...
உங்களின் பின்னூட்டம் ஊக்கத்தினையும் நம்பிக்கையையும் தருகிறது.
ரயில்வே அனுபவம் சூப்பர்ப். கலாய்க்கிறீங்க.
//வானம்பாடிகள் said...
ரயில்வே அனுபவம் சூப்பர்ப். கலாய்க்கிறீங்க.
//
முதல் ரயில் அனுபவம் அப்படித்தான் எனக்கு அமைந்தது...மிக்க நன்றி சார்...
//'ஏன் தம்பி கவலைப் படுற, கரெக்டா போயிடலாம், வழியனுப்பறது என் பொறுப்பு' ன்னு தெம்பா பேசினாப்ல//
தெம்பா பேசற மாதிரி பீதிய கெளப்பறதே பொழைப்பா போச்சே.. !
அருமைங்க..!
// கலகலப்ரியா said...
//'ஏன் தம்பி கவலைப் படுற, கரெக்டா போயிடலாம், வழியனுப்பறது என் பொறுப்பு' ன்னு தெம்பா பேசினாப்ல//
தெம்பா பேசற மாதிரி பீதிய கெளப்பறதே பொழைப்பா போச்சே.. !
அருமைங்க..!//
கலகலப்ரியா, ரொம்ப நன்றிங்க.
அனுபவ விவரணை சூப்பர்! உங்களுக்கு சங்கர் தியாகராஜனை முன்னமே தெரியுமா?! ஆளு ரொம்ப பிஸியாகிட்டாரு போல! ரொம்ப நாளா எழுதலை!
நன்றி ஷங்கி...
//அனுபவ விவரணை சூப்பர்! உங்களுக்கு சங்கர் தியாகராஜனை முன்னமே தெரியுமா?! ஆளு ரொம்ப பிஸியாகிட்டாரு போல! ரொம்ப நாளா எழுதலை//
நல்லா கேட்டீங்க....
எனக்கு உடன் பிறவா அண்ணன் அவரு. பதினைந்து வருஷ பழக்கம்..
கொஞ்சம் பிரேக் எடுத்திருக்காரு.
பிரபாகர்.
Post a Comment